சிம்பன்சி குரங்கும், ஆமையும் அன்பை பகிர்ந்து கொள்ளும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் செல்போன் பயன்பாடானது மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில், நாள்தோறும் இணையதளத்தில் பல்வேறு விதமான செய்திகள் மற்றும் பொழுதுபோக்குகள் உள்ளிட்ட பல்வேறு விதமான வீடியோக்கள் வெளிவருகிறது. இதில் சில வீடியோக்கள் மக்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக இருக்கிறது. இந்நிலையில் ஒரு சிம்பன்சியும், ஒரு ஆமையும் ஒன்றுக்கொன்று அன்பை பகிர்ந்து கொள்ளும் அற்புதமான வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் […]
Tag: அன்பு
ஒருவர் தன் மனைவியின் இறந்த உடலுடன் 21 வருடம் வாழ்ந்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். தாய்லாந்து நாட்டில் சார்ன் ஜன்வார்ட்சகல் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ மருத்துவ உதவியாளராக இருந்துள்ளார். இவர் தன்னுடைய மனைவியுடன் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இவருடைய மனைவி கடந்த 21 வருடங்களாக முன்பாக இறந்துவிட்டார். ஆனால் சார்ன் தன்னுடைய மனைவியின் சவத்தை அடக்கம் செய்யாமல் சவப்பெட்டியில் வைத்து 21 வருடங்கள் வாழ்ந்துள்ளார். இந்த […]
பிரபல இளம் நடிகை பிரியா பவானி சங்கர் என் அன்பை வாங்கிக்கோங்க என்று ட்விட் செய்துள்ளார். முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி விமர்சனங்கள் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மண்டேலா’. இளம் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் பல சர்ச்சைகளையும் சந்தித்தது. இந்நிலையில் பிரபல இளம் நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மண்டேலா திரைப்படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், யோசிச்சு […]
இயக்குனர் செல்வராகவன் அன்பு குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2003ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கொண்டேன். இத்திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் செல்வராகவன் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் இயக்குனர் […]
விலங்குகள் மனிதர்களை விட அதிகமான அன்பு கொண்டவை என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு என்பது பொதுவானது. குடும்பத்தில் தாய்க்கு தன் பிள்ளைகள் மீது அளவு கடந்த அன்பு இருக்கும். அதனைப் போலவே குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அன்பு என்பது ஒருவர் மீது கட்டாயம் இருக்கும். இவற்றைவிட மனிதர்கள் விலங்குகளின் மீது அன்பு செலுத்துவது அதிகம். அதிலும் குறிப்பாக செல்லப்பிராணிகள் மீது அளவு கடந்த அன்பு இருக்கும். இந்நிலையில் […]
ஜம்மு-காஷ்மீரில் தன் மகனுக்குக் கருணை காட்டியதால் பயங்கரவாதியின் தந்தை ராணுவ வீரர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தனியாக சிக்கிய பயங்கரவாதி ஒருவர் இராணுவ வீரர்களின் அன்பு பேச்சால் மனம் மாறி தானாக முன் வந்து சரணடைந்துள்ளார். அவருக்கு ராணுவ வீரர்கள் தண்ணீர் கொடுத்து உதவியுள்ளனர். தன் மகனுக்குக் கருணை காட்டியதால் பயங்கரவாதியின் தந்தை ராணுவ வீரர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ […]
ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம். இதற்கு பல கதைகள் சொல்லப்பட்டு வருகிறது அதில் ஒரு கதையை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம், ராஜ்புதன் என்கிற காலத்தில், சித்தூர் என்னும் பகுதியின் இளவரசியான கர்ணாவதி என்பவர் ஹிமாயூன் என்ற […]
செல்லும் பாதையில்… செல்ல வேண்டிய பாதை இன்னும் அநேகம் இருக்க… சென்ற பாதையை பற்றிய சிந்தனை ஏன்? இழப்புகளை எண்ணி வருந்தாதே!! உயிரைத் தவிர எதை இழந்தாலும் அதை திரும்ப அடைய உன்னால் முடியும்..!! மழை என்றதும் ஓடி ஒளியும் காகம் அல்ல நீ ! மழை மேகத்தை தாண்டி பறக்கும் “கழுகு” உன்னை நீ நிரூபிக்கும் வரை உண்மையாய் இரு!! மண்ணிற்குள் மறைந்து இருக்கும் விதையே முளைக்க துவங்கும்!! எந்த சூழலிலும் துவண்டு போகாதே!! நடந்து […]
