நடப்பாண்டில் அமெரிக்க நாட்டில் பெரியளவில் 381 துப்பாக்கிசூடு சம்பவங்கள் அரேங்கேறியுள்ளது. இது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1.7க்கும் கூடுதலான பெரியளவிலான துப்பாக்கிசூடு எண்ணிக்கை ஆகும். அந்த நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கி வன்முறைக்கு வேதனை தெரிவித்த அதிபர் பைடன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை பாதுகாக்க தாக்குதல் நடத்தகூடிய ஆயுதங்களை தடைசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என கூறினார். இதையடுத்து சென்ற ஜூன் 22ஆம் தேதி துப்பாக்கி பாதுகாப்பு மசோதா கொண்டு வருவதற்கான முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. […]
Tag: அமரிக்கா
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் மியான்மர் ராணுவம், அந்நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி,அதிபர் வின் மைண்ட் போன்ற முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் அந்நாட்டு […]
அமெரிக்காவில் உள்ள ஆசிரமம் ஒன்று மகாத்மா காந்தியின் அஸ்தி தங்களிடம் தான் இருக்கிறது என்று சர்ச்சையை கிளப்பி உள்ளது. மகாத்மா காந்தி 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார். அவரின் இறுதிச் சடங்குகளுக்கு பின் அவரது அஸ்தி 20க்கும் மேற்பட்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பல இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சில வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் காந்தியின் உலக அமைதி நினைவுச்சின்னம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது. இதனை பரமஹம்ச யோகானந்தா என்பவர் 1950இல் நிறுவியதாக […]
மர்ம நபர் வீட்டில் பணயக்கைதிகளாக பிடித்து வைத்தவர்களை சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் உள்ள ஒரிகான் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் ஒரு வீட்டில் இருந்த குடும்பத்தினரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பது திங்கள் மதியம் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த நபருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால் இதில் கோபமடைந்த அந்த நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் பலர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக […]
ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் மருந்து கேட்டு 30 நாடுகள் இதுவரை விண்ணப்பித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30 நாடுகள் மருந்து கேட்டு விண்ணப்பித்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி கிளோரோகுயின் எனும் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்துகின்றன. இதையடுத்து, உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி தொடர்பாக முடிவெடுக்கப்படும் என இந்திய மருத்துவ ஆரய்ச்சி கழகத்தின் துணை இயக்குனர் டாக்டர் ரமன் கங்காகேக்டர் தகவல் அளித்துள்ளார். கொரோனாவின் கோரப்பிடியில் […]