இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கி எறிந்து; அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது, தொண்டர்கள் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றது. ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வீழ்த்த முடியாது. எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகள் அதிமுகவில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. மன கசப்புகளை எல்லாம் மறந்து, அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே […]
Tag: அதிமுக
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பேரறிஞர் அண்ணா காலத்திலும் சரி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மாவுடைய காலத்திலும் சரி, அம்மாவுடைய அரசு இருந்த காலத்திலும் சரி, ஒரு தனிமனித பாதுகாப்பு, அதேபோல ஒரு தனிமனித உரிமை, அதேபோன்று சட்ட ஒழுங்கை யார் கையில் எடுத்தாலும், அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி ஒரு சட்டத்தின் உடைய ஆட்சியை நம்முடைய அம்மாவுடைய அரசு செய்திருக்கின்றது. ஆனால் இன்றைக்கு அது போன்ற நிலை […]
இன்றைக்கு வந்திருக்கின்ற புதிய எதிரிகள் அல்லது வர முயற்சிக்கின்ற புதிய எதிரிகள், இதுவரையில் நாம் பார்த்த எதிரிகள் இல்லை. இதுவரையில் திமுகவிற்கும் – அதிமுகவிற்கும் சண்டை என்றால் அது வெறும் பங்காளி சண்டை. இப்போது நடக்கப்போவது பரம்பரை சண்டை. காலம் காலமாக நமக்கும் அவர்களுக்குமான சண்டை மறுபடியும் தமிழ் நாட்டின் தெருக்கடிகளில் அரங்கேற வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பேசுகின்ற ஒவ்வொரு சொல்லும் பொய்யாக இருக்கிறது . கோவையில் இரவு ஒன்றரை மணிக்கு நம்முடைய தலைவர் தளபதி […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முறையாக கால்வாய்களை பராமரித்து தூர்வாரி இருந்தால் நிச்சயமாக ஏறக்குறைய பல டிஎம்சி தண்ணீர் கடலில் சென்று வீணாவதை நாம் தடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு அதை கடலில் சென்று வீணாவதை தடுக்க முடியாத இந்த அரசு வீணான மழை நீரை சேமிக்க முடியாமல் கடலுக்கு அனுப்பி விட்டது. அதேபோன்று பருவமழை எதிர்நோக்குகின்ற ஒரு சூழ்நிலையில் சென்னையில் ஒரு வேலை நடந்த மாதிரி தெரியவில்லை, வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை, அதேபோல மழை, வெள்ளம் […]
அமமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்றைக்கு சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறியில் யாரை வேண்டுமானாலும் தூக்கி எறிகின்ற, யாருக்கும் துரோகம் செய்கின்ற மனநிலையில் உள்ள ஒரு மனிதர், அவரைச் சேர்ந்த ஒரு கூட்டம். அம்மாவின் இயக்கத்தை இன்றைக்கு எப்படி சின்னா பின்னம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சுபாவத்தை உணர்ந்துதான் அன்றைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நாம் ஆரம்பித்தோம். அம்மாவின் தொண்டர்களுக்கு ஒரு இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். இன்னும் பல தொண்டர்கள், […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கள்ளகுறிச்சி நிகழ்வுகளில் எடப்பாடி கருத்து சொல்லி இருக்கின்றார், நான் கருத்து சொல்லி இருக்கின்றேன். போலீஸ் விசாரணையில் இருக்கிறது, அதனால் நாங்கள் ஏற்கனவே சிபிஐ விசாரணை வேண்டுமென்று தான் கேட்டோம், சிபிஐ விசாரணை வைத்து அந்த தாயினுடைய நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஒரு தாய் அவர்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது திருப்தி இல்ல, காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. அவர்களே என்ன செய்கிறார்கள் ?நாங்கள் கேட்கின்ற கேள்விக்கு பதில் […]
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக பார்க்கிறோம். மிக்க மகிழ்ச்சி தருணம் இது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொதுச் செயலாளர் பதவியை தூக்கி எறிந்து விட்டு அந்தப் பதவியை தான் அடைய வேண்டும் என்ற சர்வாதிகாரிக்கு கிடைத்த எதிர்ப்பான தீர்ப்பாக பார்க்கிறோம். இதை தொண்டர்களும் வரவேற்பார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் வரவேற்பார்கள். இது அதிகாரம் படைத்த […]
