தனது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து காஜல்அகர்வால் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டிருக்கிறார். நான் மகான் அல்ல படத்திற்கு பின் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தவர் காஜல் அகர்வால். அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களின் மூலமாக முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்குப் பின் படங்களில் பிசியாக நடித்து வரும் காஜல் அகர்வால் […]
Tag: அன்னையர் தினம்
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாயை புகழ்ந்து பெரிய கவிதையை பதிவிட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், இந்த கவிதை சாரா என்பவர் எழுதியது. இதுபோல அடுத்தவர் கவிதையை தனது போன்று பதிவிடுவது சரியா? என கமெண்ட் செய்து வந்தனர். இவரின் இந்த பதிவை பார்த்த சாரா கோபமடைந்து தனது ஸ்டோரியில் ‘மை […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி மே 8ஆம் தேதி அன்னையர் தினத்தன்று உக்ரைனில் இருந்து புலம்பெயர்ந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை சந்திக்க உள்ளனர். அன்னையர் தினத்தன்று புலம்பெயர்ந்த உக்ரேனிய தாய்மார்களை சந்திக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு மே மாதம் 5 முதல் 9ஆம் தேதி வரை சென்று சேவை உறுப்பினர்கள் மற்றும் தூதரக பணியாளர்களை சந்திக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து இடம்பெயர்ந்த உக்ரேனிய […]
நடிகர் கமல்ஹாசன் டீன் ஏஜில் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். இன்று அன்னையர் தினம் என்பதால் பிரபலங்கள் பலரும் தங்களுடைய அன்னையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அன்னையின் பெருமைகளை தெரிவித்து வருகின்றனர். என் குழையும் மழலையில் துவங்கி இன்று என் நாவில் புழங்கும் தமிழைப்போலவே நீயும், […]
ஜெர்மனியில் இன்று ஒரு நாள் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளது ஜெர்மனியில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்துடன் அண்டை நாடுகளுடனான எல்லைகளை மூடி கடுமையான கட்டுப்பாடுகளை ஜெர்மனி அரசு விதித்துள்ளது. இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் கட்டுப்பாடுகளை ஜெர்மனி அரசு நீக்கி எல்லைகளை திறந்துள்ளது. ஆனால் இந்த தளர்வு இன்று ஒரு நாள் மட்டும் தான் அமலில் இருக்கும் என்றும் ஜெர்மனிக்குள் வருபவர்கள் 24 மணி நேரத்திற்குள்ளாக வெளியில் […]
வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க இரண்டு பெண் பைலட்டுகள் அன்னையர் தினத்துக்கு முந்திய தினம் புறப்பட்டு சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் சிக்கி இந்தியாவிற்கு திரும்பி வர முடியாமல் தவித்து வரும் இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மே 7ஆம் தேதி முதல் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை இரண்டு பெண் பைலட்டுகள் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் மீட்க நேற்று சென்றுள்ளனர். இதில் ஒரு விமானம் கேரளாவில் கொச்சியில் இருந்தும் […]
“அம்மா” – உலக அன்னையர் தினம்
பிரம்மனின் அவதாரமாக உலகில் உதித்தவள். அன்பின் வடிவாக மண்ணில் வாழ்பவள். அன்பு, அக்கறை, அரவணைப்பு என்றால் உணர்வுகளால் நிரப்பப்பட்டவள். எவருக்கும் ஈடு இணை இல்லாதவள். அதுதான் அம்மா என்னும் உறவு. அம்மா என்ற வார்த்தையில் பாசம், கடவுளின் கருணை அடங்கும். தோல்விகளை வேரறுக்கும் தைரியம் கொடுத்தவள். வெற்றியை சுவைக்க செய்தவள். அன்பு வற்றிய உலகில் வற்றாத அன்பு பெருகுமிடம் “என் பிள்ளை என் பிள்ளை” என்று பெருமைப்பட அவளை தவிர வேறு யாருமில்லை. வருடத்தில் ஒரு நாள் […]
வாழும் தெய்வமான அன்னையை போற்றும் பொருட்டு வருடம்தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த சிறப்புமிக்க தினத்தில் அன்னையின் ஆசீர்வாதத்தை பெறுவது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை. அவர்களுக்கு பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்து ஆசீர்வாதத்தை பெறலாம். உலக நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படும் அன்னையர் தினம், நமது நாட்டில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் ஜார்விஸ் என்பவரால் […]
உலக வரலாற்றில் அன்னையையும் இயற்கையையும் தெய்வமாக கருதி வழிபட்டு வந்துள்ளனர். “மாதா, பிதா, குரு, தெய்வம்” என நமது கலாச்சாரம் அன்னைக்கு தான் முதலிடத்தை வழங்கியுள்ளது. படைத்தவன் கடவுள் என்றால் நம்மை படைத்த அன்னையே நமக்கு கடவுள். அனைத்திற்கும் அடிப்படையானவள் அம்மா. அவள் இல்லை என்றால் இந்த மண்ணில் நம்மால் அவதரித்து இருக்க முடியாது. மகளாக, சகோதரியாக, தோழியாக, தாரமாக, தாயாக வீட்டில் இருப்பவர்களை பக்குவப்படுத்தும் பாட்டியாக அனுபவங்கள் மூலம் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி எத்தனையோ […]
எல்லோருக்கும் கடவுள் கொடுத்த பரிசுதான் அம்மா. அம்மா என்று அழைக்காத உயிர் உலகில் இல்லை. தாய் அன்புக்கு நிகர் எதுவுமில்லை. தாய்மை உயிரினத்தின் வரம். தாலாட்டி பாலுட்டி பேணும் தாய்மையின் பெருமையை நினைவு கூறும் நாள் தான் இந்த அன்னையர் தினம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு அதற்கான சான்றுகள் பல உள்ளன. இருப்பினும் அன்னையர் தினம் தோன்றுவதற்கு காரணமாக […]
“அம்மா” என்ற சொல் கபடமில்லாதது, கலங்கம் இல்லாதது. அன்பும் பாசமும் நிறைந்திருக்கும் வார்த்தை என்றென்றும் உயிர்ப்புடன் உலகமே அவளாக அனைத்து சுமைகளையும் சுமந்து குடும்பத்தின் முகவரியாகவே வாழ்ந்து வருபவள். அத்தனை உயிர்களும், சுக துக்கங்களும் அம்மா என்ற வார்த்தைகள் தான் அடங்கியுள்ளது. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவிற்கு அம்மா என்ற அந்தஸ்து மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாகவும், சகோதரர்களுக்கு சகோதரியாகவும், கணவனுக்கு மனைவியாகவும், பின்னர் […]