Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரிசி இருப்பில் முரண்பாடு… ரேஷன் கடை ஊழியருக்கு 26,000 அபராதம்… ஆட்சியர் அதிரடி..!!!

அரிசி இருப்பில் முரண்பாடு கண்டறியப்பட்டதால் ரேஷன் கடை ஊழியருக்கு 26,000 அபராதம் விதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அகரதிநல்லூர், இளவங்கார்குடி, விளம்பல், தியானபுரம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் கடைகளில் எடை எந்திரம் சரியாக இயங்குகின்றதா? எனவும் பொருட்களின் இருப்பு விவரம் குறித்தும் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது தண்டலை ஊராட்சி விளமல் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் […]

Categories
தேசிய செய்திகள்

வருமானவரி தாக்கல் செய்யாதவர்களுக்கு…. இன்றே கடைசி வாய்ப்பு…. மிக முக்கிய அறிவிப்பு…!!!

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு  இன்றுடன்  முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2021-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 1 கடைசி நாளாகும். ஆனால் அந்த தேதி முடிவடைந்ததால் அபராதத்துடன் சேர்த்து இன்றைக்கும்  தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இதுவரை வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே கவனம்!!… “அபராதத்துடன் சிறை தண்டனை”…. மறந்து கூட இதை செஞ்சிடாதீங்க…. !!!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தான் விரும்புவார்கள். ஏனெனில் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு. அதோடு ரயில் பயணம் மற்ற போக்குவரத்தை விட வசதியாகவும் இருக்கும். அதன் பிறகு ரயிலில் செல்லும் பயணிகள் சில குற்றங்களை செய்யாமல் இருக்க வேண்டும். ஒருவேளை இந்த குற்றங்களை நீங்கள் செய்துவிட்டால் அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்நிலையில் ரயிலில் என்னென்ன குற்றங்கள் செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது ரயில்வே வளாகத்தில் அனுமதி இன்றி பொருட்களை விற்பனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசை வெளியீட்டு விழா: தளபதி ரசிகர்கள் செய்த சேட்டை…. “வாரிசு” பட தயாரிப்பாளருக்கு வந்த புது தலைவலி…..!!!!!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் “வாரிசு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மிக பிரம்மாண்டமாக நடந்தது. அந்த விழாவில் விஜய் மற்றும் வாரிசு பட நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றனர். அத்துடன் விஜய் ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் விழாவுக்கு வந்திருந்தனர். இதனால் விழா முழுவதும் ரசிகர்களின் மாஸ் ரெஸ்பான்ஸால் அரங்கம் அதிர்ந்தது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் நேரு ஸ்டேடியத்தில் உள்ள அதிக இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டு இருக்கிறது என அதிகாரிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சேதாரம் செய்த விஜய் ரசிகர்கள்…. தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்…? இப்படி பண்ணிட்டீங்களே…!!!!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள  வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் வந்திருந்த விஜய் ரசிகர்கள் அரங்கில் குவிந்தனர். திரையுலக பிரபலங்கள் பாரும் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நேரு உள்விளையாட்டு அரங்கில் அதிகப்படியான இருக்கைகள் சேதமடைந்தது. மேலும், சேத கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின் தயாரிப்பு […]

Categories
உலக செய்திகள்

சாலை விபத்து… 2 பேர் பலி… இந்தியருக்கு ரூ.18 லட்சம் அபராதம்…!!!!!

துபாய் நாட்டில் அல்- பர்ஷா பகுதியில் முக்கிய சாலையின் மையப்பகுதியில் வங்காள தேச நாட்டைச் சேர்ந்த ஒருவர் காரை நிறுத்தியுள்ளார். அதன் பின் திடீரென அந்தக் காரை பின்னோக்கி செலுத்தியுள்ளார். இதில் மற்றொரு காரில் வந்த இந்தியர் ஒருவர் அதனை கவனிக்காமல் வந்து அந்த கார் மீது மோதியுள்ளார். இதனையடுத்து இரண்டு கார்களும் மற்றொரு கார் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சவுதி அரேபியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

“இனி போலீசாருக்கும் அபராதம்”… இப்படி சென்றால்..? டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!!!!

