Categories
உலக செய்திகள்

“இது புலி வருஷம்!”…. சீனாவில் கோலாகலமாக தொடங்கியது புத்தாண்டு… அதிபர் வாழ்த்து…!!!

சீனாவில் புத்தாண்டு இன்று தொடங்குவதால் மக்களுக்கு அதிபர் சி ஜின்பிங் வாழ்த்துக் கூறியிருக்கிறார். சீனாவில் மிகப் பெரிதாக கொண்டாடப்படும் புத்தாண்டிற்காக அரசு அலுவலகங்களில் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் 12 மிருகங்களின் பெயரில் வருட பிறப்பை கொண்டாடுவார்கள். 12 ஆண்டுகள் முடிந்தவுடன் மீண்டும் அதே சுழற்சி ஆரம்பமாகும். அதன்படி நேற்றுடன் எருது வருடம் முடிவடைந்து, புலி வருடம் இன்றிலிருந்து தொடங்குகிறது. இந்த ஆண்டு பிறப்பு வசந்த விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் கலாச்சாரத்தின் படி, புலி, […]

Categories
உலக செய்திகள்

“ஜோ பைடன் நரகத்திற்கு செல்வார்”…. கொல்ல புறப்பட்ட இளைஞர்…. பின்னணியிலிருக்கும் வினோதம்….!!

தன்னை கடவுள் அனுப்பியதாக கூறி அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடனை கொல்ல சென்ற நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள கன்சாஸ் மாநிலத்தில் ஸ்காட் மேரிமென் என்ற கட்டுமான ஒப்பந்ததாரர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவின் ஜனாதிபதியான ஜோ பைடனை கொல்லும்படி தன்னை கடவுள் அனுப்பியதாக அவரை காண சென்றுள்ளார். இந்நிலையில் மேரி மென்னை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள். அந்த விசாரணையில் அமெரிக்கர்களை பிளவுபடுத்தும் கொள்கையினால் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

அப்படியா..! இது உண்மைதானா..? இந்த நாட்டுல கொரோனா பாதிப்பே கிடையாதா…? மீண்டும் இயக்கப்பட்ட ரயில் சேவை… அனுமதியளித்த அதிபர்….!!

வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக விலக்க ஆரம்பித்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி வடகொரியாவும் சில கட்டுப்பாடுகளை அந்நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதற்கிடையே வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் கொரோனா தொற்றால் எவரும் தங்கள் நாட்டிற்குள் பாதிக்கப்படவில்லை என்று கூறிவருகிறார். இந்நிலையில் சுமார் 2 வருடங்களுக்கு முன்பாக கொரோனாவிற்காக […]

Categories
உலக செய்திகள்

FLASH: “நான் பதவி விலகுகிறேன்”…. “பிரதமருக்கு தான்” இங்க அதிகாரமிருக்கு…. அதிரடி கொடுத்த அதிபர்…. அரண்டு போன மக்கள்….!!

அர்மீனியாவின் ராணுவ தலைவர் உட்பட பல பொறுப்புகளிலிருந்து விலக்கப்பட்ட சர்கிஸ்சியன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அர்மீனியாவின் ராணுவ தலைவர் உட்பட பல பொறுப்புகளிலிருந்து அந்நாட்டின் அதிபரான சர்கிஸ்சியன் விலக்கப்பட்டுள்ளார். இதனால் அர்மீனியாவின் அதிபரான சர்கிஸ்சியனுக்கும், அந்நாட்டின் பிரதமரான நிகோல் என்பவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சர்கிஸ்சியன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தான் அர்மீனியாவின் அதிபர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அர்மீனியாவின் ஆட்சி அதிகாரம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அதிரடி அறிவிப்பு: “பதவி விலகிய தலைவர்”…. ரஷ்யாவை அசைக்க முடியாது…. சர்ச்சையில் சிக்கிய ஜெர்மன்….!!

ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெர்மன் கடற்படை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே நீண்டகாலமாக பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்க ஜெர்மன் நாட்டின் கடற்படை தலைவரான schoenbach சமீபத்தில் இந்தியாவின் தலைநகரில் பேசிய கருத்து ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவை உக்ரேனால் ஒருபோதும் மீட்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ரஷ்யாவின் அதிபரான புடின் […]

Categories
உலக செய்திகள்

திடீர் திருப்பம்: இவங்களும் “தேர்தலில்” போட்டியிடுவாங்க…. காற்றாக பரவிய தகவல்…. பாராட்டித் தள்ளிய அதிபர்….!!

