சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சென்னை வடக்கு மண்டல கொரோனா தடுப்பு அதிகாரியாக கபில் குமார் சி சரத்கர். சென்னை கிழக்கு மண்டலத்திற்கு பவானீஸ்வரி ஐபிஎஸ், சென்னை தெற்கு மண்டலத்திற்கு பாஸ்கரன் ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளார்கள். சென்னை மேற்கு மண்டலதிற்கு சிறப்பு அதிகாரியாக கணேசமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கொரோனா சிறப்பு அதிகாரியாக உதயச்சந்திரன் ஐஏஎஸ், அன்பு […]
Tag: அதிமுக
கொரோனாவால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. குறிப்பாக அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில் பல்வேறு முடிவுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசு கூட நிதி சிக்கலை குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் […]
அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியாவார் என்ற தகவல் சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் சிறையில் இருந்து விடுதலையாகும் பட்சத்தில் தமிழக அரசில் பல்வேறு மாற்றம் ஏற்படும் என்றும், அவர் மீண்டும் கட்சியில் இடம் பெறுவார் என்றும், ஆட்சியை வழி நடத்துவார் என்றும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த வகையில் இது குறித்த கேள்வி இன்று அமைச்சர் […]
கொரோனா கால ஊரடங்கால் தமிழகம் முழுவதும் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பும், விமர்சனமும் ஒருசேர எழுந்தன. இதில் இருக்கும் குறைபாடுகள் குறித்து அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்கையில், டிவி மூலம் பாடம் கற்பிக்கும் திட்டத்தை தொடங்கும் முன்பே குறை கூறினால் எப்படி ? ஏற்கனவே 5 சேனல்கள் ஒப்புதல் தந்த நிலையில் […]
அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மூன்றாவது அமைச்சராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கேபி அன்பழகனுக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தற்போது மூன்றாவது அமைச்சராக செல்லூர் ராஜூக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி […]
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிரிமிலேயர் பிரிவினரைக் கணக்கெடுப்பதற்கான ஒரு கூறாக சம்பளத்தை சேர்க்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் பொருளாதார அளவுகோல் என்பது இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயரில் வகைப்படுத்துவதற்கான வருவாய் வரம்புக்குள் அவர்களது சம்பளத்தை சேர்ப்பது என்பது இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்ந்து சந்தித்து வரும் […]
கிரிமிலேயர் வரம்பு கணக்கீட்டில் சம்பளத்தில் கிடைக்கும் வருவாயை கணக்கில் கொள்ளும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கல்வி, வேலைவாய்ப்பில் ஒபிசி பிரிவினருக்கு கிரிமிலேயர் பிரிவில் புதிய திருத்தம் கொண்டு வருவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஓபிசி பிரிவில் கிரிமிலேயர் வகைப்படுத்த வருவாய் பிரிவில் ஊதியத்தை சேர்க்கக்கூடாது என்று கூறியுள்ள அவர், விவசாயம் மற்றும் ஊதிய மூலம் பெறப்படும் வருவாயைக் […]
சவாலை ஏற்காமல் தரம்தாழ்ந்த வகையில் மற்றவர் மூலமாக அறிக்கை வெளியிடுவதை மு க ஸ்டாலின் தவிர்ப்பது நல்லது என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தம் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகளை அவர் நிரூபிக்க தயாரா என்று கேள்வி எழுப்பி இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். சவாலுக்கு உரிய பதில் சொல்ல முடியாத ஸ்டாலின் நேருவை வைத்து தரம் தாழ்ந்த விதத்தில் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மத்திய அரசினுடைய வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் ஒப்பிசி பிரிவினர் பெற்று வருகின்றன. இந்த நிலையில் அவர்களில் இருக்கக்கூடிய பிரிவில் கிரீமி லேயர் என்ற ஒரு பிரிவினை தனித்தனியாக பிரித்து, அவர்களுக்கு வேறு விதமான ஊதியத்தினை வழங்கக்கூடிய வகையில் ஒரு திருத்தத்தினை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டத்தை தொடர்ச்சியாக அமல்படுத்த […]
மின் கட்டணத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மின் கட்டணம் நிர்ணயிப்பதில் முறைகேடு இருக்கின்றது. நான்கு மாதத்திற்கு சேர்த்து கட்டணம் நிர்ணயம் என்று வசூலிக்க்கும் வகையில் இது அமைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்க வேண்டும். ஊடகங்களுக்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்கும் பொதுமக்களுக்கு மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால், அதனை செலுத்துவதற்கு […]
சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் என 5 பேரை கைது செய்து, மதுரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இன்று 5 காவலர்களை கைது செய்துள்ளனர். அதேபோல் தந்தையையும், மகனையும் அடித்து சித்திரவதை செய்ததில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள பிரண்ட்ஸ் ஆப் […]
