கடந்த ஜூலை 11ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த பொதுக்குழு அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறி ஓபிஎஸ் அந்த பொதுக்குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தான் தற்போது தொடர்வதாக கூறிய ஓபிஎஸ் சமீபத்தில் அதிமுகவிற்கு நிர்வாகிகளையும் நியமித்தார். இவ்வாறு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறி மோதிக் கொண்டு இருக்க மறுபக்கம் சசிகலா […]
Tag: அதிமுக ஆட்சி
தங்கள் ஆட்சியில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்க விடவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]
அதிமுக ஆட்சியில் பயிர் கடன் வழங்குவதில் 516 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆட்சியில் பயிர்க்கடன், நகைக்கடனுக்காக மூன்றே நாட்களில் 16 லட்சம் பயனாளர்களை தேர்வு செய்வது எப்படி என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு துறை மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆகிய மாநிலங்களின் மீது உறுப்பினர்களின் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்குப் பின்னர் பதில் உரையாற்றிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, […]
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி ரிபப்ளிக் டிவி, இந்தியா டுடே, ஏபிபி சிவோட்டர், டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் […]