தமிழகத்தில் மீண்டும் சுழற்சிமுறை வகுப்புகளை நடத்துவதற்கு அதிகாரிகள் ஆலோசித்ததாக தகவல் கிடைத்துள்ளது. சென்னை ஐஐடி கல்வி நிறுவனங்களில், ஏற்கனவே மாணவர் உட்பட 12 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 12 பேரில் நான்கு பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை, எட்டு பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டும் இருந்தது. இதையடுத்து ஐஐடி வளாகத்தில் பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு முறையைக் கண்டுபிடிக்கவும் மருத்துவ […]
Tag: அதிர்ச்சி
சென்னையில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் வாடகை கார் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்றும் சுமார் 10% முதல் 15% வரை விலை ஏற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊபர் நிறுவன அதிகாரி சென்னையில் 10 சதவீதம் வரை வாடகை ஏற்றுவது நடைமுறைக்கு வர உள்ளது என கூறியுள்ளார். மறுபுறம் சென்னையில் ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்களுக்கு […]
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் ஒவ்வொரு மாநில அரசும் இதனை சரிக்கட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 100-ல் மிகவும் குறைவான அளவில் நிலக்கரி கையிருப்பு உள்ளது. அதனால் குஜராத், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் மின்சாரம்,நிலக்கரி மற்றும் ரயில்வே ஆகிய மூன்று துறைகளுக்கு இடையே […]
தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவுஊழியர்கள் நல சங்கத்தின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் குறிப்பாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் 7,850 அகவிலைப்படி வீட்டு வாடகைப்படி இணைத்து குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் வயதான ஊழியர்கள் என்பதால் மருந்து மாத்திரை வாங்கி மருத்துவ படியாக 300 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பண்டிகை முன்பணம் நான்காயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது […]
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி தனது நிறுவன தயாரிப்பு கார்களின் அனைத்து மாடல்களின் விலையை அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி விளங்குகிறது. அது தற்போது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. அந்த விலை உயர்வும் ஆர்டர்களைப் பொறுத்து 0.9% முதல் 1.9% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இரும்பு உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே […]
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரு சவரனுக்கு ரூ.264 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 33 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,047- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.40,476- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.75.20- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்தியாவசிய […]
கேரள மாநிலம் கோட்டயம் பாம்பாடி பகுதியில் சரத் மற்றும் சுனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாதவ்(12) என்ற மகன் உள்ளார். ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை 4 மணி அளவில் மாணவர் பாட்டி வீட்டிற்குச் செல்ல பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். இதற்கு பெற்றோர் அனுமதி கொடுக்கவில்லை. அதனால் கோபமடைந்த சிறுவன் சமையலறைக்குச் சென்று மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் […]
‘காதல்’ சுகுமார் நடித்துள்ள ‘தொடாதே’ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசிய போது, உண்மையில் சிறிய முதலீட்டில் எடுத்து பிறகு பெரிதாக வெற்றி பெறும் படங்கள் தான் பெரிய படம். பெரிய முதலீட்டில் எடுத்து தோல்வியடையும் படங்கள் சிறிய படம் தான். பல கோடி ரூபாய் செலவு செய்து படம் தயாரிக்கிறார்கள். ஆனால் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுத்த படம், 30 கோடி ரூபாய் தான் வசூல் செய்கிறது. இருந்தாலும் […]
சென்னையில் இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,112-ஐ தாண்டியது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை தற்பொழுது எதிர்பாராத வகையில் மீண்டும் திடீரென தாறுமாறாக அதிகரித்துள்ளது.இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.5,014க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,112க்கு விற்பனை ஆகிறது.ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி […]
15வது சீசன் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ள காரணத்தால் சிஎஸ்கே விளையாடிய 5 போட்டிகளிலும் களம் இறங்காமல் இருந்த நிலையில், தொடரில் இருந்து முழுமையாக விலகியதால் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா, குல்கர்னி ஆகியோர் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்த ஐந்து ஐபிஎல் ஆட்டங்களில் சிஎஸ்கே […]
