Categories
உலக செய்திகள்

“ட்விட்டர் கணக்கு முடக்கம்” புதிய ஊடகத்தை உருவாக்குவேன் – ட்ரம்ப் அறிவிப்பு

தனது ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடங்கியதால் புதிய சமூக ஊடக வெளியை உருவாக்க போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் வெளியிடும் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருப்பதால் ட்விட்டர் நிறுவனம் அவற்றை அவ்வப்போது நீக்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமாகவே கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதனால் நிரந்தரமாக அவரது கணக்கை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கு முற்றிலுமாக முடக்கப்பட்டதால் தான் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் கணக்கு முடக்கம்…. வன்முறையை தூண்டுறாரு…. ட்விட்டர் கொடுத்த விளக்கம்…!!

கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிடுவதால் அதிபர் டிரம்ப் பின் கணக்கை முற்றிலுமாக ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் வெளியிடும் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருப்பதால் ட்விட்டர் நிறுவனம் அவற்றை அவ்வப்போது நீக்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமாகவே கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதனால் நிரந்தரமாக அவரது கணக்கை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டது தான் […]

Categories
உலக செய்திகள்

“நான் எப்படியாது ஜெயிக்கணும்” அமைச்சரை மிரட்டிய ட்ரம்ப்… விமர்சித்த கமலா ஹாரிஸ்…!!

தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாநில அமைச்சரை ட்ரம்ப் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் இதனை ஏற்க மறுத்த குடியரசு கட்சியின் வேட்பாளர் மற்றும் தற்போதைய அதிபரான ட்ரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்து விட்டதாகவும், வாக்குகளை சரியாக எண்ணவில்லை என்றும் குற்றம் சுமத்தினார். இதனையடுத்து ட்ரம்ப் ஜார்ஜியா மாகாணத்தில் […]

Categories
உலக செய்திகள்

இன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்….! பின்னடைவை சந்தித்த டிரம்ப்… வெளியான அதிர்ச்சி முடிவுகள் ….!!

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெற இருக்கும் நிலையில் புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் என்.பி.டி  மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் ஜோ பிடனுக்கு 52 சதவீத ஆதரவும் ட்ரம்புக்கு 42 சதவீத ஆதரவும்  கிடைத்துள்ளது. ஹரிசேனா, அயோவா, ஜோர்ஜியா, மிச்சிகன், மினசோட்டா, பென்சில்வேனியா, நியூ ஹாம்ப்ஷயர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த 12 மாநிலங்களில் பிடன் முன்னிலை வகிக்கிறார். அக்டோபர் 29 மற்றும் 31 இல் நடத்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

காய்ச்சல் தான் கொரோனா…. அதை கட்டுப்படுத்த போவதில்லை…. டிரம்ப் தரப்பு ஆணவ பேச்சு …!!

அமெரிக்க அதிபரின் உதவியாளர் மார்க் மேடோஸ் கொரோனா தொற்றை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம் என கூறியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. உலக நாடுகள் முழுவதும் கொரோனாவால் அதிக தாக்கத்தை சந்தித்து உயிரிழப்புகளை கொடுத்துள்ளது. அதில் அதிகமாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அதேபோன்று உயிரிழப்புகளும் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்காவே பெற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தொற்று பரவுவதை ட்ரம்ப் தடுக்காமல் விட்டுவிட்டார் என்று ஜோ பிடன் விமர்சனம் செய்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் அதிபரின் உதவியாளர் […]

Categories
உலக செய்திகள்

“நான் அனைவரையும் முத்தமிடுவேன்” முகக்கவசத்தை வீசியெறிந்த ட்ரம்ப்….!!

கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட அதிபர் பிரச்சாரத்தில் ஆதரவாளர்களை முத்தமிட தயார் என்று கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நான்கு நாட்கள் கழித்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அதன்பிறகு தொற்றில் இருந்து அதிபர் விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சார பேரணியில் சமூக இடைவெளியின்றி பலரும் பங்கேற்றனர். அந்தப் பேரணியில் அதிபர் பேசிய போது, “நான் தொற்றில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

“பயம் வேண்டாம்” ட்ரம்பிடம் இருந்து தொற்று பரவாது….. மருத்துவர்கள் கூறிய காரணம்….!!.

