Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 415 ஆக உயர்வு…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 108 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . டெல்லியில் 79 பேருக்கும், குஜராத் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?…. அரசு புதிய பரபரப்பு…!!!!

உருமாறிய கொரோனா தொற்றான வைரஸ் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி பிரிட்டன் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 20-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஒமைக்ரான் பரவல் காரணமாக மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

EMI செலுத்துவோருக்கு ஷாக் நியூஸ்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நிலைபாட்டை பராமரித்து வருகிறது. 2021-2022 நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 9.5% அளவிற்கு எதிர்பார்க்கிறது. மேலும் சர்வதேச சந்தையில் இந்திய நாணயத்தின் மதிப்பை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. கச்சாஎண்ணெய் விலை தற்போது குறைந்துள்ள நிலையில், மற்ற நுகர்வோர் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிப்பை சந்தித்திருக்கிறது. எனவே நாட்டின் வர்த்தகம் இதனால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி தனது வட்டி […]

Categories
உலக செய்திகள்

OMG : எத்தனை பேர் சாகுறாங்க….? விலையை அதிகப்படுத்துங்க..! “தன்னால திருந்துவாங்க”…. சுவிஸ் நாட்டில் பரபரப்பு கோரிக்கை….!!

சுவிட்சர்லாந்தில் புகையிலை எதிர்ப்பாளர்கள் சிகரெட் விலையை இரண்டு மடங்கு அதிகப்படுத்த வேண்டும் என்ற பரபரப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் 5.50 பிராங்குகள் என்று விற்பனையாகி வரும் சிகரெட் பாக்கெட்டின் விலை விரைவில் இரு மடங்காக உயர்த்தப்பட வேண்டும் என்று புகையிலை எதிர்ப்பாளர்கள் அமைப்பு கோரிக்கையினை முன்வைத்துள்ளது. அதாவது இளைய சமூகத்தினர் சிகரெட் விலையை 8 முதல் 14 பிராங்குகள் அதிகபடுத்தினால் கட்டாயம் புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. ஆனால் சுவிட்சர்லாந்து ஏற்கனவே மற்ற நாடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு பெறும் வயதினை இரண்டு ஆண்டுகள் அதாவது 60 வயதில் இருந்து 62 வயது ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதத்தை முன் தேதியிட்டு வழங்குவதாகவும் அரசாணை வெளியிடப்பட்டது. அது மட்டும் இல்லாமல் மத்திய […]

Categories
உலக செய்திகள்

கடும் நிதி நெருக்கடி எதிரொலி…. பாகிஸ்தானின் கடன் சுமை 50.5 ட்ரில்லியன் ரூபாயாக அதிகரிப்பு….!!

பாகிஸ்தானின் கடன்சுமை 50.5 ட்ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் செப்டம்பர் மாதம் 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் மொத்த கடன் சுமை குறித்து அந்நாட்டு ஸ்டேட் பாங்க் வெளியிட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தானின் கடன் சுமை அந்நாட்டு பணமதிப்பு படி 50 டிரில்லியன் ரூபாயாக உள்ளது. இம்ரான் கான் பதவியேற்றதிலிருந்து அந்நாட்டு கடன் சுமை அதிகரித்து வருவதாக கருத்துகள் வெளியாகியுள்ளன. ஆனால் ஸ்டேட் பாங்க் வெளியிட்டுள்ள இந்த […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : அம்மா மருந்தகங்களும் மூடப்படவில்லை… கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம்..!!!

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை எந்தவொரு அம்மா மருந்தகங்களும் மூடப்படவில்லை என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திமுக அரசு அம்மா உணவகங்களையும், அம்மா மருந்தகங்களை மூடும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும், நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி அம்மா உணவகங்களில் உள்ள வேலையாட்களின் எண்ணிக்கையை குறைந்ததாகவும் குற்றம்சாட்டினார். இதைதொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. மேட்டூர் அணையில் 60,000 கன அடி நீர் வெளியேற்றம்….!!!!

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் 60,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மேட்டூர் அணையின் நீர்வரத்து 60,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. எனவே அணைக்கு வரக்கூடிய தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக வினாடிக்கு 22,000 கன கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் 16 கண் வழியாக […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை…. நீர் திறப்பு 40,000 கன அடியாக அதிகரிப்பு…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையில்  கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மிகவும் குறைக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த 9ஆம் தேதி 119 அடியை எட்டியது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை…. உபரிநீர் திறப்பு 28,000 கனஅடியாக அதிகரிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையில்  கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனால் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மிகவும் குறைக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த 9ஆம் தேதி 119 அடியை எட்டியது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணை மறைக்கும் காற்று மாசு… டெல்லியில் மக்கள் தவிப்பு….!!

