சாலைகளில் உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புரிந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி கால்நடைகள் உலா வருகிறது. இந்த கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சாலைகளில் உலா வரும் கால்நடைகளை அதிகாரிகள் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
Tag: அதிகாரிகளுக்கு கோரிக்கை
குளிர்பான பாட்டில்கள் சுகாதார மற்ற முறையில் சுத்தம் செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் குளிர்பானம் விற்பனை செய்யும் ஒரு கடை அமைந்துள்ளது. இந்த கடையில் அனைவரும் விரும்பி குடிக்கக்கூடிய பாதாம் பால், பிஸ்தா மற்றும் குளிர்ச்சியான மசாலா பால் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடையில் குளிர்பானங்களை வாங்கி குடித்த பிறகு குப்பை தொட்டிகளில் மக்கள் போடும் பாட்டில்களை சேகரித்து அதை சுகாதார மற்ற முறையில் சுத்தம் செய்து […]
மாமரங்களை பூச்சிகள் தாக்குவதால் சாகுபடி குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீலம், செந்தூரா, பீத்தர், பெங்களூரா, பங்கனபள்ளி, மல்கோவா, அல்போன்சா போன்ற பலவிதமான மாம்பழங்கள் 40 ஆயிரம் பரப்பளவிற்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமரங்களில் டிசம்பர் முதல் ஜனவரி மாதம் வரை பூக்கள் பூக்கும். இந்த வருடம் அதிக மழை பெய்துள்ளதால் வழக்கத்தைவிட அதிகமான அளவு பூக்கள் பூத்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். ஆனால் தத்துப்பூச்சிகள் மாமரங்களை […]
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணியில் அடிக்கடி கடல் அலையில் சிக்கி ஏற்படும் உயிரிழப்பை தடுக்க வேலி அமைத்து தருமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டத்தில் சிக்கல் சிங்காரவேலர் கோவில், நாகூர் தர்கா, எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் ஆகியவை உள்ளது. இந்த பகுதிகளை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா பூங்கா தமிழக சுற்றுலா துறையின் […]