Categories
தேசிய செய்திகள்

மக்களே…. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு…. உயர்நிதிமன்றம் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி…. கொண்டாட்டத்தில் பக்தர்கள்….!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பரமபதவாசல் …. பக்தர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 13-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படும். அதனை தொடர்ந்து ஜனவரி 22 வரை 10 நாட்கள் பரமபதவாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தினசரி 45,000 பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிக்கெட் முன் பதிவு செய்தவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி மற்றும் சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களே…. நள்ளிரவு 1 மணி வரை அனுமதி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!

புதுச்சேரி ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை, ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரி ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்வதற்கு கலால் துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது மேலும் கடைகளில் இரவு 11 மணி வரை மட்டுமே […]

Categories
சற்றுமுன் சினிமா

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் சோகம்….!!!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானை பாம்பு கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலம்,  ராய்கட் மாவட்டத்தில் பன்வேல் பகுதியில் சல்மான்கானுக்கு சொந்தமாக ஒரு பண்ணை வீடு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் சல்மான்கானின் பிறந்த நாளுக்கு அவரது குடும்பத்தினர் அந்த பண்ணை வீட்டில் உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று அந்த பண்ணை வீட்டில் வைத்து சல்மான்கானை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக கமோதேவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். உரிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

FLASH NEWS: டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி…. பிரதமர் உரை…!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு அடுத்து தாக்குதலாக ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கூறி உரையை தொடங்கியுள்ளார் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் மக்கள் பாதுகாப்பை மறந்து விடக் கூடாது. உலகம் முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது போன்றவற்றை மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவ கல்லூரி”…. வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது . தமிழகத்தில் தற்போது வரை 69 தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படிக்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதி தமிழகத்தில் உள்ளது. இந்தியாவில் 8 மருத்துவர்களில் கண்டிப்பாக ஒரு தமிழர் மருத்துவராக இருப்பார். மேலும் தமிழகத்தில் இன்று மருத்துவ கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 தனியார் மருத்துவக் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. “சபரிமலையில் பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி”…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”இன்று முதல் குளிக்கலாம்…. சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உள்ளிட்ட  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்ததன்  காரணமாக சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதற்கிடையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால்தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் 8 மாதங்களுக்கு பின் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா நோய் […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் நாளை முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம் […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்களே….! “சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம்”…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!

கடலூரில் உள்ள சிதம்பரம் கோவிலில் இன்று தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி தேரோட்டம், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சிதம்பரம் நடராஜர் கோயிலில்…. தேரோட்டத்திற்கு அனுமதி….!!!

கடலூரில் உள்ள சிதம்பரம் கோவிலில் நாளை தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தின் ஒரு பகுதியாக நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து பக்தர்கள், இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேரோட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஜல்லிக்கட்டில் இந்த மாடுகளுக்கு மட்டுமே அனுமதி…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டுமாடுகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை அருகே வீரபாண்டி என்னும் ஊரில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை திறந்துவைத்த அமைச்சர் மூர்த்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்படும். கலப்பின மாடுகளுக்கு அனுமதி கிடையாது என்று கூறினார். மேலும் நாட்டு மாடுகளை பெருக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Categories
உலக செய்திகள்

மக்களுக்கு இன்ப செய்தி….! கொரோனாவுக்கு குட் பை…. களமிறங்குகிறது புதிய தடுப்பூசி….. WHO அனுமதி…..!!!!

உலக சுகாதார நிறுவனம் கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. உலக நாடுகளை கொரோனா, உருமாற்றமடைந்த டெல்டா, ஒமிக்ரான் உள்ளிட்ட வைரஸ்கள் பயங்கரமாக அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சீரம் நிறுவனம் இந்த கோவோவேக்ஸ் தடுப்பூசி பெருந்தொற்றுக்கு எதிராக சிறந்த செயல்திறன் கொண்டுள்ளதாகவும், நல்ல பாதுகாப்பு தன்மை கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
சென்னை

சென்னை விமான நிலையம்…. தாம்பரம் வழியாக வரும் வாகனங்கள் இனி…. விமான நிலைய ஆணையகம் அனுமதி….!!!!

