திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலிதீன் பைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த பிளாஸ்டிக் டம்ளர்களும், பாலித்தீன் பைகளும் வெளியூர்களில் இருந்து கடத்தி வரப்படுவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் லாரி மூலம் மதுரையிலிருந்து பிளாஸ்டிக் டம்ளர்கள் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாநகர நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் திண்டுக்கல்லில் இருக்கும் லாரி புக்கிங் பார்சல் அலுவலகங்களை கண்காணித்தனர். […]
Tag: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வருவதால் கடற்கரை பகுதிகளில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலக செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் கொட்டாரம் பகுதியில் இருக்கும் 64 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 12 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து 18 […]
மதுரை மாவட்டத்தில் உள்ள எச்.எம்.எஸ் காலனியில் வசிக்கும் பெண் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஸ்ரீராம் நகரில் ஆட்டோ ஓட்டுநரான காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி யோகமீனாட்சி பள்ளி படிப்பு கூட முடிக்காமல் வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து நோயாளிகளுக்கு மாத்திரை, மருந்து கொடுத்து ஊசி போடுகிறார். இவரால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். எனவே விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். […]
சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4000-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி உரிமம் பெறவும், தொழில் வரி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதனை மீறி வரி செலுத்தாத கடைகளை மூடி சீல் வைக்குமாறு சென்னை மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி ராயபுரம் மண்டல உதவி வருவாய் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் சென்னை பூக்கடை நைனியப்பன் தெரு, தங்கசாலை தெரு, அண்ணா […]
கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் செருப்பாலூர், தக்கலை, குலசேகரம், கல்லடிமாமூடு ஆகிய பகுதிகளில் இருக்கும் 52 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதற்காக 17 கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதனையடுத்து 13 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மனநலம் பாதித்தவர்கள் முதியவர்கள் சுற்றி திரிகின்றனர். இவர்கள் கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கும் உணவுகளை சாப்பிட்டு வாழ்கின்றனர். மேலும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு இடமின்றி கடும் பனிப்பொழிவில் சிரமப்படும் முதியவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்கும் முயற்சியில் போலீசாரும், சமூக நலத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு 64 பேரை மீட்டு […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் சிலர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதனால் நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள கால அவகாசம் வழங்குமாறு கேட்டனர். அதற்கு ஏற்கனவே போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது என கூறி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர்.
காரில் கடத்த முயன்ற 350 கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்டியா வயல் ஜங்ஷன் பகுதியில் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 350 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த கார் உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் அவர் […]