2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக கூறி அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. 2008ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 2 கோடி […]
Tag: அனிதா ராதாகிருஷ்ணன்
இந்தியாவில் முதல் முறையாக கால்நடை மருத்துவம் குறித்த விவரங்களை பெற “கால்நடை மருத்துவர்” என்ற செயலியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். விவசாயிகள், செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் கால்நடை தொழில் முனைவோருக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலில், காணொளி மூலமாக முதலுதவி மருத்துவர் அறிவுரை பெற முடியும். இதில் 3,360 கால்நடை மருத்துவ பட்டதாரிகள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். தமிழகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு தொடரப்பட்ட பண மோசடி வழக்கின் கீழ் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை தற்போது அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் […]
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்துள்ளார். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் அதிமுக மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் சேர்மனுமான சுரேஷ்குமார் அவர்கள் திமுகவில் இணைந்துள்ளார். அப்போது திமுக மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், […]