அதிமுக செயற்குழுவில் OPS, EPS வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் கொஞ்ச நேரத்துக்கு முன்னதாகத் தான் நடந்து முடிந்தது. செயற்குழுவில் பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெற்றாலும், நேரடி வாக்குவாதம் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான விவாதத்தில் நடைபெற்றுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நேரடி வாக்குவாதம் நடந்து இருக்கிறது. ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி அதன் பிறகு அணிகள் இரண்டாக இருந்த அணிகள் ஒன்றாக இணைந்த போது துணை முதலமைச்சராகவும், கட்சியினுடைய […]
Tag: அதிமுக
காலை முதல் 5மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவடைந்துள்ளது. 5 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டம் தற்போது நிறைவடைந்திருக்கிறது. செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் சில நிர்வாகிகள் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் போன்ற கேள்விகளுக்கு விவாதங்களும் நடைபெற்றது. அதோடு 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐந்து மணி நேரத்தகத்துக்கும்மேல் மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமையகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி கூறுகையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து செயற்குழுவில் காரசார விவாதம் நடைபெற்று வருகின்றது. அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து நடைபெறுகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற விவாதம் என்பது கட்சி நிர்வாகிகள் இடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக பேசப்பட்டு வருவதாக முதல்கட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மூத்த அமைச்சர்கள் சிலர் முதலமைச்சர் வேட்பாளரை கட்சியை உடனடியாக அறிவிக்க […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், பொதுவாழ்வு பணிகளுக்கு இலக்கணமாக கொரோனா நோய் தொற்று காலத்திலும், தொடர்ச்சியாக பல்வேறு பணிகளை மேற்கொண்ட தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும், தமிழக துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் தொடர்ச்சியாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாட்டிற்கு முன்னோடியாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாக நோய் தொற்று, நோய் தடுப்பு பணிகளையும், […]
தற்போது நடைபெற்று வரும் அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. பொதுவாழ்வு பணிகளுக்கு இலக்கணமாக நோய் தொற்று காலத்திலும் கண் தூங்காது கடமையாற்றி மக்களின் துயர் துடைக்க அயராது பணியாற்றி வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டு தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நாட்டிற்கே முன்னோடியாகவும், அனைவருக்கும் […]
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சொல்லி அதிமுக செயற்குழுக் கூட்டம் அதிமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை அந்த கட்சி ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்தது. அவரே பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்தினார். ஆனால் ஜெயலலிதா மறந்த பிறகு அதிமுகவில் உருவாகியுள்ள இரட்டை தலைமை பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை தொடர்ந்து இருந்து வருகின்றது. சட்டமன்ற […]
பிரதமர் மோடி தமிழக முதல்வரை, தமிழக அரசை பாராட்டியுள்ளார் என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,கட்சியின் தலைமை கழகத்தில் செயற்குழு நடக்க இருக்கிறது. அந்த செயற்குழுவில் சில முடிவுகள் எடுப்பார்கள். எந்த முடிவெடுத்தாலும், தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்ற ஒரே நோக்கத்துடன் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். […]
அதிமுக செயற்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்தியாவில் சிறந்த நிர்வாகி, மனதில் பட்டதை பேசுபவர் பிரதமர் மோடி என்று தெரிவித்தார். திமுக தலைவர் முக. ஸ்டாலின் ஆசை நிறைவேறாத ஆசையாகவே முடியும் என்று தெரிவித்த செல்லூர் ராஜு அதிமுக […]
சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. […]
பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது […]
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மார்ச் முதல் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான உத்தரவு சமீப நாட்களாக வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு […]
தனியார் பள்ளிகள் தங்கள் கட்டண நிர்ணய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தால் நாட்டின் பொருளாதாரம் பெரும் அளவில் சரிந்து போயுள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியும் கேள்விக்குறியாகியுள்ளது. இவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் வகையில் தான் மத்திய, மாநில அரசுகள் சலுகைகளை அறிவித்து வருகின்றன. பல்வேறு வகைகளில் மக்களுக்கு சலுகை அறிவிப்புகள் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்தடுத்து பல்வேறு உத்தரவுகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்தன. […]
அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கு பஞ்சம் இல்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சத்திரப்பட்டியில் வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எதிர்காட்சிகளில் முதல்வர் வேட்பாளர்களுக்கு பஞ்சம் இருப்பதாக முன்னால் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் கூறிய கருத்து தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு […]
