நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோக்குடல் கிராமத்தில் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 வீடுகளின் சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, இரவு நேரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த அளவு நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம். இதனால் சமுதாயக்கூடம் வீடுகள் உட்பட 10 கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் சாலையில் பிளவு ஏற்பட்டது என கூறியுள்ளனர். […]
Tag: அதிகாரிகள் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியூஹோப் பகுதியில் கணவனை இழந்த முத்தம்மா(81) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்களும், 4 மகள்களும் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முத்தம்மா கூடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு சென்று வயதான காலத்தில் பிள்ளைகள் யாரும் கவனிக்காததால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக கண்ணீர் மல்க பொதுமக்களிடம் கூறி அழுதுள்ளார். அப்போது ஆர்.டி.ஓ இல்லாததால் கிராம நிர்வாக அலுவலர் சாம் சுந்தரி, கிராம உதவியாளர் சதீஷ் ஆகியோர் மூதாட்டியிடம் […]
பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஐஐடி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவ மாணவியருக்கு சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் பொருள்கள் தனித்தனியே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை சைக்கிளாக பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் இன்னும் நான்கு […]
பாகம் பிரியாள் சமேத வால்மீகிநாத சாமி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் 8 1/2 லட்சம் இருந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள திருவெற்றியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம் பிரியாள் சமேத வால்மீகிநாத சாமி கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவில் உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. மேலும் காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையால் சிவலிங்கம் […]
பழுதடைந்த உறுதி தன்மை இழந்த 23 பள்ளி கட்டிடங்கள் கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் பள்ளி கல்வித்துறை, பொதுபணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொறியாளர் அடங்கிய அதிகாரிகள் அனைத்து பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதன் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் சனவேலி, திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலா 4 கட்டிடங்கள், திருவாடனை, தொண்டி, உப்பூர், சாயல்குடி, சோழந்தூர், வெட்டுகுளம் ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் தலா 2 கட்டிடங்கள், பரமக்குடி, கடலாடி, […]
தொடர் மழையால் தக்காளி சாகுபடி குறைந்து விலை உயர்ந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் கோட்டை பகுதியில்உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் சுமார் 17¼ டன் காய்கறிகளும், 4½ டன் பழங்களும் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்துள்ளனர். இதனையடுத்து தொடர்ந்து பெய்து […]