அமெரிக்காவின் துணை அதிபருக்கும், தனக்குமிடையே கருத்து வேறுபாடு என்று பரவிய தகவலை மறுக்கும் விதமாக அந்நாட்டின் தலைவரான ஜோ பைடன் அவரை பாராட்டியுள்ளார். அமெரிக்காவின் தலைவரான ஜோ பைடனுக்கும், அந்நாட்டின் துணை அதிபருக்குமிடையே கருத்து வேறுபாடு என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவிலும் கமலா ஹரிஷின் பங்களிப்பு கிடையாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதனை மறுக்கும் விதமாக அதிபர் ஜோ பைடன் கமலா ஹரிசை […]

Categories
உலக செய்திகள்

இது சதியா…? இல்ல விதியா…? கமலா ஹரிஸ் ஒதுக்கப்படுகிறாரா…? அதிருப்தியில் ஜோ பைடன்…. குழப்பத்தில் ஆதரவாளர்கள்…!!

துணை அதிபரின் அணுகுமுறை ஜோ பைடனுக்கு அதிருப்தி அளித்துள்ளதால் அவர் தலைமையிலான அரசு கமலாவை போலீஸ் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட சில முக்கிய விஷயங்களில் புறக்கணித்துள்ளது. அமெரிக்காவின் குடியேற்ற விவகாரம் போன்றவைகளில் துணை அதிபரான கமலா ஹரிஷின் அணுகுமுறை ஜோ பைடனுக்கு அதிருப்தி அளித்துள்ளது. இதனால் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஓராண்டு ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட போலீஸ் சட்டத்திருத்தம் உள்ளிட்ட சில முக்கிய விஷயங்களில் கமலா புறக்கணிக்கப்பட்டுள்ளார். மேலும் அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் முக்கியமாக கருதப்படும் […]

Categories
உலக செய்திகள்

மக்களே முந்துங்கள்….! 100 கோடிக்கு “இலவச திட்டம்”… அதிபரின் அதிரடி முடிவு…!!

தென்னாபிரிக்காவில் முதல் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பரவலை தடுக்கும் பொருட்டு அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் தங்கள் நாட்டில் முக்கிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உரு மாற்றமடைந்த ஓமிக்ரான் அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அதிபர் ஜோ பைடன் பல நடவடிக்கைகளை அந்நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஓமிக்ரானை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு சுமார் 100 கோடி இலவச […]

Categories
உலக செய்திகள்

“இவங்கள சுட்டுத் தள்ளுங்கள்”…. குற்றச்சாட்டை முன்வைத்த அதிபர்…. கலவர பூமியாக மாறிய பிரபல நாடு….!!

கஜகஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையை மையப்படுத்தி அந்நாட்டின் அதிபர் முக்கிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். கஜகஸ்தான் நாட்டின் பிரதமரான அஸ்கர் மாமின் நடப்பாண்டின் ஆரம்பத்தில் எரிபொருட்களின் விலையை 2 மடங்காக உயர்த்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் பொது மக்கள் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தப் போராட்டம் அல்மாட்டி மற்றும் மேற்கு மங்கிஸ்டாவ் பகுதிகளில் வன்முறையாக வெடித்துள்ளது. இதன்விளைவாக கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் கஜகஸ்தானின் […]

Categories
உலக செய்திகள்

SHOCK NEWS: மக்களே…. நாடு முழுவதும்… இணையதள சேவைகள் முடக்கம்… காரணம் தெரியுமா…? அதிபரின் அதிரடி முடிவு….!!

கஜகஸ்தானின் அதிபர் அங்கு நடைபெற்று வரும் வன்முறை காரணமாக ஜனவரி 19 ஆம் தேதி வரை அவசர நிலை பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து தற்போது அந்நாடு முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தான் நாட்டின் பிரதமரான அஸ்கர் மாமின் 2022 ஆம் ஆண்டின் புதுவருடப் பிறப்பையொட்டி எரிபொருள் மீதான விலையை உயர்த்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீதியிலிறங்கி போராட ஆரம்பித்துள்ளார்கள். இந்த போராட்டம் அல்மாட்டி மற்றும் மேற்கு மங்கிஸ்டாவ் மாநிலங்களில் வன்முறையாக மாறியுள்ளது. இதனால் அந்நாட்டின் பிரதமரான அஸ்கர் […]

Categories
உலக செய்திகள்

மக்களே..! அடுத்த ஆப்பு…. தடுப்பூசி போடலனா உடனடி கைது…. அதிபரின் பரபரப்பு எச்சரிக்கை….!!

பிலிப்பைன்சில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இருப்பினும் சிலர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் பிலிப்பைன்ஸின் அதிபரான ரோட்ரிகா கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் அதிபருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு!”….. வெளியான தகவல்….!!!

