இந்தியாவில் உள்ள திருவனந்தபுரம், குவாஹாத்தி, ஜெய்ப்பூர், மங்களூரு, அகமதாபாத், லக்னோ, டெல்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ள விமான நிலையங்களை பராமரிக்கும் பணிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி டெல்லியை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள விமான நிலைய பராமரிப்பு பணிகள் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள விமான நிலையத்தை பராமரிக்கும் பணி அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர் […]
Tag: அதானி குழுமம்
அபுதாபியைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான பிஜேஎஸ்சி அதானி குழுமத்தின் மூன்று நிறுவனங்கள் மீது இரண்டு பில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலீடு செய்ய உள்ளது. அதாவது இந்திய மதிப்பீட்டில் 15 ஆயிரத்து 185 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் விதிமுறைகளின்படி அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களில் தலா 3830 கோடி ரூபாயும், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் மீது 7700 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
அதானி துறைமுக நிர்வாகம் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சரக்குகளை கையாள போவதில்லை என அதிரடியாக அறிவித்துள்ளது. அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குஜராத் மாநிலம் முத்ரா துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த துறைமுகம் தொழிலதிபர் கவுதம் அதானியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த போதை பொருளின் தேசிய மதிப்பு சுமார் 20 ஆயிரம் கோடி இருக்கும் என தகவல்கள் வெளியாகின. மேலும் […]
மியான்மர் இராணுவத்திற்கு இந்திய தொழிலதிபரான அதானி குழுமத்தின் தலைவர் கோடி கணக்கில் நிதியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் பொருளாதார கழகமான MEC என்ற நிறுவனத்திற்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்திய தொழிலதிபர், அதானி குழுமம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவ்வளவு தொகையை நில குத்தகை கட்டணமாக வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் யாங்கோன் பிராந்தியத்தின் முதலீட்டு ஆணையத்திலிருந்து வெளிவந்துள்ளது. அதாவது அதானி குழுமம் பணத்தை அளித்திருப்பது மியான்மர் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் MEC நிறுவனத்திற்கு […]