சசிகலா சிறையில் இருந்து வெளியில் வரும்போது அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வரும்போது அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள கருப்பர் கூட்டத்தை காவிக் கூட்டம் ஓட ஓட விரட்டி அடிக்கும் என மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பாஜக மகளிரணி மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில பாஜக தலைவர் திருமுருகன் அவர்கள் பங்கேற்றார். கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டில் பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி உள்ளது. கந்த சஷ்டி கவசத்தை […]
அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அவிலுபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய மூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுகவில் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பொதுச் செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிக்குமான தேர்தலும் நடத்தப்படாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். கட்சியில் முதல்வர், வேட்பாளர் […]
திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழகத்தில் எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறது தமிழக பாஜக கடந்த 45 வருடங்களாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இதற்கான மாற்றுக்கட்சிகள் என பல கட்சிகள் இருந்தும் அது சோபிக்கவில்லை அந்த கட்சிகள் தேர்தலில் திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்து தான் வெற்றி பெற்று வந்துள்ளது. திராவிட கட்சிகளின் வெற்றிகளுக்கு காரணம் அவர்களின் தலைமை மட்டுமே மிகவும் பிரபலமான முகம் அவர்களை வைத்துதான் இத்தனை […]
அதிமுகவில் தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார் என அமமுக பொருளாளர் வெற்றிவேல் கூறுகிறார். 2021 ஜனவரி 27ஆம் நாளுக்கு முன்பாகவே சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார் என்றும், அதிமுகவில் தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை சசிகலா நிரப்புவார் என்றும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரூ. 7,167.97 கோடி கொரோனா தடுப்பு பணிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது என துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கி, இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நீட்தேர்வு தற்கொலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதாக காரசார விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு இதுவரை செலவு செய்தது குறித்து துணை முதல்வரும், நிதி அமைச்சருமான […]
கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? என முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாம் நாளாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய நிலையில் திமுக சார்பாகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகவும் நீட் தேர்வு தொடர்பான ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு காரசார விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக முதல்வர், திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. எனவே நீட் […]
தமிழகத்தில் நீட் தேர்வு வருவதற்கு திமுக – காங்கிரஸ் கூட்டணி தான் காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாம் நாளாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய நிலையில் திமுக சார்பாகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகவும் நீட் தேர்வு தொடர்பான ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஒரு […]
நீட் மரணத்திற்கு திமுக தான் காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக குற்றசாட்டை முன்வைத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாம் நாளாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய நிலையில் திமுக சார்பாகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகவும் நீட் தேர்வு தொடர்பான ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்க கூடிய […]
நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் நடைபெற்றது. இந்தத் தேர்வின் அச்சத்தையடுத்து, அடுத்தடுத்து 3 தமிழக தமிழக மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களின் மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்ததோடு, நீட் தேர்வை கண்டித்து […]
தமிழக்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிக்க பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பே கரணம் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரியவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு நீட் நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வால் அச்சத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருள் ஆகியது, அது மட்டுமல்லாமல் அனைவரின் நெஞ்சை உலுக்கும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர் தற்கொலை […]
நாளை நீட் தேர்வு நடக்க இருக்கும் நிலையில் மாணவர்கள் நீட் அச்சத்தால் மரணம் அடைந்து வருகின்றனர். தற்போது வரை அடுத்தடுத்து 3 மாணவர்கள் மரணம் அடைந்துள்ள நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இன்னொரு நீட் மரணம். நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தருமபுரி ஆதித்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அடிமை அதிமுக-பாசிச பாஜக சேர்ந்து செய்த கொலை. மாணவர்களே சற்றே பொறுமையாக இருங்கள். 8 மாதங்களில் தலைவர் […]