அமெரிக்க அதிபர் டிரம்பிடமிருந்து யாருக்கும் கொரோனா தொற்று பரவாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பத்து நாட்கள் சிகிச்சை எடுத்து வருகின்றார். அதோடு நோய் தொற்றுக்கான அறிகுறிகளில் இருந்து முழுவதுமாக விடுபட்டுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் அவர்களின் வெள்ளை மாளிகை மருத்துவர் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் அதிபருக்கு காய்ச்சல் வரவில்லை. அவருக்கு செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகளின் தீநுண்மிகள் வளருவதற்கான அறிகுறிகள் இல்லை. அதனால் இனியும் அதிபர் ட்ரம்ப் […]

Categories
தேசிய செய்திகள்

“ட்ரம்ப்க்கு சிலை” கடவுளாக வணங்கிய இந்தியர்…. மரணத்தால் சோகத்தில் குடும்பத்தினர்…!!

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு சிலை வைத்து வணங்கி வந்த இந்தியர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜங்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் புஸ்சா  கிருஷ்ணா இவர் சென்ற வருடம் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு  6 அடி உயரத்தில் சிலை ஒன்றை நிறுவினார். அதன் பிறகு தினமும் தீவிர பக்தனாக டிரம்பை வழிபட்டு வந்துள்ளார். கடந்த வருடம் இந்தியாவிற்கு ட்ரம்ப் வந்தபோது பேட்டியளித்த புஸ்சா  கிருஷ்ணா கூறுகையில், “இந்தியாவுக்கு எனது கடவுள் வந்ததை நினைத்து பெருமைப் படுகின்றேன். […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவுக்கு தீமை” கடுமையான நடவடிக்கை எடுப்போம்… ஈரானை எச்சரித்த ட்ரம்ப்…!!

கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் எங்களுக்கு எதிராக ஈரான் தீய செயல்கள் செய்தால் இதுவரை பார்க்காத அளவிற்கு கடுமையான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கக்கூடும். நிச்சயம் அதனை செய்ய தவற மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமன்றி நவம்பரில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் நான் வெற்றியடைந்தால் அணு ஆயுத ஒப்பந்தம் ஈரானுடன் மறுபடியும் போடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானின் முக்கிய போர்த் தளபதி […]

Categories
உலக செய்திகள்

எனக்கு கொரோனா…. கடவுள் கொடுத்த வரம்…. ட்ரம்ப் வெளியிட்ட காணொளி…!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கடவுள் கொடுத்த வரம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  தெரிவித்துள்ளார். கடந்த 1ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் அதிபருக்கு கொரோனா அறிகுறிகள் அதிகமானதால் மேரிலேண்ட் மாகாணத்தில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  கொடுக்கப்பட்டது. நான்கு நாட்கள் ராணுவ மருத்துவமனையில் இருந்த ட்ரம்ப்  நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆகி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். […]

Categories
உலக செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணுறீங்க ? டிரம்ப் பதிவால் கடுப்பான ட்விட்டர், பேஸ்புக் …!!

பருவக் காய்ச்சலுடன் கொரோனா தொற்றை அதிபர் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிபர் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அதன் பிறகு தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆரம்ப கட்டத்தில் கொரோனாவை எப்படி சாதாரணமாக மதிப்பிட்டாரோ அதேபோன்று இப்போதும் கொரோனாவை பருவ காய்ச்சலுடன் ஒப்பீட்டு பேசியுள்ளார். அவர் பதிவில் “ஒவ்வொரு வருடமும் பருவ காய்ச்சல் உயிரிழப்புகளை எடுக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ட்ரம்ப்….. செய்த செயலால் எழுந்த சர்ச்சை…!!

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வரும் அதிபர் ட்ரம்ப் முக கவசத்தை அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அதிபர் மருத்துவமனையில் இருந்து திங்கட்கிழமை அன்று வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அவருக்கு தொடர்ந்து தொற்றுக்கான சிகிச்சை வெள்ளை மாளிகையில் வைத்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து வெள்ளை மாளிகைக்கு புறப்படும் முன் தொற்றை நினைத்து யாரும் பயம் கொள்ளவேண்டாம். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட நான் நன்றாகவே இருக்கிறேன் என டுவிட் செய்திருந்தார். […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் இருக்கும் மருத்துவமனையில் பரபரப்பு….! குவிக்கப்பட்ட போலீசாரால் பதற்றம் …!!

