தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதன் பிறகு மத்திய அரசால் நடத்தப்படும் அரசு பணியாளர் தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும். ரயில்வே நிறுவனங்களின் பயிற்சி பெறுபவர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டின் கீழ் நேரடி நியமனங்களுக்கு பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து முன்னுரிமை கொடுக்க வேண்டும். தென்மண்டல ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் […]
Tag: அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டுள்ள நிலையில், இன்றோடு கடைசி நாள் முடியப்போகிறது. இன்றைக்குள் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்து போடாவிட்டால் மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் வந்துவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, தமிழகத்தில் ஆளுநர் அவர்கள் அரசியல் செய்யாமல் முதல்வரும் ஆளுநரும் ஒன்றிணைந்து ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களின் மூலம் 82 […]
தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் தமிழருக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, ஓசூர் அருகே அமைக்கப்பட்ட வரும் டாட்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெளி மாநிலத்தவருக்கு குறிப்பாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. இது குறித்த டாட்டா நிறுவனத்தின் விளக்கம் நிறைவளிக்கவில்லை. டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வளர்ச்சி என்பது நல்ல கல்வியை கொடுக்க வேண்டும். சுகாதாரம், விவசாயம் நன்றாக இருக்கனும். நல்ல சுற்றுச்சூழல் கொடுங்கள், வளர்ச்சி திட்டங்களை கொடுங்கள், அந்த கண்ணோட்டத்தில் பாருங்கள். நீர் மேலாண்மை எவ்வளவோ பிரச்சனை. இப்போது இருக்கின்ற பிரச்சனை தமிழ்நாட்டில் பிரச்சனை, இந்தியாவில் பிரச்சனை, உலகத்தின் பிரச்சனை வந்து சுற்றுச்சூழல் மாற்றம். அதைப் பற்றி யாராவது பேசுகிறீர்களா ? எங்கேயாவது விவாதம் நடக்கிறதா? இல்லையே. இதுதான் பிரச்சினையே இன்றைக்கு மட்டுமல்ல, அடுத்த […]
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்திட்டு முழுமையாக சட்டமாக மாற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது, அதற்கு ஏற்ப வியூகங்களை 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைப்போம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அரசு சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது அதற்கு ஆளுநர் இன்னும் கையெழுத்து இடாமல் உள்ளார். இதற்கு முன்பு […]
கமல்ஹாசனுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இன்று 68 வது பிறந்தநாளை கமல்ஹாசன் கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த […]
அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி உடனடியாக தொடங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. அதனால் தான் நீட் தேர்வை பா.ம.க கடுமையாக எதிர்க்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பா.ம.க. முழுமையாக ஆதரிக்கிறது. அதே நேரத்தில் நீட் விலக்கு என்ற இலக்கை எட்டும் வரை அதை […]
சென்னையில் ஊ.ப சௌந்தரபாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, ஜாதியால் அனைத்து மக்களுமே ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுகிறார்கள். அனைத்து ஜாதியும் முன்னேற வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு தனி அடையாளம் இருப்பினும், ஜாதியால் நடக்கும் அடக்குமுறைகளை ஏற்க முடியாது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு அடையாளம் உண்டு. அனைத்து சமுதாயத்தினரும் முன்னேற வேண்டும். மருத்துவர் ராமதாஸ் […]
தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கப்படும் என்பது கூட தெரியாததால் பெற்றோர்கள் குழப்பமாக உள்ளனர் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 2381 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசு அறிவித்து 19 நாட்கள் ஆகியும் இன்று வரை மழலையர் வகுப்புகளுக்கான […]
நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. அங்கன்வாடிகளில் நடைபெறும் மேம்படுத்தப்படும் என்றும் எல்கேஜி, யுகேஜி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்: “தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மாணவர்கள் […]
இனி பொறுப்பாளர்கள் சரியாக செயல்படவில்லை என்றாலோ, தவறு செய்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்து அவரை வாழ்த்தி டாக்டர் ராமதாஸ் பேசியதாவது: ” செயலாற்றல் மிக்க இளம் தலைவரை பா.ம.க.வுக்கு தந்துள்ளேன். டெல்லியில் ஒரு இளம் தலைவர் கட்சி தொடங்கி ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தார். நாம் 1996 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினோம். […]
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2006 முதல் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த நிலையில், பாமக கட்சியின் தலைவராக தேர்வாகியுள்ளார் அன்புமணி. சென்னை திருவேற்காட்டில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி தலைவராக தேர்வானார். 1998 முதல் 25 ஆண்டுகள் ஜி.கே மணி பாமக தலைவராக இருந்து கட்சியை வழி நடத்தி வந்தார்.
