மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, 55 கி.மீ. வடக்கு வடமேற்கில் நிலை கொண்டுள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி – 17 செ.மீ, திருத்தணி – 16.2 செ.மீ. கும்மிடிப்பூண்டி – 13.4 செ.மீ, சோழவரம் 12.9 செ.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் – 16 செ.மீ. சென்னை மீனம்பாக்கம் – 12 செ.மீ., நுங்கம்பாக்கம் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]
Tag: அதிக மழை
வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இது தற்போது சிட்ரங் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் இன்று வங்காளதேசத்தை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன் பிறகு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசிக்கும் 28,155 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதோடு 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது பாதுகாப்பு முகாம்களில் தங்க […]
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த ஆண்டு தொடங்கிய முதலே உருவாகும் முதல் புயல் இது. இந்த புயலுக்கு அசானி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது அந்தமான் நிக்கோபர் தீவுகளை […]
டிசம்பர் மாதத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை இயல்பை விட சற்று அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல முக்கிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று வரை […]