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் பல மாதங்களாக காற்று மாசு அதிகரித்து பெரும் பிரச்சினையாக நிலவுகிறது.இதற்கு வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்ற காரணங்களால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவில் இருக்கிறது. இதனிடையில் காற்று மாசு அதிகரிப்பதால் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகையின் போது டெல்லியில் பல்வேறு பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப் பட்டதால் காற்று மாசு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே வெளியே வரவேண்டாம்…. 45 கி.மீ வேகத்தில் காற்று…. வானிலை மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது என்று முன்னதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தமிழகத்தில் அதீத கன மழை வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதினால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் வங்க […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : பூண்டி ஏரியில் நீர் திறப்பு… 5,000 கன அடியாக அதிகரிப்பு…!!!

பூண்டி ஏரியில் நீர் திறப்பு 5,000 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து கொற்றலை ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரின் அளவானது 4,040 கன அடியிலிருந்து 5000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 4,100 கனஅடியாக அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள்

கோவை விமான நிலையத்தில் கணிசமான அளவில் உயர்ந்தது பயணிகள் எண்ணிக்கை…. சரக்குகள் கையாள படுவதும் அதிகரித்துள்ளதாக தகவல்….!!

கோவை விமான நிலையத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சரக்கு ஏற்றுமதியும் உயர்ந்து வருகிறது. கொரோனா பரவல் சற்றே தணிந்து வரும் நிலையில் தற்போது கோவை சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் மற்றும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் 5 விமானங்கள் இயக்கப்பட்டு நிலையில் தற்போது 26 விமானங்கள் வரை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காற்று மாசு தடுக்கக்கூடிய வகையில் வேதிப்பொருள் அல்லாத பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், அதனை குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகை அன்று நீதிமன்றம் நடவடிக்கைகளை பொதுமக்கள் மீறினார்கள். சென்னை மாநகரத்தில் பட்டாசு நச்சுப் புகையால் காற்றின் தரம் மிக அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளது. காற்று மாசுபாடு 50 ஆக இருந்தால் நல்லது என்றும் 100 வரை இருந்தால் திருப்தியானது. ஆனால் சென்னையில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

இந்தியாவின் தலைநகரமான டெல்லி நாட்டில் அதிக காற்று மாசுப்பாடு உள்ள நகரமாக கருதப்படுகிறது. அதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கு பலனும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் காற்று மாசுபாடு எடுத்த அளவீட்டின் படி தலைநகரில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது என்று தெரியவந்தது. அதில் அன்று மாலை 4 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 314 மற்றும் நேற்று காலை 8 மணிக்கு 341 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காற்று மாசு அதிகரிப்பு…. எந்தெந்த ஊரில் எவ்வளவு?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க நேரம் கட்டுப்பாட்டை கடைபிடிக்காததால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்று மாசு பல மடங்கு அதிகரித்துள்ளது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை,மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் நேர கட்டுப்பாடு விதித்தது.அதுமட்டுமல்லாமல் பொது மக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பட்டாசுகள் மற்றும் சரவெடி களை தயாரிக்க […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷாரா இருங்க…. சற்றுமுன் வெளியான அதிர்ச்சித் தகவல்…..!!!!

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்றுமற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இருந்தாலும் அந்தக் கட்டுப்பாடுகளை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பெரும்பாலானோர் வெடித்தனர். இதனால் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் பட்டாசு வெடித்தால் சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு மோசம் என்கிற நிலைக்கு சென்றுள்ளது. தற்போது சென்னை நகரில் காற்று மாசுபாட்டின் அளவில் 100 முதல் 150 […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் குழந்தை திருமணம்… 8 மாதங்களில் 45 வழக்கு… கடந்த ஆண்டை விட அதிகம்!!

  இந்தியாவில் திருமணம் செய்வதற்கு ஆணின் வயது 21 மற்றும் பெண்ணின் வயது 18  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வயதில் நடைபெறும் திருமணங்கள் மட்டும் அரசால் அங்கீகரிக்கப்படும் என்றும் இந்த வயதிற்கு குறைவாக திருமணம் செய்பவர்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். அதன்படி இந்தியாவில் பல மாநிலங்களில் பெண்கள் திருமண வயது வருவதற்கு முன் அவர்களுக்கு திருமணம் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்காக மாநிலங்களில் குழந்தைகள் நலப்பிரிவு செயல்பட்டு வருகிறது. குழந்தை […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…. பள்ளிகள் மூடல், விமானங்கள் ரத்து… திடீர் உத்தரவு…..!!!!

சீனாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகளை மூடவும் விமானங்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் சீனாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. இதில் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து சீனாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் நாடு முழுவதும் மின்தடை அதிகரித்துள்ளது. இதனால் மங்கோலியாவில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே எச்சரிக்கையா இருங்க…. சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்….!!!!

கொரோனா தொற்று பிரிட்டன், சிங்கப்பூரில் அதிகரித்து வருவதனால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டை எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 174 ஆவது வார்டு மடுவின்கரை பாரதி தெருவில் 30,லட்சம் ரூபாய் செலவில் நவீன உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சிங்கப்பூரில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் இப்போது […]

Categories
தேசிய செய்திகள்

உலக பட்டினி குறியீடு பட்டியல்… இந்தியாவுக்கு எத்தனாவது இடம் தெரியுமா…? பாகிஸ்தான், பங்களாதேஷை விட மோசம்…!!!

2021 ஆம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டில் இந்தியாவிற்கு 101 வது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை ஆய்வு செய்து ஒரு பட்டியலை உருவாகின்றன. இதை அயர்லாந்தை சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற அமைப்பும், ஜெர்மனியை சேர்ந்த என்ற வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்பும் சேர்ந்து வெளியிடுகின்றது. இது ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, சத்துணவு குறைபாடு, வயதுக்கு ஏற்ற உயிரிழப்புகள் ஆகியவற்றை கொண்டு இந்த பட்டியல் […]

Categories
தேசிய செய்திகள்

நிலக்கரி பிரச்சனையை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம்…. உற்பத்தி அதிகரிப்பு…. மத்திய மந்திரி தகவல்…!!!

மின்சார உற்பத்திக்கு தேவையைவிட அதிகமாகவே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய நிலக்கரித் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மத்திய நிலக்கரித் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தியை பார்வையிடுவதற்காக சென்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அந்த பேட்டியில் கூறியதாவது, இந்தியாவில் நிலக்கரி பிரச்சனை குறித்து தொடர் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. நிலக்கரி பிரச்சனை குறித்து அரசியல் செய்ய தான் விரும்பவில்லை என்று அவர் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் குழந்தை பெறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…. திடுக்கிட வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்….!!

கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 15 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு முதல் திருமண வயதிற்கு வராத சிறுமிகள் அதாவது 15 முதல் 19 வயதிற்கு இடைப்பட்ட வயதுள்ள சிறுமிகள் 10 ஆயிரத்து 613 பேர் பிரசவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 5742 பிரசவம் கிராமப் பகுதியில் பதிவாகியுள்ளது. மேலும் 5239 க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை திருமணங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு பயங்கர உயர்வு… இந்த மாநிலம்தான் முதலிடம்…!!!

2020 ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைத் திருமணத்திற்கான வழக்குகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக தேசிய குற்ற பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டை காட்டிலும் 2020ஆம் ஆண்டில் குழந்தை திருமண வழக்குகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. குழந்தை திருமணங்கள் அல்லது அது குறித்த புகார்கள் அதிகரித்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் தகவலின்படி, 2020 ஆம் ஆண்டில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 885 […]

Categories
மாநில செய்திகள்

ஹெல்மெட் அணியும் சென்னைவாசிகள்…. இது சூப்பர்ல… காவல்துறை தகவல்….!!!

சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது 72% இருந்து 86% ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 1.29 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், ஹெல்மெட் அணிவது அதிகரித்துள்ளது. மேலும் ஜனவரி முதல் செப்டம்பர் 9 வரை சென்னையில் நிகழ்ந்த விபத்துகளில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துங்க…. கேரளாவுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்…!!!

கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருப்பது கவலையளிப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் கேரளா மாநிலத்தில் பாதிப்பு அதிக அளவிலேயே உள்ளது. கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரளாவில் 32,801 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

வீட்டு உபயோகத்திற்கான பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் எரிவாயுவின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் தற்போது சமையல் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம், ஜூலை மாதம் என […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“உங்களுக்கு சூப்பர் பாஸ்ட் வேகத்தில் 4G இன்டர்நெட் இயங்கணுமா”…? அப்ப இத பண்ணுங்க….!!!