பாகிஸ்தான் நாட்டின் அதிபரான ஆரிஃப் ஆல்விக்கு இரண்டாவது முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தற்போது கொரோனா தொற்றின் 5-ஆம் அலை பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் அதிபர் ஆரிஃப் ஆல்விக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இவருக்கு ஏற்கனவே கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. وازا مرضت فھوا یشفین اور جب میں بیمار ہوتا ہوں تو وہی شفا دیتا ہے I have tested +ive […]

Categories
உலக செய்திகள்

“எரிபொருள் விலையேற்றம் எதிரொலி!”…. கலவர பூமியாக மாறிய கஜகஸ்தான்…. அமைதிப்படையை அனுப்பும் ரஷ்யா…..!!

கஜகஸ்தான் நாட்டில் மக்களின் போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில் ரஷ்யா அமைதிப்படையை அனுப்பியிருக்கிறது. சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்து வந்த நாடான கஜகஸ்தானில், புத்தாண்டை முன்னிட்டு  எரிபொருள் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. எனவே, மக்கள் இந்த விலையேற்றத்தை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த போராட்டம் கலவரமாக வெடித்திருக்கிறது. போராட்டக்காரர்கள் மேயர் அலுவலகத்திற்கு தீ வைத்தார்கள். எனவே பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள். இவ்வாறு நாடு முழுக்க […]

Categories
உலக செய்திகள்

பிரபல டென்னிஸ் வீரரின் விசா ரத்து….. ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு…. என்ன காரணம்….?

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தங்கள் நாட்டிற்குள் நுழைய டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு அனுமதி இல்லை என்றும் அவரின் விசா ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலிய நாட்டின் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பங்கேற்க மெல்போர்ன் நகருக்கு சென்ற டென்னிஸ் வீரரான ஜோகோவிச், தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், அதற்கான சரியான ஆவணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே, அவரின் விசா ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் விமான நிலையத்தில், சுமார் ஒன்பது மணி நேரங்களாக காத்திருந்தார். […]

Categories
உலக செய்திகள்

போலந்து அதிபருக்கு மீண்டும் கொரோனா…. மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!!

போலந்து நாட்டின் அதிபருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்து அதிபர், ஆண்ட்ரெஜ் துடாவின் அலுவலகத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனையடுத்து அதிபர் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் அவருக்கு அதற்கான அறிகுறிகள் ஏற்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு, கடந்த 2020 ஆம் வருடம், அக்டோபர் மாதத்திலும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இரண்டாவது தடவையாக அவருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

“நமக்கு சோறு தான் முக்கியம், அணு ஆயுதம் இல்லை!”….. ஆனா இப்ப மீண்டும் அணு ஆயுத பரிசோதனை….!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சாப்பாடு தான் முக்கியம், அணு ஆயுதங்கள் இல்லை என்று கூறிய நிலையில், மீண்டும் அந்நாடு ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது. வடகொரியா அடிக்கடி ஏவுகணைகள் சோதனையை மேற்கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்தும். குறிப்பாக, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஏவுகணை சோதனைகளை வடகொரியா மேற்கொள்ளும். இதனிடையே புத்தாண்டன்று, நாட்டு மக்களிடம் அதிபர் கிம் ஜாங் உன் பேசியதாவது, “தற்போதைய பொருளாதார நிலையில், […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஆஸ்பத்திரியில் இருக்கும் அதிபர்…. பிரச்சாரத்தில் நடந்தது என்ன…?

பிரேசிலின் அதிபரை கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த பிரச்சாரத்தின் போது மர்ம நபர் கத்தியை கொண்டு தாக்கிய நிலையில் தற்போது அவர் குடல் அடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் நாட்டின் அதிபரான ஜெயிர் போல்சனரோவை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மர்ம நபர் ஒருவர் கத்தியைக் கொண்டு தாக்கியுள்ளார். அதிலிருந்தே பிரேசில் நாட்டின் அதிபரான ஜெயிருக்கு 4 முறை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யும்படியான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஜெயிர் […]

Categories
உலக செய்திகள்

அதிபரால் நொந்த “விவசாயிகள்”…. பஞ்சத்தை நோக்கி செல்லும் பிரபல நாடு…. காரணம் என்னன்னு தெரியுமா…? இதோ… வெளியான தகவல்….!!

