Categories
உலக செய்திகள்

“அன்னையர் தினம்” பாதம் கழுவிய பிஞ்சு குழந்தைகள்…. கண்ணீர் மல்கிய தாய்மார்கள்….!!

இந்தோனேஷியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறும் அன்னையர் தின கொண்டாட்டத்தில் வைத்து குழந்தைகள் தங்களது தாயின் பாதங்களை கழுவியுள்ளார்கள். இந்தோனேஷியாவில் ஜகார்த்தா என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குழந்தைகள் தங்களது தாயின் பாதங்களை கழுவி சுத்தம் செய்துள்ளார்கள். அப்போது குழந்தையின் தாய்மார்கள் அவர்களை கண்ணீர் மல்க கட்டி அணைத்துள்ளார்கள்.

Categories

Tech |