கடந்த இரண்டு மாதங்களாக அதிமுகவில் தொடர் குழப்பங்கள், அதிகார போட்டிக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வமும் மோதிக்கொண்டிருந்த நிலையில், பல சச்சரவுக்கு நடுவிலேவில் நடந்த பொதுக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்றம் என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் குட்கா அதிகமாக இருக்கின்றது என ஸ்டாலின் சட்டமன்றத்துக்கு உள்ளே கொண்டு வந்து பேசினார். நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். எப்படி இருந்தாலும் சரி, யார் செய்தாலும் தப்பு என்கின்ற அடிப்படையில் அன்றைக்கு நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அது போல் நீங்களும் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள். சட்டமன்ற உறுப்பினருக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது ? விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், காவல்துறையை விட்டு முடுக்கி விடுங்கள், இது […]
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான தீர்ப்பு வந்ததை அடுத்து அவர் , அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், மக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்திருக்கிறது. கழகத்தின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நம்பிக்கை உண்மையானது: அந்த அறிக்கையில், தர்மத்தை நம்பினேன்; மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்; கழகத்தை உயிராக நேசிக்கும் கழக […]
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனால் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயலலிதா – எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்த தீர்ப்பால் எடப்பாடி தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் அறிவித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழுவை […]
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வில் பேசிய சுப வீரபாண்டியன், தமிழ்நாட்டில் இனி ஆட்சி மாறாது, தளபதி தான் என்றென்றும் முதலமைச்சர், திமுக கழகத்தின் ஆட்சிதான் நடக்கும். நாம் தான் ஆளுங்கட்சி, அவர்கள் எதிர்க்கட்சி. எப்போதும் நாம் அல்லது அவர்கள் என்பது அல்ல, நாம் தான் ஆளுங்கட்சி ஆக இருக்க வேண்டும். ஆனால் இரண்டு கட்சிகளையும் அழித்துவிட்டு திராவிடத்தை இந்த மண்ணிலிருந்து வீழ்த்திவிட்டு […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்த தீர்ப்பால் எடப்பாடி தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் அறிவித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழுவை […]
நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியதை அடுத்து அவர் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் வந்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கழகத்தினுடைய நிறுவன தலைவர், பொன்மன செம்மல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், காலமெல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும், வணக்கம்: பண்பும், பாசமும், பற்றும்,பரிவும் கொண்டு நல்லாட்சி நடத்திய இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் […]
நேற்று அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து பேசிய கேபி முனுசாமி, கடந்த 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவிலும் கொண்டு வந்த தீர்மானங்களை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் முழுமனதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒரு 100 பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தினுடைய முழு தீர்ப்பு வந்த பின்பு அதற்கு முறையாக தலைமை கழகத்தில் இருந்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும். இதில் பின்னடைவு என்பதற்கு எந்த வித […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் போதை அதிகரிப்பு என்று எங்கள் ஆட்சியில் இந்த மாதிரி இருந்ததா? நீங்கள் பத்திரிக்கை எடுத்து பாருங்கள்… இரும்பு கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினார் அம்மா… போதை பொருள் கடத்துபவர்கள், சட்ட ஒழுங்கை கையில் எடுப்பவர்கள், சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள், கந்து வட்டி இப்படி எல்லாரையும் உள்ள தூக்கிப்போட்டு, சட்ட ஒழுங்கை பராமரித்து, தமிழ்நாடு அமைதி பூங்கா என்று உருவாக்கி, இந்தியாவிலேயே அமைதி பூங்கா என்று சொல்லக்கூடிய மாநிலம் தமிழ்நாடு […]
