அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட, சூழலில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவுனில் ஆளுநரை சந்தித்து முறையாக அழைப்பு விடுக்க சென்றுள்ளார். ஜனவரி 9ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருக்கின்றது. பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் ? என்பதெல்லாம் அன்றைய தினம் நடைபெறக்கூடிய அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருக்கின்றார். […]
Tag: அப்பாவு
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்திற்குள் நடைபெறுகின்ற சம்பவம் வேறு, இது கட்சியில் வராது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இது போல ஒரு நிகழ்வு. அங்கு கட்சி உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரே. சிவசேனா கட்சியில் ஒரு பிரச்சனை வந்து, அங்கே இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கே முதலமைச்சராக இருக்கிறார். அங்க இருக்கின்ற தலைவரா முதலமைச்சராக இருக்கிறார். ஆக சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில்தான் முதலமைச்சர் வர முடியும். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் […]
இன்று தமிழக சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஒரு கடிதம் இல்லை, இரண்டு கடிதம் இல்லை, மூணு கடிதம் இல்லை… நாலு கடிதம் தந்திருக்கிறார்கள். அதிமுக விவகாரம் தொடர்பான ஓபிஎஸ் அவர்கள் இரண்டு கடிதமும், எடப்பாடி அவர்கள் இரண்டு கடிதமும் கொடுத்து இருக்கின்றார்கள். அலுவல் ஆய்வு குழுவின் உறுப்பினராக ஓபிஎஸ் இருக்கின்றார். அந்த அடிப்படையில் அவர் கலந்து கொண்டார். மாண்புமிகு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவினுடைய 51 வது ஆண்டு விழா இன்னைக்கு […]
இன்றைய சட்டப்பேரவை தொடர் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதும் விதமாக… குறிப்பாக மறைந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா உட்பட பல தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இன்றைய கூட்டம் அவர்களுக்கு மரியாதை செலுத்தியதோடு முடித்து வைக்கப்பட்டது. நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டமன்றம் கூட்டத்தொடர் தொடங்கும். அதில் இந்த ஆண்டு 2022- 2023ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கான வரவு, செலவு திட்டத்தினை நம்முடைய மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் பேரவை தலைவர் அப்பாவுக்கு ஓ. பன்னீர்செல்வம் சார்பில் நேற்று கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக நானே நீடிக்கிறேன். அதிமுகவின் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக ஏதாவது கடிதம் அளிக்கப்பட்டால், அது குறித்து எனது கருத்தை கேட்காமல் என்ன நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கும் நிலுவையில் […]
தமிழகத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தொடர்பாக சபாநாயகரிடம் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி போன்றோர் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் விஷயம் நீதிமன்றத்தில் இருப்பதால் தான் எந்த ஒரு பதிலும் கூற முடியாது என தெரிவித்துள்ளார். மேலும் அவரே சொல்லாத போது நான் மட்டும் என்ன சொல்ல முடியும். அதே நேரம் பழைய நடைமுறை தொடரும் என […]
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டிய தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் […]
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவை சபாநாயகர் அப்பாவும் துவங்கி வைத்தார். அதோடு அவர் துப்புரவு பணியாளர்களுக்கு 84 பேட்டரி வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் பிறகு அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அதில் கூறியதாவது, “தமிழகத்தைப் பொருத்தவரை வைரஸ் பரவல் வேகம் எடுத்து வருகிறது. எனவே அரசு அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் சீராக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. […]
தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது ஜனவரி 5ஆம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பாவு கூறுகையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது புனித ஜார்ஜ் கோட்டையில் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும். ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்” என்று அவர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூடுவதை அடுத்து அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு நாளையும், நாளை […]
சபாநாயகர் அப்பாவுவின் கருத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார். சட்ட சபைத் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு சரியான தீர்வு காண வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மாநில சட்ட மன்றங்களின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு இமாச்சல பிரதேசத்தில் கடந்த வாரம் நடைபெற்று முடிந்தது. நூற்றாண்டு காணும் பெருமைமிக்க தமிழ்நாடு சட்ட மன்றத்தின் தலைவராக அப்பாவு அவர்கள் அந்த மாநாட்டில் ஆற்றிய உரைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். […]
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்பப் பெற்றது வரவேற்கத்தக்கது என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை சபாநாயகர்கள் மாநாடு மாநாடு சிம்லாவில் நடைபெற்றது இதில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது: “மாநிலங்களில் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விவாதிக்க சபாநாயகர் மாநாடு நடைபெற்றது. அதில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள தீர்மானங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் வருடம் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். எனவே கொடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது? என்பது இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் இருந்து அதிமுகவினர் இன்று வெளிநடப்பு […]
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் படத்திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை வழங்கியுள்ளார். ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைப்பதற்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுத்து வந்தார். இந்த அழைப்பை […]