Categories
உலக செய்திகள்

2024-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்…. ஜோ பைடனின் முடிவு என்ன?…. வெளியான தகவல்…!!!

அமெரிக்காவில் வரும் 2024 ஆம் வருடத்தில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த 2020 ஆம் வருடத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் 46வது அதிபராக ஆட்சியில் அமர்ந்தார். அந்த சமயத்தில் அங்கு கொரோனா தீவிரமாக பரவிக் கொண்டிருந்தது. ஜோ பைடன் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டார். இதற்கிடையில் நாட்டில் அடுத்த […]

Categories
உலக செய்திகள்

15ஆம் தேதி பெரிய அறிவிப்பு…! ட்ரம்ப் எடுத்த முடிவு… உற்றுநோக்கும் உலக நாடுகள் ..!!

நவம்பர் 15ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2016 முதல் 2020 ஆம் வருடம் வரை நான்கு வருடங்கள் அமெரிக்காவின் அதிபராக இருந்த டெனால்டு ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலகட்டத்தில் வடகொரியா உடன் நட்பு, இஸ்ரேல் அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதே சமயம் 2020 ஆம் வருடம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் பரபரப்பாக தொடங்கிய தேர்தல்…. மீண்டும் வெற்றியடைவாரா அதிபர்…?

பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய அதிபர்  மீண்டும் போட்டியில் இருப்பதால் அவர் வெற்றியடைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரேசில் நாட்டில் இன்று அதிபர் தேர்தல் பரபரப்பாக தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ஜெயீர் போல்சனரோ, களமிறங்கியிருக்கிறார். அவருடன் சேர்த்து 9 நபர்கள் அதிபர் போட்டியில் இருக்கிறார்கள். ஜெயீர் போல்சனரோ ஆட்சியில், அவரின் அரசாங்கம் கொரோனா பரவலை கையாண்ட […]

Categories
உலக செய்திகள்

“மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கூற மாட்டேன்” ரிஷி சுனக் உறுதி….!!!

மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கூறுவதில் எனக்கு விருப்பமில்லை என அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கூறியுள்ளார். இங்கிலாந்தில் போரீஸ் ஜான்சன் தன்னுடைய அதிபர் பதவியை ராஜினாமா செய்ததால் ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் அதிபர் தேர்தலை நடத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் இறுதி சுற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் முன்னிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் ரிஷி சுனக் பிரபலமான ஒரு செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார். அவர் மக்களிடம் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தின் அதிபர் தேர்தல்…. 20% வரி குறைக்கப்படும்…. ரிஷி சுனக் உறுதி…..!!!!

இங்கிலாந்து நாட்டில் அதிபர் போரீஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் அதிபர் தேர்தலை நடத்தி வருகின்றனர். இந்த தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் ரிஷிஷ் சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய 2 பேரும் முன்னிலையில் இருக்கின்றனர்.‌ இந்நிலையில் அதிபர் தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றால் வரியை குறைப்பதாகவும், ரிஷி சுனக் தேர்தலில் வெற்றி பெற்றால் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஏற்கனவே கூறி இருந்தனர். […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அதிபர் தேர்தல்…. லிஸ் ட்ரஸ் வெற்றி பெற 90% வாய்ப்பு… ரிஷி சுனக் பின்னடைவு…!!!

பிரிட்டன் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருக்கும் லிஸ் டிரஸ் வெற்றியடைய 90% வாய்ப்புகள் இருப்பதாக தற்போதைய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊழல் புகார் காரணமாக தன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. அதன்படி, 11 வேட்பாளர்கள் போட்டியில் இருந்த நிலையில் மூவர் இறுதியாக வாபஸ் பெற்றார்கள். மீதம் இருக்கும் 8 வேட்பாளர்களில், ஒவ்வொரு சுற்றிலும் குறைவான வாக்கு பெறுபவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்படி, இறுதிப்போட்டியில் ரிஷி […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்தின் அதிபர் தேர்தல்…. ரிஷி சுனக் வெற்றி பெரும் வாய்ப்புகள் குறைவு…. வெளியான தகவல்…!!!

அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரீஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்தி வருகின்றனர். இந்த தேர்தலில் 8 வேட்பாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது இறுதி கட்டத்தில் 2 போட்டியாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்து வந்த ரிஷி சுனக் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல்…. வெற்றி பெற்ற ரணில் விக்ரமசிங்கே…. வெளியான அறிவிப்பு…..!!!!

இலங்கை நாட்டில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை அடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து அங்கு இருந்து தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரம சிங்கே பதவியேற்றார். இதனால் புது அதிபர் தேர்தல் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரம சிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்…. ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற வாய்ப்பு?…

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடக்கவுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்கே உட்பட 3 நபர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டவுடன் அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் பதவியிலிருந்து விலகினார். எனவே நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடக்கிறது. தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மற்றும் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் டல்லஸ் அழகப்பெருமா, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் அனுரா குமார திஸ்சநாயகே ஆகியோர் களமிறங்கி இருக்கிறார்கள். மேலும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல்… வாபஸ் பெற்ற சஜித் பிரேமதாசா…!!!

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசா அதிபர் தேர்தலுக்காக தாக்கல் செய்திருந்த வேட்புமனுவை வாபஸ் பெறவிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருப்பதால் புதிதாக அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாளை நடக்கவிருக்கிறது. இதில் இடைக்கால அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரேமதாசா உட்பட சில கட்சி தலைவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்கள். For the greater good of my country that I love […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் அதிபர் தேர்தல்…. ரிஷி சுனக் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்…. வெளியான தகவல்…!!!

பிரபல நாட்டின் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் அதிபராக இருந்த போரிஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் அதிபர் தேர்தலை நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனக், லிஸ் டிரஸ், பென்னி மார்டனட் உட்பட 8 பேர் போட்டியிடும் நிலையில், 2 சுற்றுகளாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் கன்சர்வேட்டிங் கட்சியை சேர்ந்த 358 […]

Categories
உலகசெய்திகள்

இங்கிலாந்து அதிபர் தேர்தல்…. வேட்பாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு…. வெளியான முக்கிய தகவல்…!!!

பிரபல நாட்டில் அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் விவரம் குறித்து வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் அதிபராகவும், கன்சர்வேட்டிங் கட்சியின் தலைவராகவும் போரிஸ் ஜான்சன் இருந்தார். இவர் மீது பல்வேறு விதமான ஊழல் குற்றங்கள் சுமத்தப்பட்டதுடன், ஊழல் செய்யும் அமைச்சர்களை காப்பாற்றியதாகவும் புகார்கள் எழுந்தது. இதனால் கட்சியிலிருந்து 58 மந்திரிகள் பதவி விலகினார்கள். இதன் காரணமாக அதிபர் போரில் ஜான்சனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த வியாழக்கிழமை போரில் ஜான்சன் அதிபர் பதவியில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் அதிபர் பதவிக்கு…. இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் போட்டி…. வெளியான முக்கிய தகவல்….!!!

பிரபல நாட்டின் அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் அதிபர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் இங்கிலாந்தில் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நிதி மந்திரியாக பதவி வகித்த  ரிஷி சுனக் தன்னுடைய பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸில் அதிபர் தேர்தல்…. வாக்குசாவடிகளில் மர்மநபர்களின் வெறிச்செயல்…. வெளியான கருத்து கணிப்பு முடிவுகள்….!!

பிலிப்பைன்ஸில்  அதிபர் தேர்தலின்போது ஏராளமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர்  பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் அதிபரை தவிர்த்து, துணை அதிபர், 12 செனட்சபை உறுப்பினர்கள், 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மற்றும் 17,000-க்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் […]

Categories
உலக செய்திகள்

இரண்டாம் முறையாக…. ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரான்…. உலகத்தலைவர்கள் வாழ்த்து…!!!