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே தலைக்கவசம் அணிந்து செல்வதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் கிராமங்கள் மற்றும் அதனையொட்டி உள்ள சிறு நகரப் பகுதிகளில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பொருட்காட்சி டெண்டர்… பன் வேர்ல்டு நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக சுற்றுலாத்துறை சென்னை தீவுத்திடலில் 2023 -ஆம் ஆண்டுக்கான 47 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சி பொருட்காட்சியை நடத்துவதற்காக அக்டோபர் 31-ஆம் தேதி டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டரை எதிர்த்து பெங்களூருவை சேர்ந்த பன் வேர்ல்டு ரிசர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை தொடர்ந்துள்ளது. அதில் ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் டெண்டர் திறக்கப்பட்டபோது தங்கள் நிறுவன பிரதிநிதியை வெளியேற்றிவிட்டு டெண்டரை  இறுதி செய்துள்ளது. இதனால் டென்டருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது!… உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வீட்டுவரி செலுத்தவில்லையா?…. ஆக்ரா நகராட்சி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் திகழும் தாஜ்மஹாலை சுற்றிப் பார்ப்பதற்காக உள்நாடு மற்றும் உலக நாடுகளிலிருந்தும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். இந்த நிலையில் முறையாக வீட்டுவரி செலுத்தாத காரணத்தால் தாஜ்மஹாலுக்கு ரூபாய்.1 லட்சத்து 47 ஆயிரம் அபராதம் விதித்து ஆக்ரா நகராட்சி நிர்வாகமானது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதாவது, நடப்பு நிதியாண்டில் வீட்டுவரி செலுத்தாததால் 88 ஆயிரத்து 784 ரூபாயும், அபராதத் தொகையை சேர்த்து மொத்தம் ரூ.1 லட்சத்து 47 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்…. எதற்காக தெரியுமா?… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் இழுத்தடிக்க முயற்சி செய்வதாக கூறி தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூபாய் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த அபராத தொகையை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற தேவையற்ற வழக்குகளை தொடர அனுமதி அளித்த அதிகாரிகளிடம் இருந்து இது அபராத தொகையை தமிழக பள்ளிக்கல்வித்துறை தேவைப்பட்டால் வசூலித்துக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட விளையாட்டு வீரர்…. 1 லட்சம் அபராதம்…!!!

சீனாவில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான கருத்தை கூறிய விளையாட்டு வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. சீன நாட்டில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே அரசாங்கம் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்நாட்டு மக்கள் ஷாங்காய், பீஜிங் போன்ற நகரங்களில் தெருக்களில் இறங்கி  தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் போராட்டம் நடத்துபவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்களும் ஏற்படுகிறது. இதனைத்தொடர்ந்து சீன அரசாங்கம் சில கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்தியது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் விஜய் மீது வழக்கு பதிவு….. “ரூ 500 அபராதம்”….. போக்குவரத்து போலீஸ் அதிரடி….ஏன் தெரியுமா?

போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக காரின் கண்ணாடியில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்திற்காக போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதமானது விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் தேதி பனையூரில் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை சந்திக்க காரில் நடிகர் விஜய் சென்றபோது, அவரை பலரும் பின்தொடர்ந்தனர். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரயில்கள்…. இனி ஆடு, மாடு குறுக்கே வந்தால் ரூ.6 ஆயிரம் அபராதம்…. அரசு புதிய அதிரடி….!!!!

இந்தியாவிலேயே முழுவதும் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீப காலமாக பல வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை. அதனால் இந்த ரயில்களின் குறுக்கே கால்நடைகள் தண்டவாளத்தில் வருவதால் அவை மீது மோதி ரயில்கள் சேதம் அடைகின்றன. எனவே கால்நடைகள் மோதலை தவிர்க்க வேலிகள் மற்றும் தடுப்பு சுவர்கள் அமைப்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. மேலும் ரயில்களின் மீது ஆடு மற்றும் மாடுகள் குறுக்கிட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சி…. வனத்துறையினருக்கு வந்த தகவல்… அதிரடி நடவடிக்கை..!!!