இலங்கையின் புதிய அதிபர் அந்நாட்டிற்குள் கடந்த சில மாதங்களாக கொண்டு வந்த பல்வேறு நடவடிக்கைகளால் உணவு தானியங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள விவசாயிகள் கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார்கள். இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபட்ச என்பவர் உள்ளார். இவர் அந்நாட்டில் கடந்த சில மாதங்களாக இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதாவது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரங்களை இறக்குமதி செய்வதற்கு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளார். மேலும் வெளிநாட்டு பொருட்களின் இறக்குமதிக்கு அதிரடியாக தடை உத்தரவை […]

Categories
உலக செய்திகள்

ஐயா.. ஜாலி… “இனி எப்ப நாளும் வெளிய சுத்தலாம்”…. அதிபரின் அதிரடி உத்தரவு… பிரபல நாட்டில் உச்சத்தைத் தொட்ட ஓமிக்ரான்…!!

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானின் பரவல் அங்கு மிகவேகமாக இருந்தாலும்கூட அந்நாட்டில் 2 வருடங்களுக்கு முன்பாக போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த மாதம் 24ஆம் தேதி ஓமிக்ரான் உரு மாற்றமடைந்துள்ளது. இந்தத் தொற்று உருமாற்றமடைந்த நாள் முதலிலிருந்தே அந்நாட்டில் ஓமிக்ரானின் வேகம் மிக அதிகமாக உள்ளது. அதிலும் முக்கியமாக ஒரே நாளில் 27,000 பேருக்கு ஓமிக்ரான் தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது தான் அந்நாட்டின் உச்சமாக […]

Categories
உலக செய்திகள்

“நம் நாட்டிலும் நுழைந்துவிட்டது!”….. தடுப்பூசி தான் ஒரே வழி…. -வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடுரோ….!!

வெனிசுலாவில் முதல் தடவையாக ஏழு நபர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் பரவல், ஒரு மாதத்தில் சுமார் 106 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்நிலையில், வெனிசுலாவில் முதல் தடவையாக ஏழு நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ தெரிவித்துள்ளதாவது, முதன்முறையாக ஏழு நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை தவிர்க்க இயலாது. ஒமிக்ரான் பாதிப்பு, நம் நாட்டிலும் நுழைந்துவிட்டது. தடுப்பூசி செலுத்துவது மட்டும் தான் ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

அதிபர் கொலை விவகாரம்…. திடீர் திருப்பம்?…. சிக்கிய ரகசிய ஆவணங்கள்….!!!!

கடந்த 1963 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்க அதிபரின் வழக்கு தொடர்பான 1,500 ரகசிய ஆவணங்களை அந்நாட்டின் தேசிய ஆவண காப்பகம் வெளியிட்டதையடுத்து அதன் மூலம் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க நாட்டின் அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி கடந்த 1963 ஆம் ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அமெரிக்க நாட்டின் தேசிய ஆவண காப்பகம் மேல் குறிப்பிட்டுள்ள அதிபரின் கொலை வழக்கு தொடர்பான முக்கிய 1,500 ரகசிய […]

Categories
உலக செய்திகள்

அடுத்த 11 நாட்களுக்கு யாரும் சிரிக்கவே கூடாது…. பிரபல நாட்டில் புதிய உத்தரவு…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. வடகொரியாவை 1994 முதல் 2011 வரை கிம் ஜாங் இல் ஆட்சி செய்து வந்தார். இவர் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. கிம் ஜாங் இல்லின் 10-ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று முதல் அடுத்த 11 நாட்களுக்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்கு வடகொரியா முழுவதும் தடை விதித்து ஆணை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது மளிகை கடைகளுக்கு சென்று பொருட்கள் […]

Categories
உலக செய்திகள்

‘இது தான் முக்கிய காரணம்’…. விலைவாசி உயர்வுக்கு…. அமெரிக்கா அதிபரின் கருத்து….!!

பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து அமெரிக்கா அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கமானது 6.8%த்தை எட்டியுள்ளது. குறிப்பாக எரிவாயு, உணவு, வசிப்பிடம் போன்றவற்றின் விலையானது உயர்ந்துள்ளது என்று சமீபக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து அமெரிக்கா அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வரும் பொழுது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை இந்த புள்ளி விவரங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன” என்று கூறியுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் சரிப்பட்டு வராது….! “பெண்களை பாதிக்கும் சட்டம்”…. வருத்தம் தெரிவித்துள்ள அதிபர்….!!

கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் 6 வார கருவை கலைப்பதற்கு தடை விதித்து கடந்த செப்டம்பரில் சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு அம்மாகாண ஆளுநரும் ஒப்புதல் வழங்கிவிட்டார். இந்த தீர்மானத்திற்கு சாதகமாக உச்சநீதிமன்றமும் தீர்ப்பை வழங்கியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் வாஷிங்டனில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே அமலில் இருந்த 20 வாரக்கால வரையிலான கருவை கலைக்கலாம் என்ற நிலையே தொடர வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

கடுமையாக நிலவி வரும் மோதல்…. அதிரடியாக களமிறங்கிய அதிபர்…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாடுகள்..

கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற எத்தியோப்பியாவின் பிரதமர் அந்நாட்டை கைப்பற்ற முயற்சிக்கும் போராளிக் குழுக்களுக்கு எதிராக எத்தியோப்பிய ராணுவத்தை வழி நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அக்கண்டத்திலேயே அதிகமான மக்கள் தொகையை கொண்ட எத்தியோப்பியா அமைந்துள்ளது. ஆனால் எத்தியோப்பியாவில் டைக்ரே போராளிக் குழுக்களுக்கும் அந்நாட்டின் ராணுவ படைகளுக்குமிடையே போர் நிலவி வருகிறது. ஆகையினால் அந்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக […]

Categories
உலக செய்திகள்

இது மிகவும் அழகான வெற்றி…. பிரபல நாட்டில் நடைபெற்ற தேர்தல்…. கருத்து தெரிவித்த அதிபர்….!!

வெனிசுலாவில் நடைபெற்ற தேர்தலில் சுமார் 20 கவர்னர் பதவிகளை ஆளும் கட்சி கைப்பற்றியதையடுத்து அந்நாட்டின் அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். வெனிசுலாவின் ஜனாதிபதியாக இடதுசாரி நிக்கோலஸ் என்பவர் உள்ளார். இதனையடுத்து வெனிசுலாவிலுள்ள பல பகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்ற தேர்தலில் தற்போது வெனிசுலாவை ஆட்சி செய்யும் சோஷலிஸ்ட் கட்சி சுமார் 20 கவர்னர் பதவிகளை வென்றுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் அதிபரான இடதுசாரி நிக்கோலஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முக்கிய கருத்து […]

Categories
உலக செய்திகள்

“நன்றி தெரிவிக்கும் நாள்!”.. 2 வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்த அமெரிக்க அதிபர்..!!

அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாளை முன்னிட்டு, அதிபர் ஜோ பைடன் 2 வான்கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியிருக்கிறார் . வட அமெரிக்காவில், ‘நன்றி தெரிவிக்கும் நாள்’ என்பது பாரம்பரியமாக கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். இந்த நாளானது, தற்போதைய காலகட்டத்தில் சமூகம், அரசியல், கலாச்சாரம் மற்றும் சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துக்கூடிய வகையில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், அமெரிக்க மக்கள், நன்றி தெரிவிக்கும் நாளன்று, வழக்கமாக வான்கோழியை சமைத்து சாப்பிடுவார்கள். எனினும், அமெரிக்க நாட்டின் அதிபர், நன்றி […]

Categories
உலக செய்திகள்

“அமேசான் காடுகள் அழிக்கப்படுவது அதிகரிப்பு!”.. ஆராச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்..!!

அமேசான் காடுகள் அழிக்கப்படுவது கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவிற்கு, இந்த வருடம் அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். பிரேசில் நாட்டின் விண்வெளி ஆய்வு நிறுவனமானது, இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், கடந்த ஒரு ஆண்டில் அமேசான் காடு, சுமார் 22% அதிகமாக அழிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமேசான் காடுகள், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2020-21 ஆம் வருடத்தில் 13 ஆயிரத்து 235 சதுர கிலோமீட்டர் பரப்பளவு காடுகள் அழிந்திருக்கிறது. இது […]

Categories
உலக செய்திகள்

துனிசிய நாட்டின் பிரதமரை நீக்கிய அதிபர்.. ஆயிரக்கணக்கான மக்கள் அதிபரை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..!!

துனிசியா நாட்டின் அதிபரான கைஸ் சையத், அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமாக தன் அதிகாரத்தை உயர்த்திக் கொண்டதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். துனிசியா நாட்டின் பிரதமரை கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதியன்று, அதிபர் கைஸ் சையத், பதவி நீக்கம் செய்தார். மேலும் நாட்டினுடைய நாடாளுமன்றத்தையும் முடக்கியுள்ளார். இது மட்டுமல்லாமல், கடந்த செப்டம்பர் மாதத்தில் தனக்கு அதிகாரங்களை அதிகரிக்கும்  விதத்திலான திருத்தங்களை அரசியலமைப்பில் கொண்டு வந்தார். ஆனால், இவை அனைத்தும் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

அதிபராகும் முயற்சியின் முன்னேற்பாடா….? திருத்தப்பட்ட சட்ட வரம்பு…. தகவல் வெளியிட்ட செய்தி நிறுவனம்….!!