முதல்வரின் இதயத்தில் ஜெயலலிதா ஆன்மா புகுந்தததால் தான் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க முடிகிறது. ஜெயலலிதா ஆன்மா தான் முதல்வரை வழி நடத்துகிறது என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் ஏன் படிக்கவேண்டும் என்பது குறித்து அரசுப் பள்ளி மாணவன் கவின் கூறும் 10 காரணங்கள் அடங்கிய காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆக.17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வேறு பள்ளிகளில் இருந்து மாறுதல் பெறும் மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 24-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது. ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அரசுப் பள்ளிகளில் மாணவர் […]
மோடி திட்ட மோசடிக்கு இந்த அறிவிப்புதான் காரணம் என்று தமிழக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். ஏழை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தில் 13 மாவட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் சுமார் 5 லட்சம் பேர் விவசாயிகள் என்று தங்களை பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முறைகேட்டுக்கு துணைபுரிந்த 34 […]
அமைச்சர் பேசும் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புதிய கல்வி கொள்கை குறித்து இரண்டு குழுக்களை அமைத்திருக்கிறார்கள். அந்த குழுவினுடைய பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலித்து அரசு முடிவெடுக்கும்.சசிகலாஅவர்கள் சிறையில் இருந்து வெளி வந்தால் அதிமுகவோட நிலை என்ன என்ற கேள்விக்கு வரட்டும் பார்க்கலாம் என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நீதிமன்றம் உத்தரவுகளைமீறி அதிமுகவினர் பேனர் வைத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் திரு பழனிசாமி வரும் 9-ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அவரை வரவேற்பதில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் நிலவுகிறது. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆதரவாளர்கள் வைத்துள்ள பேனரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் புகைப்படம் மற்றும் பெயர் இடம்பெறாதது அதிமுக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீதிமன்ற உத்தரவுகளை […]
பாஜகவை இழிவாகப் பேசுவதும் பிரதமர் மோடியை இழிவாகப் பேசுவதும் ஒன்றுதான் என்று ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி, அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே உரசல் வலுத்துக் கொண்டே இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக மாறி மாறி பல்வேறு கருத்துக்களை இரு தரப்பிலும் வைத்துக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் […]
பாஜகவை இழிவாகப் பேசுவதும் பிரதமர் மோடியை இழிவாகப் பேசுவதும் ஒன்றுதான் என்று ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி, அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே உரசல் வலுத்துக் கொண்டே இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக மாறி மாறி பல்வேறு கருத்துக்களை இரு தரப்பிலும் வைத்துக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் தேசிய […]
சிமெண்ட் மூட்டை விலையை கட்டுப்படுத்த கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சிமெண்ட் மூட்டைகளின் விலை அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் ஒரு சிமெண்ட் விலையை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட சிமெண்ட் மூட்டை விலை 70 ரூபாய் அதிகமாக உள்ளது என குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. […]
மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் இல்லை என்றாலும் அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியதால் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் வேலை இழந்து பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மாற்று சான்றிதழை வழங்க தனியார் […]
தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு இருக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு அம்சங்களில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்டத்திற்க்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கும். மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. திரையரங்குகள் நீச்சல் குளங்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை நீக்கப்படுகிறது. விளையாட்டு […]
பொது முடக்கம் நீட்டிக்கப்படுவது தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் சில தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொது முடக்கம் என்பது நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தளர்வுகளை பொறுத்தவரை பார்த்தோமென்றால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்கிறது. அதனை ரத்து செய்வதற்கு தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அதேபோல பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பான ஒரு […]
நாடு முழுவதும் மாநில அரசுக்களின் சுழலுக்கு ஏற்ப பேருந்துக்குள் இயக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாளையோடு பொது முடக்க மூன்றாம் கட்ட தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய அரசு நேற்று நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதில் மெட்ரோ சேவைக்கு அனுமதி, திறந்தவெளி திரையரங்கிற்கு அனுமதி, மாநிலத்திற்குள்ளும், மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும் அனுமதி, இ- பெர்மிட் ரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோல் பேருந்து போக்குவரத்து , […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார். பொது ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தின் இயல்பு நிலை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வரும் 31ம் தேதியுடன் பொது முடக்க முடியும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடை சிறிது நேரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை […]
தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு மார்ச் 25 முதல் பிறப்பிக்கப்பட்டது. இருந்து கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மூன்றாம் கட்ட தளர்வு நாடு முழுவதும் அமலில் இருந்து வருகின்றது. நாளை மறுநாள் 31 ஆம் தேதியோடு மூன்றாம் […]
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்தான உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட அளவிலான தடுப்பு பணிகள் குறித்தும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார். அதுமட்டுமல்லாமல் முதல்வர் மாவட்ட ஆட்சியர் சில உத்தரவு பிறப்பித்தார். தமிழகம் முழுவதும் உள்ள முதியோர், இணைநோய் […]
தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் கருத்தால் அதிமுக பலவீனமடைந்ததாக கூற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” அதிமுகவுடன் தற்போது கூட்டணியில் இருந்து வருகிறோம், ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இனி ‘கிங்’காகத்தான் இருக்க வேண்டும். தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் தொண்டர்களின் விருப்பம்” என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் […]
மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அம்மா அவர்களின் உறுதியாகும் என முதல்வர் தெரிவித்தார். தனியார் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது மாண்புமிகு அம்மா அவர்களின் உறுதியாகும். இதன்படி சிவகங்கை, திருவண்ணாமலை ,சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகம், புதுக்கோட்டை மற்றும் கரூர் அரசு மருத்துவமனை கல்லூரிகளில் அணைத்து மருத்துவப்படிப்பு திட்டம் […]
தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது என்று முதல்வர் கூறினார். நேற்று நடந்த தனியார் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் காணொளியில் பேசுகையில்….. அம்மாவின் ஆட்சியில் 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவப்பட்டன. மேலும் 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி, ஸ்கேன் போன்ற வசதிகளுடன் நிலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதனையடுத்து மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 12,823 மருத்துவர்கள், 14,588 செவிலியர்கள் உள்பட 32,660பணியாளர் […]
நாட்டிலேயே முதன்முறையாக கைகள் மாற்று அறுவை சிகிச்சையானது ஸ்டான்லி மருத்துவமனையில் செய்யப்பட்டது என்று முதல்வர் தெரிவித்தார். தனியார் மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காணொளி மூலம் கலந்து கொண்டு ,சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அதில், அம்மா உதவித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 18,000 ரூபாய் நிதி உதவி தொகையாக வழங்கி வருகின்றோம். இந்தியாவிலேயே மிக அதிக அளவாக தமிழகத்தில் மட்டுமே 99.9% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெற்று வருவது இந்த […]
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது தொடர்பான முடிவு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் தன்மையை பொறுத்து மாநில அரசு தளர்வுகளை பிறப்பித்துக்கொள்ளலாம், இ-பாஸ் குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு வழிகாட்டல்களை வழங்கி இருந்தது. குறிப்பாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் பொது முடக்கத்தை அறிவித்தபோது மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்லும் இ- பாஸ் முறையை ரத்து […]
இந்த வருடம் நீட் தேர்வு குறித்து சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் அதிமுக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது மிகவும் கடினம் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 76வது பிறந்தநாளை ஒட்டி திருப்பூர் ராயபுரம் பகுதியில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”நீட் தேர்வு பயம் காரணமாக கோவையில் நேற்று மாணவி […]
அதிமுகவில் மனமகிழ்ச்சியுடன் இருக்கிறேன் மனம் திறந்து கூறியுள்ளார் முன்னாள் எம்பி மைத்ரேயன். சென்ற இரண்டு தினங்களாக அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் சேர போவதாக தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக அவரிடம் கேட்ட பொழுது யாரோ ஒருவர் இதுபோன்ற தவறான செய்தியை பரப்புவதற்கு நான் பதில் சொல்ல முடியாது என கூறினார். அதேபோல தற்போது அதிமுகவில் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் எனக் கூறிய அவர் முன்பு இருந்த மனவருத்தங்கள் இப்பொழுது இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற […]
சமீபத்தில் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக ஆக மாற்ற வேண்டும் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார், அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்திருந்தனர். இதேபோல அமைச்சர் பாண்டியராஜனும் மதுரையை இரண்டாவது தலைநகராக வேண்டும் என்று தென் மாவட்ட அமைச்சர்கள் கருது தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் பரிசீலனை செய்வார் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தற்போது திருச்சியை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார். முதல்வர், துணை முதல்வரிடம் மன்றாடி திருச்சி […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு கொடுத்த அறிக்கையின்படி ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 39 நாட்கள் நடைபெற்ற இந்த வழக்கின் […]