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இமானுவேல் மேக்ரான் மீண்டும் வெற்றியடைந்ததற்கு மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்கள். பிரான்ஸில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் இமானுவேல் மேக்ரான் 58.8% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். எனவே அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்கவிருக்கிறார். இரண்டாம் தடவையாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற மேக்ரானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், பிரான்சில் மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் […]

Categories
உலக செய்திகள்

“பிரான்ஸ் அதிபர் தேர்தல்”… 2-வது முறை வெற்றி வாகைசூடும் அதிபர்…. குவியும் பாராட்டு…..!!!!!!

பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருந்து வரும் இமானுவேல் மேக்ரானின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து 12வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு 2 சுற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பல அரசியல் கட்சிகளை சேர்ந்த நதாலி ஆர்தாட், நிக்கோலஸ் டூபோன்ட், ஆன் ஹிடால்கோ, யானிக்ஜடோட், ஜீன்லஸ்ஸல், மரைன் லி பென் உள்பட 12 பேர் களம் இறங்கினர். அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி 2 சுற்று தேர்தல் வாயிலாக அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் தேர்தலில் மேக்ரான் வெற்றி பெற்றால்… நான் பதவி விலகுவேன்… பிரதமர் அதிரடி…!!!

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரோன் வெற்றியடைந்தால் தான் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் கூறியிருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரோனிற்கு பதில், புதிய நபர்கள் பதவிக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன் என்று தெரிவித்திருக்கிறார். எனவே மீண்டும் அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றால், நான் என் பதவியிலிருந்து விலகி விடுவேன் என்று கூறியிருக்கிறார். அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ள இமானுவல் மேக்ரான், மரைன் லீ பென் ஆகிய இருவருக்கும் கிடைத்த வாக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் நெருங்கும் அதிபர் தேர்தல்…. அதிபர் வேட்பாளரிடம் முஸ்லீம் பெண் கேட்ட கேள்வி…!!!

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் தலையில் அணியக்கூடிய ஸ்கார்ப் முக்கிய விஷயமாக மாறியுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரான்சில் தான் அதிக முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். எனினும் தங்களின் மதம் குறித்த ஒரு விஷயம் அதிபர் தேர்தலில் முக்கிய பிரச்சனையாக கருதப்படுவதை  அவர்கள் விரும்பவில்லை. அந்நாட்டின் தற்போதைய அதிபரான இம்மானுவேல் மேக்ரோனுக்கு எதிராக களமிறங்கியுள்ள அதிபர் வேட்பாளரான மரைன் லீ பென், தான் அதிபரானால், பொது வெளிகளில் பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் அணிவதற்கு தடை விதிக்கவுள்ளதாகவும் தடையை […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் நடந்த அதிபர் தேர்தல்…. முதல் சுற்று முடிவில்… இமானுவேல் மேக்ரான் முன்னிலை…!!!

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரான்சில் அதிபராக உள்ள இமானுவேல் மேக்ரான் இரண்டாவது தடவையாக அதிபர் தேர்தலில் களமிறங்கினார். தேர்தலில் 12 அதிபர் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதன்படி தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இமானுவேல் மேக்ரான் 28.50% வாக்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது கட்ட தேர்தலுக்காக கடின உழைப்பு தேவை என்று கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

மும்முரமாக நடக்கும் பிரான்ஸ் அதிபர் தேர்தல்….. வெளியான முக்கிய தகவல்…..!!!!!

பிரான்சில் 11-வது ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலின் முதலாம் சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 12 வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர். பகல் 8 -மாலை 7 மணி வரையில் வாக்குப்பதிவு முன்னெடுக்கப்படும். எனினும் மக்கள் நெருக்கடி அதிகம்கொண்ட Paris, Bordeaux, Marseille, Toulouse, Lyon, Nantes மற்றும் Nice போன்ற பகுதிகளில் இரவு 8 மணிவரை வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படும். தலைநகர் பரிசில் நேற்று நண்பகல் வரை 15.34 […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்… பேரணியில் ட்ரம்ப் பேச்சு…!!!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட போவதாக கூறியிருக்கிறார். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவின் செல்மா பகுதியில் நேற்று பேரணி நடந்திருக்கிறது. அதில், முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் தன் ஆதரவாளர்களிடம் தெரிவித்ததாவது, இரண்டு தடவை நான் அதிபர் தேர்தலில் களமிறங்கினேன். இரண்டு தடவையும் வெற்றி பெற்றேன். முதல் தடவையை விட இரண்டாம் முறை சிறப்பாக செயல்பட்டேன். அதனை மீண்டும் நாம் செய்ய வேண்டி வரும். நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் […]