சேலத்தில் குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்ததால் வனத்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் வெள்ளார் சின்னம்மம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது வீட்டில் இருக்கும் குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சியை வைத்து இருப்பதாக டேனிஷ் பேட்டை வனச்சரகர் தங்கராஜுக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. அதன் பேரில் வனத்துறையினர் கோவிந்தராஜ் வீட்டை சோதனை இட்டார்கள். அப்போது அவர் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியில் காட்டுப்பன்றி இறைச்சி இருந்துள்ளது. இதனை வனத்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

984 கோடி ரூபாய் பயணிகளுக்கு கொடுக்க வேண்டும்…. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்கா உத்தரவு…!!!

அமெரிக்க அரசு, ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு பணத்தை திருப்பித்தருவதோடு  அபராதமும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. டாட்டா குழுமத்தால் விலைக்கு வாங்கப்படுவதற்கு முன் பொது துறையாக ஏர் இந்தியா விமான நிறுவனம் செயல்பட்டு வந்தது. கொரோனா பரவிய சமயத்தில் சில விமான போக்குவரத்து அந்நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான சேவை சிலவற்றில் மாற்றமும் செய்யப்பட்டது. ஏர் இந்தியாவின் கொள்கைப்படி, ரத்தான விமானங்களுக்குரிய கட்டணம் கோரிக்கை படி திரும்ப வழங்கப்படும். ஆனால் அதற்கு அதிக தாமதம் […]

Categories
தேசிய செய்திகள்

ஏா் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.11 கோடி அபராதம்…. எதற்காக தெரியுமா?… வெளியான தகவல்….!!!!

விமானம் ரத்து, மாற்று விமானம் ஏற்பாடு செய்தது போன்றவற்றுக்கான கட்டணத்தை பயணிகளுக்குத் திருப்பியளிக்க மிகவும் தாமதித்ததால் ஏா் இந்தியா நிறுவனத்திற்கு அமெரிக்கா 1.4 மில்லியன் டாலா்கள் (ரூ.11.34 கோடி) அபராதம் விதித்து இருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க போக்குவரத்துத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் “சென்ற 2020ம் வருடம் மாா்ச் மாதம் முதல் விமானம் ரத்து செய்யப்பட்டது, மாற்று விமானம் ஏற்பாடு செய்தது போன்றவற்றுக்கான கட்டணத்தை ஏா் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் சரியான நேரத்தில் செலுத்தவில்லை என அமெரிக்க பயணிகளிடமிருந்து போக்குவரத்துத் […]

Categories
மாநில செய்திகள்

தாமதமாக வந்த கூரியர்….. லட்சக்கணக்கில் அபராதம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகி என்பவர், நாகைக்கு 2020 ஆம் வருடம் கூரியர் அனுப்பி இருக்கிறார். ஆனால் அதை டெலிவரியும் செய்யாமல் விசாரிக்க வந்த ஜானகியையும் தொடர்ந்து அலைக்கழித்து வந்தனர். இதையடுத்து 5 மாதம் கழித்து டெலிவரி செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஜானகி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் விசாரணையின் முடிவில் கூரியர் நிறுவனத்திற்கு ரூ.1,55,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ப்ரொபஷனல் கூரியர் நிறுவனம் இது போன்று பல பேரிடம் சேவை குறைபாடு செய்திருக்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்!….. நாளை முதல் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை….. ஏஎஸ்பி திடீர் எச்சரிக்கை….!!!

சிவகங்கை மாவட்ட காரைக்குடி பெரியார் சிலை அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர் பேரணியை தொடங்கி வைத்த பிறகு தலைகவசம் அணிந்தவர்களுக்கு காரைக்குடி ஏ.எஸ்.பி.ஸ்டாலின் இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து தலைகவசம் அணியாமல் வந்தவர்களுக்கு புதிய போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் அபதாரம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாளை முதல் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும். அதனைப் போல கார்களில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்”…. சென்ற 2 நாட்களில் இம்புட்டு அபராத தொகையா‌‌….!!!!