ட்ரம்ப் சிகிச்சை எடுக்கும் மருத்துவமனையின் அருகே கிடந்த சந்தேகத்திற்குரிய பையினால் பரபரப்பு ஏற்பட்டது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். மூச்சுத் திணறலும் காய்ச்சலாலும் அதிபர் அவதிப்பட்டதால் வாஷிங்டனில் இருக்கும் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அதிபர் ட்ரம்ப் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அடுத்த 48 மணி நேரம் மிக மிக முக்கியமானது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

நான் இறந்து விடுவேனா…? சிகிச்சையில் ட்ரம்ப் கேட்ட கேள்வி….?

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் ட்ரம்ப் நான் இறந்து விடுவேனா என்று கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லேசான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சலால் ராணுவ மருத்துவமனைக்கு அவசரமாக ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அதிபர் காய்ச்சலில் இருந்து விடுபட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் பற்றிய தகவல் 48 மணி நேரம் கழித்தே தெரியவரும் என்று […]

Categories
உலக செய்திகள்

ராணுவ வீரர்கள் கோழைகள்… “அவர்களுக்கு நான் மரியாதை செலுத்தனுமா”… டிரம்புக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு..!!

முதல் உலகப் போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் கோழைகள் என குறிப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரான்சில் அமையப்பெற்றுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களின் கல்லறைக்கு செல்ல மறுத்ததோடு கோழைகளின் கல்லறைக்கு என்னால் மரியாதை செலுத்த முடியாது என்றும் கூறியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 1918 ஆம் ஆண்டு பிரான்ஸில் வைத்து உயிரிழந்த இராணுவ வீரர்களின் கல்லறைக்கு மரியாதை செலுத்த மறுத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவத்தன்று […]

Categories
உலக செய்திகள்

“என்னோட மகள் தான் பெஸ்ட்” அவங்களுக்கு தகுதி இல்லை… இந்திய வம்சாவழி பெண்ணை விமர்சித்த ட்ரம்ப்…!!

தேர்தலில் போட்டியிடுவதற்கு கமலா ஹாரிஸ் தகுதி இல்லாதவர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக மீண்டும் ட்ரம்ப் போட்டியிட, ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதேபோன்று துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹரிஷ் போட்டியிடுகிறார். இந்நிலையில் நியூ ஹம்ஸ்பியரில் பெயரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அதிபர், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு கமலா ஹாரிஸ் […]

Categories
உலக செய்திகள்

“எதிராளிகள் கள்ள ஓட்டால் தான் வெல்ல முடியும்”… அதிபர் டிரம்ப் உறுதி…!!

வருகின்ற அதிபர் தேர்தலில் கள்ள ஓட்டால் மட்டுமே நம்மை ஜெயிக்க முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலை நடத்த அந்நாடு முடிவு செய்துள்ளது. ஆனால் பெரும்பாலும் வாக்குப்பதிவுகள் இணையம் வழியாகவே நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த வழி வாக்குப்பதிவுகள் நடைமுறைப்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் தன்னுடைய கட்சி பிரச்சாரத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ” இந்தத் தேர்தலில் அதிக […]

Categories
உலக செய்திகள்

ரொம்ப… ரொம்ப மோசம்…. டிரம்ப் அரசு தொற்று விட்டது… அமெரிக்கர்கள் கடும் அதிருப்தி ..!!

கொரோனா தொற்றை கையாளுவதில் அதிபர் ட்ரம்ப் தோற்று வீட்டதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது  உலகில் வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தொற்றினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. உலக அளவில் தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து அமெரிக்காவே முதலிடத்தில் வகித்து வருகிறது. அந்நாட்டில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டி உள்ளது. கொரோனா தொற்றினால் ஏராளமான வேலை இழப்புகள் அரங்கேறியுள்ளது. இதனால் அந்நாட்டில் பொருளாதார நெருக்கடியும் உருவாகியுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

இனவெறி பிடித்தவர்களில் முதல் அதிபர் ட்ரம்ப் தான்… ஜோ பிடன் குற்றச்சாட்டு….!!..!!

குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் ஜோ பிடன் அதிபர் டிரம்பை இன வெறி பிடித்தவர் என்று ஒரு காணொளி மூலம் கூறியுள்ளார். அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது இதில் அரசு சார்பில் இரண்டாவது முறையாக அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறக்கப்பட்டார். கொரோனா பரவலை பற்றி ஏதும்  பொருட்படுத்தாமல் இருவரும் தங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் காணொளி மற்றும் நேரடியாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள் கொரோனா

” நாங்கதான் BEST ” அதிக கொரோனா பரிசோதனை செய்கிறோம் – ட்ரம்ப் அறிக்கை …!!!

நாங்கள் மற்ற நாடுகளை விட அதிகமாகவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளனர். அமெரிக்காவில் தற்போது வரை 34 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,37,000 க்கும் அதிகமானோர் இந்த நோயால்உயிரிழந்துள்ளனர். சென்ற ஒருவாரமாக 50 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர்கள்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது பற்றி  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில் :- ” ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளை விட அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கொரோனா  சோதனைத் […]

Categories
உலக செய்திகள்

அங்கிருந்து வந்த “பிளேக்” இது… கையெழுத்திட்ட மை காயவில்லை….. அதற்குள் இப்படி – ட்ரம்ப் விமர்சனம்

சீனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மை காய்வதற்குள் அங்கிருந்து வந்த பிளேக் நோய் பரவிவிட்டது என ட்ரம்ப் விமர்சித்துள்ளார் சீனாவில் இருந்து உலக நாடுகள் முழுவதிலும் பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை 28 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் பொருளாதார ரீதியாகவும் அதிக அளவு இழப்பை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைக்கு காரணம் சீனா தான் காரணம் என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றங்களை சுமத்தி வருகின்றார். அதுமட்டுமன்றி […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் பண்றது சரி இல்ல…. அதிருப்தியை வெளிப்படுத்திய சுந்தர் பிச்சை…!!

இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கொடுத்துவந்த எச்1பி விசாவுக்கு அதிபர் தடைவிதித்தது அதிருப்தியை கொடுப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார் கொரோனா  தொற்றால் அமெரிக்காவில் பொருளாதாரம் சரிந்து வேலையின்மை அதிகரித்துள்ளது. இதனால் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என போராட்டங்கள் சில நடந்தேறியது. இதனை தொடர்ந்து அமெரிக்கவாழ் மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக பல நடவடிக்கைகளை அரசு எடுக்க தொடங்கியது. அதில் ஒன்றாக வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளைக் குறைத்து உள்நாட்டு மக்களை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா முடிவு செய்தது. […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா காவல்துறையில் சீர்திருத்தம்… இன்று கையெழுத்திடும் அதிபர் ட்ரம்ப் …!!

காவல் துறையில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கான ஆணையில் இன்று கையெழுத்திட இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் காவத்துறையினரால்  கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. ஜார்ஜ் கொலைக்கு நீதிகேட்டு, நிறவெறிக்கு எதிராக முழக்கமிட்டும்,  ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் உரிமையை உறுதிப்படுத்தவும்  அமெரிக்காவில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் அட்லாண்டாவில் ப்ரூக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை வன்முறையை […]

Categories
உலக செய்திகள்

சுயநலவாதி, பழமைவாதி, கவலைப்படமாட்டர்…. டிரம்ப்பை விளாசிய ஒபாமா ..!!

ஒபாமா தற்போதைய அதிபர் டிரம்பை சுயநலவாதி என்றும் பழமைவாதி என்றும் விமர்சனம் செய்துள்ளார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 40 லட்சமாக உயர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 860 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

நான் உற்சாகமான வீரன்….! ”இன்னும் அதிக பலி ஏற்படும்” டொனால்டு டிரம்ப் ..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் நான் உற்சாகமான வீரராக இருக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் இருக்கும் ஹனிவெல் தொழிற்சாலையை அதிபர் டிரம்ப் பார்வையிட்டார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்பு அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இது. பொதுமக்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்தும் முக கவசங்களை தயாரிக்கும் ஹனிவெல் தொழிலாளர்களை அதிபர் பாராட்டியதோடு முன்னோக்கி பார்க்க வேண்டிய நேரம் இது என வலியுறுத்தி நான் உற்சாகமான வீரராக இருக்க விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற […]

Categories
உலக செய்திகள்

“ஜி ஜின்பிங் வலுவான தலைவர்”… ஆனால் அறிக்கை வெளியிடுவோம்… விமர்சிக்க மறுத்த டிரம்ப்!