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். அது மட்டுமல்லாமல் ஜூன் 23ஆம் தேதி முன்பிருந்த நிலையில்தான் இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். மேலும் சட்டத்தின் ஆட்சி என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, மாநிலத்தில் அரசை நடத்தக்கூடிய கட்சிகளுக்கும் பொருந்தும். அந்த கட்சியினுடைய உறுப்பினரின் உரிமை […]
அமமுகவின் பொதுக்குழுவில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இங்கே உக்கார்ந்து இருக்கும் போது பார்த்தேன். எத்தனையோ இஸ்லாமிய நண்பர்கள் பொதுக்குழு உறுப்பினர்களாக, மாவட்ட செயலாளராக, தலைமை கழக நிர்வாகிகளாக இங்கே வந்திருக்கிறார்கள். அதே போல கிறிஸ்துவ சகோதரர்கள், எல்லா மதங்களிலும் சங்கமம் இது, எல்லா சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இங்கே பொறுப்பில் இருக்கிறார்கள், மேடையிலே அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எல்லாம் புரட்சித்தலைவி அம்மாவின் தொண்டர்கள், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தொண்டர்கள்.. இதைத் தவிர வேறு எந்த பாகுபாடும் நம்மிடம் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரு அரசு வந்து செய்ய வேண்டியது வருமுன் காப்பது. வருமுன் காப்பவது தான் அறிவாளிதனம். வந்தபின் தடுப்பவர் ஏமாளி. அதுபோல் வருமுன் காப்பாற்றுவோம், வருமுன் நாம் எல்லா நடவடிக்கையும் எடுப்போம். வருமுன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வந்த பின்னால் ஒன்னும் செய்ய முடியாது. முதலமைச்சராக இருக்கின்ற திரு ஸ்டாலினுடைய சட்டமன்றத் தொகுதி கொளத்தூர், அவருடைய சட்டமன்ற அலுவலகமே போன மழையில் பல நாட்களாக மூழ்கிருந்தது. அப்போது தன்னுடைய தொகுதியே பராமரிக்க […]
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். அது மட்டுமல்லாமல் ஜூன் 23ஆம் தேதி முன்பிருந்த நிலையில்தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த தீர்ப்பின் உடைய முழுமையான விவரம் என்பது வெளியாகி இருக்கிறது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஜெயச்சந்திரன் […]
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் எடப்பாடிக்கு பாதகமான தீர்ப்பு வந்துள்ளதை ஓபிஎஸ் அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பை தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீசெல்வம், கழகத்தினுடைய நிறுவனத் தலைவர் பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலமெல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும், பண்பும், பாசமும், பற்றும், […]
தர்மத்தை நம்பினேன்; மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்; கழகத்தை உயிராக நேசிக்கும் கழக கண்மணிகளைநம்பினேன்; தொண்டர்களை நம்பினேன்; உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமாற நம்பிய நாட்டு தமிழ்நாட்டு மக்களை நம்பினேன்; இவையாவிற்கும் மேலாக தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது ஆசிகளை நம்பினேன்; இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாக இருக்கிறது. அடுத்தவர் வீட்டை […]
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதிமுகவின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஒன்றரை கோடி தொண்டர்களையும், அரவணைத்து செல்வேன். கழகத்தை நம்பினேன், தர்மத்தை நம்பினேன், நீதிமன்றத்தை நம்பினேன் எனவும், எம்ஜிஆர் வகுத்த கட்சி விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என நிரூபணம் ஆகி இருப்பதாகவும் ஓ பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
அதிமுக பொதுக்குழு தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவை செல்வராஜ், தொண்டர்களால் ஒருமனதாக ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியை கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும் என்று சொன்ன நேரத்தில், சில சுயநலவாதிகளை சேர்த்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஜூன் 23ஆம் தேதி இரண்டு பேரும் கையெழுத்திட்டு பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தன. அந்த நேரத்தில் தன்னிச்சையாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னை தனி தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த, அதிமுகவின் பொதுக்குழு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை இன்று வாசித்தார். அதில், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலை தான் இருக்க வேண்டும் என்றும், ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதற்கு 30 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்ற மிக முக்கியமான தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கி இருக்கிறார். இதனால் ஓபிஎஸ் இல்லத்தில் இருக்கக்கூடிய தொண்டர்கள் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து, […]