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சென்ற 2-ம் தேதி முதல் போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் என 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் 55 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோல […]

Categories
தேசிய செய்திகள்

“எலான் மஸ்க்கை எதிா்தரப்பாக இணைக்கக் கோரிய விண்ணப்பம்”…. தில்லி உயர்நிதிமன்றம் நிராகரிப்பு…..!!!!!

டிம்பிள் கௌல் என்ற டுவிட்டா் பயனாளா் தன் பக்கத்தில் வரலாறு, இலக்கியம், அரசியல், தொல்லியல் உள்ளிட்ட கல்விசாா்ந்த தகவல்களைப் பதிவிட்டு வந்தாா். இதையடுத்து டுவிட்டரின் விதிகளை மீறியதாகக் கூறி டிம்பிள் கௌலின் கணக்கு முடக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிம்பிள் கௌல் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். இவ்விவகாரத்தில் டுவிட்டா் நிறுவனம் தன்னிச்சையாக செயல்பட்டு இருப்பதாக தன் மனுவில் அவா் குற்றம்சாட்டினாா். கணக்கை முடக்குவதற்கு முன் தன் தரப்பு வாதத்தைக் கேட்க டுவிட்டா் நிறுவனம் கால அவகாசம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கோவா கடற்கரையில் குப்பை போடாதீங்க!…. மீறினால் இவ்வளவு ரூபாய் அபராதம்?…. மாநில அரசு எச்சரிக்கை…..!!!!

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த மாநில அரசு அண்மையில் வெளியிட்ட செய்திகுறிப்பில் “கோவா கடற்கரைகளை சுத்தமாக பராமரிக்கவும், பயணியர் பாதுகாப்பாக உணரவும் பல சட்ட விதிகளை நடைமுறைபடுத்த அரசு முடிவுசெய்துள்ளது. அந்த வகையில் கோவா கடற்ரைகளில் திறந்த வெளியில் சமைக்க மற்றும் வாகனங்களை ஓட்டுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் குப்பை போட்டாலோ, கண்ணாடி பாட்டில்களை உடைத்தாலோ கடும் அபராதமானது விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனை தவிர்த்து சுற்றுலா பயணியருக்கு பல சேவைகள் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால் ஏலம் – போலீஸ் எச்சரிக்கை..!!

மது போதையில் இயக்கியதற்காக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால் ஏலம் விடப்படும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டம் ஒழுங்கை காக்க தமிழக காவல்துறை, தமிழக போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மது போதையில் வாகனம் இயக்கியவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், அபராதம் செலுத்தினால் மட்டுமே திருப்பி கொடுக்கப்படும் என ஏற்கனவே விதி இருக்கிறது. இந்நிலையில் 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்த தவறினால் பறிமுதல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சாலையில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம்”…. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!!!!

சாலையில் குப்பை கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் 83,010 கடைகளில் உரிமையாளர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில் இரண்டு குப்பை தொட்டிகள் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. கடைகளின் உரிமையாளர்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு மாநகராட்சி குப்பை தொட்டிகள் அல்லது குப்பைகளை […]

Categories
தேசிய செய்திகள்

“GOOGLE” நிறுவனத்தை அலறவிட்ட 3 இந்தியர்கள்…. இவர்கள் யார் தெரியுமா….? இதோ முழு விபரம்…..!!!!!

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக கூகுள் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. இந்த கூகுள் நிறுவனம் பயனாளர்களுக்கு பல்வேறு விதமான ஆப்ஷன்களையும், வசதிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனக்கு சந்தையில் இருக்கும் மதிப்பை வைத்து தன்னுடைய பேமெண்ட் வங்கி செயலி மற்றும் செயலி வழி பேமென்ட் போன்றவற்றை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை கூகுள் நிறுவனத்துக்கு மத்திய அரசானது […]

Categories
மாநில செய்திகள்

Cab  கேன்சல் செய்தால் இனி அபராதம்…. Ola, Uberக்கு செக்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