இன்றைய காலக்கட்டத்தில் நாம் முற்றிலும் இணையத்தையும், மொபைலையும் அதிக அளவு சார்ந்தே  உள்ளோம். உங்கள் மொபைலில் இணைய வேகம் குறைவாக இருந்தால் இனி கவலை வேண்டாம். அதனை எப்படி அதிகப்படுத்துவது என்பதை இங்கு காண்போம். முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் Settings > WiFi & internet > SIM & Network Setting என்ற ஆப்ஷனுக்குள் செல்லுங்கள். அவற்றில் Sim setting என்பதில் SIM 1, SIM 2 என்று இருக்கும். இதில் எந்த சிம்மை இணையத்திற்காக […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு… புதிய அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணம் திட்டத்தின் காரணமாக ஆண்களின் கட்டணம் அதிகம் வசூல் செய்யப்படுவதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு பல நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதில் ஒன்று பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்தத் திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை மாதத்தில் எண்ணெய் விலை 52% அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்…!!!

ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் வகைகள் விலை சராசரியாக 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மட்டும் அல்ல, குடும்பங்களின் அத்தியாவசியத் தேவையாக பயன்படுத்தப்பட்டுவரும் சிலிண்டர் மற்றும் சமையல் எண்ணெய்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக தங்களது வேலைகளை இழந்து பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு இது பேரிடியாக உள்ளது. அந்த வகையில் ஜூலை மாதத்தில் மட்டும் சமையல் எண்ணெய் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா… ராகுல் காந்தி வருத்தம்…!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் தொற்று குறைந்துள்ள காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்துக்கொண்டே இருப்பதால், அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சந்தா விலையை அதிகரித்த ஹாட்ஸ்டார்…. இனிமேல் VIP கிடையாது…..!!!!

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் சந்தா விலை அதிகரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.399- க்கு கிடைத்த விஐபி செப்டம்பர் 1 முதல் அகற்றப்படுகிறது. ரூ.499- ல் மொபைல் திட்டத்தின் மூலம் ஒரு மொபைலில் மட்டுமே ஹாட்ஸ்டார்-ஐ பயன்படுத்தலாம். ரூ.899- ல் சூப்பர் திட்டத்தின் கீழ் 1080p வசதியோடு இரண்டு கருவிகளில் பயன்படுத்தலாம். இறுதியாக ரூ.1,499 பிரீமியம் திட்டத்தில் 4 கருவிகளில் 4K வசதிகளோடு பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் லாக்கப் மரணங்கள்…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

நாடு முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது உயிரிழந்த கைதிகளின் ரிப்போர்ட் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 5,569 கைதிகள் நீதிமன்றம் மற்றும் காவல்துறையின் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார். நீதிமன்ற காவலில் 5,221 பேரும், காவல்துறை காவலில் 348 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 232 கைதிகளும். காவல்துறை காவலில் 25 பேரும் உயிரிழந்துள்ளனர் . மொத்தத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: முழு ஊரடங்கு…. அரசு பெரும் அதிர்ச்சி….!!!

இந்தியாவில் கடந்த வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 100 க்கும் அதிகமாக பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில்… ” உடல் எடை அதிகரிப்பு”… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

பிரிட்டன் நாட்டில் தழுவிய சுகாதாரம் உடல் நிலை குறித்து ஓபினியம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது. இந்த அமைப்பு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் 41 சதவீதம் தங்களது உடல் எடை அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு காரணமாக மக்களின் பழக்க வழக்கங்கள் மாறி உள்ளது. இதனால் பலரின் உடல் எடை அதிகரிப்பதை கண்டு ஆச்சரியம் ஏற்படவில்லை.சிற்றுண்டிகளை உண்டதும் வேண்டிய நேரத்தில் சாப்பிடாததும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது என […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் அதிகரிக்கும் குழந்தை திருமணம்…. சமூக ஆர்வலர்கள் கண்டனம்…!!!

நம் நாட்டில் 1978ல் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பெண்ணுக்கு திருமண வயது, 18, ஆணுக்கு, 21 என்ற நடைமுறை வந்தது. இந்தச் சட்டங்கள் இருந்த போதும், 50 சதவீதத் துக்கு மேல் 18 வயதுக்கு கீழுள்ள பெண்களுக்கு அதிக அளவில் திருமணம் நடைபெறுகின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 7 மாதங்களில் 41 குழந்தைகளுக்கு திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 10 ஆண்டில்…. இந்தியாவில் இதய, நீரிழிவு நோயாளிகள் அதிகரிப்பு… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கடந்த 10 ஆண்டில் மட்டும் இந்தியாவில் இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகின்றது. இந்தியாவில் இதய மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா முதல் இடத்தைப் பிடிக்கின்றது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மற்ற நோய்களை காட்டிலும் இதயம் மற்றும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து இருக்கிறது. மருந்து விற்பனையில் முதல் ஐந்து நோய்களில் இதயக்கோளாறு […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால்… 2 லட்சம் புது வாடிக்கையாளர்கள்… அதிகாரிகள் அறிவிப்பு…!!!

ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது எடுத்து 2 லட்சம் வாடிக்கையாளர்கள் கூடுதலாக வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதிலொன்று ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதை எடுத்து தமிழகத்தில் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட திட்டம் அமலுக்கு வந்தது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஆவின் பாலகத்தில் வாடிக்கையாளர்கள் 2 […]

Categories
தேசிய செய்திகள்

விலை உயர்விலும் சைக்கிள் விற்பனை அதிகரிப்பு…. குவியும் மக்கள்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சைக்கிள்களின் விலை ரூ.1500 உயர்ந்த போதிலும் விற்பனையும் அதிகரித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனையான கியர் சைக்கிள் தற்போது 15 ஆயிரத்திற்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

காப்பீடு திட்டத்தில் இணையும்… இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு… ஏன் தெரியுமா..?

கொரோனாவால் ஏற்பட்டுவரும் மரணங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் அதிக அளவில் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து வருகின்றனர். பொதுவாக 40 வயதை தாண்டியவர்கள் தான் அதிக அளவில் ஆயுள்காப்பீடு எடுப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் தற்போது 25 முதல் 35 வயதினரிடையே ஆயுள் காப்பீடு எடுப்பது அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உச்சம் அடைந்தது. இந்த சமயத்தில் 25 முதல் 35 வயது ஆண்களின் ஆயுள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் ஆபாச படங்கள்… பரபரப்பு…!!!

தமிழகத்தில் மீண்டும் ஆபாச படங்களை பகிர்வது அதிகரித்து வருவதாக உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. சமீபத்தில் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து அதை பகிர்ந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதையடுத்து இந்த பிரச்சினை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவ்வாறு பகிர்ந்து வருபவர்களின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்கள் அனைவரும் தங்களது படிப்பை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களின் நிலைமை சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு காரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக யுனிசெப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் மதுரையில் கடந்த 2020ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

நடைமேடை டிக்கெட்டுகளின் விலை அதிகரிப்பு…. டெல்லியில் ரயில்வே அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லி ரயில்வே நிலையத்தில் நடைமேடை டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ரயில் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தை குறைப்பதற்காக நடைமேடை டிக்கெட் விலையை உயர்த்துவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லியில் தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முடிவை வடக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: டெல்லி மண்டலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களிலும் மீண்டும் ரயில் நடைமேடை டிக்கெட் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா காரணமாக குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு….. ஐநா…..!!!!

உலகில் 2020 ஆம் ஆண்டில் இருந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று பணியை ஐநா தொடங்கியது. சுமார் 25 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்த நிலையில் 2016ஆம் ஆண்டுக்குள் அதை 15 கோடி ஆக குறைத்தனர். அதன்பிறகு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பஞ்சம், போர் காரணமாக அதிகரிக்கத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ஒரு நபர் அவரை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஏ.டி.எம். பண பரிவர்த்தனை கட்டண உயர்வு… 5 இலவச பணப் பரிவர்த்தனையில் எந்த மாற்றமில்லை…!!!

ஏடிஎம் பண பரிவர்த்தனை கட்டணங்களை ரிசர்வ் வங்கி சிறிய அளவு உயர்த்தி உள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மாதத்திற்கு 5 முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கவும், இதர வங்கிகளில் இருந்து மூன்று முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் ஐந்து மற்றும் மூன்று இலவச பரிவர்த்தனைக்கு மேல் பணம் எடுத்தால் அவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை தற்போது அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் மடிந்த பின்பு… GDP அதிகரித்து என்ன பயன்?….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழிப்போம் என்று பாரதியார் கூறியதையும் கேட்டதுண்டு. கொரோனா ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிரா மற்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் மின்சார […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள்…. சென்னை புறநகர் ரயில்சேவை அதிகரிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு…. ஐலோஸ்டாட் தரவுத்தளம் தகவல்….!!!!

இந்தியா முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியது. அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 7.11 சதவீதமாக உயர்ந்தது. இதனைப் போலவே வங்கதேசத்தில் வேலையின்மை விகிதம் 5.3% ஆகவும், இலங்கையில் 4.48% ஆகவும், பாகிஸ்தானில் 4.65% ஆகவும், நேபாளத்தில் 4.44% மற்றும் பூட்டானில் 3.74% ஆகவும் இருந்தது […]

Categories

Tech |