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு உச்சந்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றது. ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுகவின் சக்கரபாணி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இதில் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சபாநாயகர் முடிவில் […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு ரத்து உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். அதே போல மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்திருக்கிறார். தமிழகத்தில் நீட்தேர்வு நடத்தினால் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் எடுத்துரைத்துள்ள முக.ஸ்டாலின் இடஒதுக்கீடு ரத்தால் சமூகநீதி எந்த அளவுக்கு […]
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் பிரமுகர்களுக்கு கொரோனா உறுதியாகி வருகின்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. […]
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியும், திமுக தலைமையிலான கூட்டணியும் எலியும், பூனையுமாக தேர்தலை சந்தித்தன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றதையடுத்து, தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக திமுக கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்றெல்லாம் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணி கட்சியோ அல்லது திமுகவோ அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சொன்னாள் அதிமுக கண்டு கொள்ளாமல் இருந்தது. […]
தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள நான்கு படங்களுக்கு மாற்றாக புதிதாக மூன்று முதன்மை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம் அல்லது பொறியியல் என ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு இனி பழைய நடைமுறையே […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் பிரிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை நாடெங்கிலும் பெருவாரியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தடைவிதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், அத்தடை தற்காலிகமானதாகவும், அவ்வுத்தரவு வாய்மொழியாகவும் இருப்பது பல்வேறு ஐயங்களுக்கு வித்திடுகிறது. தமிழகக் காவல்துறையினரின் உதவிகளுக்குக் கூடுதலான ஆட்கள் தேவைப்படுகிறார்களென்றால், அதற்குக் கூடுதல் காவலர்களை நியமிக்கச்செய்வது அல்லது […]
தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள நான்கு படங்களுக்கு மாற்றாக புதிதாக மூன்று முதன்மை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம் அல்லது பொறியியல் என ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு இனி பழைய நடைமுறையே […]
தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள நான்கு படங்களுக்கு மாற்றாக புதிதாக மூன்று முதன்மை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம் அல்லது பொறியியல் என ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு இனி பழைய நடைமுறையே […]
தமிழக அரசுக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருவது தமிழக அரசை கவலை அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பதினோராம் வகுப்பு காண நான்கு முதன்மை பாடங்கள் 3 ஆக குறைக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்கனவே கடந்த ஆண்டு அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். வேலை கனவு சிதைக்கப்படும் என்றலெல்லாம் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டதில், […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், அரியலூர் மாவட்ட #மருத்துவக்கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது.தொகுதியின் #மக்கள்பிரதிநிதி(MP)என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப் படவில்லை. இந்தஅரசியல் அணுகுமுறை #ஞாயம்தானா? முதல்வரின் பார்வைக்கு என்று பதிவிட்டுள்ளார். அரியலூர் மாவட்ட #மருத்துவக்கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது.தொகுதியின் #மக்கள்பிரதிநிதி(MP)என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப் படவில்லை. இந்தஅரசியல் அணுகுமுறை #ஞாயம்தானா? முதல்வரின் பார்வைக்கு..@CMOTamilNadu @Vijayabaskarofl — Thol. […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புள்ளி விவரங்களை வெளியீட்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாக்ஸர், இந்தியாவிலேயே 20,000 biovaccine கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 10,000 வீரியம் மிக்க தடுப்பு மருந்துகளை நம் தமிழ்நாட்டு அரசு பெற்றுள்ளது.பெரிய அரசு மருத்துவமனைகளுக்கு மட்டும் இல்லாமல் கடைக்கோடியில் இருக்கக்கூடிய அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் இந்த தடுப்பு மருந்தானது கிடைக்கப்பெற்றுள்ளது . ஆண்டிபயாடிக் ,ரத்தம் உரைத்தலுக்கான தடுப்பு மருந்து,உயிர் காக்கும் தடுப்பு மருந்துகள் ஆகியவற்றை நமது முதலமைச்சர் அவர்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பதை உறுதி செய்ய ஆணைகள் […]