தெலுங்கு திரைஉலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், அண்மையில் நடித்த புஷ்பா படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று நல்ல வசூலை ஈட்டியது. இதற்கிடையில் அல்லு அர்ஜுனிடம், முன்னனி புகையிலை நிறுவனம் அவர்களது விளம்பரபடத்தில் நடிக்க அழைத்து உள்ளனர். இதற்காக அவருக்கு பல கோடி ரூபாய் வரையிலும் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளனர். எனினும் புகையிலை விளம்பரப் படத்தில் நடிக்க அவர் விரும்பவில்லை எனவும் அந்த அழைப்பை அவர் நிராகரித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அல்லு அர்ஜுனின் […]
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தூத்துக்குடி தாளமுத்து நகரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் ஆகும். அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மது தான். கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் மது தான் மூல காரணமாக இருக்கிறது. மது வணிகம் தொடரும் […]
ஆசிரியர் தகுதி தேர்வை பிஎட், டிடிஎட்(D.Ted) இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிந்தது. இந்நிலையில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அதற்கான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று […]
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தனியார் மையங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி […]
இலங்கைக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மார்ச் 24ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை பிணையில் விடுவிக்க தலா ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் ஆணையிட்டது. இதற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “சிங்களக் கடற்படையினரால் கடந்த மாதம் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 12 பேரை பிணையில் விடுவிக்க, அவர்கள் தலா ரூ.1 கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை […]
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், குடிகளை கெடுக்கும் குடி சட்டம் ஒழுங்கையும், அமைதியையும் சிதைக்க தொடங்கி இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மயிலாடுதுறையில் மது விற்பனை மோதலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கவலை அளிக்கிறது. தமிழகத்தில் மது காரணமாக ஏற்படும் […]
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணம் செலுத்த மே 7 கடைசி நாளாகும். தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேர்வு வாரியத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்களில் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் […]
தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு எண் கணித பாட வினாத்தாள் கசிந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதல் கட்ட திருப்புதல் தேர்வின்போது வினாத்தாள்கள் கசிந்து சர்ச்சையான நிலையில் இதுபோன்ற தவறு நிகழாமல் இருக்க அந்தந்த பள்ளிகளிலேயே விடைத்தாள்கள் திருத்தும் மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வினாத்தாள் கசிந்துள்ளது. இதையடுத்து வினாத்தாள் கசிந்த நிலையில் புதிய வினாத்தாள் மூலம் நாளை 10ம் வகுப்பு கணிதத் தேர்வு நடத்தப்படும் […]
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது இணையப்பக்கத்தில், “மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், கூகுள் சுந்தர் பிச்சை, டாடா குழும தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட 21 பேருக்கு பத்ம பூஷன் உட்பட பத்ம விருதுகள் 122 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் பத்ம பூஷன் விருது விமான விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு வழங்கப்பட்டிருப்பது […]
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பில் விவசாயிகளின் பயத்தை போக்குவதற்கு தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பா.ம.கவின் இளைஞர் அணி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பில் அரசு தன் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று நேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பட்சத்தில், சுமார் 7000 விவசாயக் […]
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை ஜனவரி 20-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களான 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளுக்கு தடை […]
தமிழகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. எனவே கொரோனா பரிசோதனை ஆய்வுகள் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கொரோனா சோதனை கட்டணம் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகமாக இருப்பது கொரோனா பரிசோதனைக்கு ஒரு தடையாக இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார். அதாவது மராட்டியம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா சோதனை கட்டணம் ரூ.500-க்கு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் […]