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு கிண்டி வழியாகச் செல்லும் வாகனங்கள் பிரதான நுழைவாயில் வழியாகவும், தாம்பரம், பல்லாவரம் வழியாக வரும் வாகனங்கள் விமான நிலைய காவல் நிலையம் அருகே உள்ள நுழைவாயில் வழியாக செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டன. சென்ற ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக தாம்பரம் பகுதியிலிருந்து வரும் வாகனங்களுக்கான நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. இதனால் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பிரதான நுழைவு வாயில் வழியாக வந்து செல்ல வேண்டும் என்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடையாறு தொல்காப்பிய பூங்காவில் இனி…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் 58 ஏக்கர் பரப்பில் கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, தொல்காப்பியப் பூங்கா என்ற சுற்றுச்சூழல் பூங்காவை உருவாக்கி அதனை பராமரித்தும் வருகிறது. இந்தநிலையில், நகரிய கடல்சார் ஈர்ப்புலன்களின் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பின் அவசியத்தை பொதுமக்கள் புரிந்துகொள்ள ஏதுவாக தொல்காப்பிய பூங்காவை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வாரத்தில் 3 நாட்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதையடுத்து தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் கட்டணத்துடன் நடைப்பயிற்சி செய்வதற்கு காலை 6.30 மணியிலிருந்து 8 மணி வரையும், […]

Categories
மாநில செய்திகள்

8 மாதங்களுக்கு பிறகு….  இன்று முதல் அனுமதி…. குஷியில் சுற்றுலா பயணிகள்….!!!!

எட்டு மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 8 மாதங்களாக குமரி மாவட்டத்திலுள்ள திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த வருத்தத்தில் இருந்த நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட கலெக்டர் அரவின் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று அருவியில் குளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பாசி பிடித்த இடங்கள் மற்றும் சுற்றுப்புற […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரி பக்தர்களுக்கு…. நாளை முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

கார்த்திகை மாத பவுர்ணமியை ஒட்டி சதுரகிரி மலை கோவிலுக்கு நாளை முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.  இந்த கோவிலுக்கு மாதம்தோறும் அமாவாசைக்கு நான்கு நாட்கள், பிரதோஷத்திற்கு நான்கு நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். தற்போது மேற்கு தொடர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் சுற்றுலா பயணிகள் அனுமதி….. செம குஷி நியூஸ்…!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உள்ளிட்ட  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்ததன்  காரணமாக சுற்றுலா பகுதிகளுக்கு பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த வகையில் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதற்கிடையில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் கோவை குற்றாலம் சுற்றுலா தலம் அக்டோபர் 10ஆம் தேதி மூடப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி (இன்று) முதல் கொரோனா நோய் தொற்று […]

Categories
மாநில செய்திகள்

டிச.13-ம் தேதி முதல்….. 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே…. வெளியான அறிவிப்பு….!!!

2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பெரும் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா 3-வது அலையை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துரை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING : நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி…. பெரும் பரபரப்பு….!!!!

பிரபல நடிகர் சிம்பு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு என்கின்ற சிலம்பரசன். இவரது  நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதை தொடர்ந்து சிம்பு ‘வெந்து தணிந்த காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. #SilambarasanTR is admitted to a Chennai hospitali, due to a viral infection. It's […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களே….! இன்று முதல் பொது இடங்களில் அனுமதி மறுப்பு…. அதிர்ச்சி செய்தி…!!!!

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வியாபார நிறுவனங்கள், வங்கி,  சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் இன்று முதல் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

இப்ப இந்த மாவட்ட மக்களுக்கும்…. பொது இடங்களில்….. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!!

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வியாபார நிறுவனங்கள், வங்கி,  சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் நாளை முதல் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோயில்களுக்குச் பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த வந்த நிலையில் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை தேவஸ்தானத்திற்கு செல்லும் பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கோவிலில் தங்குவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்தது இதனால் சபரிமலைக்கு செல்லும் வழியில் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 20 முதல்…. இந்த அருவிகளில் குளிக்க அனுமதி…. செம சூப்பர் அறிவிப்பு…!!!

