ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளரான எம்.ஐயப்பன் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்புக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tag: அந்தியூர்
பழுதடைந்து காணப்படும் குடிநீர் குழாய்களை சரிசெய்து கொடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்திலுள்ள மக்களுக்கு குடிநீர் தொட்டியின் மூலமாக தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக அந்த தொட்டியில் 4 குடிநீர் குழாய்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் 1 குடிநீர் குழாய் மட்டும்தான் தண்ணீர் பிடிக்க பயன்படுகிறது. ஆனால் மீதமுள்ள 3 குழாய்கள் பழுதாகி இருக்கிறது. மேலும் அந்த குடிநீர் தொட்டியை சுற்றி செடிகள் முளைத்து இருப்பதோடு, மழைநீரும் தேங்கி காணப்படுகிறது. இதன் […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரது உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் அந்தியூர் மற்றும் தவுட்டுப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவரும் நின்று கொண்டிருந்தனர். அதன்பின் காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை […]
காரில் சென்ற இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் பகுதியில் சபரிநாதன்- தரணி தேவி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 1 1/2 வயதில் சுகின் என்ற மகன் இருக்கின்றான். இதில் சபரிநாதன் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகின்றார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் மகனை அழைத்துக் கொண்டு ஆத்தூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர். இதனையடுத்து மகன் சுககினை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு சபரிநாதன் மற்றும் […]
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்து, அதை புழக்கத்தில் விட முயன்றவரை போலிசார் கைது செய்துள்ளனர். அந்தியூர் பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சிக்க , அவரை துரத்தி பிடித்தனர். அவரை சோதனையிட்டதில் அவரிடம் இருபதாயிரம் மதிப்புள்ள இருநூறு மற்றும் ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்ததும், அதனை புழக்கத்தில் விடுவதற்காக அவர் கொண்டு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்தனர். முனியப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபுவும் அவரது தம்பியான பாபுவும், அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் ஆட்டு வியாபாரியான செல்வராஜ் பத்தாயிரம் ரூபாய் கடனாக கேட்ட நிலையில் இருபது 500 ரூபாய் நோட்டுகளை சகோதரர்கள் வழங்கியுள்ளனர். அவர்கள் வழங்கிய 500 ரூபாய் நோட்டுகளும் கள்ளநோட்டுகள் என தெரிய வந்ததையடுத்து, செல்வராஜ் காவல் நிலையத்தில் […]