Categories
உலக செய்திகள்

ஒருபக்கம் கொரோனா…. மற்றொரு புறம் அதிபர் தேர்தல்…. மும்முரமான வாக்குப்பதிவு…. தேர்தல் அதிகாரி அறிவிப்பு….!!!!!!

தென்கொரியாவில் கொரோனா பெருந்தொற்று மக்களை அச்சறுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக அங்கு தினசரி தொற்று பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்து வந்த நிலையில், ஒரேநாள் இரவில் 3½ லட்சத்தை நெருங்கி விட்டது. அந்த அடிப்படையில் நேற்று ஒரேநாளில் அங்கு 3 லட்சத்து 42 ஆயிரத்து 446 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 52 லட்சத்தை கடந்து விட்டது. அதேபோன்று நேற்று 158 பேர் தொற்றுக்கு பலியானதை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் பயங்கரம்… ஆளும் கட்சி தலைவருக்கு பலத்த அடி… சுத்தியலால் அடித்த மர்ம நபர்…!!!

தென்கொரிய நாட்டில் அதிபர் தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில் ஆளும் கட்சித் தலைவர் மர்ம நபரால் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய நாட்டின் தலைநகரான சியோலில் அதிபர் தேர்தலுக்கு பிரச்சாரம் நடந்தது. அதில் பங்கேற்ற ஆளும் கட்சித் தலைவரானா சாங் யங்-கில்- பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரின் பின் பக்கத்தில் வந்த ஒரு மர்ம நபர் அவரை சுத்தியைக்கொண்டு பலமாக அடித்தார். இதில் அவரின் மண்டை உடைந்து அதிகமான ரத்தம் வெளியேறியது. உடனடியாக அவரை […]

Categories
உலக செய்திகள்

“குறிவைக்கப்பட்ட காவல் நிலையங்கள்”…. பயங்கரவாதிகளின் அட்டகாசம்…. சோமாலியாவில் பரபரப்பு….!!!

காவல் நிலையங்களை குறிவைத்து அல் ஷபாப்  பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். சோமாலியா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் இன்னும் 10 நாட்களில் நடைபெற இருக்கிறது. இதனால் காவல் நிலையங்களை குறிவைத்து அல் ஷபாப்  பயங்கரவாதிகள் அடிகடி  தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் நள்ளிரவு ஒரு மணிக்கு தலைநகர் மொகதிசுவின்  ஐந்து வெவ்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சோதனை சாவடிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் 2 […]

Categories
உலக செய்திகள்

“லிபியா அதிபர் தேர்தல்”…. கடாபி மகனின் வேட்பு மனு நிராகரிப்பு…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

சர்வாதிகாரி கடாபியின் மகன் சையிப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. வட ஆப்பிரிக்க நாடானா லிபியாவில் 50 வருடங்களுக்கும் மேல் மோமர் அல் கடாபி சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு மோமர் அல் கடாபி கிளர்ச்சிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் அங்கு தற்போது முகமது அல் மெனிபி அதிபராக இருந்து வருகிறார். இந்நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு வருகிற 24 மற்றும் ஜனவரி 24-ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

“ஹோண்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபர்!”… 53% வாக்குகள் பெற்று வெற்றி…!!