பா.ம.க வின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ், வானொலி நிலையங்கள் முடக்கப்படுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் பணியை இழப்பார்கள் என்று கூறியிருக்கிறார். பா.ம.க வின் இளைஞரணித்தலைவரான அன்புமணி ராமதாஸ், இது தொடர்பில் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, நெல்லை, கோவை, புதுவை, திருச்சி மற்றும் மதுரை போன்ற வானொலி நிலையங்களில் தயாரிக்கப்படும் சொந்த நிகழ்ச்சியை பொங்கல் பண்டிகையோடு முடக்கிவிட்டு, அதனை தொடர் ஒளிபரப்பு நிலையங்களாக தரம் குறைப்பதற்கு பிரசார்பாரதி முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், வானொலி நிலையங்களை மூடக்கூடிய இத்தீர்மானம் […]
பா.ம.க இளைஞர் அணியின் தலைவராகவும், மக்களவையின் உறுப்பினராகவும் இருக்கும் அன்புமணி ராமதாஸ் இணையதள சூதாட்டத்திற்கு எதிராக டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, சென்னையில் உள்ள கோயம்பேட்டில் வசிக்கும் தினேஷ் என்னும் இளைஞர் இணையதள சூதாட்டத்தில் அதிகமான பணத்தை இழந்து கடன் தொல்லையால் இன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்திருக்கிறார். அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஐந்து மாதங்களில் இணையதள சூதாட்டத்தால் பலியாகும் 12வது உயிர் இது. இணையதள சூதாட்டம், […]
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், திருவரங்கம் கல்லூரி உட்பட சுமார் 41 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை மற்றும் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் திருவரங்கம் உள்ளிட்ட 10 கலை கல்லூரிகளில் கடந்த 4 மாதங்களாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பல்கலைக்கழகமோ, அரசோ அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இல்லை. அதற்கு மாறாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு […]
யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பது ஒன்றும் ரசம் வைப்பது போன்று, நூடுல் செய்வது போன்று அல்ல என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே அரக்கோணத்தில் லோகநாதன் என்பவர் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்தது. இதையடுத்து அவரது மனைவியை மயங்கிய நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த […]
தமிழகம் முழுவதும் மின் கம்பங்களை தர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டாக்டர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் நட்ட புதிய மின்கம்பமானது உடைந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த காளிராஜ் இறந்தது கவலைக்குரியதாக இருக்கிறது. இதுகுறித்து விசாரித்தபோது சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரில் புதிய மின்சாரக் கம்பத்தை நட்டனர். […]
குளிர்கால கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாளில் தமிழக எம்பி அன்புமணி ராமதாஸ் மட்டும் லீவு எடுத்துள்ளது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளே 3 வேளாண் சட்டங்கள் திருத்த மசோதா இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் தேசிய மற்றும் மாநிலங்கள் சார்ந்த பல விவாதங்கள் கேள்விகள் எழுப்பப்பட்டு பதில் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் […]
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது விசிக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருப்பினும் பல்வேறு தரப்பினர் இந்த படத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. ஜெய்பீம் படத்தில் நடித்திருக்கும் காவல் அதிகாரியை வன்னிய இனத்தவராக காட்சிப் படுத்தியிருப்பதாகவும், அவரது வீட்டில் இருந்த காலண்டரில் அக்னி கலசம் குறியீடு வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து அந்த காட்சிகள் மாற்றப்பட்டது. இருப்பினும் பாமக […]
காலநிலை மாற்ற மாநாட்டின் முடிவு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26-வது ஐ.நா. காலநிலை மாநாட்டில் உறுதியான செயல் திட்டங்கள் எதுவும் இல்லாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. உலக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் அதை தடுக்க வளரும் நாடுகளும், வளர்ந்த நாடுகளும் விரைந்து […]
ஜெய்பீம் குறித்து அன்புமணி எழுதிய கடிதத்திற்கு நடிகர் சூர்யா பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ஜெய்பீம் திரைப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்டுள்ளது. “படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள், சம்பவங்கள், அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்கிற அறிவிப்பை படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்து இருக்கிறோம். எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத யாருடைய கையில் அதிகாரம் […]
தமிழகத்தில் நீட்தேர்வு அச்சம் காரணமாக பல மாணவர்கள் உயிரிழந்து வருவதால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த வடகுமரை கிராமத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் என்ற மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.தற்கொலை செய்துகொண்ட மாணவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் […]
