கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குள்ளட்டி வனப்பகுதியில் ஒட்டி அமைந்துள்ள ஹோட்டலில் கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிசலூரை சேர்ந்த மல்லேசன், மாதேஷ் ஆகியோர் ஹோட்டலில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஓசூர் வனகோட்டை வனக்காப்பாளர் கார்த்திகேயனி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது பிரசாந்த், மல்லேசன், மாதேஷ் ஆகிய 3 பேரும் இணைந்து மான்களை வேட்டையாடி ஹோட்டலில் சமைத்து விற்பனை செய்தது […]
Tag: அதிகாரிகள் நடவடிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி மாநகர் நல அலுவலர் இந்திரா தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாரிகள் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் லாரியில் திண்டுக்கல்லுக்கு கொண்டுவரப்பட்ட […]
பராமரிப்பு இல்லாத வாகனங்களில் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் பள்ளி வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்தில் சிக்கியதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி தாளவாடி, சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட வாகனங்களை கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது வாகனங்களில் அவசரகால கதவுகள் சரியாக இயங்குகிறதா? முறையான […]
சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோரம் வாகனத்தில் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருக்கும் மாட்டு இறைச்சியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜா மற்றும் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தை சோதனை செய்தபோது 100 கிலோ மாட்டிறைச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கால்நடை துறை மருத்துவர்களை வரவழைத்து சோதனை செய்து பார்த்த […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் பகுதியில் இருக்கும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசு ஆண்கள் பள்ளி, கள்ளக்குறிச்சி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 5 பெட்டி கடைகளில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சியில் இருக்கும் சிறுவர் பூங்கா, வாழைத்தோட்டம் ஆகிய இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பொதுமக்களிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 600 பேரிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோவை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் இருக்கும் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில் யானைக்கால் நோய் பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, நோயை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வட்டார […]
கோவிலுக்கு சொந்தமான இடத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான மடம் ஒன்று தெற்கு வீதியில் அமைந்துள்ளது. இந்த மடத்தில் திருத்துறைபூண்டி சைவ செட்டியார்கள் குத்தகைக்கு எடுத்து முறையாக கோவிலுக்கு பணத்தையும் செலுத்தி வருகின்றனர். இதனை அடுத்து இந்த மடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகின்றார். தற்போது இந்த இடம் மிகவும் பழுதடைந்து விட்டதால் அங்குள்ள கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடத்தை எழுப்ப […]
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அழகிய மண்டபம், திருக்கணங்கோடு, கருங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 16 கடைகளில் உபயோகப்படுத்திய 40 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக திருக்கணங்கோடு பகுதியில் இருக்கும் 2 கடைகள், கருங்கல் பகுதியில் இருக்கும் ஒரு கடை, அழகிய மண்டபம் பகுதியில் இருக்கும் ஒரு பேக்கரி […]
அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.புதுப்பாளையம் மேட்டு தெருவில் சங்கரன்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தலிங்கமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மின்வாரியத்தில் உதவி பொறியாளர், கேங்மேன் வேலை வாங்கி தருவதாக கூறி 40 பேரிடமிருந்து தலா 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய், 18 பேரிடமிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 94 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை […]
ஆக்கிரமிப்பு கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே வருவாய்த் துறையினருக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருகின்றனர். இதுகுறித்து அறிந்த வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கியும் சம்பந்தப்பட்டவர்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்டுமான பணியை செய்து வந்தனர். இதனால் தாசில்தார் செந்தில் தலைமையிலான வருவாய்த்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடித்து அகற்றி அங்கு இருந்த விளம்பர பேனரை அப்புறப்படுத்தியுள்ளனர்.
கோவிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே புன்னைநகர் பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த சுக்கிரவார கட்டளைக்கு சொந்தமான 63 சென்ட் நிலம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அறநிலை துறை வட்டாட்சியர் சஜித், முப்பந்தல் கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் முன்னிலையில் நில அளவையர்கள் ராகேஷ், அஜித் ஆகியோர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு அதில் அறிவிப்பு பலகை வைத்தனர். […]
திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு அருகில் 90 காபி பார் ஒன்று உள்ளது. இதே போல் கரூர் பைபாஸ் ரோட்டில் அகிலாண்டேஸ்வரி டீ கடை ஒன்று உள்ளது. இந்த இரண்டு கடைகளிலும் புகையிலை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் அந்த கடைகளில் சோதனை நடத்தியுள்ளார். இந்த சோதனையில் அந்த கடைகளில் புகையிலை […]
சாலையோர ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் இருக்கும் உழவர் சந்தையில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் உழவர் சந்தைக்கு முன் பகுதியில் இருக்கும் சாலை ஓரத்தை ஆக்கிரமித்து சிலர் கடை வைத்துள்ளதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் […]
போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சுபவர்கள், அதனை கடத்தி விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சாராய கடத்தல்காரர்கள் மற்றும் வியாபாரிகளுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள போலீஸ்காரர்களையும் கண்டுபிடித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் என்பவருக்கு சாராய வியாபாரிகளுடன் ரகசிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் பணத்தை வாங்கிக்கொண்டு சட்டவிரோத […]
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 3 ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பல்வேறு முக்கிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 ஹோட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்வதற்காக ரசம், மோர், சாம்பார் ஆகிவற்றை கட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அழித்துவிட்டனர். […]
தடையை மீறி செயல்பட்ட இறைச்சி கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடையை மீறி சிலர் இறைச்சியை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து 21-வது வார்டுக்கு உட்பட்ட பிரசாந்த் வீதியில் இருக்கும் கோழி கடையின் பின்புறமாக இறைச்சியை விற்பனை செய்துள்ளனர். இதனை பார்த்த அதிகாரிகள் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த குற்றத்திற்காக உரிமையாளருக்கு […]
உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட 3 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பைபாஸ் சாலையில் மாவட்ட போக்குவரத்து அலுவலர் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடசாமி உள்பட அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற காரை அதிகாரிகள் நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் தீப்பெட்டி நிறுவனத்திற்கு பணியாளர்களை காரில் ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் […]
சென்னை தாம்பரம் அடுத்த மதுரப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 137 வீடுகளில் 600க்கும் அதிகமான மக்கள் பல ஆண்டுக்களாக வசித்து வருகின்றனர். இப்பகுதி அரசுக்கு சொந்தமான நிலம் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வீடுகளை காலிசெய்யும்படி வருவாய்த்துறை சார்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் தாம்பரம் தாசில்தார் கவிதாவுக்கு ரூபாய்.25 ஆயிரம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம், வரும் 11-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து […]
கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்து குமரியில் கொட்டிய லாரிக்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோழி மற்றும் மீன் கழிவுகளை லாரியில் ஏற்றி வந்து கொட்டுகின்றனர். நேற்று மாலை தேவசகாயம் மவுண்ட் நான்கு வழிச்சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியிலிருந்து மூட்டை முட்டையாக கழிவுகளை இறக்கியுள்ளனர்.இதனை அவ்வழியாக சென்ற ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் பார்த்துள்ளார். இதனை அடுத்து […]
லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசூர் கிராமத்தில் வசிக்கும் கலைமணி என்பவருக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த மனை பட்டாவில் கலைவாணியின் பெயர் மற்றும் ஆவணங்களை பதிவு செய்வதற்கு அவரது மகன் யுவராஜ் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம, வட்ட ஆவணங்களில் திருத்தம் செய்ய 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என பதிவறை எழுத்தாளரான சிவஞானவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
தரமற்ற முறையில் உணவு தயாரித்த பிரபல கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள சாத்தமங்கலம்-ஆவின் சந்திப்பில் பிரபல பன் பரோட்டா கடை செயல்பட்டு வந்துள்ளது. இந்த கடையில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரித்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தரமற்ற முறையில் உணவுகள் தயார் செய்யப்படுவதும், […]
