தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. ஆனால் சில கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் அனைவருமே பதவிஉயர்வு பெற்று பல கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவும் உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை […]
Tag: அதிபர் பதவி விலகல்
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்ரேட் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட், பத்திரிகையாளர்களை சந்தித்து தன் முடிவை அறிவித்துள்ளார். அதாவது, அந்நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதியாக ஒரு நபர் ஒரு முறை மட்டும் தான் பதவியில் இருக்க முடியும். அதாவது ஆறு வருடங்கள் கடந்து பதவியில் இருக்க முடியாது. எனவே, அவர் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட தகுதி இல்லை. எனவே அவர் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. […]
தலீபான்கள் நாட்டின் அதிகாரத்தையும் கைப்பற்றியதால் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு மாகாணங்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அதில் நாட்டின் முக்கிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். இதனை அடுத்து தலைநகர் காபூலை கைப்பற்றும் நோக்கில் தீவிர ஆர்வம் காட்டி வந்தனர். மேலும் காபூலை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை தலீபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து […]