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாடு தொடர்பாக பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநாடு ஒன்று நடத்தப்படுகிறது. இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் கூறியதில் “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடானது கடந்த புதன்கிழமை அன்று தொடங்கப்பட்டது. இந்த மாநாட்டில் கடந்த 100 ஆண்டுகளாக கட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் 25வது தேசிய மாநாட்டை நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

உரிமை புதைக்கப்பட்டுவிட்டது…. ஹிட்லராக சித்தரிக்கப்பட்ட அதிபர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

கொரோனா குறித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரென்ச் நாட்டின் அதிபரை ஜெர்மனியின் சர்வாதிகாரியாக சித்தரித்த நபரை குற்றவாளி என தீர்ப்பளித்த பிரெஞ்ச் நாட்டின் நீதிமன்றம் அவருக்கு சுமார் 10,000 யூரோக்களை அபராதமாக விதித்துள்ளது. பிரெஞ்ச் நாட்டின் ஜனாதிபதியான இமானுவேல் மேக்ரான் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்டியடிக்க சில கட்டுப்பாடுகளை அங்கு கொண்டு வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 62 வயதாகும் முன்னாள் விளம்பர நிர்வாகி ஒருவர் ஜனாதிபதி இம்மானுவேலை ஜெர்மனியின் சர்வாதிகாரியாக சித்தரித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சட்டப்படி நானே அதிபர் – தலிபானை ஆட்டம் காணவைக்கும் அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர்.  இது குறித்து வெளியாகி வீடியோவெளியாகி  உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி தலைமறைவாகி அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்ட நிலையில் சட்டப்படி நானே அதிபர் என துணை […]

Categories
உலக செய்திகள்

2027-க்குள் சீன இராணுவம் உலகிலேயே சிறந்ததாக மாற வேண்டும்.. அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தல்..!!

சீன அதிபர் ஜீ ஜின்பிங் வரும் 2027ஆம் வருடத்திற்குள் சீன நாட்டின் ராணுவம் அமெரிக்க நாட்டிற்கு சமமாக உலகின் சிறந்த ராணுவமாக மாற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். சீன நாட்டின் ராணுவ தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுவினரிடம் அதிபர் நேற்று கலந்துரையாடியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சீன நாட்டின் ராணுவம் தோன்றி 94வது வருட விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக, இராணுவத்தினர், துணை இராணுவத்தினர், அதிகாரிகள், ஆயுத படையினர், காவல்துறையினருக்கு என் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடும் அனைவருக்கும் 100 டாலர் பரிசு…. அதிரடி அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் அனைத்து மாகாண அரசுகளும் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்தும் பணி தாமதம்!”.. மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய பிரதமர்..!!

ஆஸ்திரேலிய நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் சிட்னி போன்ற சில முக்கிய பகுதிகளில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. எனவே ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துமாறு பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே தற்போது அவர் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார். எனினும் ஆஸ்திரேலியா, பணக்கார நாடு என்பதால் தடுப்பூசிக்கு பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அரசு, தடுப்பூசி செலுத்துவதில் அக்கறை காட்டாமல் தாமதப்படுத்தி வருகிறது. அது தான் தற்போது […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் அதிபருடன் சந்திப்பு.. வெளிவிவகார மந்திரி வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தான் அதிபருடன் அந்நாட்டின் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார். மத்திய வெளிவிவகார மந்திரியான ஜெய்சங்கர், உஸ்பெகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது தாஷ்கண்ட் என்ற நகரத்தில் அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனியுடன் சந்திப்பு மேற்கொண்டார். நாட்டில் கடந்த 20 வருடங்களாக அரசபடையினர் மற்றும் தலீபான் தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. எனவே அமெரிக்கா, தங்கள் படைகளை ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசுக்கு ஆதரவளிக்கும் வகையில் அங்கு களமிறக்கியது. ஆனால் தற்போது அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

இதுக்கெல்லாம் அவசியமே இல்ல..! பிரபல நாட்டில் அதிகரிக்கும் பாதிப்பு… அதிபர் வெளியிட்ட தகவல்..!!

ரஷ்ய அதிபர் புடின் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும் அந்நாட்டில் ஊரடங்கை அமல்படுத்த அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். ரஷ்யாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 21,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை அந்நாட்டில் கொரோனாவால் 5,514,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 669 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் மீண்டும் அமலுக்கு வருமா என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

9 வது முறை எம்.பியாக பதவியேற்பு.. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சாதனை..!!

