Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பிரசவம் பார்த்த நர்சுகள்….. குழந்தையின் கையில் 3 இடங்களில் முறிவு…. அதிர்ச்சி சம்பவம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான வசந்தாவை குடும்பத்தினர் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அன்றைய தினம் வசந்தாவுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் டாக்டர் இல்லாததால் நர்சுகள் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது குழந்தைக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோரிடம் தெரிவிக்காமல் ஓசூர் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சீமை கருவேல மரங்களை அகற்றிய நபர்….. பழங்கால மண் கலயம் கண்டெடுப்பு…. அதிகாரிகளின் விசாரணை…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாஞ்சார் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இருந்த சீமை கருவேல மரங்களை முனீஸ்பாண்டி என்பவர் அகற்றிய போது பழங்கால மண் கலயம் ஒன்று கிடைத்தது. அதனை உடைத்து பார்த்தபோது பழமையான பூஜை பொருட்கள் மற்றும் சாமி சிலைகளை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த முனீஸ்பாண்டி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் காரியாபட்டி தாசில்தார் தவழ்ந்த நிலையில் இருந்த கண்ணன், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நூடுல்ஸ் பாக்கெட்டில் புழுக்களா…?? உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் விசாரணை….!!

நூடுல்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் கிடந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மளிகை கடையில் நூடுல்ஸ் பாக்கெட்டை வாங்கியுள்ளார். அதனை வீட்டிற்கு கொண்டு சென்று உடைத்து பார்த்தபோது குழுக்களும், மண்ணும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் உடனடியாக நூடுல்ஸ் பாக்கெட்டை மளிகை கடைக்கு கொண்டு சென்றுள்ளார். அதற்குள் உரிமையாளர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மதுபாட்டிலில் இருந்த கரப்பான்பூச்சி… அதிர்ச்சியடைந்த தொழிலாளி… அதிகாரிகள் விசாரணை…!!

மது பாட்டில் உள்ளே கரப்பான்பூச்சி உயிரிழந்து காணப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சூரங்கோட்டையை அடுத்துள்ள களத்தாவூரில் கபில்தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர் கீழசிறுபோது கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் கடையில் மது பாட்டில்களை வாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து அதனை குடிப்பதற்காக மது பாட்டிலை திறந்துள்ளார். அப்போது மது பாட்டில் உள்ள ஒரு கரப்பான்பூச்சி உயிரிழந்து […]

Categories
உலக செய்திகள்

ஜெட் விமானத்தில் ஏற்பட்ட அசாதாரண நிகழ்வு.. விமானிகள் இருவர் உயிரிழந்த சோகம்..!!

ஈரானில் ஜெட் விமானம் ஒன்று புறப்படும்போது வெளியேறக்கூடிய அமைப்பு திடீரென்று இயங்கியதில் விமானிகள் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஈரானில் Khuzestan பகுதியில் இருக்கும் Dezful என்ற விமானப்படைத்தளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று F-5 என்ற இரண்டு இருக்கைகள் உடைய ஜெட் விமானம் புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்திருக்கிறது. அப்போது திடீரென்று, எதிர்பாராத விதமாக விமானத்தின் வெளியேறக்கூடிய அமைப்பு இயங்கியதால், Hossein Nami மற்றும் Kianoush Basti என்ற விமானிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் […]

Categories
உலக செய்திகள்

கால்வாயில் கிடந்த பிஞ்சு குழந்தையின் உடல்.. மனமுடைந்து போன இளம் தந்தை..!!

பிரிட்டனில் கால்வாயிலிருந்து பிறந்து சில நாட்களே ஆன பிஞ்சு குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் லீ கோல்ஸ் என்ற 27 வயதான நபர், கடந்த வியாழக்கிழமையன்று சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, வழியில் வால்சால் என்ற பகுதியில் இருக்கும் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார். எனவே அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தற்போது காவல்துறையினர் அந்த குழந்தை தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த குழந்தையினுடைய […]

Categories
உலக செய்திகள்

ஏரியில் மிதந்த முதியவரின் உடல்.. அதிகாரிகள் தீவிர விசாரணை..!!

ஜெனீவா ஏரியில் மிதந்த முதியவரின் சடலம் மீட்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   ஜெனீவாவின் ரோல் துறைமுகத்திற்கு அருகே ஒரு நபரின் உடல் மிதந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்ற நபர் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் 73 வயதுள்ள அந்த நபர், அவரின் படகை சவாரிக்காக தயார் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது நிலைதடுமாறி அவர் தண்ணீரில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும் அந்த நபரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

“புதர்களுக்கிடையில் கிடந்த பெண் உடல்!”.. பின்னணி என்ன..? வெளியான தகவல்…!!

லண்டனில் புதர்களுக்கிடையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் கடந்த செவ்வாய் கிழமை அன்று ரோம்ஃபோர்ட், எசெக்ஸ் பகுதியில் இருக்கும் புதர்களின் இடையில் ஒரு பெண்ணின் உடல் கிடந்துள்ளது. இதனை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மரியா ஜேன் ராவ்லிங்ஸ் என்ற 45 வயது பெண் தான் அது என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். அதாவது அந்த பெண் கடந்த செவ்வாய் அன்று கிங் ஜார்ஜ் […]

Categories
தேசிய செய்திகள்

பரிதாபம்..! அடுத்தடுத்து “78 பசுக்கள் உயிரிழப்பு” – அதிர்ச்சி சம்பவம்

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்திலுள்ள சர்தார்ஷகார் அருகே உள்ள பிலியுபாஸ் ராம்புரா கிராமம் உள்ளது. இங்கு அரசு உதவி பெறும் கால்நடை பண்ணை ஒன்று  அமைந்துள்ளது.  இந்த கால்நடை   பண்ணையில் ஏராளமான பசுக்கள் உள்ளன. இதனை தனியார் அமைப்பு (நிறுவனம்) பராமரித்து வருகிறது. இந்நிலையில் பண்ணையில்  நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில பசுக்கள் நோய்வாய்ப்பட்டநிலையில் உள்ளன… ஒரே நாளில் 78 […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீ …!!

தெலங்கானா மாநிலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து நேரிட்டது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில் திடீர் தீ விபத்து நேரிட்டது. இதையடுத்து புகை வெளியேறியது. தொடர்ந்து ரயில்வே பணியாளர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். ரயிலில் முதல் பெட்டியில் ஏற்பட்ட தீ மளமளவென்று பரவியது. இரண்டு பெட்டிகள் தீயில் சேதமடைந்தன. சம்பவத்தின்போது பயணிகள் யாரும் இல்லாததால் […]

Categories

Tech |