ஹோண்டுராஸ் என்ற அமெரிக்க நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் சியோமாரா காஸ்ட்ரோ வெற்றி பெற்று நாட்டின் முதல் பெண் அதிபரானார். ஹோண்டுராஸ் என்ற லத்தீன் அமெரிக்க நாட்டில், இரண்டு நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில், ஆளும் தேசிய கட்சி சார்பாக, நஸ்ரி அஸ்ஃபுரா மற்றும் இடதுசாரி என்ற எதிர்க்கட்சியின் சார்பாக சியோமாரா காஸ்ட்ரோ இருவரும் களமிறங்கினர். இந்நிலையில், இத்தேர்தலில் 53 சதவீத வாக்குகளைப் பெற்று சியோமாரா காஸ்ட்ரோ வெற்றி பெற்றிருக்கிறார். எனவே அந்நாட்டில் மீண்டும் இடதுசாரி […]

Categories
உலக செய்திகள்

“பிலிப்பைன்ஸில் பிப்ரவரி மாதம் அதிபர் தேர்தல்!”.. துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் அதிபர் மகள்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரான ரோட்ரிகோ துதர்தே மகள் துணை அதிபர் தேர்தலில் களமிறங்க வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்த வருடம் மே மாதத்தில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் தற்போது இருக்கும் அதிபரின் மகளான சாரா துதர்தே நேற்று, துணை அதிபர் பதவியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். மேலும், அதிபர் கூட்டணியில் இருக்கும் பொனாண்ட் மாா்கோஸ், அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். கடந்த 2016-ம் வருடத்திலிருந்து நாட்டின் அதிபராக […]

Categories
உலக செய்திகள்

‘என்னால் நம்ப முடியவில்லை’…. தேர்தலில் மோசடி…. எதிர்க்கட்சி தலைவர் கருத்து….!!

ஐக்கிய ரஷ்யா கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதை நம்பமுடியவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். ரஷ்யா நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன் மூலம் 450 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த 17 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்று திங்கட்கிழமை அன்று முடிவடைந்தது. மேலும் தேர்வுகள் முடிவடைந்த திங்கட்கிழமையில் இருந்தே வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியது. இதனையடுத்து வாக்குகள் எண்ணும் பொழுதிலேயே ஐக்கிய […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிபரான புதின்…. அனேக இடங்களில் வெற்றி…. தகவல் தெரிவித்த தேர்தல் ஆணையம்….!!

நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ரஷ்யா கட்சி அனேக இடங்களில் வெற்றி பெற்றது என்று தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நாடாளுமன்றத் தேர்தலானது கடந்த 17 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. அதிலும் கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடந்து முடிந்தது. அதிலும் அதிபர் புதினின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான சட்டத்தை மாற்றுவதற்கு அவரின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை […]

Categories
உலக செய்திகள்

அதிபருக்கான தேர்தல்… நாடு முழுவதும் குவிக்கப்பட்டுள்ள ராணுவம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

அடுத்த வாரம் ஜிம்பாப்வே நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடைபெறவிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அரசியல் வன்முறைகளை தடுக்கும் வகையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் ஜிம்பாப்வே நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் அரசியல் வன்முறைகளை தடுக்கும் வகையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று முக்கிய எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் ஆளும் தேசபக்தி முன்னணி கட்சியின் ஆதரவாளர்கள் இருவரை வெட்டிக் கொலை […]

Categories
உலக செய்திகள்

“ஈரான் அதிபர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்!”.. முன்னாள் அதிபர் மஹமூத் மீண்டும் களமிறங்குகிறார்..!!

ஈரானின் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபரான மஹமூத் அஹமதி நிஜாத் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.   மஹமூத் அஹமதி நிஜாத் வரும் ஜூன் மாதம் 18-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட, தன் ஆதரவாளர்களோடு உள்துறை அமைச்சகத்தில் இருக்கும் பதிவு மையத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம், “ஈரான் நாட்டின் நிலையை கவனத்தில் கொண்டும், நாட்டினுடைய மேலாண்மையில் புரட்சியை உருவாக்குவதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாக” கூறியிருக்கிறார். மேலும் இவர் கடந்த 2005 ஆம் […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸின் கணவர்… “செகண்ட் ஜென்டில்மேன்” பைடன் கொடுத்த அங்கீகாரம்…. குவியும் பாராட்டுக்கள்…!!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்க இருக்கும் கமலா ஹாரிஸின் கணவருக்கு ட்விட்டரில் புதிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை தோற்கடித்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோபைடன் மற்றும் அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் என்பவரும்  இன்று பதவியேற்கவுள்ளனர்.  எனவே வெள்ளை மாளிகையில் தற்போது இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது. மேலும் இதற்காக ஜோ பைடன் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்பிற்கு ஆதரவாளராக… வந்த பெண் சுட்டு கொல்லப்பட்ட… அதிர்ச்சி சம்பவம்…!!