இலங்கை முன்னாள் அதிபரான ரணில் விக்ரமசிங்கே ஒன்பதாவது தடவையாக நேற்று எம்.பி ஆக பொறுப்பேற்றுள்ளார். இலங்கையில், கடந்த 1977 ஆம் வருடத்திலிருந்து நடந்த அனைத்து பாராளுமன்ற தேர்தலிலும் எம்.பியாக வெற்றி பெற்றவர் என்ற சாதனையை ரணில் விக்ரமசிங்கே நிகழ்த்தியுள்ளார்.  ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக, கடந்த 1977 வருடத்தில் முதல் தடவையாக போட்டியிட்ட  ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் உறுப்பினரானார். அதனைத்தொடர்ந்து, கடந்த 1994 ஆம் வருடத்தில், அந்த கட்சியின் தலைவராக பதவியேற்றுள்ளார். 4 தடவை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிசூடு கலாச்சாரம்.. அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளும் ஜோபைடன்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலவரத்திற்கு காரணமாக இருக்கும் சட்டவிரோதமான துப்பாக்கி வர்த்தகத்தை தடுப்பதற்கு 5 பணிக்குழுக்களை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் துப்பாக்கிச்சூடு கலவரங்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக அதிபர் ஜோ பைடன் நாடாளுமன்றத்தை வலியுறுத்தியிருக்கிறார். அதன்படி, முதலில், சட்டவிரோதமாக, துப்பாக்கிகளை கடத்தும் வர்த்தகத்தை தடுக்க முடிவெடுத்த அதிபர், அதற்காக 5 பணி குழுக்களை அமைத்திருக்கிறார். இது தொடர்பில், அமெரிக்காவின் சட்டத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஒன்றரை வருடங்களில் கலவரங்கள் […]

Categories
உலக செய்திகள்

பெலாரஸ் அரசின் மூத்த அதிகாரிகள் மீது பொருளாதார தடை.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

அமெரிக்க அரசு, பெலாரஸ் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. பெலாரஸ் நாட்டில் கடந்த 27 வருடங்களாக அலெக்சாண்டர் லுகாசெங்கோ அதிபராக உள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அதிபர் தேர்தல் நடந்த போது முறைகேட்டில் அவர் வெற்றியடைந்தாக சர்ச்சை ஏற்பட்டது. இதற்கிடையில் அந்நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் அதிபரை விமர்சித்ததால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவே லிதுவேனியா நாட்டில் தஞ்சம் புகுந்தார். அங்கும் அதிபர் தேர்தலில் முறையாக வெற்றி அடைந்ததாக கூறப்படும் எதிர்க்கட்சி […]

Categories
உலக செய்திகள்

எச்.1பி விசா நடைமுறையில் சலுகை…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

அமெரிக்காவில் வெளி நாட்டினர் தங்கி பணி புரிய  எச்-1பி விசாவழங்கப்படுகிறது. இதில் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியாற்றி   வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எச்.1பி விசாவுக்காக ஏராளமானோர் விண்ணப்பத்து வருகிறார்கள். ஆனால் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தனது ஆட்சி காலத்தில்  எச்-1பி விசா வழங்குவதற்கான நடைமுறையில் கட்டுபாடுகளை கொண்டு வந்தார். வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தார். இதற்கிடையே புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் முன்னாள் அதிபர் […]

Categories
தேசிய செய்திகள்

உடல் முழுவதும் சூடு… கண்ணில் மிளகாய் பொடி தூவி… வெந்நீரை ஊற்றி 22 நாட்கள் பெண் பலாத்காரம்… சைக்கோ தொழில் அதிபர் கைது…!!!

கேரளாவில் உடல் முழுவதும் சூடு வைத்து, கண்ணீல் மிளகாய் பொடி தூவி, வெந்நீரை ஊற்றி 22 நாட்கள் பெண் பலாத்காரம் செய்த சைக்கோ தொழில் அதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் பங்கு வர்த்தக பணிபுரிந்து வருகிறார். இவர் கொச்சியில் உள்ள பேஷன் டிசைனராக பணிபுரியும் ஒரு பெண்ணை திருமணம் செய்யாமல் அவருடன் ஒரு பிளாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜோசப் அந்த பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.. 3 ஆம் வாரமாக தொடரும் மக்கள்..!!

கொலம்பியாவில் அதிபரை எதிர்த்து நாட்டு மக்கள் கடந்த 3 வாரங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.   கொலம்பியா குடியரசில் இவான் டியூக் என்பவர், கடந்த 2018 ஆம் வருடத்தில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அதன் பின்பு, கடந்த 2020 ஆம் வருடத்தில் உலகம் முழுவதிலும் கொரோனா  தீவிரமடைந்தது. இதில் கொலம்பியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. எனவே கொலம்பியா மக்கள் சிலர், இந்த நிலைக்கு அதிபர் இவான் டியூக், சரியாக திட்டமிடாதது தான் காரணம் என்று விமர்சித்து வந்தனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கேபி சர்மா ஒலி மீண்டும் பிரதமராக பதவியேற்பு.. அதிபர் நேற்று நியமனம்..!!