ஓலா, உபர், ராபிடோ  போன்ற ஆன்லைன் முன்பதிவுகளை ஓட்டுனர்கள் ரத்து செய்தாலோ அல்லது பயணிகளை ஏற்றிக் கொள்ள மறுத்தாலும் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பல நேரங்களில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை ஓட்டுநர்கள் ஏற்பதில்லை என்றும் இரவு நேரங்களில் அதிக கட்டணம் கேட்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. எனவே இந்த புகார்களை தொடர்ந்து தமிழக அரசு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.936.44 கோடி அபராதம்…. இதுதான் காரணம்?…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

மொபைல் செயலிகள் (ஆப்ஸ்) அனைத்து பயனர்களையும் சென்றடைய கூகுள் பிளே ஸ்டோர் அத்தியாவசிய ஊடகமாக மாறிவிட்டது. ஆன்ட்ராய்டு மொபைல் போன்களுக்குரிய செயலிகளை உருவாக்கும் உற்பத்தியாளர்களின் முக்கியமான விநியோகஸ்தராக கூகுள் பிளே ஸ்டோர் இருக்கிறது. இது சந்தைக்கு வருகிற செயலிகளை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் அதன் பிளே-ஸ்டோர் (ஆப்ஸ்) செயலிக்குரிய கொள்கைகளை தவறாக பயன்படுத்தியதற்காக இந்திய வணிகப்போட்டி ஆணையம், கூகுள் நிறுவனத்துக்கு ரூபாய்.936.44 கோடி அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே கவனம்… “ரயிலில் மறந்தும் இதை எடுத்து சென்று விடாதீர்கள்”…? கடுமையான அபராதம் விதிக்கப்படும்…!!!!

தற்போது தீபாவளி மற்றும் சத் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோது வருகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சரக்கு பொருட்களுக்கு ரயில்வே தடை விதித்து இருக்கிறது. அந்த பொருட்களுடன் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய முடியாது அப்படி பயணம் செய்பவர்களுக்கு சிறை தண்டனை, அபராதமும் காத்திருக்கிறது. இது தொடர்பாக முன் எச்சரிக்கை பதிவு மற்றும் அறிவுரைகளை வழங்கியிருக்கும் இந்திய ரயில்வே அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு…. இனி மக்கள் இதனை வெளியே எடுத்துச் செல்ல வேண்டாம்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் முக கவசம் அணியாதவர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் கொரோனா வழக்குகள் குறைந்து இருப்பதால் செப்டம்பர் 30ஆம் தேதிக்குப்பின் அபராதம் விதிப்பதை நிறுத்த முடிவு செய்திருக்கின்றது. முன்னதாக டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்பொழுது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து […]

Categories
மாநில செய்திகள்

சாலைகளில் அவசரகால வாகனங்களுக்கு வழி விட தவறினால்…? தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!

சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் போன்ற அவசரகால வாகனங்களுக்கு வழி விட தவறுபவர்கள் மீது பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசானையில் கூறப்பட்டிருப்பதாவது, சாலைகளில் தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை இயக்கினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது காற்று மாசு ஏற்படும் விதமாகவோ […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இன்று முதல் தமிழகம் முழுவதும் அமல்…. இனி இதற்கெல்லாம் அபராதம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இதன்படி லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை, தலைக்கவசம் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாய், சிக்னலை மதிக்காமல் சாலையை கடப்பவர்களுக்கு 500 முதல் 1500 ரூபாய், பொது இடங்களில் வாகனங்களை ஆபத்தான முறையில் நிறுத்திவிட்டு சென்றால் ஆயிரம் முதல் 100 ரூபாய் வரை,அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்தால் 2000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இனி இங்கு விவசாயக் கழிவுகளை எரித்தால்…. ஏக்கருக்கு ரூ.2,500 அபராதம் தான்…. அதிரடி நடவடிக்கை….!!!!