எல்லோருக்கும் கடவுள் கொடுத்த பரிசுதான் அம்மா. அம்மா என்று அழைக்காத உயிர் உலகில் இல்லை. தாய் அன்புக்கு நிகர் எதுவுமில்லை. தாய்மை உயிரினத்தின் வரம். தாலாட்டி பாலுட்டி பேணும் தாய்மையின் பெருமையை நினைவு கூறும் நாள் தான் இந்த அன்னையர் தினம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு அதற்கான சான்றுகள் பல உள்ளன. இருப்பினும் அன்னையர் தினம் தோன்றுவதற்கு காரணமாக […]
“அம்மா” என்ற சொல் கபடமில்லாதது, கலங்கம் இல்லாதது. அன்பும் பாசமும் நிறைந்திருக்கும் வார்த்தை என்றென்றும் உயிர்ப்புடன் உலகமே அவளாக அனைத்து சுமைகளையும் சுமந்து குடும்பத்தின் முகவரியாகவே வாழ்ந்து வருபவள். அத்தனை உயிர்களும், சுக துக்கங்களும் அம்மா என்ற வார்த்தைகள் தான் அடங்கியுள்ளது. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவிற்கு அம்மா என்ற அந்தஸ்து மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாகவும், சகோதரர்களுக்கு சகோதரியாகவும், கணவனுக்கு மனைவியாகவும், பின்னர் […]
எந்த நேரமும் எரிந்து விழும் மனைவிகளை சமாளிக்க கணவன்மார்களுக்கு அறிவுரைகள் மனைவி ஏதேனும் தவறு செய்தால் அடுத்தவர்கள் முன்பு சுட்டிக்காட்டி திட்டாமல் தனியாக கூப்பிட்டு மெதுவாக புரிய வையுங்கள். அது அவர்கள் செய்த தவறை உணரச் செய்யும். வேலையில் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் வீட்டின் உள்ளே வரும்பொழுது அனைத்தையும் மறந்துவிட்டு மனைவியை பார்த்து சிரித்தால் என்ன சண்டையாக இருந்தாலும் மறந்துவிடும். மனைவி வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் என்ன நடந்தது? நாள் எப்படி போனது என அக்கறையுடன் […]
கணவன் மனைவி உறவில் சண்டை வராமல் இருக்க கணவன் மனைவி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை. சில ஆலோசனைகள். குடும்ப உறவுகளில் இருக்கக்கூடிய பொறுப்புகள் அதிகமாகும் பொழுது தான், நம்முடைய தேவைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமாகிறது. இதனால் தான் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் பிரச்சனை ஆரம்பமாகிறது. பெண் அல்லது ஆண் யாராக இருந்தாலும் வீடு ஆபீஸ் குழந்தை அப்படி என்று எல்லாவற்றையும் சமாளிப்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். ஏதாவது ஒரு இடத்தில் நம் மனதில் ஏற்படும் சின்னச் […]
குழந்தைகள் தவறு செய்தால் தட்டிக்கொடுங்கள், நல்வழிபடுத்த அன்பான முறையில் கூறுங்கள். பெற்றோர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..! குழந்தைகள் களிமண்ணை போன்றவர்கள். அவர்களுக்கு சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. குழந்தைகளை பெற்று எடுப்பது மட்டுமே பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை. பெற்ற குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழ கற்று தந்து வழிநடத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். குழந்தைகள் பிறந்தபின் அவர்கள் நல்லதையே செய்ய வேண்டுமென்றும், அறிவாளியாக தான் இருக்க வேண்டும் […]
அன்பிற்கும், மோகத்திற்கு வித்தியாசம்அறிந்து கொள்ளுங்கள்..ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறிய நீதி..!! உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தில் முகமானது தோன்றுவதில்லை அன்பெனும் பாவம் கருணையிலிருந்து பிறப்பது மோகம் அகங்காரத்தில் இருந்து பிறக்கிறது அன்புள்ளமானது எனது புதல்வனுக்கு இறைவன் கிருபையால் அனைத்தும் கிட்டும் என்பது கூறும். ஆனால் மோகம் என்பது எனது புதல்வனுக்கு நான் அனைத்தையும் வழங்குவேன் என்று உரைக்கும்.. அன்பின் பாவமானது பொது நலத்திற்கு முக்கியத்துவம் வழங்குவது. ஆனால் மோகமானது சுயநலமே முக்கியம் என்று எண்ணுவது.. அன்பானது புத்தியை […]