நேபாளத்தில் எதிர்க்கட்சிகள் வாய்ப்பை தவறவிட்ட நிலையில், கே.பி சர்மா ஒலி மீண்டும் பிரதமராக அதிபரால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.  நேபாளத்தில் ஆளும் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட்டில், பிரதமர் சர்மா ஒலிக்கும், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தாவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பிரதமர் சர்மா ஒலி பாராளுமன்றத்தை கலைக்க பரிந்துரைக்க, அதிபர் பித்யா தேவி பண்டாரியும் அதை  ஒப்புக்கொண்டார். ஆனால் நாட்டின் உச்சநீதிமன்றம் இந்த முடிவிற்கு தடை விதித்துவிட்டது. இதனால் குழப்பம் நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் வேகமெடுக்கும் கொரோனா… 6 புதிய மந்திரிகள் நியமனம்… அதிபர் அதிரடி அறிவிப்பு…!!!

பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பால்3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில்அந்நாட்டு அதிபர் புதிய மந்திரிகளை நியமனம் செய்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி  வந்த நிலையில் தற்போது  தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி… ஏப்ரல் 19ம் தேதிக்குள்… அதிபர் அதிரடி அறிவிப்பு…!!!

அமெரிக்காவில் மிக விரைவில் 90%மக்களுக்கு  கொரோனா  தடுப்பூசி போடும் பணி நிறைவடையும் என அந்நாட்டு  அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிபராகுவதே எனது நோக்கம்… ஜோ பைடன் அதிரடி பேட்டி…!!!

அமெரிக்காவில் தற்போது அதிபராக உள்ள ஜோ பைடன் மீண்டும் நாட்டிற்கு அதிபராக வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த முடிந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றிப்பெற்று  தற்போது அதிபராக பதவி வகித்து வருகிறார் . அங்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை அதிபருக்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம் .நடந்த முடிந்த தேர்தலில் அவருக்கும் முன்னாள் அதிபர்  டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே கடுமையான  போட்டிகள் நிலவி வந்தன . ஆனால்அவற்றை எல்லாம் கடந்து  ட்ரம்பை வீழ்த்தி ஜோ […]

Categories
உலக செய்திகள்

நிம்மதியா தூங்கணுமா? வேணாம்மா?… அமெரிக்காவை கண்டித்த வடகொரியா அதிபரின் தங்கை… பரபரப்பு…!!!

வடகொரிய   அதிபரின் தங்கை   அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்த  சம்பவம்  பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.   உலக நாடுகளில் அமெரிக்கா வல்லரசு நாடாக திகழ்கிறது. அதனை போலவே  மிகவும் மர்மம் நிறைந்த நாடாக வட கொரியா உள்ளது. இந்ந இருநாடுகளுக்கும் , பல ஆண்டுகளாகவே பிரச்சினைகள் நிலவி வருகிறது .அதனால் இருநாடுகளும் எப்போது மோதிக் கொள்ளும் என்ற அச்சம் இருக்கும் . இந்நிலையில் வடகொரியா மற்றும் அமெரிக்கா நாடுகளின் கடற்படை கூட்டு பயிற்சி வரும் நாட்களில் நடைபெறயுள்ளாதால்  அமெரிக்க […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

ரகசியமா தடுப்பூசி போட்டு கொண்டாரா….? முன்னாள் அதிபர் பற்றி வெளியான தகவல்….!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் பரவலாக வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா கடந்த ஜனவரி மாதத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபரின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தவித தடுப்பூசி போடப்பட்டது எவ்வளவு டோஸ் எடுத்துக் கொண்டுள்ளனர் என்ற தகவலை அவர் வெளியில் கூற மறுத்துவிட்டார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே ட்ரம்ப் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார் […]

Categories
உலக செய்திகள் தலைவர்கள்

சவுதி மன்னருடன் தொலைபேசி உரையாடல்… அமெரிக்க அதிபர் பேசியது என்ன….?

அமெரிக்க அதிபர் சவுதி மன்னருடன் இரு நாடுகளுக்ககு இடையேயான உறவு குறித்து தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார் . அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோபைடன் ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவி ஏற்றார். மேலும் பதவியேற்றதிலிருந்து உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரையும் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களுடன் உரையாடல் நடத்தி வருகிறார். இதுவரையில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் உரையாடல் நடத்தி வந்ததுள்ளார்.   இந்நிலையில் […]

Categories

Tech |