குருகிராமில் விவசாயக்கழிவுகளை எரித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகமானது முடிவு செய்து இருக்கிறது.  ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் விவசாயக்கழிவுகளை எரிப்பதால் சுற்றுக்சூழல் மாசடைகிறது. இதை தடுக்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஹரியாணா மாநிலமான குருகிராமில் மரக் கன்றுகள், விவசாயக் கழிவுகள் எரிப்பதை தடுக்கும் விதமாக அபராதம் விதிப்பதற்கு மாவட்ட நிர்வாகமானது முடிவு செய்துள்ளது. மாவட்டத்தில் விவசாயக் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய்.2,500 அபராதம் விதிக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

கொஞ்சம் கூட பயமில்லை!… தடையை மீறி பிளாஸ்டிக் பைகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

தீபாவளி பண்டிகையையொட்டி கோவை மாநகரிலுள்ள வணிக நிறுவனங்களில் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த சமயத்தில் சில பேர் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனைசெய்து வருகின்றனர். இந்நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்பைகள் விற்கப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து டவுன்ஹால், ஒப்பணைக்காரர் வீதி, தாமஸ் வீதி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தனபால் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 500 […]

Categories
மாநில செய்திகள்

குப்பைகளை கொட்டினால் அபராதம்… மேயரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட பொதுமக்கள்…!!!!

வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களைச் சேர்ந்த 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மூலமாக குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றது. இதனால் குப்பைத் தொட்டி வைக்கும் நடைமுறை தற்போது கைவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் பொதுமக்கள் குப்பைகளை பொது இடத்தில் கொட்டுவதாலும் தரம் பிரித்து தராத காரணத்தினாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா […]

Categories
கிருஷ்ணகிரி திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ 18 வசூலித்த ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ்….. “ரூ 2,10,000 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்..!!

சென்னை மயிலாப்பூர் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸுக்கு ரூ 2,10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் கடந்த 18. 08 2013 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் இயங்கி வரும் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸில் ஒரு உள்ளாடை வாங்கி உள்ளார். இந்த உள்ளாடை மதிப்பு 260. ஆனால் 278 ரூபாய் வசூல் செய்துள்ளது ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ். இதையடுத்து அவர் வீட்டுக்கு சென்றதற்குப் பின் கூடுதல் வசூல் செய்திருப்பதாக அந்த நிறுவனத்திடம் புகார் செய்துள்ளார். அந்த நிறுவனமும் அவருக்கு மீதி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இறப்பு சான்றிதலுக்கு அலைக்கழித்த மருத்துவமனை….. “ரூ 3.10 லட்சம் அபராதம் விதித்து”…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி..!!

நவஜீவன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ரூ 3.10 லட்சம் அபராதம் விதித்து இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான வழி வகையை செய்து தர வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் அருகே செருவலூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய 24 வயது மகன் விக்னேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தென்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பங்கேற்றார். அப்போது தீமிதி இறங்கிய போது அவர் கீழே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் 2000 ரூபாய் அபராதம்…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னையில் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. சென்னையில் பலரும் மாடுகளை வளர்த்து வருகிறார்கள்.ஆனால் அதனை மேய்ப்பதற்கு இடமில்லாமல் தெருக்களில் விடுவது தான் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகின்றது. உணவு தேவைப்படும்போது சாலையில் உள்ள குப்பைகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் சாப்பிட்டுவிட்டு சாலைகளில் நடுவே மாடுகள் படுத்து தூங்குகின்றன.இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக தெரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பான் கார்டு எத்தனை நாட்கள் செல்லுபடியாகும்…? பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இதோ…!!!!!!

பான் கார்டு என்பது நிதி வர்த்தனைக்காக பயன்படுத்தப்படுகின்ற ஒரு முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. வங்கி கணக்கை திறப்பது முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வரை பான் கார்டு அனைத்திற்கும் தேவைப்படும் முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இது KYC ஆகவும் செயல்படுகின்றது பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்யவோ தங்கம் வாங்கவோ அல்லது அரசாங்க திட்டத்தில் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அடையாள அட்டையாக பான் கார்டு பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆதார் உருவாக்கப்பட்ட பிறகும் உங்கள் […]

Categories
உலக செய்திகள்

“அக்.15ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால்”… சென்னை மாநகராட்சி வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு…!!!!

