அமெரிக்காவை புரட்டி போட்ட ஐயான் சூறாவளியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபரை புயல் தாக்கிய வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே ஐயான் சூறாவளி புயல் நேற்று மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. சூறாவளி கரையை கடந்தபோது 4-ஆம் பிரிவில் அதிக ஆபத்து நிறைந்த சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டு […]
Tag: அமெரிக்காவின்
உடா மாகாணத்தில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. அமெரிக்கா நாட்டில் உடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மோவாப் பகுதியில் கடைகளுக்குள் புகுந்த வெள்ள நீரால் வியாபாரம் பாதிக்கப்பட்டு கடை உரிமையாளர்கள் அவதிக்குள்ளாகினர். இந்த வெள்ள நீரை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட சில சாலைகள் மற்றும் பாலங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளதாக மோவாப் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர்களுடன் நீரில் குதித்த இந்திய வாலிபர் உயிரிழந்துள்ளார். தெலுங்கானா நாட்டில் ராஜண்ணா-சர்கில்லா மாவட்டத்தில் வெமுலவாடா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் யஷ்வந்த் குமார். இவருடைய வயது 25 ஆகும். இவர் ஐதராபாத்தில் பி.டெக் படித்துள்ளார். பின்பு, கடந்த டிசம்பர் மாதம் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதற்காக அமெரிக்காவின் மேற்கு புளோரிடாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று பொழுதுபோக்கிற்காக தனது நண்பர்களான சுபஉதய், மைசூரா, சரண், ஸ்ரீகர் […]
சிலி நாட்டில் அரிய வானியல் நிகழ்வை மக்கள் கண்டுகளித்தனர். சிலி நாட்டில் பவுர்ணமி நாளான நேற்று, வானில் நிலா இளஞ்சிவப்பு நிறத்தில் பிரகாசமாக ஜொலித்து உள்ளது. இந்த நிலாவை சிலி நாட்டில் இளஞ்சிவப்பு நிலா என அழைக்கின்றனர். அதாவது சிலி நாட்டில் வசந்தகாலத்தில் பூக்கும் பிங்க் ப்ளோட்ஸ் என்ற அமெரிக்க தாவரத்தின் பெயரையே ஏப்ரல் மாதம் தோன்றும் இந்த முழு நிலவிற்கு பிங்க் மூன் என வைத்து அழைக்கின்றனர். இந்த அரிய நிகழ்வை அந்நாட்டு மக்கள் கண்டுகளித்துள்ளனர்.
அமெரிக்க துணை ஜனாதிபதியின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தொற்றில் இருந்து விடுபட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது அனைத்து நாடுகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் அமெரிக்காவிலும் தடுப்பூசி செலுத்தும் பணியானது முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவரான டக் எம்ஹொப்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து […]