தமிழகத்தில் இதுவரை 56,021பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசும் போது, இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 3095 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதித்த 56,021 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 57 % குணமடைந்தோர் வீதம் உள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய மருத்துவமனை உருவாக்கம். சிடி ஸ்கேன், மொபைல் எக்ஸ்ரே […]
தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலின் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின்னர் அவர்களை வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞரிடம் 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். கிராமப்புறத்தில் இருந்தும், ஏழ்மையான குடும்பத்திலிருந்து சட்டப் படிப்பு படித்த மாணவர்கள் சட்டப்படிப்பை […]
கொரோனா காரணமாக மூன்று மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் தொடர்ந்த வழக்கு தற்போது விசரணைக்கு வந்த போது, மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் ஊரடங்கு அமல் இருக்கின்ற காலத்தில் வாடகை வசூலிக்க வேண்டாமென்று அறிவித்திருந்தது. தமிழக அரசு இதற்கான ஒரு அரசு ஆணை பிறப்பிக்க […]
சாத்தான்குளம் கைதுகள், கடமை இப்போது தான் தொடங்குகின்றது என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிக்கிக்கொண்ட தமிழக அரசு: சாத்தான்குளம் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் காப்பாற்ற தமிழக அரசு எடுத்த முயற்சிகள் தவிடு பொடியாக்கபட்டு படுகொலை செய்தவர்கள் நீதிமன்றத்தின் தலையிட்டால் சட்டத்தின் முன்பு வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன். குடும்பத்தின் கண்ணீர், மக்கள் போராட்டம், கடையடைப்பு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கோரிக்கை, நீதிமன்றம், ஊடகம் என அனைத்து தரப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டு அதிமுக அரசு சிக்கிக்கொண்டது. […]
உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கு கொரோனா செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது. கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இன்று காலை பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இருந்தது. இந்த நிலையில் தற்போது உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே […]
சாத்தான்குளம் இரட்டை கொலையில் சாட்சியமளித்த பெண் காவலருக்கு வீட்டுக்கு பிபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை – மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர் ரேவதி அங்கு என்ன நடந்தது ? என்று அவர் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார். அதே போல அவரின் கணவர் செய்தியாளர்களிடம் கூறும் போது கூட நடந்தவை பற்றி தானும், தன்னுடைய மனைவியும் எங்கே வேண்டுமானாலும் வந்து சொல்கின்றோம். தங்களுக்கு உரிய […]
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இவருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் உதவியாளருக்கு கொரோனா கண்டறியப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. தமிழகம் முழுதும் ஒட்டுமொத்தமாக 94 ஆயிரத்தை கடந்து இருக்கிறது […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். சாத்தான்குளம் இரட்டை கொலை தொடர்பாக சிபிசிஐடி மிகவும் துரிதமாக விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள், இரண்டு காவலர்கள் என 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு திருநெல்வேலி நோக்கி பயணித்த ஸ்ரீதர் கயத்தாறு சோதனைச்சாவடியில் வாகனத்தை […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் அடைந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் தீவிரமாக விசாரித்தது வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்நிலையத்தில் சித்தரவதை செய்யப்பட்டு மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவதாக கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து தொடர்புடைய காவலர்களை சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கையை முடுக்கி […]
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசிய போது, 2013ல் நடந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி தருவதைப் பற்றி ஆய்வு செய்த பிறகே முடிவு எடுக்கப்படும். தற்போதைய சூழலில் 7200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். தகுதி தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசு ஆய்வு நடத்தி தான் முடிவு எடுக்குமா ? அதுவும் 7200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளார்கள் என்றால் தேர்வில் வெற்றி […]