சீனாவில் கொரோனா தொடர்பாக என்ன நடந்தது என்பது பற்றிய வலுவான அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்கா வாஷிங்டன் டி.சியில் இருக்கும் லிங்கன் மெமோரியலில் இருந்து ஒளிபரப்பான பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசிய பொழுது, “கொரோனா தொடர்பாக சீனாவின் வூஹான் நகரில் என்ன நடந்தது என்பதை நாங்கள் வலுவான அறிக்கையாக வெளியிடுவோம். அது இறுதியான முடிவாக இருக்கும் என நினைக்கின்றேன். கொரோனா உலக அளவில் பரவும் தொற்றாக மாறுவதற்கு முன்னர் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மோடி வேண்டாம்….! ”புறக்கணித்த அமெரிக்கா” அதிர்ச்சியில் இந்தியா …!!

அமெரிக்க வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இந்திய பிரதமர் மோடியை பின்தொடர்வதை செலுத்தியுள்ளது கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்த அமெரிக்க அதிபர். அப்பொழுது வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான ஒயிட் ஹவுஸ் (@whitehouse)  கணக்கிலிருந்து பிரதமர் மோடி, இந்திய தூதரகம், குடியரசுத் தலைவர் ராம்நாத், அமெரிக்காவிற்கான இந்திய தூதர், பிரதமர் அலுவலகம் என ஆறு ட்விட்டர் கணக்குகளை பின் தொடர ஆரம்பித்தது. ஆனால் இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெள்ளை மாளிகை அந்த ஆறு […]

Categories
உலக செய்திகள்

காலியான செல்வாக்கு….! ”சோலிமுடித்த கொரோனா” தோற்கப்போகும் டிரம்ப் …!!

ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் அதிபர் டிரம்பின் செல்வாக்கு குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் பலவற்றிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை உருவாக்கி வருகின்றது. தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. அமெரிக்காவில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை வியாட்நாம் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் உள்ளது என […]

Categories
உலக செய்திகள்

நாங்க அதிகமா தாறோம்….. ”நீங்க அவுங்களுக்கு ஊதுறீங்க” டிரம்ப் ஆவேசம் ….!!

உலக சுகாதார நிறுவனம் சீனாவின் ஊதுகுழலாக மாறியுள்ளது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி லட்சக்கணக்கான உயிர்களை எடுத்துள்ள நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்நிலையில் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனம் கொரோனா விவகாரத்தில் தங்களை தவறாக வழிநடத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார் அதிபர் டிரம்ப். கொரோனா தொற்று குறித்த தகவல்கள் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு தெரிந்த பின்னர்தான் உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனி பில் அனுப்பிட்டாங்க… “சீனா கிட்ட நீங்க எவ்வளவு கேட்பீங்க?”… டிரம்ப் சொன்ன பதில்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா சீனாவிடம் இழப்பீடு கேட்குமா என்ற நிருபரின் கேள்விக்கு டிரம்ப் பதில் அளித்துள்ளார் சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 4 மாத காலத்திற்குள்ளாக 200 நாடுகளுக்கும் மேல் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளன.. உலகம் முழுவதிலும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்காவின் நிலை மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது.. நான்கில் ஒரு பங்கு […]

Categories
உலக செய்திகள்

முடிவு செய்யல… “ஆனா அவங்கள மாதிரி கம்மியா கேட்க மாட்டோம்”… நிறைய கேட்போம்.. சீனாவை விடாமல் துரத்தும் டிரம்ப்!

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மற்ற நாடுகளை விட அதிகமாகவே சீனாவிடமிருந்து இழப்பீடு கோர உள்ளோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார் கொரோனா  தொடர்பாக  சீனா செய்த காரியம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. அந்நாட்டிற்கு எதிராக நடத்தப்படும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்  என ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவிய நிலையில் அமெரிக்காவில் ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுவரை சீனாவின் வூஹான்  நகரிலுள்ள  விலங்குகள்  சந்தையிலிருந்து கொரோனா  தொற்று பரவியதாக கூறப்பட்டு வந்த […]

Categories
உலக செய்திகள்

60,000 அமெரிக்கர்கள் உயிரிழப்பர்….! ”எனக்கே வாக்களியுங்கள்” ட்ரம்பின் வாக்கு வேட்டை …!!

