காது வலியால் மருத்துவமனைக்கு வந்த பெண்ணின் காதில் இருந்து கரப்பான் பூச்சியை எடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. தெற்கு சீனாவின் Guangdong மாகாணத்தை சேர்ந்த chen என்பவர் காது வலியால் சில நாட்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் பெரிதும் அதிர்ச்சியாகியுள்ளனர் காரணம் அவரின் காதில் ஒரு மஞ்சள் நிற கரப்பான் பூச்சி இருந்ததை கண்டறிந்துள்ளனர்.பின்னர் otoscope முறையில் அந்த கரப்பான் பூச்சியை வெளியே எடுத்துள்ளனர். மேலும் […]
Tag: அதிர்ச்சி
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என் லட்சுமணன் மரணமடைந்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பொறுப்பு வகித்த கே.என் லட்சுமணன் (92) உயிரிழந்திருக்கிறார். தமிழக பாஜகவுக்கு இரண்டு முறை தலைவராகவும் அந்த பொறுப்பில் இருந்த கே. என் லட்சுமணன் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வாகி இருந்தார். சேலத்தில் உள்ள செவ்வாய் பேட்டையில் இல்லத்தில் அவரின் உயிர் […]
30 வருடங்களுக்கு முன்பு இறந்த தாயின் சாம்பல் பிளாஸ்டிக் கவரில் வைக்கப்பட்டதை கண்டு மகன் அதிர்ச்சி அடைந்துள்ளார். பிரிட்டனில் மார்க் ஹாரிஸ் என்பவருக்கு தற்போது 41 வயது ஆகின்றது. இவரது தாய் 30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்ததையடுத்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டு சாம்பல் தாழி எனப்படும் பானையில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு கல்லறையின் அருகே புதைக்கப்பட்டது. இந்நிலையில் தனது தாயின் சாம்பலை சிறிதளவு எடுத்து தான் செய்து அணிய இருக்கும் செயினில் சேர்த்துக் கொள்ள ஆசைப்பட்டு தாயின் […]
மூன்று வாரங்கள் வீட்டை விட்டு வெளியே வராத பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தோற்று பரவத் தொடங்கியதும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த காரணத்தினால் சார்லோட்டே நகரை சேர்ந்த ரேச்சர் ப்ரமெர்ட் மருத்துவர்களின் அறிவுரைப்படி மூன்று வாரங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். வெளியில் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வரும் கணவனும் தனி அறையிலேயே இருந்துள்ளார். கணவரது மருந்தகத்தில் பணிபுரிந்த பரமிஸ்ட் மற்றும் வீட்டிற்கு […]
கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் 2 பேர் குணமடைந்துள்ளனர். மதுரையை சேர்ந்தவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரியில் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் […]
தமிழகத்தில் அங்கன்வாடி மையத்திற்கு விடுமுறை அளிக்காதது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும் அறிவித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவு […]
அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட் கேட்ட தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26 இல் தேர்தல் நடைபெறுகின்றது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு , இன்று வேட்புமனுத்தாக்கள் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ,துணை ஒருங்கிணைப்பாளர் கூட்டு அறிக்கையின் மூலம் அதிமுகவின் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தனர். […]
தமிழக கிராமங்களில் மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. ஸ்காட்லாந் ட்ராண்டி பல்கலைக்கழகமும், சென்னை நீரிழிவு ஆராய்ச்சி மையமும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25 கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 4.9 %லிருந்து 3.5 % அதிகரித்துள்ளது. கிராமங்களில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. […]