ட்ரம்பின் ஆதரவாளரான பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவிலுள்ள நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்பின் ஆதரவாளர்கள் திடீரென நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர், அப்போது பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்  தோல்வியுற்றார். எனினும் அதனை அவரின் ஆதரவாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். மேலும் ஜோபைடனின் வெற்றி ஆவணப்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் நேற்று மாலையில் திடீரென அவர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கும் ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் […]

Categories
உலக செய்திகள்

அடம்பிடிக்கும் ட்ரம்ப்.! ”இங்கு தான் இருப்பேன்”… வெளியேற மாட்டேன்….!!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். டிரம்ப்பை எதிர்த்து அதிபர் வேட்பாளராக களம் கண்ட ஜோ பைடன் அபாரமாக வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க இருக்கிறார். ஆனால் அதிபர் டிரம்ப் ஜோ பைடன் வெற்றியை ஏற்க மறுத்து வருகிறார். இந்நிலையில் பதவியேற்பு விழா நடை பெற்றாலும் கூட வெள்ளை மாளிகையிலிருந்து நான் வெளியேறப் போவதில்லை என அவரது […]

Categories
உலக செய்திகள்

ஜன.20ஆம் தேதி ஜோ பைடன் பதவியேற்ப்பு…. டிரம்ப் சொன்ன பதில் என்ன தெரியுமா ?

ஜோ பைடன் அதிபராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்க அதிபர் ட்ரம்ப் மறுத்துவிட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவர், ஜனவரி மாதம் 20ஆம் தேதி அமெரிக்காவில் 46ஆவது அதிபராக பதவியேற்றுக் கொள்ளவிருக்கிறார். இருப்பினும், தற்போதைய அதிபர் ட்ரம்ப் இதுவரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் பெரியளவில் முறைக்கேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், இது குறித்து பல்வேறு வழங்குகளை தொடர்ந்துள்ளார். வழக்கமாக […]

Categories
உலக செய்திகள்

கைமாறும் ட்விட்டர் அக்கவுண்ட்!

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிடம் அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிடம், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு (@POTUS) ஜனவரி 20ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போதைய அதிபர் ட்ரம்ப் தோல்வியை மறுத்துவரும் நிலையில், ட்விட்டர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. @POTUS கணக்கை 32.8 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். ட்ரம்ப் சார்பாக பதிவிடப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

சாதனைக்கு மேல் சாதனை…! ”யாரும் இப்படி வாங்குனதில்லை”… வரலாறு படைத்த பைடன்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக ஜோ பைடன் 80 மில்லியன் வாக்குகளை பெற்று வரலாறு படைத்துள்ளார். நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் என அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானதில் இருந்து ஜோ பைடன் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பை விட முன்னிலை வகித்தார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி, முறைகேடுகள் என அடுத்தடுத்து குற்றசாட்டுகளை அதிபர் டிரம்ப் முன்வைத்தார். வாக்கு எண்ணிக்கை தொடங்கி இரண்டு […]

Categories
உலக செய்திகள்

எதுக்கு இவ்வளவு லேட் ஆகுது ? புலம்ப விடும் அதிபர் தேர்தல்…. வெளியான பரபரப்பு காரணம் …!!