நடப்பாண்டு தமிழகத்தில் 7அதிதீவிர புயல்கள் உருவாகி கன மழை பெய்து வெள்ளத்தில் மிதக்கும் என்ற ராமேஸ்வரம் கோவில் பஞ்சாங்கம் வாசிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டான நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இணை ஆணையர் பழனிகுமார் முன்னிலையில் கோவில் குருக்கள் உதயகுமார் மற்றும் ஆற்காடு சீதாராமய்யர் எழுதிய பஞ்சாங்கத்தை வாசித்தனர். அதில், வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் வரை 19 புயல் சின்னங்கள் உருவாகி அதில் ஏழு அதி தீவிர புயலாக வீசும். இதனால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், […]
மின் தேவை தற்போது அதிகரித்து வருவதால் நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாலும் கோடைகாலங்களில் மின் தடைகள் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் நிலக்கரி மிகவும் முக்கியமான படிமமாக எரி பொருளாக உள்ளது. இந்தியாவின் ஒட்டு மொத்த மின்சார உற்பத்தியில் அனல் மின் சக்தியின் பங்கு 75 சதவீதமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் முதன்மையான எரிசக்தி நுகர்வு 7 சதவீதமாக அதிகரித்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் கோடை காலத்திற்கு முந்தைய […]
மஹிந்திரா நிறுவனம் அனைத்து எஸ்யூவி கார்களுக்கும் 2.5% விலையை உயர்த்து வதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. அதன்படி 10,000 முதல் 63 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் இரும்பு, அலுமினியம், பலேடிஎம் ஆகியவற்றின் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோட்வாலி என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக அந்தப் பெண் பதிலளித்துள்ளார். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணை சோதனையிட்டனர். அப்போது அந்த பெண் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டில் கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருப்பதை கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து துப்பாக்கி […]
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.40,000-ஐ தாண்டியது. கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருக்கும் தங்கத்தின் விலை தற்பொழுது எதிர்பாராத வகையில் திடீரென தாறுமாறாக அதிகரித்துள்ளது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.5006க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,048க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]
பல்லி வகையைச் சேர்ந்த உடும்பை பாலியல் வன்புணர்வு செய்த புகாரின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் கோதேன் என்ற கிராமத்தின் புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது. அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக மூன்று இளைஞர்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை அழைத்து வனத்துறையினர் விசாரணை செய்ததில், அவர்கள் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேட்டைக்காரர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த செல்போன்களை வாங்கி வனத்துறையினர் சோதித்தனர். அப்போது சில வாரங்களுக்கு முன்பு இந்த வனப் […]
தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு, நாளை புனித வெள்ளி மற்றும் ஏப்ரல் 16, 17ஆகிய நாட்கள் என மொத்தம் தமிழகம் முழுவதும் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையிலிருந்து மதுரை செல்ல 5 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.9,800- க்கு மேல், திருச்சிக்கு […]
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் நீர் மட்ட உயர்வால் இன்னும் ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் 40 சதவீதம் கடற்கரைகள் மட்டுமே உறுதியாக இருக்கும் என்று மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் கடல்களின் நீர் மட்டம் உயர்ந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக மேற்கு கடற்கரையில் 34 சதவீதமும், மேற்கு வங்கக் கடற்கரையில் 60.5 சதவீதமும் கடல் நீரால் அரிக்கப்படலாம்.நீர்மட்டம் அதிகரிப்பது குறையவில்லை என்றால் உண்மை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் 2030ஆம் ஆண்டுக்குள் […]
டாக்ஸி கட்டணத்தை 12 சதவீதம் உயர்த்தி உள்ளதாக ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் தான் இந்த விலை உயர்வு அமல் படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு முதற்கட்டமாக டெல்லியில் அமலுக்கு வந்துள்ளது. உண்மையில் இதற்கு முன்பே 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களில் கட்டணம் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைப்போலவே ஓலா டேக்ஸி நிறுவனமும் விரைவில் தனது […]
பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்துவதற்கு ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் குறைந்தபட்சம் 79,000 ஆகவும், அதிகபட்சம் 1.89 லட்சமாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சம் 1.41 லட்சம் ஆகவும், அதிகபட்சம் 3.03 லட்சமாகவும் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக பார்சல் நிறுவனங்கள் பார்சல் சேவை கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி சேலம் -சென்னை 10 கிலோ பார்சலுக்கு கட்டடம் 150 ரூபாயிலிருந்து 170 ரூபாயாகவும், குமரி -சென்னை கட்டணம் 240 ரூபாயிலிருந்து 280 ரூபாயாகவும், […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக சென்னை காசிமேடு உட்பட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்லும் விசைப் படகுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது மீன்களின் விலை 50 ரூபாய் முதல் 100 ரூபாய் […]
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நொச்சியூர் என்ற பகுதியில் ரேஷன் கடையில் கடந்த புதன்கிழமை அரிசி மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷனில் வழங்கப்பட்ட சமையல் எண்ணையில் உணவு சமைத்து சாப்பிட்ட ஒரு பெண் உட்பட 3 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரேஷன் கடையில் வழங்கப்பட்ட சமையல் எண்ணெய் குறித்து பரிசோதிக்கப்பட்டது. அதில் கடந்த டிசம்பரில் காலாவதியான சமையல் எண்ணெயை வழங்கியதால் […]
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிஜி (38) மற்றும் சிவதாசன் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மனைவியை காணவில்லை என்று சிவதாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிவதாசன் மனைவியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் போலீசாருக்கு கொயிலாண்டி ரயில் நிலையம் அருகே பெண் மற்றும் ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில் உயிரிழந்தது காணாமல் […]
இந்தியாவில் அதிகம் விற்கப்படும் முதன்மையான ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவாவும் ஒன்று. இந்த நிலையில் ஆக்டிவா 125 மற்றும் ஆக்டிவா 6 ஜி ஆகிய ஸ்கூட்டர் களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் களின் விலை ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஆக்டிவா 6ஜி ஸ்டாண்டர்ட் ஸ்கூட்டர் ரூ.70,599-லிருந்து ரூ.71,432-ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆக்டிவா 6ஜி டீலக்ஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.72,345-ல் இருந்து ரூ.73,177-ஆக விலை உயர்ந்துள்ளது. ஆக்டிவா 125 டிரம் ஸ்கூட்டர் விலை ரூ.74,157-ல் […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 43 நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. போரை கைவிட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்தநிலையில் உக்ரைன் -ரஷ்யா போர் சூழலால் சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. சமையலுக்கு பயன்படுத்த கூடிய சூரியகாந்தி எண்ணெய் உக்ரைன் நாடு அதிக அளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது. அந்நாட்டில் இருந்து இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல் மூலம் சூரியகாந்தி எண்ணெய் வினியோகிக்கப்படுகிறது. உக்ரைன் மற்றும் […]
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணம் செலுத்த மே 7 கடைசி நாளாகும். தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேர்வு வாரியத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்களில் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் […]
தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மாதம் ஒருமுறை சமையல் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் காய்கறி விலை மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்வு பேர் அதிர்ச்சியை தந்துள்ளது. தங்கம் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து டீ மற்றும் காபி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்ந்தது. அதனால் சாமானிய மக்களின் அன்றாட செலவுகள் அதிகரித்து […]
பாஜகவின் 42 வது நிறுவன தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பாக சென்னை தியாகராய நகரில் நேற்று 2 இடங்களில் பாஜக நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்துகொண்டார். அப்போது வடக்கு போக் சாலை நரசிம்மன் தெருவில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் கொடியை தலைகீழாக ஏற்றிய வைத்துவிட்டார். கொடியை ஏற்றும்போது கொடியை […]
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் கதை கசிந்துள்ள செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த படம் பீஸ்ட். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வருகிற 13-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் இந்தி டிரைலர் வெளியானது. இந்தி […]