நாங்கள் தொற்றை சிறப்பாக கையாண்டது இறப்பு எண்ணிக்கையை  குறைந்துள்ளது அதனால் எனக்கே வாக்களியுங்கள் என டிரம்ப் கேட்டுள்ளார் சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று அங்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும் உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிபர் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிபரிடம் நிருபர் ஒருவர் “வியட்நாம் போரில் இறந்த வீரர்களை விட கடந்த […]

Categories
உலக செய்திகள்

நான் அப்படிப்பட்டவன்…! ”காலை முதல் கடினமா உழைப்பேன்” – டிரம்ப் பெருமிதம் …!!

அதிகாலை முதல் நள்ளிரவு வரை வேலை பார்க்கும் ஜனாதிபதி நான்தான் என அதிபர் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப் மதிய வேளையில் தான் அலுவலகத்திற்கு செல்வதாகவும் தனது படுக்கையறையில் பிடித்தமான உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அமெரிக்கப் பத்திரிகைகளில் செய்தி ஒன்று வெளியானது. இதனைத்தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்த டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னை பற்றி தெரியாத மூன்றாம் தர நிருபர் எனது பணி மற்றும் உணவு பழக்கம் […]

Categories
உலக செய்திகள்

லைசால்… பிளீச்சிங் பவுடர்… ! ”ட்ரம்ப் சொல்லிட்டாரு” விபரீத முடிவெடுத்த நியூயார்க் வாசிகள் …!!

டிரம்ப் உடலிலிருக்கும் தொற்றை அழிக்க கிருமிநாசினிகளை உடலில் செலுத்தலாம் என கூறிய கருத்தை நியூயார்க் மக்கள்  பின்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் அமெரிக்கா அதிக அளவு பாதிப்பை எதிர்கொண்டது. தொற்றை தடுப்பதற்காக பெரிய போராட்டமே நடந்து வரும் நிலையில் அதிபர் டிரம்ப் கூறிய கருத்து ஒன்று அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருமிநாசினிகள் வைரஸை அழிக்கும் என்றால் அதனை ஏன் பாதித்தவர்களின் உடலில் செலுத்தக் கூடாது என்ற மிக அற்புதமான […]

Categories
உலக செய்திகள்

கடைகளை திறக்கலாம்…! ”புது ஆயுதத்தை கையிலெடுத்த” அமெரிக்கா – கொரோனா காலி …!!

அறைகளில் இருக்கும் வைரஸ்களை முழுவதுமாக அழிக்கும் கருவியை நாசா கண்டுபிடித்து அமெரிக்காவை மகிழ்ச்சியாக்கியுள்ளது   அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரப்படி நேற்று முன்தினம் 1258 இறப்புகள் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதுவரை 51,016 மரணங்கள் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாசா மற்றும் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அந்த குழு வடிவமைத்த கருவிகள் […]

Categories
உலக செய்திகள்

பந்தயம் கட்டுகிறார்கள்…! ”நான் ஓய மாட்டேன்” டிரம்ப் ஆவேசம் …!!

அமெரிக்க முழுமையாக பொருளாதார வளங்களை மீட்டெடுக்கிற வரை நான்  ஓய மாட்டேன் என டிரம்ப் கூறியுள்ளார் கொரோனா பாதிப்பு காரணமாக வல்லரசு நாடான அமெரிக்கா கதிகலங்கி நிற்கின்றது. அங்கு 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை இந்த வைரஸ் தாக்கி உள்ளது. 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளார். இதில் இருந்து மீண்டு வருவதற்கு வழி தெரியாமல் அதிபர் டிரம்ப் நிர்வாகம் திணறி வருகின்றது . இந்தநிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு டிரம்ப், பேட்டி அளித்தார். அதில் நிருபர் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

மோடி தான் டாப்….! ”ட்ரம்புக்கு 2ஆம் இடம்” ஃபேஸ்புக்கில் கலக்கல் …!!

2020ஆம் ஆண்டுக்கான பேஸ்புக்கின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 2020ம் ஆண்டுக்கான உலக தலைவர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் பிரபலமான தலைவர்களின் பாலோவர்ஸ் மூலமாக பட்டியலிடப்படுகிறது. வெளியிட்ட பட்டியலில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். சுமார் 4.5 கோடி பாலோவர்ஸ் பிரதமர் மோடிக்கு ஃபேஸ்புக்கில் உள்ளனர். பிரதமர் மோடிக்கு அடுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 2.7 கோடி பாலோவர்ஸுடன் இரண்டாவது இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

மதிக்கிறோம், பாராட்டுகிறோம் – ”எங்களுக்கு நிதி கொடுங்க” WHO கோரிக்கை …!!

உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்துவது குறித்து அமெரிக்கா  மறுபரிசீலனை செய்ய நிறுவனத்தின் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார் உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கொரோனாபரவலை தவறாக கணித்ததாகவும் அதிபர் டிரம்ப் குற்றம் சுமத்தி அந்த அமைப்பிற்கு வழங்கிவந்த நிதியை நிறுத்து உள்ளதாக அறிவித்தார். தொற்றிற்கு எதிராக உலக நாடுகள் முழுவதும் போராடி வரும் இச்சூழலில் டிரம்பின் இந்த முடிவு அனைத்து நாடுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு உலக சுகாதார அமைப்புக்கு பின்னடைவாக இருந்தது. இந்நிலையில் நிதி […]

Categories
உலக செய்திகள்

சுட்டுத்தள்ளுங்க…! ”டிரம்ப் போட்ட தீடீர் உத்தரவு” அதிர்ந்து போன உலக நாடுகள் …!!

அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் கப்பல்களை சுட்டு தள்ளுங்கள் என்று அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்  பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஆறு கப்பல்களை ஈரான் நாட்டிற்கு சொந்தமான 11 துப்பாக்கி ஏந்திய சிறிய படகுகள் சுற்றிவளைத்து வட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் அமெரிக்க கப்பலை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு உத்தரவு பிறப்பித்ததாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். https://twitter.com/realDonaldTrump/status/1252932181447630848 டிரம்பின் இந்த கருத்து ஈரானுக்கு எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

எனக்கு ஒன்றும் தெரில….! ”கைவிரித்த டிரம்ப்” விழிபிதுங்கும் அமெரிக்கர்கள் ..!!

கொரோனா தொற்றினால் நோயாளிகள் சிலர் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தினால் மரணம் அடைந்துள்ளதாக அமெரிக்கா தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று சிகிச்சையில் மலேரியாவுக்கு பயன்படுத்தப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளில் பாதுகாப்பு தன்மையை ஆய்வாளர்கள் பலர் எச்சரித்து வந்த நிலையில் அதிபர் உட்பட பலரும் இந்த மருந்து தான் தீர்வு என்ற ரீதியில் செயல்பட தற்போது அந்த மருந்தினால் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவிலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர். தனது சொந்த வர்த்தக நலனை எண்ணி அதிபர்  விஞ்ஞான ஆதாரம் எதுவும் […]

Categories
உலக செய்திகள்

நீங்க சீனாவுக்கு சப்போர்ட்டா ? எரிச்சல் அடைந்த அமெரிக்கா …!!

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது என அமெரிக்கா பாதுகாப்பு துறை ஆலோசகர் கூறியுள்ளார் சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கொரோனா தொற்று மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற உண்மையை முதலில் கூறாத காரணத்திற்காகவும்உலக சுகாதார அமைப்பிற்கு அளித்துவந்த நிதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் கூறியிருப்பதாவது “இந்த நெருக்கடியான சூழலில் […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் எடுத்த முடிவு…. ”தலைகீழாக மாறிய அமெரிக்கா” …. கடுப்பான மக்கள் ….!!

அறிவியலை விட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் விளைவையே சந்திக்கிறோம் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தினால் மரணம் அடைந்துள்ளதாக அமெரிக்கா தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று சிகிச்சையில் மலேரியாவுக்கு பயன்படுத்தப்பட்ட ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளில் பாதுகாப்பு தன்மையை ஆய்வாளர்கள் பலர் எச்சரித்து வந்த நிலையில் அதிபர் உட்பட பலரும் இந்த மருந்து தான் தீர்வு என்ற ரீதியில் செயல்பட தற்போது அந்த மருந்தினால் பின்னடைவு […]

Categories
உலக செய்திகள்

யாரும் வர வேண்டாம்…! ”டிரம்ப் எடுத்த முடிவு” ட்விட் மூலம் தகவல் …!!

