திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போக்குவரத்துக் கழகத்தில் ராமசாமி என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி இசைக்கலையில் பட்டம் பெற்றுள்ளார். இவர் அரசு இசை ஆசிரியர் வேலை கேட்டு தாராபுரம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் அரவக்குறிச்சி பெண் எம்எல்ஏ மரிய முள் ஆசியாவின் கணவர் எம் ஜெயலாணி(70) என்பவரை 2017 ஆம் வருடம் அணுகியுள்ளார். அப்போது ஜெயலானி தனக்கு அரசு உயர் அதிகாரி வரை தெரியும் என்று […]
Tag: அதிமுக எம்எல்ஏ
நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிவகங்கை பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மற்றும் இலவச வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை தொகுதி அதிமுக எம்எல்ஏ செந்தில்நாதன் கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பல்வேறு சமுதாயத்தை […]
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான விசாரணை இன்று நடந்தது. அதில் எம்எல்ஏ பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.1991 முதல் 1996 வரை சின்ன சேலம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த இவர்,வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு விசாரணையில் பரமசிவத்திற்கு 4 […]
சிண்டாக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கும் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக சர்ச்சையில் சிக்கிய திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தற்போது தகர ஷீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்க 45 லட்சம் ரூபாய் செலவு என விளம்பரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்க பட்டுள்ளது. தகர ஷீட்டில் அமைக்கப்பட்டுள்ள […]
கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ கே.பழனி முழுமையாக நலமடைய வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏ கே.பழனி முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று மனதார விரும்பறேன் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்லபட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]