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் பொது மக்களுக்கு தொற்று பரவாமல் இருப்பதற்காக அவர்கள் பொதுவெளியில் நடமாட தடை விதித்து ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. ஊரடங்கு காலங்களில் போக்குவரத்து, பொது இடங்களுக்குச் செல்ல தடை போன்ற கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான குற்றால அருவிகளில் குளிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் – கேரளா இடையே இன்று முதல் பேருந்து சேவை தொடக்கம்…. சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கேரளா -தமிழ்நாடு இடையே பேருந்து போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி அரசு நேற்று பேருந்து போக்குவரத்திற்கான அனுமதியை வழங்கி அதற்கான உத்தரவை பிறப்பித்தது. இது தொடர்பாக பேசிய கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனி ராஜு, கேரள அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகம் – கேரளா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் – கேரளா பொது போக்குவரத்துக்கு அனுமதி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது ஒமைக்ரான் வகை கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

நெல்லின் ஈரப்பதம்… 19% ஆக உயர்த்த மத்திய அரசு அனுமதி… அமைச்சர் தகவல்…!!!

நெல்கொள்முதல் ஈரப்பதத்தை 19 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு அறுவடை பணிகள் முடிந்துவிட்டது. அறுவடை செய்த நெல்லை தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்கள் 2 டேஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி லண்டன், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் 2 தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

கோவேக்சின் போட்டிங்களா ? அப்படினா உங்களுக்கு தான்…. செம மகிழ்ச்சி செய்தி ..!!

நவம்பர் 30-ஆம் தேதி முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கனடா நாட்டுக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. உலக நாடுகளை அச்சறுத்திவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்டவர்கள் வருகிற 30-ஆம் தேதி முதல் கனடா வர அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுவரை அமெரிக்காவின் பைசர், மடனா, ஜான்சன் அன் ஜான்சன் மற்றும் இங்கிலாந்தின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி….!!!

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க பயணம் முடிந்து திரும்பி பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய் பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…. சற்றுமுன் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து கொண்டிருக்கிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் இந்த மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வார்கள். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 30 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களில் அனுமதி… தமிழக அரசு அதிரடி…!!!

தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 9 இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த வழித்தடத்தில் இனி ஆட்டோ இயங்க அனுமதி பெற வேண்டும்….. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உரிய அனுமதி இல்லாமல் பயணிகளை ஏற்றிச் செல்ல ஆட்டோ ரிக்ஷாகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே 150க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உரிய அனுமதி பெறாமல் இயக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நந்தா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், புதுச்சேரி தடத்தில் , கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே உள்ள குறுகிய தூரத்தை கருத்தில் கொண்டு, ஒரே […]

Categories
மாநில செய்திகள்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!!!!

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமிக்கு நாளை முதல் 19ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் காய்ச்சல், சளி, இருமல் உள்ள […]

Categories
சற்றுமுன் சினிமா

மருத்துவமனையில் பரிதாப நிலையில் பிரபல தமிழ் நடிகர்… அதிர்ச்சி..!!!

பிரபல நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் உயர் ரத்த அழுத்த காரணமாக மயங்கி விழுந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இந்த வீடியோவில் ஆளே மாறிப் போய் பரிதாபமாக உள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் மீண்டும் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். இவர் […]

Categories
மாவட்ட செய்திகள்

குப்பனூர் மலை பாதையில் போக்குவரத்து அனுமதி… 30கி.மீ செல்ல வேண்டும்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4ஆம் தேதியன்று அதிக கனமழை பெய்தது. இதனால் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் அந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதையடுத்து மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு சீரமைப்பு பணிகள் கடந்த 7ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. ஆனால் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கிடையில் சேலம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சிவசண்முகராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர்கள் மண்சரிவு சரி செய்யப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

20 மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டவருக்கு அனுமதி வழங்கியுள்ள பிரபல நாட்டு அரசு… கொரோனா அச்சத்தால் 20 மாதங்களாக எல்லைகள் அடைப்பு…!!