தற்காலிகமாக வெளிநாட்டினர் அமெரிக்கக் குடியேற்றத்திற்கு தடை விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 42 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இந்த தொற்றினால் தொழில்துறை முழுவதுமாக முடங்கி லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் மக்களின் நலனை கருத்திற்கொண்டு தற்காலிகமாக வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு தடை விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் எடுத்த முடிவு…!! ”இந்தியருக்கு பொறுப்பு” குவியும் பாராட்டு …!!

தேசிய அறிவியல் வாரியத்திற்கு உறுப்பினராக இந்திய அமெரிக்கரை அதிபர் டிரம்ப்  நியமித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய அறிவியல் வாரியத்திற்கு இந்திய அமெரிக்கரான சுதர்சனம் பாபு என்பவரை உறுப்பினராக அதிபர் டிரம்ப் நியமியத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் 6 வருடங்கள் அப்பதவியில் நீடிக்க முடியும். 1986ஆம் ஆண்டு கோவையில் இருக்கும் பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்து, 1988ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஐஐடியில் முதுநிலை தொழில்நுட்பம் பிரிவில் பட்டம் பெற்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் சுதர்சனம் பாபு. […]

Categories
உலக செய்திகள்

நான் மகிழ்ச்சியாக இல்லை…. ”சீனா இப்படி பண்ணிட்டு”…. டிரம்ப் வேதனை …!!

கொரோனா தொற்று எப்படி பரவியது என விசாரணை நடத்த அமெரிக்க நிபுணர்களை சீனாவுக்கு அனுப்ப விரும்புகிறேன் என டிரம்ப்  தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பல நாடுகளுக்கும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்து வருவதில் அதிக இழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா  பரவத்தொடங்கியது முதலே சீனா மீது இருந்த சந்தேகத்தை அமெரிக்க அரசு […]

Categories
உலக செய்திகள்

இந்தியா போல 9 நாடுகள்….. நாங்க தான் டாப் …. காலரை தூக்கி விடும் டிரம்ப் …!!

இந்தியா போன்ற 9 நாடுகளைவிட அதிக அளவு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார் உலக நாடுகளில் கொரோனா தொற்றினால்  அதிகம் பாதிக்கப்பட்ட பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வரும் நாடான அமெரிக்காவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவைப் போன்று ஒன்பது நாடுகளைவிட அதிக அளவிலான கொரோனா பரிசோதனை அமெரிக்காவில் நடைபெற்றுள்ளதாக நாட்டின் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசிய பொழுது, “அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு எதிரான போர் […]

Categories
உலக செய்திகள்

ஆட்டத்தை தொடங்கிய அமெரிக்கா…. அலற போகும் சீனா…. உற்றுநோக்கும் உலக நாடுகள் …!!

வூஹானின் ஆய்வுக் கூடத்திலிருந்து தொற்று பரவியதா என்பது குறித்து அமெரிக்கா விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறியும் என டிரம்ப் கூறியுள்ளார் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் என்ன தான் நடக்கிறது… நான் சந்தோஷமா இல்ல… அதிபர் டிரம்ப்!

கொரோனா பாதிப்பை பொருத்தவரை சீனாவில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். உலகளவில் நாளுக்கு […]

Categories
உலக செய்திகள்

சீனாவை விட்டுறாதீங்க, உடனே விசாரியுங்க – டிரம்புக்கு கோரிக்கை …!!

கொரோனா தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ள அதிபர் டிரம்ப்க்கு  7 எம்பிக்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் அதிபர் டிரம்புக்கு நாட்டின் குடியரசு கட்சியின் செனட் சபை எம்.பி. மார்கோ ரூபியோ தலைமையிலான எம்பிகள் குழு ஒன்று திரண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். கடிதத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு, கொரோனா வைரஸின் தோற்றம் ஆகியவை பற்றி வெளிப்படையான விசாரணையை தொடர நட்பு நாடுகளான தென்கொரியா, ஐரோப்பிய, ஜப்பானுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி 7 எம்பிக்கள் […]

Categories
உலக செய்திகள்

நான் அதிபர் மகள் – காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்… டிரம்ப் மகளால் சர்சை …!!

அதிபர் டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் ஊரடங்கை மீறி குடும்பத்தினருடன் நியூஜெர்சிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் கொரோனா தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது உத்தரவு. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகளான இவாங்கா வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிக்கு மூத்த ஆலோசகராக இருக்கிறார். இவரது கணவரும் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.அமெரிக்காவில் […]

Categories

Tech |