சாத்தான்குளம் தந்தை – மகன் சித்தரவதை மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பூதாகரமாக மாறியது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதித்துறை நடுவர் பாரதிதாசனை விசாரணை அறிக்கை அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. பாரதிதாசன் அளித்த விசாரணை அறிக்கையில் […]
தந்தை மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அதிரடியாக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது. சாத்தான்குளம் தந்தை – மகன் உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று சாத்தான்குளத்தில் கடைகள், வணிகர்கள், பென்னிக்ஸ் நண்பர்கள் என எல்லோரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.நேற்று மாலை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ்ஷிடம் 5 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்ற பின்பு அவர் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தன்குளத்தில் தந்தை – மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் சிபிசிஐடி காவல்துறை கிடுபிடி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை நேற்று சிபிசிஐடி காவல்துறையினர் எடுத்துக்கொண்டதில் இருந்து விசாரணையில் அதிவேக நடவடிக்கையாக பல்வேறு விஷயங்கள் நடைபெற்றன.பல்வேறு இடங்களுக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்பானவர்களிடம் விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகு கணேஷ் 15 நாள் சிறையிலடைக்கப்பட்டார். சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை செய்யப்பட்டு மரணம் அடைந்தது தொடர்பாக 4 காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் நேற்று காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சிபிசிஐடியிடம் ஆஜராகினார். அப்போது அவரிடம் விசாரணை நடைபெற்றது. இதில் அவரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்தனர். இதன்படி தூத்துக்குடி நீதிமன்றத்தின் […]
சாத்தான்குளம் சித்ரவதை மரணம் தொடர்பாக தலைமறைவாக இருந்த காவலர் முருகனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் சித்ரவதை வழக்கில் தலைமறைவாக இருந்த காவலர் முத்துராஜ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு காவலர்களும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். 4 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் உதவி ஆய்வாளர் நேற்று நள்ளிரவு உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் […]
சாத்தான்குளம் தந்தை – மகன் சித்ரவதை மரணம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய மற்றொரு எஸ்.ஐ, தலைமை காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 4 காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டு நிலையில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் நள்ளிரவு முதல் நடத்திய சோதனையில் […]
சாத்தான்குளம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்டதில் இருந்து மிக விரைவாக விசாரணை, உடனடியாக கைது நடவடிக்கை என்பது நிகழ்ந்திருக்கின்றது. இவ்வளவு நடவடிக்கைகளுக்கு சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்ட நேரங்களும் மிகவும் குறைவு. குறிப்பாக நேற்று மாலை பெற்றுக்கொண்ட ஆவணங்களின்படி இன்று காலை முதலே விசாரணை தொடங்கியது. அதன் அடிப்படையில் இன்று பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே மாஜிஸ்ட்ரேட் […]
சாத்தான்குளம் மரணம் தொடர்ப்பாக சிபிசிஐடி ஐ,ஜி சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி விஜயகுமார் ஆய்வு செய்து வருகின்றனர். சாத்தன்குளத்தில் காவல்துறையினரின் சித்ரவதையால் தந்தை-மகன் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளத்தில் முகாமிட்டு காவல் நிலையம், மருத்துவமனை, ஜெயராஜ் வீடு ஆகிய பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஆய்வு […]
சாத்தான்குளம் சம்பவத்தில் நடிகர் ரஜினிகாந்த முக.ஸ்டாலினுடன் இணைந்துள்ளது அதிமுகவினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் அங்குள்ள காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, போலீஸ் அதிகாரிகளால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அடுத்தடுத்து அவர்கள் மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழகம் முழுதும் பூதாகரமாக வெடித்தது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் விசாரித்து அறிக்கை அளிக்கும் படி […]