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ஜூன் 23ஆம் தேதியில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒப்புதல் கொடுக்கப்பட்டு நடைபெற்ற பொதுக்குழு வரை இருந்த நிலையிலே இருக்க வேண்டும். செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது. இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்தது ரத்து. பொது குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பு ஓபிஎஸ்சுக்கு சாதகமான, மிக முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகின்றது. […]
கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு கடந்த 10 மற்றும் 11ஆம் தேதி விசாரணை நடத்தபோது முதற்கட்டமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தங்கள் வாதங்களை முன் வைத்தனர். ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருப்பதாக தான் கருத முடியும். அந்த பதவி காலியானதாக எடப்பாடி பழனிச்சாமி […]
அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கில், “அதிமுக பொதுக்குழு செல்லாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு இபிஎஸ்-க்கு பின்னடைவாக ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் நீண்ட நாட்களாக நிலவி வந்த ஒற்றை தலைமை பிரச்சனை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு கடந்த 10 மற்றும் 11ஆம் தேதி விசாரணை நடத்தபோது முதற்கட்டமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தங்கள் வாதங்களை முன் வைத்தனர். ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருப்பதாக தான் கருத முடியும். அந்த பதவி காலியானதாக எடப்பாடி பழனிச்சாமி […]
ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகின்ற பொதுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்பிலும், பொதுக்குழு உறுப்பினராக இருக்கக்கூடிய வைரமுத்து தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. அந்த வழக்கை கடந்த 10, 11 ஆம் தேதியில் நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்து, தீர்ப்பை தேடி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். அந்த வழக்கில் இன்றைய காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால் காலை 10:30 மணிக்கு வழக்கமாக நீதிபதி ஜெயச்சந்திரன் வர தாமதமாகிய நிலையில் சற்று […]
அதிமுக பொதுக்குழுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் நேரம் குறித்து நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டு, வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது உச்ச நீதிமன்றம். உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து […]
அதிமுக பொதுக்குழுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சற்று நேரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டு, வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது உச்ச நீதிமன்றம். உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசு நில அபகரிப்பு வழக்கு யார் மீது போட்டார்கள் இன்றைக்கு ? 2001 – 2006 இல் சட்டத்துறை அமைச்சர் அன்றைக்கு இந்த சட்டம் கொண்டு வந்தது இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். திமுக முழுக்க முழுக்க நில அபகரிப்பு செய்கின்ற தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள், யாரும் நிலம் வாங்க முடியாது. யாராவது நிலம் வாங்கினால், அந்த மாவட்டத்தில் இருக்கின்ற அதிபதியை பார்த்துக்கொண்டு, திமுக மாவட்ட செயலாளரை பார்த்து விட்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ரைடு ரைடு என சொன்னாங்க அல்லவா ? எனக்கு தெரிந்த ரைடு என்றால் சைக்கிள் ரைடு, அதற்குப்பின் பைக் ரைடு, அதற்குப் பிறகு ஹார்ஸ் ரைடு, எலிபன்ட் ரைடு இதுதான் நான் கேள்விப்பட்டது. அதனால் ரைடு என்று சொல்லி பரப்பி விட்ட என்னுடைய எதிரிகளுக்கு அற்ப சந்தோஷம் அடைந்தார்கள். ஆனால் சைக்கிள் ரைடு தான் எனக்கு தெரிந்ததே ஒழிய, வேற எந்த