Categories
உலக செய்திகள்

வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா?… வதந்திகளுக்கு முடிவு கட்டிய சீன அதிபர்…!!!

சீன நாட்டின் அதிபர் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அதனை பொய்யாக்கும் வகையில் பொது இடத்தில் தோன்றியிருக்கிறார். சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங் சமீப நாட்களாக வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் வீட்டு காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் கண்காட்சியில் அதிபர் இன்று கலந்து கொண்டார். அதன் மூலம், இம்மாதம் 16-ஆம் தேதிக்குப்பின் முதல் தடவையாக அதிபர் பொது இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பகத்தன்மை வாய்ந்த நபர்களால் மட்டுமே…. இதை வழிநடத்த முடியும்…. சீன அதிபரின் வலியுறுத்தல்….!!

சீனாவில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் நம்பகத்தன்மை வாய்ந்த முக்கிய நபர்களால் மட்டுமே சீன ராணுவம் வழிநடத்தப்பட வேண்டும் என சீன அதிபர் ஜி-ஜின்பிங் தெரிவித்துள்ளார். இப்போழுது  சீனா நாட்டின் தேசிய பாதுகாப்பில் ஒரு நிலைத்தன்மை இல்லாத உறுதியற்ற நிலை உள்ளது. சீனாவின் பிஎல்ஏ என அழைக்கப்படும் ராணுவத்தின் 95வது தினத்தில் கலந்து கொண்டு அந்நாட்டு அதிபர் பேசியுள்ளார். அப்போழுது அவர் கூறியதாவது, “அரசியல் ஒற்றுமைக்கே முக்கியத்துவம் அளித்து ராணுவ தலைமை அதிகாரிகள் இருக்க வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

ஜோ பைடன் – ஜி ஜின்பிங் ஆலோசனை…. 2 மணி நேரங்கள் தொலைபேசியில் உரையாடல்…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் தொலைபேசியில் இரண்டு மணி நேரங்கள் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் வெள்ளை மாளிகை, ஜனாதிபதி ஜோ பைடனுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசியில் உரையாடியதாக தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டு நாட்டு தலைவர்களும் சுமார் இரண்டு மணி நேரங்களாக தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள். அப்போது, இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவு, சர்வதேச அரசியல் தொடர்பில் இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

லடாக் எல்லைக்கு அருகே சுற்றுப்பயணம் சென்ற சீன அதிபர்…. இராணுவ வீரர்களுக்கு பாராட்டு…!!!

சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங் மூன்று நாட்கள் சுற்று பயணமாக லடாக்கின் எல்லைக்கு அருகில் இருக்கும் ஜின்ஜியாங் மாகாணத்திற்கு சென்றிருக்கிறார். இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் எல்லை பிரச்சனை நீடித்துக் கொண்டிருக்கிறது. சீனா, அருணாச்சல பிரததேசம் எங்களுடையது என்று கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், எல்லைப் பகுதிகளில் அடிக்கடி பிரச்சனையை செய்து வருகிறது. இந்திய தரப்பிலிருந்தும் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய நாட்டின் லடாக் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சீன நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

சீன அதிபர் ஜி ஜின்பிங் மருத்துவமனையில் அனுமதி…. மூளையில் ஏற்பட்ட பாதிப்பு… வெளியான தகவல்…!!!

சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கின் சிறு மூளையில் இருக்கும் ரத்த நாளங்களில் பாதிப்பு உள்ளதால் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சீன நாட்டின் அதிபர் ஜீ ஜின்பிங், கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து அந்நாட்டின் அதிபராக இருக்கிறார். கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் அவர் எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்படும் வரை பிற நாட்டு தலைவர்களை சந்திக்கவும் இல்லை. இந்நிலையில் கடந்த வருட கடைசியில் அவரின் சிறு […]

Categories
உலக செய்திகள்

3-வது முறையாக அதிபர் பதவி..! ஆளும் கட்சியின் 4 நாள் மாநாடு… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!

சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக அடுத்த ஆண்டு மீண்டும் அதிபராக பதவியேற்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றுடன் சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநாடு நிறைவு பெற்றது. அதில் முக்கிய தீர்மானங்கள் சில நூறு ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது கூடுதல் அதிகாரங்கள் […]

Categories
உலக செய்திகள்

ஒன்றிணையுமா தைவான்….? அடக்குமுறையை கையாளும் சீனா…. உரையாற்றிய ஜி ஜின்பிங்….!!

தைவான கைப்பற்றுவதற்காக படை பலத்தை உபயோகப்படுத்தவும் தயங்கமாட்டோம் என்று சீனா அதிபர் தெரிவித்துள்ளார். சீனா தைவானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக பெருமுயற்சி எடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோசமான சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து  சீனா கிரேட் ஹால்லில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றியுள்ளார். அதில் ” தைவானுடன் சீனா மிகவும் அமைதியான முறையில் ஒன்றிணைய விருப்பம் தெரிவிக்கிறது. ஆனால் ஒன்றிணைவதற்கு தைவானின் சுதந்திர பிரிவினைவாதம் பெரும் […]

Categories
உலக செய்திகள்

அதிபராக, முதல் தடவையாக திபெத் சென்ற ஜி ஜின்பிங்.. என்ன காரணம்..?

சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங், அதிபராக பொறுப்பேற்ற பின்பு முதல் தடவையாக திபெத்திற்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2011 ஆம் வருடத்தில் நாட்டின் துணை அதிபராக இருந்த சமயத்தில் திபெத்திற்கு சென்றிருக்கிறார். அதன்பின்பு சீன நாட்டின் அதிபராக பொறுப்பேற்ற பின்பு தற்போது தான் முதல் தடவையாக அங்கு சென்றிருக்கிறார். நாட்டில் திபெத் நகர் சர்ச்சை மிகுந்த பகுதியாக தான் பல வருடங்களாக உள்ளது. திபெத் அரசு தங்களை தனி ஆட்சி […]

Categories
உலக செய்திகள்

எந்த நாட்டவரும் எங்களை அடிமைப்படுத்த முடியாது…. அடக்க நினைப்பவர்களை இவ்வாறு எதிர்கொள்வோம்- சீனஅதிபர் ஜி ஜின்பிங்….!!

சீன அதிபர் ஜின்பிங் தனது கட்சியின் நூற்றாண்டு விழாவில் சீன நாட்டின் சிறப்பு குறித்தும் எதிர்கால நம்பிக்கை குறித்தும் உரையாற்றினார். சீனாவின் தியானன்மென் கேட் சதுக்கத்தில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு கட்சியின் தலைவரும், அந்நாட்டு அதிபருமான ஜி ஜின்பிங் தலைமை வகித்தார். அதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அதிபர் ஜி ஜின்பிங் சீனாவை எந்த நாட்டவரும் அடிமைப்படுத்த முடியாது என்றும் அவ்வாறு அடிமைப்படுத்த நினைப்பவர்களை 140 கோடி மக்கள் […]

Categories
உலக செய்திகள்

அதிபருக்கு எதிராக கருத்து… பணியிடை நீக்கப்பட்ட பேராசிரியர்..!!

சீன அதிபருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த சிங்குவா பல்கலைக்கழக பேராசிரியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சிங்குவா பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக பணிபுரிந்த ஜூ சாங்ருன். இவர் அதிபர் ஜின்பிங் தலைமையில் நடந்து வரும் அரசை வெளிப்படையான முறையில் விமர்சித்து வருகிறார். சீனாவில் கொரோனா பரவிய காலங்களில் அதிபர் ஜின்பிங் செய்த மோசடிகள் மற்றும் அது பற்றிய விவரங்கள் குறித்து ஜூ சாங்ருன் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா அச்சுறுத்தல்” வடகொரியாவுக்கு நாங்க இருக்கோம்…. உதவ முன்வந்த சீனா…..!!

கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட வட கொரியாவிற்கு சீனா உதவி செய்யும் என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் சீனாவின் அண்டை நாடான வட கொரியாவில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா உறுதிப்படுத்தப்படவில்லை. கொரோனா பரவ தொடங்கியதுமே நாட்டின் எல்லைகளை மூடி சர்வதேச பயணங்களுக்கு வடகொரியா தடை விதித்தது. இதன் காரணமாகவே மக்கள் கொரோனாவிற்கு ஆளாகாமல் பாதுகாக்க முடிந்ததாக […]

Categories
உலக செய்திகள்

“ஜி ஜின்பிங் வலுவான தலைவர்”… ஆனால் அறிக்கை வெளியிடுவோம்… விமர்சிக்க மறுத்த டிரம்ப்!

சீனாவில் கொரோனா தொடர்பாக என்ன நடந்தது என்பது பற்றிய வலுவான அறிக்கையை நாங்கள் வெளியிடுவோம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் அமெரிக்கா வாஷிங்டன் டி.சியில் இருக்கும் லிங்கன் மெமோரியலில் இருந்து ஒளிபரப்பான பாக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசிய பொழுது, “கொரோனா தொடர்பாக சீனாவின் வூஹான் நகரில் என்ன நடந்தது என்பதை நாங்கள் வலுவான அறிக்கையாக வெளியிடுவோம். அது இறுதியான முடிவாக இருக்கும் என நினைக்கின்றேன். கொரோனா உலக அளவில் பரவும் தொற்றாக மாறுவதற்கு முன்னர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனோ பலி 2,442ஆக உயர்வு : சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

சீனாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,442ஆக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அதிபர் ஜி ஜின்பிங் இன்று அறிவித்துள்ளார். சீனாவி பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாட்டை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன அரசு செய்வதறியாது திகைத்து வருகின்றன. இந்நிலையில் சீனாவில் இன்று வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories

Tech |