நாடு முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றது. அதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சிஎன்ஜி விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சிஎன்சி என்பது வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயு. இந்நிலையில் நேற்று முதல் சிஎன்ஜி கேஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் இதன் விலை கிலோவுக்கு 2.5 ரூபாய் உயர்த்தப்பட்டு 64.11 ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லியில் நேற்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இதன் விலை உயர்வால் ஆட்டோ […]
இனி புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு வரிச் சலுகை எதுவும் கிடையாது. 2021 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டம் 80EEA- இன் கீழ் வீடு வாங்குவோருக்கான வரிச்சலுகை நீட்டிக்கப்பட்டது. அதன்படி 2022 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வீடு வாங்குவோர் தங்களது வீட்டுக் கடனில் 1.50 லட்சம் வரையில் வரிச் சலுகை பெற முடிந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் நீட்டிப்பு குறித்த எந்த […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் லாரிகள் வாடகை கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதன் எதிரொலியாக சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாக சென்னை காசிமேடு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறைந்த அளவு படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதனால் மீன் விற்பனையில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் […]
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானின் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய முக்கிய சாட்சியான பிரபாகர் சைல் நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். கடந்த ஆண்டு கோவாவின் கப்பலில் மும்பை போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அதில் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் ஷாருக்கானின் மகன் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய […]
தற்போது கோடைக்காலம் தொடங்கி விட்டதால் சுற்றுலா செல்வதற்கு பலரும் தயாராகி வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுற்றுலா செல்வதற்கு பல்வேறு இடங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு புது தடை ஒன்று தடாலென தலையில் விழுந்துள்ளது. அது என்னவென்றால் இன்று முதல் (ஏப்ரல் 1) டோல்கேட் கட்டணத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி டோல்கேட் கட்டணத்தை பத்து ரூபாய் முதல் […]
ஹிந்துஸ்தான் யுனிவர்சல் லிமிடெட் நிறுவனம் குளியல் சோப், துணி துவைப்பதற்கு சோப் உள்ளிட்ட சோப்புகளின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி Lux, surf Excel, vim, bar, Rin ஆகியவற்றின் விலை உயர்கிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் டவ் மற்றும் லைஃப்பாய் சோப்புகளின் விலையை உயர்த்திய நிலையில் இந்த மாதம் ப்ரூ காபி விலையை 7 சதவீதம் உயர்த்தியது. இதுமட்டுமல்லாமல் பேஸ்வாஸ் விலையையும் 9 சதவீதம் உயர்த்தியுள்ளது. மக்கள் பயன்படுத்த கூடிய அனைத்து அத்தியாவசிய […]
சென்னை அம்பத்தூர் ஓரகடம் பகுதியில் 40 அடி உயரத்தில் கோபுர விளக்கு உள்ளது. இதன் உச்சியில் இருந்த மின் விளக்குகள் திடீரென நேற்று மாலை பெரும் சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது. அதன் அடிவாரத்தில் இருந்த பூ மற்றும் பழ கடை வியாபாரிகள் டீ குடிக்க சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர். இதை கண்ட அக்கம்பகத்தினர் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இது குறித்து அறிந்த மாநகராட்சி அதிகாரி உடைந்த மின் விளக்குகளை அப்புறப்படுத்தினர். மேலும் 2 நாட்களில் மீண்டும் […]
மொத்தமாக டீசல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்படுவதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இதனால் நயாரா எனர்ஜி, ஜியோ பிபி, ஷெல் போன்ற தனியார் நிறுவனங்களின் விற்பனை விலை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த விலை உயர்வால் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தனியார் உற்பத்தி நிறுவனங்கள் போன்றவை பாதிக்கப்படும். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் விற்பனையாகும் பொதுமக்களுக்கான சில்லரை விற்பனை விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான நிலையில் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கமலஹாசன் நடத்திவந்த நிலையில் தற்போது நடிகர் சிம்பு இதனை தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சில் இந்த வார எலிமினேஷனில் kpy சதீஷ் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறைந்த வாக்குகள் பெற்றதால் எதிர்பாராத விதமாக சிறந்த போட்டியாளராக எண்ணப்பட்ட அனிதா பிக் பாஸ் நிகழ்ச்சில் இருந்து வெளியேறினார்.இது போட்டியாளர்க்கிளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. 20 கிலோ முதல் 50 கிலோ வரை குடும்ப உறுப்பினர்களை அடிப்படையாக கொண்ட இலவச அரிசி வழங்கப்படுகிறது. இவற்றைத் தவிர கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருள்களும் வழங்கப்படுகின்றன. ஆனால் அரசு வழங்கும் ரேஷன் பொருள்களை சிலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள். ரேஷன் கடை ஊழியர்களின் உதவியுடன் நடைபெறும் இந்த பிரச்சினைக்கு எதிராக […]