சாலைகளில் போக்குவரத்து இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் அகற்றியுள்ளனர். நெல்லையில் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை டவுன் வடக்கு ராஜ வீதி, கீழ ராஜவீதி சாலையில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களையும் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியுள்ளனர். இந்த பணிகள் மாநகர நகர்நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
பட்டா வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள குள்ளபுரத்தில் வசித்து வரும் ஈஸ்வரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் மற்றும் தனிப்பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்துள்ளார். இந்நிலையில் அலுவலக அதிகாரிகள் அவருக்கு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து குள்ளபுரம் கிராம நிர்வாக அலுவலர் […]
சாக்கடை கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கடைகளை நகராட்சியினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். தேனி மாவட்டம் போடி நகராட்சியில் உள்ள 30-வது வார்டு பகுதியில் உள்ள கருப்பசாமி கோவில் அருகே சாக்கடையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் மற்றும் கடைகள் கட்டியுள்ளதாக பொதுமக்கள் வெகு நாட்களாக புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் நகர தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், ஆணையாளர் சகிலா, நகராட்சி என்ஜினீயர் செல்வராணி மற்றும் வார்டு கவுன்சிலர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்புகளை ஆய்வு […]
நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 8 ஏக்கர் 70 சென்ட் நிலம் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் உள்ள மொசப்பாறை பகுதியில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை சில விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மற்ற விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட திட்ட இயக்குனர் தண்டபாணி, போடி தாசில்தார் செந்தில் முருகன், வட்டார வளர்ச்சி […]
அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்த 35 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே மத்துருட்டு, வேப்பிலைகுட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனையடுத்து சட்ட விரோதமாக செய்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த […]
சட்ட விரோதமாக செய்யப்பட்ட 50 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கட்டவிளாகம் ஊராட்சியில் கீழ்குடி கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் ஆற்றுபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்துள்ளது. இதனை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் கீழ்குடி கிராமத்தில் சட்ட விரோதமாக செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து முழுமையாக அகற்றியுள்ளனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, மண்டல துணை தாசில்தார் ஜஸ்டிஸ் பெர்னாண்டோ, மங்கலக்குடி வருவாய் […]
மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அதேபோல் பொங்கல் […]
பழைய தார் சாலையை அகற்றாமல் புதிய சாலை அமைத்ததால் வீட்டின் கேட்டுகளை திறக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட மோகனூரில் இருந்து கொங்கு நகருக்கு செல்லும் சாலை பணிகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சுமார் 26 லட்சம் மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பழைய சாலையை அப்புறப்படுத்தாமல் அதன் மீது புதிய சாலையை போட்டுள்ளனர். இதனால் […]
அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைகளுக்கு சென்று ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நூல்களை அழித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசின் அனுமதியின்றி பல்வேறு சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து விசைத்தறி மூலம் நெய்யப்பட்ட துணிகளை குமாரபாளையத்திற்கு நேரடியாக கொண்டு வந்து சாயம் ஏற்றுகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாததால் இரவோடு இரவாக சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுகள் சாக்கடைகளில் வெளியேற்றி விடுகின்றனர். […]
ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுமார் 44 வீடுகள் மற்றும் கடைகளை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலை, தொட்டிபட்டி வையப்பமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அலவாய்ப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் பட்டீஸ்வரர் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அப்பகுதிகளில் […]
அரசு நிலங்கள் அபகரித்ததர்க்கு துணையாக இருந்த 2 தாசில்தார் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அதிகாரிகளின் உதவியோடு அதிமுக பிரமுகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி, பெரியகுளம் சப் கலெக்டர் ரிஷிப் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் பெரியகுளம் தாலுகாவில் பணியாற்றும் தாசில்தார்களுக்கும் இதில் […]