ரைடு பத்தியும் எனக்கு தெரியாது. லஞ்ச ஒழிப்புத்துறை தாராளமாக […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்று மக்கள் எவ்வளவு எதிர்பார்த்து இருக்கிறார்கள், இன்றைக்கு அடிப்படை கட்டமைப்பு வசதி அதை மேம்படுத்துவதற்கு எந்த திட்டமும் தொழில்நுட்பமும் இருக்கா ? பருவமழை வரப் போகிறது என்கிறார்கள்? அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் படவில்லை, ஒரு சொட்டு மழையில்லாமலா சிதம்பரம், அதே போல கடலூர் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு, காவிரியில் நீர் வந்து அவ்வளவு வரத்து வருகிறது என்றால் அதை ஏன் சேமிக்கவில்லை. அண்ணன் எடப்பாடியார் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டு […]
தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்ற அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, விவசாயிக்கு நீர் இல்லாத நிலம், ஒரு மனிதனுக்கு உயிர் எப்படியோ அதே போல தான் உயிராக இருப்பது விவசாயத்தில் நீர். அந்த நீரை நான் விவசாயி என்ற முறையில் அந்த அருமையை அறிந்தவன். எவ்வளவு பயன்படும், எவ்வளவு பிரச்சனையை தீர்க்கும் என்பதை உணர்ந்தவன். நீண்ட கால பிரச்சனையாக இருக்கின்ற ஒகேனக்கல் நீரேற்று பாசன திட்டத்தை மாண்புமிகு அம்மாவுடைய அரசு வருகின்றபோது நிறைவேற்றி இந்த மாவட்டம் எங்கே […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ரஜினி அவர்கள் பேசியது நாட்டு அரசியல். அதில் எந்தவித தவறும் கிடையாது. அடுத்து என்ன சொல்வார்கள் என்றால்…. பேருந்தில் கூட அரசியல் பேசக்கூடாது . அடுத்த ரூல்ஸ் போடுவார்கள் திமுகவினர். பேசினால் திமுகவை பற்றி ஏதாவது பேசி விடுவார்கள் என்ற பயம்.. பேருந்தில் அரசியல் பேசினால் பஸ்ஸிலிருந்து இறக்கி விடுவார்கள், விமானத்தில் அரசியல் பேசினால் அங்கிருந்து கீழே விட்டுவிடுவார்கள். படகில் அரசியல் பேசினால் கடலில் கவிழ்த்து விடுவேன், சாலையில் […]
தமிழக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகனை எடப்பாடி பழனிச்சாமி நிமிஷத்துக்கு நிமிஷம் அண்ணன் என பேசி மனம் குளிர செய்ததை அதிமுக தொண்டர்கள், குறிப்பிட்டு பேசி வருகின்றார்கள். தருமபுரி மாவட்டத்தில் அதிமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா இருக்கின்ற போது தர்மபுரி மாவட்டம் வளர்ச்சி பெறுவதற்காக நடவடிக்கை எடுத்தார்கள், அம்மா அவர்கள் சிறப்பான திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு தந்தார்கள், அதோடு அம்மாவுடைய […]
தர்மபுரிக்கு சுற்றுப்பயணம் செய்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, சில துரோகிகள் நம்மோடு இருந்து கொண்டு, நம் வெற்றிக்கு தொந்தரவு ஏற்படுத்தி விட்டார்கள். அதனால் நம் ஆட்சிக்கு வர முடியாது நிலை ஏற்பட்டு விட்டது. இப்போது தெரிந்து கொண்டோம், யார் துரோகி என்பதை கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தெரிந்து கொண்டார்கள். ஆகவே அப்படிப்பட்ட துரோகிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்துக்கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த நினைக்கின்றார்கள், உடைக்க நினைக்கின்றார்கள், ஒருபோதும் அதிமுகவை […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒலிம்பியாட் செஸ் போட்டியில் எல்லாம் முழுக்க, முழுக்க குடும்ப ஆதிக்கம் தான் . வேற யாரும் கிடையாது. சுத்தி புத்தி பார்த்தீங்கன்னா, ஒரு சர்க்கஸ் கம்பெனி போல, அவங்க குடும்பம் தான் உட்கார்ந்து இருந்ததே ஒழிய, வேற என்ன ? உதயநிதிக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்தாங்க ? உதயநிதியின் புகழ் பாடுற அமைச்சர்கள் எல்லாம் இருக்கிறாங்க. தூங்கி எழுந்தாலே அவருக்கு கண்ணை உறுத்தும். இன்னைக்கு என்ன பண்ணுறது அண்ணா திமுகவை? […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்னைக்கு என்ன பண்ணுறது அண்ணா திமுகவை? என்ன பண்ணலாம்னு. அப்படி என்று கண்ணை உறுத்தி, அதிமுகவை எப்படி அழிக்கலாம் என்ற ஒரு யோசன. அதுல தான் சர்வாதிகார இருக்காரா ஒழிய, நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல அரசை அமைக்கணும், அப்படின்னு இல்லை.இந்த மாலையிலாவது உருப்படியாவது எந்த வேளையாவது செய்தால் நல்லது. ஆனா செய்வாங்களானா… நிச்சயமா செய்ய மாட்டாங்க. வெறும் 2 போட்டோசூட் நடக்கும். விளம்பர அரசியல் மட்டும் நடக்கும். இந்த […]