தமிழக அரசானது ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மென்பொருள் பொறியாளர் ஆவார். இவர் லட்சக்கணக்கில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது மிகவும் வேதனை அளிப்பதாகவும், மேலும் எனது ஆறுதலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தின் அப்பாவி இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தொடர்ந்து […]
காவிரி ஆற்றை குறித்து ஐஐடி நடத்திய ஆய்வில் மருத்துவ மாசுப் பொருட்களும், உலோக மாசுக்களும் அதிகளவு கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் அன்புமணி ராமதாஸ் ஆற்றுநீர் தூய்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது, “அதிக அளவிலான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் காவிரிக் கரையோரமாக உள்ளன. மேலும் சாயப் பட்டறைகள், துணி நிறுவனங்கள், வேதிப்பொருள் ஆலைகள், சர்க்கரை ஆலைகள் என ஏராளமான தொழிற்சாலைகள் அந்த இடத்தில் செயல்பட்டு வருகின்றன. இதனால் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் பாமக தலைவர் மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஏகே மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, “பாமக கட்சியானது தமிழகத்தில் ஆட்சி செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட தாகும். மேலும் தனித்து தேர்தலில் போட்டியிடுவதை குறித்து எவருக்கும் வருத்தம் உண்டா? நாம் ஏன் பிறர் ஆட்சி செய்வதற்காக சேவை செய்ய வேண்டும். இத்தேர்தலில் நாம் தான் அடுத்த ஆட்சியை கைப்பற்ற உள்ளோம். […]
நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிடவுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. இதில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்தது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த பாமக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது. இதனால் அதிமுக – பாமக இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்து விட்டதாக […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பத்தாம் வகுப்பை தகுதியாக கொண்ட பணிகளுக்கு பட்டப்படிப்பு படித்தவர்களும், பட்டப்படிப்பை அடிப்படைத் தகுதியாக கொண்ட பணிகளுக்கு அதைவிட கூடுதலான கல்வித் தகுதி கொண்டவர்களும் போட்டியிடுகின்றனர். அந்த அடிப்படையில் பார்த்தால் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் பட்டதாரிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.இந்த சூழலில் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் […]
நீட் தேர்வை ரத்து செய்வது திமுகவினரின் கடமை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. இதில் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். மேலும் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆர் எஸ் ராஜன் தலைமையில் குழு அமைத்து நீட்தேர்வு பாதிப்பு சம்பந்தமாக […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையையே இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைவாசியும் அதற்கு ஏற்றவாறு உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாய் ஆகவும், எம்- சான்ட் மணல் ஒரு […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்கு அனைவராலும் போற்றத்தக்கது. நாம் அனைவரும் அவர்களுக்கு நன்றி சொல்ல […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தி ரூபாய் 5 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதைத் தொடர்ந்து இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் […]
தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால் அனைத்து சமுதாயத்தினருக்கும் தனி இட ஒதுக்கீடு பெற்றுத்தரப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சியினர் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்சியினர் தங்களின் தேர்தல் அறிக்கைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியலில் ஈடுபட என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் கொள்கை என்றால் என்ன […]
வன்னியர்களுக்கு 10.5% வழங்கி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டில், அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடும் வழங்கும் சட்டமசோதா இன்று மாலை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த செய்தியை அறிந்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கதறி அழுதபடி மருத்துவர் ராமதாஸ் இடம் போனில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. 40 வயது வருட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று அன்புமணி நெகிழ்ந்து அழுதபடியே கூறினார். https://www.youtube.com/watch?v=MpLq9YXbqWA&feature=youtu.be
தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த தகவலை கேட்ட அன்புமணி ராமதாஸ் கண்ணீர் ததும்ப அழுதார். தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் அரசு அவசரம் காட்ட வேண்டாம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என […]