20 மாதங்களுக்கு பிறகு தற்போது வெளிநாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சத்தால் கடந்த 20 மாதங்களாக வெளிநாட்டு பயணிகளை அமெரிக்க அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் தற்போது வெளிநாட்டு பயணிகளுக்கு தனது எல்லையை திறந்து அவர்களை அமெரிக்கா அனுமதித்துள்ளது. தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்களை வைத்திருப்பவர்களை அனுமதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும் பெரியவர்களுடன் வரும் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தடுப்பூசி போட கட்டாயம் இல்லை எனவும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான அட்டைகள் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலையாரை தரிசனம் செய்ய இன்று முதல் முன்பதிவு…. பக்தர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபத் திருவிழா வருகிற 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி முதல் 7.30மணிக்கு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 10 நாட்கள் தீபத் திருவிழா உற்சவம் நடைபெறும்.விழாவின் உச்ச நிகழ்ச்சியாக வருகின்ற 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும் மாலை […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதி…!!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவருக்கு குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

சிறுவர்களுக்கு தடுப்பூசி… ‘அறிவியல் பூர்வமான ஆய்வுக்குப் பிறகே அனுமதி’… மத்திய அரசு திட்டவட்டம்..!!!

அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு பிறகே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 12 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு ‘சைகோவ்-டி என்ற பெயரில் ஊசி இன்றி செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

100% சதவீத இருக்கைகளுடன் திரையரங்கிற்கு அனுமதி…. அதிரடி உத்தரவு பிறப்பித்த அரசு….!!

ஆந்திர மாநிலத்தில் 100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரானா தொற்று அதிகரித்ததன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தற்போது, தொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் காரணத்தால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கொரானா காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6,7,8,9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு…. புதிய அதிரடி அறிவிப்பு….!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 6 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 2 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி?…. மத்திய அரசு அனுமதி…. புதிய தகவல்….!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட மருத்துவ வல்லுநர் குழு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு வயதான குழந்தைகள் முதல் 18 வயது […]

Categories
தேசிய செய்திகள்

“திறந்தவெளியில் திருமணம் நடத்தலாம்”… அனுமதி வழங்கிய மாநில அரசு…!!!

திறந்தவெளியில் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை நடத்துவது தொடர்பாக உத்திரபிரதேச அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருவதால், அந்தந்த மாநிலத்தை சேர்ந்த அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொற்று குறைந்து கொண்டு வருவதால் அங்கு பல்வேறு ஊரடங்கு தளர்வு அழிக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: ஒகேனக்கலில் சுற்றுலாவுக்கு இன்று முதல்…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. தற்போது வரை பல்வேறு கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஒகேனக்கல்லில்சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பரிசல் பயணத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி காலை 6 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த… தமிழக அரசு அனுமதி….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வரும்  அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கிராம சபை கூட்டம் நடத்த  தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று  […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 7 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும்…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் பயன்பாட்டிற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தை 7 மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. போலீஸ் அனுமதி அளித்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பல்லாவரம் சந்தை திறக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“மீண்டும் தொடங்கப்படும் லாட்டரி, சூதாட்டம்”…. முதல்வர் அனுமதி…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில், மீண்டும் லாட்டரி சூதாட்டம் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. இதனால் ஏழை எளிய மக்கள் பலரும் தாங்கள் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் லாட்டரி சீட்டில் செலவு விட்டுவிடுவதால் பல குடும்பங்கள் அழிந்தன. இதனை காரணமாக வைத்து பல்வேறு மாநிலத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டது. இருப்பினும் சில மாநிலங்களில் லாட்டரி சீட் டிக்கெட் தற்போது வரை விற்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை […]

Categories
தேசிய செய்திகள்

100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி….. மத்திய அரசு அறிவிப்பு….!!!

தொலைத்தொடர்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்சவரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தானியங்கு முறையிலான அந்நிய நேரடி முதலீட்டு வரம்பினை 49 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பாக மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, தொலைதொடர்பு துறையில் தானியங்கி முறை மூலமாக 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் […]

Categories

Tech |