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு நியப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் எடப்பாடி கே.பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டத்திற்கு சென்ற எடப்பாடிக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அக்கட்சி தொண்டர்களிடம் பேசிய அவர், தருமபுரி மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை. ஆகவே வேண்டுமென்ற திட்டமிட்டு எங்களுடைய தொண்டர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு […]
தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தொண்டர்களிடம் பேசினார்.அப்போது, வேண்டுமென்றே திட்டமிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைக்க முயற்சிக்கின்றார்கள் சில துரோகிகள், அந்த துரோகிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் திராவிட முன்னேற்ற கழகம் அரசாங்கம்… திரு ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற அரசாங்கம் துணை நின்று கொண்டிருக்கிறது, துரோகிகளையும், எதிரிகளையும் தொண்டர்கள் துணை கொண்டு எதிர்ப்போம், வீழ்த்துவோம். அதேபோல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக […]
தருமபுரி மாவட்டத்தில் பிரசார பயணம் மேற்கொண்ட அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, புரட்சி தலைவி அம்மா அவர்கள் பொதுச்செயலாளராக இருந்து இந்த கட்சியை வழிநடத்தி சென்றார்கள். எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் கட்டிக்காத்த இந்த கட்சிக்கு, உங்களுடைய அருளாசியால் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அத்தனை நல்லுங்களுக்கும் என்னுடைய நன்றிகள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை எப்படி கண் இமை போல காத்தீர்களோ, அதைப்போல இந்த கட்சியை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொதுச் […]
வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த சுதந்திர தின விழாவில் அனைவரும் தேச ஒற்றுமையை முன்னிறுத்தி, தேசப்பற்றை மேம்படுத்தி, நாட்டின் நலனுக்காக ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கோடு பல்வேறு முன்னெடுப்புகள் நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் தேசிய கொடி: அந்த வகையில் மத்திய – மாநில அரசுகளும் இதனை தொடர்ச்சியாக பொது மக்களிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தினத்தை முன்னிட்டு 13, […]
சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் எடப்பாடி பி.ஏ. ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றினுடைய மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். சூழ்ச்சி வஞ்சகத்தினுடைய மொத்த உருவத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள். என்னை போன்ற பல்வேறு அம்மாவினுடைய விசுவாசிகளை இந்த எடப்பாடி பழனிச்சாமியார் வீழ்த்தி, எருவாக்கி உரமாக்கி, ஆக்டோபஸாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். மருது அழகுராஜ் அம்மாவின் குரலாக இருந்தார், பூங்குன்றன் அவர்கள் அம்மாவினுடைய மனசாட்சியாக இருந்தார். அப்படிப்பட்ட இருவருமே […]
தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்கள் ஆன பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக மாற்றி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதன்படி சினிமா பரபலங்கள், […]
அதிமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்து, இன்றைக்கு பிரதான எதிர்கட்சியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற கட்சியிலே, இவ்வளவுபலம் பொருந்திய கட்சியிலே, இங்கே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருந்து வலுமிக்க கட்சியிலே… திமுகவின் சதியால் ( அலுவலகத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்) இந்த நிலைமை என்றால் உங்களுக்கு எந்த நிலைமை என்று பாருங்கள் ? உங்கள் […]
அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தொண்டர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, கிட்டத்தட்ட 14 அமாவாசை போய்விட்டது, 60 அம்மாவாசையில் 46 அமாவாசை தான் இருக்கிறது. ஸ்டாலின் அவர்களே, 46 ஆவது கூட இல்லை, அண்ணன் இருவரும் சொன்னார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் பார்க்கப் போகிறோம். மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு மோசமாக உள்ளது நாடு. இன்றைய தினம் ஸ்டாலின் என்ன சொன்னார் ? எங்களுக்கு கடிதம் […]