அமெரிக்கா தேர்தல் முடிவுகள் வெளியாவதில் ஏன் கால தாமதம் ஆக என்ன காரணம் என தெரிய வந்து இருக்கின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி விட்டாலும், முடிவுகள் இரண்டு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார்கள். இந்த இரு வேட்பாளர்களில் 270 தேர்தல் சபை வாக்குகளை யார் பெறுகிறார்களோ அவர்களே […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

விசித்திரமா இருக்கு…! ”திடீரென மாறிய முடிவுகள்” புலம்பும் அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விசித்தரமாக இருக்கின்றது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 238 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 213 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றுள்ளனர். 270 தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

திடீரென முடிவுகள் மாறியது எப்படி? – புலம்பும் அதிபர் ட்ரம்ப்..!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விசித்தரமாக இருக்கின்றது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 238 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 213 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றுள்ளனர். 270 தேர்தல் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ட்ரம்ப் பயந்த மாதிரியே ஆகிட்டு…. புரட்டி போட்ட முடிவுகள்…. அதிபராகும் ஜோ பைடன் …!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் தாமதம் ஏற்படுவதால் மோசடி நடந்துள்ளது குற்றச்சாட்டை வெள்ளைமாளிகையில் பரபரப்பு குற்றசாட்டை டிரம்ப் வைத்திருக்கிறார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி டிரம்ப் இப்படி பேசினார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்ற கருத்தையும் டிரம்ப் வைத்துள்ளார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் இந்த 3 […]

Categories
உலக செய்திகள்

ஜெயிக்க முடியாதுனு சொல்லுறாங்க…. மக்களை ஏமாற்ற பாக்குறாங்க…. நான் கோர்ட்டுக்கு போறேன்….!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கையில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேசினார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் ஜோ பிடன் முன்னிலை வகுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ட்ரம்ப்,  அமெரிக்க மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு எனது மதம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். ஒரு சிறிய பகுதியினர் நமக்கு வாக்களித்த பெரிய பகுதியினருடைய வாக்குரிமையை தட்டிப் பறிக்க நினைக்கிறார்கள். என்னுடைய மனைவிக்கும், குடும்பத்துக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளது – ட்ரம்ப் பரபரப்பு குற்றசாட்டு …!!

மூன்று மாகாணங்களின் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதில் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்துள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தலில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது இருந்த போதிலும் கூட, மிக முக்கியமான மூன்று மாநிலங்களில் அதிபர் டிரம்ப் தற்போது முன்னிலையில் இருந்தாலும், அடுத்து தபால் வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. அந்த எண்ணிக்கையில் ஜோ பைடன்  முந்துவார் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் என இந்த மூன்று மாநிலங்களில் 46 தேர்தல் சபை […]

Categories
உலக செய்திகள்

விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை…. “முன்னிலையில் ஜோபைடன்” ட்ரம்பின் நிலை…. வெளியான தகவல்…!!

வாக்கு எண்ணிக்கை நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஜோபைடன் 131 தேர்தல் சபை வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார் மற்றும் டிரம்ப் 91 வாக்குகளைப் பெற்று பின்னடைவில் இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 வாக்குகளில் 270 வாக்குகள் பெற்றால் மட்டுமே ஜனாதிபதி ஆக முடியும். நேற்று […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கடும் போட்டி…! டிரம்பை அடித்து தூக்கும் ”ஜோ பிடன்”.. கலிபோர்னியாவில் கெத்து …!!

அமெரிக்கா அதிபர் தேர்தலில் கலிபோர்னியா மாநிலத்தில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை பொருத்தவரை அடுத்த 2 மணி நேரம் மிகவும் முக்கியமான தருணம் ஆகவே பார்க்கவேண்டி இருக்கிறது. மிக முக்கியமான மாநிலங்கள் அனைத்திலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய மாநிலமான மேற்குக் கரையோரத்தில் இருக்கக்கூடிய கலிபோர்னியா மாநிலத்தில் ஜோ பைடன் வென்றிருக்கிறார். கலிபோர்னியா பாரம்பரியமாக ஜனநாயக கட்சி வெல்லக்கூடிய மாநிலம். 55 தேர்தல் சபை வாக்குகளை கொண்டிருக்கக்கூடிய […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BIG BREAKING: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு ….!!