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு எப்போது செய்யப்படும் என்ற கேள்விக்கு சிபிசிஐடி ஐ.ஜி பதில் அளித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்று காலை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் சாத்தான்குளம் விரைந்து தொடர்ந்து விசாரித்து வருகிறார். முன்னதாக நேற்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வந்தபோது இந்த வழக்கினை விசாரித்த மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பட்டியலிட்டு அடுக்கியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசும் போது, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், அவர் கொடுக்கின்ற அறிவுரைகள், ஆலோசனைகள் எல்லாம் இன்று அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்கின்ற ஒரு அபாண்டமான பழியை சுமத்தி இருக்கின்றார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உலகளாவிய கருத்துக்களை அனுபவங்களை சேகரித்து, மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் சில வழிகாட்டல்கள், நம்முடைய வல்லுனர்கள் குழு கொடுக்கின்ற வழிகாட்டல்கள், […]
தமிழக முதல்வர் கொரோனா அச்சுறுத்தலை சமாளித்து மக்களை காக்கின்றன பணியிலே இரவு, பகல் பாராது சுழன்று பணியாற்றுகின்றார் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். உலகெங்கும் இதுவரை வரலாறு காணாத வகையில், மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தல், மனிதகுலத்திற்கு விடப்பட்ட ஒரு சவாலாக, இதுவரை இந்த உலகமக்கள் கண்டிராத, உயிருக்கு ஏற்பட்டு இருக்கிற ஒரு அபாயகரமான அச்சுறுத்தலாக கொரோனா வைரஸ் தொற்று பார்க்கப்படுகின்றது, இது பல்வேறு நாடுகளில் பல்வேறு வகையான அச்சுறுத்தல்களையும், சவால்களையும் ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகளில் […]
சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளராக ராமநாதனை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வியாபாரம் செய்து வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணம் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சாத்தான்குளத்தில் புதிய டிஎஸ்பி ஆக ராமநாதனை நியமனம் செய்து […]
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் பச்சைப்படுகொலை செய்த மூன்று காவலர்களையும் கொலைவழக்கில் கைதுசெய்ய வேண்டுமென நாடே ஒற்றைக்குரலில் ஓங்கி ஒலிக்கும் போதும், இன்னும் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவுசெய்யாதிருந்து அத்தனை பேரின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்துவது ஏன்? ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்வதும் எதிர்ப்பு வலுத்தால் பணியிடைநீக்கம் செய்வதையே அதிகபட்சமான சட்டநடவடிக்கை என்பதைப் போல சித்தரித்து அக்கொலையாளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு துணைபோவதன் பின்னணி என்ன? பாதிக்கப்பட்டக் குடும்பத்தைவிட கொன்றொழித்த கொலையாளிகள் மீது முதல்வருக்கு அதீத இரக்கம் இருப்பது […]
ஜெயராஜ் பெண்ணிஸ் மரண வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும். கொலை வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை உடனே கைது செய்ய வேண்டும். இரட்டை கொலையை மறைக்க துணை போன அனைவரையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும். ஜெயராஜ், பென்னிக்ஸ்ஷை விடிய விடிய லத்தியால் அடித்து துன்புறுத்துவதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் இரட்டைக்கொலை முதலமைச்சராக நீடிக்க தகுதி இழந்த பழனிச்சாமி என்ற தலைப்பில் திமுக திமுக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்றில் முதல்முறையாக வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் காவல்துறை மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு காவல் நிலையத்தை கூட நிர்வகிக்க முடியாமல் உண்மையை மறைத்த முதல்வர் பழனிச்சாமி முதலமைச்சர் பதவியில் நீடிக்கும் தார்மீக […]
சாத்தான்குளம் இரட்டைக்கொலை முதலமைச்சராக நீடிக்க தகுதி இழந்த பழனிச்சாமி என்ற தலைப்பில் திமுக திமுக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு சென்ற நீதிபதி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அளித்த அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. கூடுதல் டிஎஸ்பி மிரட்டும் பார்வையுடன், உடல் அசைவுடன் நின்றார். காவல் நிலைய பொது நாட்குறிப்பில் மற்றும் இதர பதிவேடுகளை சமர்ப்பிக்கவில்லை. சிசிடிவி பதிவுகள் தினம்தோறும் அழிந்து போகும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சம்பவ தினத்தின் காணொளி பதிவுகள் அழிக்கப்பட்டிருந்தன. காவலர்கள் கிண்டல் செய்ததால் […]
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் மேலும் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கின் ஆவணங்கள் அனைத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்காக நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிக முக்கியமான தகவல்கள் இந்த ஆதாரங்கள் இருக்கும் என சொல்லப்படுகின்றது. இந்த வழக்கின் மிக முக்கிய சாட்சியாக இருக்க கூடியது பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கிடைத்துள்ளது. […]