அக்டோபர் 15ஆம் தேதிக்குள் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துபவர்களுக்கு சொத்து வரியில் 5 சதவீதம் தொகை தள்ளுபடி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. உரிய காலத்திற்குள் சொத்துவரி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பல வாய்ப்புகளை மக்களுக்கு அறிவித்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் 2022 -2023 ஆம் வருடத்திற்கான முதல் அரையாண்டுக்கான சொத்து வரியில் உயர்த்தப்பட்ட தொகையை இதுவரை செலுத்தாதவர்களுக்கு விதிக்கப்படும். இரண்டு சதவீத அபராத தொகையும் தள்ளுபடி செய்வதாக […]

Categories
உலக செய்திகள்

கால்பந்து மைதானத்தில் வெடித்த வன்முறை…. கால்பந்து நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!!

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் வன்முறை வெடித்து 174 பேர் சம்பவத்தில் அந்த கால்பந்து நிறுவனத்திற்கு 13 லட்சம் அபராத விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தோனேசிய நாட்டின் மலாங் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் கடந்த சனிக்கிழமை அன்று கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த சமயத்தில், மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அதன் பிறகு மக்கள் அங்குமிங்கும் ஓடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 174 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 180 க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அந்த […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இனி ஜாலியாக வெளியே போகலாம்…. இதற்கு அபராதம் கிடையாது….. அதிரடி முடிவு….!!!!!

பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதத்தை நீக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீன நாட்டில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வைரஸ்  228 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பின் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. உங்ககிட்ட 2 பான்கார்டு இருக்கா…. உடனே முந்துங்கள்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

இன்றைய காலத்தில் பான்கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக மாறி விட்டது. இது இன்றி எந்த நிதிபரிவர்த்தனையும் நடக்காது. நிதி பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கும், வங்கிகணக்கு தொடங்குவதற்கும் பான்கார்டு அவசியமான ஒன்று. வங்கி முதல் அலுவலகம் வரை அது இன்றி எந்த நிதிப்பணியையும் செய்ய இயலாது. எனினும் பான்கார்டு குறித்த தவறு பெரும் நிதியிழப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? அதாவது நீங்கள் 2 பான் கார்டுகள் வைத்திருந்தால், அபராதம் தொகை செலுத்தவேண்டும். மேலும் உங்கள் வங்கிக்கணக்கும் முடக்கபடலாம். அத்துடன் 10 […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி சாலையில் மாடுகள் திரிந்தால் 3000 ரூபாய் அபராதம்….. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!

சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் சிரமங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை 1550 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக மாநகராட்சி தற்போது உயர்த்தியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தெருக்களில் சுற்றி தெரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 1550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ. 6.79 கோடி அபராதம்” ஏ.ஆர் ரகுமான் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரம் இருப்பதாக ஜிஎஸ்டி நிர்வாகம் கோர்ட்டில் தகவல்…!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரகுமான். இவர் தன்னுடைய படைப்புகளின் காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு வழங்காததற்காக ஜிஎஸ்டி ஆணையம் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அதில் 6.79 கோடி ரூபாய் அபராதம்  செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நோட்டீசை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த 2020-ம் ஆண்டு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னுடைய இசை பதிப்புகளின் காப்புரிமை நிரந்தரமாக தயாரிப்பாளர்களுக்கு வழங்கப் […]

Categories
தேசிய செய்திகள்

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இணையதளத்தில் செல்போன் முதல் வீட்டுஉபயோக பொருட்கள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமேசான் தளத்தில் இருந்த பிரஷர் குக்கர் ஒன்றை 2265 வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தி இருக்கின்றனர். அப்போது தான் இந்த பிரஷர் குக்கர் தரமற்றது எனவும் அதில் இந்தியத் தரச்சான்றான BIS இல்லாமல் விற்கப்பட்டதும் தெரியவந்தது. அதன்பின் அமேசான் தளத்தின் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நுகர்வோர் பாதுகாப்பு விதியை அமேசான்நிறுவனம் கடைபிடிக்கவில்லை எனக்கூறி […]

Categories
தேசிய செய்திகள்

இந்து சிலையை தொட்ட தலித் சிறுவனுக்கு 60,000 அபராதம்… தாய் எடுத்த அதிரடி முடிவு… தீவிர விசாரணையில் போலீஸ்..!!!!!