உலகமே எதிர்பார்த்துக் கத்துக்க கொண்டிருந்த அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கின்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்களிப்பதற்கு கடைசிநாள். ஏற்கனவே மொத்தம் உள்ள 25 25 கோடி வாக்காளர்களில் 9 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே வாக்களித்த முடித்து விட்டார்கள். இன்று வாக்களிப்பதற்கான கடைசி நாளாக இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் இன்று நள்ளிரவு முதலே வாக்களிக்க தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் உள்ள மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றான நியூ ஹாம்ஷையரில் இருக்கக்கூடிய 2 […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸ் “இதை செய்தாரா?” .. வைரலாகும் புகைப்படம்

அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் மீது சர்ச்சை எழுந்து புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு தங்களுக்கான வாக்குகளை கேட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் ஒரு சர்ச்சையில் மாட்டியுள்ளார். அதில் அவர் ஒரு கூட்டத்தில் பங்கேற்ற பொழுது முகக்கவசம் எதுவும் அணியாமல் தனிநபர் இடைவெளியைக் பின்பற்றாமல் இருந்ததாக புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றது. வைரலான புகைப்படங்களை ஆய்வு செய்து […]

Categories
உலக செய்திகள்

“எதிராளிகள் கள்ள ஓட்டால் தான் வெல்ல முடியும்”… அதிபர் டிரம்ப் உறுதி…!!

வருகின்ற அதிபர் தேர்தலில் கள்ள ஓட்டால் மட்டுமே நம்மை ஜெயிக்க முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலை நடத்த அந்நாடு முடிவு செய்துள்ளது. ஆனால் பெரும்பாலும் வாக்குப்பதிவுகள் இணையம் வழியாகவே நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த வழி வாக்குப்பதிவுகள் நடைமுறைப்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் தன்னுடைய கட்சி பிரச்சாரத்தில் அதிபர் டிரம்ப் பேசுகையில், ” இந்தத் தேர்தலில் அதிக […]

Categories
உலக செய்திகள்

“என்ன கடத்திடாங்க” ஓட்டுக்காக போட்ட திட்டம்… விசாரணையில் அம்பலம்….!!

மேயர் பதவிக்காக அனுதாப ஓட்டுக்களை பெறும் திட்டத்தில் போலி வீடியோவை சபரினா வெளியிட்டு காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டார் . சபரினா பெல்ச்சர் என்பவர் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்தவர். கருப்பின பெண்ணான இவர் சம்ப்டர் நகர மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். மக்களிடையே அனுதாப வாக்குகள் பெறுவதற்காக யாரோ தன்னை கடத்தியதாக போலியான வீடியோவை வெளியிட்டு மாட்டிக்கொண்டார். சபரினாவை காவல்துறையினர் போலி கடத்தலை அரங்கேற்றியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ஃபேஸ்புக் லைவ்வில் இந்த கடத்தல் வீடியோவை […]

Categories
உலக செய்திகள்

“கொடூரமானவர், பொய்க்காரர்” அதிபரை குற்றம் சாட்டிய ரத்த சொந்தம் …!

அமெரிக்க அதிபரின் சகோதரியான மேரி ஆன் டிரம்ப் அதிபர் கொடூரமானவர், பொய்க்காரர் என்று குற்றம் சாட்டியுள்ளார். அடுத்த அதிபருக்கான தேர்தல் அமெரிக்காவில் விரைவில் நடக்க உள்ள நிலையில் ட்ரம்ப் மீது அவரது சகோதரியிடமிருந்தே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேரி ஆன் டிரம்ப் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியேற்ற கொள்கை  குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். ட்ரம்பிற்கு கொள்கை என எதுவும் இல்லை அவர் கொடூரமானவர், பொய்க்காரரரும் கூட என்று ரகசிய பதிவில் மேரி அன் டிரம்ப் பேசியுள்ளார். அதிபர் ட்ரம்பின் […]

Categories

Tech |