சென்னையில் 126 வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40, டீசல் ஒரு லிட்டர் ரூ.91.43- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்தது. தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். இன்று உத்திரப்பிரதேசம், மணிப்பூர், உத்திரகாண்ட், கோவா மற்றும் […]
இந்தியாவில் சூரிய காந்தி எண்ணெய் அதிக அளவில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் 80 சதவீதம் உக்ரேனில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் போர் தொடங்கி உள்ளதால் சூரியகாந்தி எண்ணெய் விலை ரூபாய் 40 வரை விலை உயர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் 150 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் போர் தொடங்கிய பிறகு தற்போது லிட்டர் ரூபாய் 196 வரை விலை உயர்வை சந்தித்துள்ளது. அதனைப்போலவே மலேசியா […]
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சரன் ராஜ். இவருக்கும் ஏழுமலை என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதையடுத்து இன்று சரண்ராஜை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற ஏழுமலை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின்போது சரண்ராஜை காப்பாற்ற முயன்ற வேணுகோபால் என்பவர் உயிரிழந்தார். முன்விரோத காரணத்தால் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றவரும் காப்பாற்ற முயன்றவரும் […]
இந்த ஆண்டு வீடுகளுக்கான விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மக்கள் வீடு வாங்குவது போன்ற பெரிய அளவிலான செலவுகளை குறைத்துள்ளனர். மேலும் வேலையின்மை, சம்பள உயர்வு போன்ற பிரச்சினைகளும் இருந்தது. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் வீடு வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது இந்த ஆண்டு வீடுகளுக்கான விலை உயரும் என ஆய்வு ஒன்றின் வழியாக […]
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை தழுவியது. கொங்கு மண்டலம் உட்பட அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கோவை மற்றும் சேலத்திலும் கூட திமுக வெற்றிக்கனியை பறித்தது. இந்த தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விபரத்தை அக்கட்சி அறிவித்திருந்தது. அதேபோல் திமுக சார்பில் தனித்துப் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களையும் அறிவித்து இருந்தது. ஆனால் ஒரு சில இடங்களில் திமுக கூட்டணி […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து எந்த பரிசீலனையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் அம்மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய உதவித் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் அரசியல் மற்றும் கட்சி சம்பந்தமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வது இல்லை. விஜயகாந்தின் இந்த முடிவால் பலர் கட்சியை விட்டு வெளியேறி வேறு கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் தேமுதிக அரசியல் பின்னடைவை சந்தித்துள்ளது .அதிமுக மற்றும் திமுக அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து இருந்த தேமுதிக தற்போது நாளுக்கு நாள் பின்னடைவை […]
திருமணம் செய்வது கொள்வது பற்றி எந்த எண்ணமும் இல்லை என நடிகர் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் கங்கை அமரன் இளைய மகன் பிரேம்ஜி. இவர் நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களைக் கொண்டவர். 42 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறப்பட்டது. பின்னர் குடும்பத்தினர் வற்புறுத்தலால் பிரேம்ஜி ஓகே சொன்னதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அவரது தந்தை கங்கை அமரன் அறிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் […]
30 நிமிடம் நடிப்பதற்கு 1 கோடி ரூபாயை நடிகை ராஷ்மிகா மந்தானா கேட்டுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தானா கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம், கோலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, பான் இந்தியா நடிகையாக வளர்த்துள்ளார். இந்நிலையில் ரஷ்மிகா மந்தனா அவரது சம்பளத்தை நாளுக்கு நாள் உயர்த்தி வருகிறார். […]
நடிகை இலியானா தற்போது சமூக வலைதளத்தில் வெளிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சில் உள்ளனர். நடிகை இலியானா தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகை ஆவார். திரைத்துறையில் வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா, தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் நண்பன் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபலமானார். இவர் இடுப்புக்கு பெயர் போனவர் என்று ஒல்லி பெல்லி […]