கர்நாடகாவின் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் உல்லேரஹள்ளி எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 100 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். அதில் 80 சதவீதம் பேர் ஒக்கலிகா என்னும் சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி கிராம மக்கள் பூதையம்மா திருவிழா  நடத்தி இருக்கின்றனர். ஆதிக்க ஜாதியினர் மட்டுமே கோயில் கோவில் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்பது அந்த கிராமத்தில் காலம் காலமாக பின்பற்றக்கூடிய வழக்கம் என தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் ரானேவுக்கு சொந்தமான பங்களா…. ” ரூ. 10 லட்சம் அபராதத்துடன் இடிக்க உத்தரவு” மும்பை கோர்ட் அதிரடி….!!!!

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சராக நாராயணன் ரானே இருக்கிறார். இவர் மும்பையில் உள்ள ஜூகு கடற்கரையில் ஒரு பங்களா கட்டியுள்ளார். இந்த பங்களா கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளது. இந்த பங்களாவை ஒழுங்கு படுத்த கோரி மாநகராட்சியிடம் மத்திய அமைச்சரின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை மாநகராட்சி நிர்வாகம் மறுத்த நிலையில், 2-வது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே கவனம்…… இனி இதற்கும் அபராதம் விதிக்கப்படும்….. மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. அவ்வாறு தெருக்களில் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550 விதிக்கப்படுகிறது. அவ்வாறு மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர் அதை மாட்டுத் தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்துச் செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பாத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு?… சார் என்று கூப்பிட்டால் அபராதம்…. வேடிக்கையான தகவல்….!!!!

மும்பையில் செயல்பட்டு வரும் ஆர்.பி.ஜி., என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, அலுவலகத்தில் தன்னை யாரேனும் சார் என்று கூப்பிட்டால் ரூபாய் 50 அபராதம் விதித்து வருகிறார். இது தொடர்பாக ஹர்ஷ் கோயங்கா கூறியதாவது “சார் என்ற வார்த்தை ஒரு நவீனமான அடிமைத்தன வார்த்தை ஆகும். இதுபோன்ற அடிமைத்தனமான வார்த்தைகளை களைய வேண்டியது அவசியமாகும். ஆகவே தான் என்னை பெயர் சொல்லி அழைக்க கூறுகிறேன். இருப்பினும் என்னிடம் பணியாற்றும் ஊழியர் ஒருவர் என்னைப் பெயர் சொல்லி அழைக்க […]

Categories
பல்சுவை

நீங்க ஹெல்மெட் அணிந்தாலும் இதை செய்யாவிட்டால் அபராதம்…. கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!

ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அரசு கொண்டுவந்துள்ள விதிமுறை பலரும் அறிந்த ஒன்றுதான் .ஆனால் அதனை முறைப்படி அணிய தவறினால் அபராதம் உள்ளது என்பதை பலருக்கும் தெரியாத ஒன்று. அதாவது ஹெல்மெட்டில் உள்ள ஸ்ட்ராப்பை முறையாக அணிந்திருக்க வேண்டும். ஒருவேளை அதனை சரியாக போடாவிட்டால் அந்த பயனை ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட் அணிவது சட்டப்படி குற்றம். கண்களை மறைக்கும் வகையில் கண்ணாடி இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் பி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் “இனி ராங் ரூட்டில்” சென்றால் அபராதம்….. எவ்வளவு தெரியுமா?….. போலீஸ் அதிரடி….!!!!

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூல் செய்யும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு இ-சலான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு பணமில்லா பரிவர்த்தனை மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல் ஈடுபடுபவரிடம் இருந்து அபராதம் வசூல் செய்யப்பட்ட வந்தது. தொடர்ந்து qr கோடு முறையில் அபராதம் செலுத்தும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. முக்கியமாக மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், கைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் […]

Categories

Tech |