Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் நிதியுதவி…. ஜெலன்ஸ்கியிடம் உறுதியளித்த பிரபல நாட்டு அதிபர்….!!

உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் நிதியுதவி செய்யப்படும் என்று ஜெலன்ஸ்கியிடம் ஜோ பைடன் தொலைபேசியில் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து ஏழரை மாதங்களாக நீடித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷ்யா இராணுவ படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய படையிடமிருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைனில் நடந்து வரும் போரில் […]

Categories
உலக செய்திகள்

நோட்டோ அமைப்பின் உறுப்பினராக…. சுவீடன், பின்லாந்து நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் வரவேற்பு….!!

நேட்டோ அமைப்பின் நாடுகளான சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் இணைவதற்கு துருக்கி தொடர்ந்து எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் மேட்ரிட் நகரில் நடந்த தலைவர்களுடனான கூட்டத்தில், நேட்டோ அமைப்பில் இவ்விரு நாடுகளும் இணைவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அமைப்பில் தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, துருக்கி தனது எதிர்ப்பை  கைவிட்டது. இதனை துருக்கியின் அதிபர் டயீப் எர்டோகன் வெளியிட்டுள்ளார். இந்த நேட்டோ அமைப்பின் உறுப்பினர்களாக சுவீடன் மற்றும் பின்லாந்து போன்ற இரு நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்…. நியூசிலாந்து பிரதமரிடம் ஆலோசனை….. வெளியான தகவல்…!!!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அமெரிக்காவிற்கு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நியூசிலாந்து பிரதமரிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துரையாடினார். அப்போது அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதால் […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பரவல்…. பூஸ்டர் தடுப்பூயை…. செலுத்தி கொண்ட அமெரிக்க அதிபர்….!!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்புசி  போட்டுக்கொண்டார். அமெரிக்க நாட்டில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து  வருகின்றது. இதனால் அங்கு  கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் அமெரிக்காவில் முதல் டோஸ் தடுப்பூசியை 21 கோடி 36 லட்சத்து 57 ஆயிரத்து 193 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 18 கோடி 38 லட்சத்து 88 ஆயிரத்து […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களிடம் சிக்கி தவிக்கும் நாடு…. உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா…. தகவல் வெளியிட்ட ஜோ பைடன்….!!

ஆப்கானிஸ்தானுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்கா அதிபர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில்  65% நிலப்பரப்பை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் நேற்று மாலை ஆப்கானிஸ்தானின் வடபகுதியிலுள்ள பாக்லான்  மாகாணத்தின் தலைநகரான பூல்-இ-ஹுமியை கைப்பற்றியுள்ளனர். இதற்காக தலீபான்களின் கோட்டையான லேகின் பாலைவனத்தில் ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

ஜோபைடன்-விளாடிமிர் புடின் பங்கேற்கும் மாநாடு.. வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்கவுள்ள உச்சி மாநாடு தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இரு நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடானது இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடக்கவுள்ளது. இதில் உக்ரைன், ரஷ்யாவின் பக்கத்து நாடுகளின் அரசியல் நிலை, அணு ஆயுதங்கள் குறைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளார்கள். ரஷ்ய நாட்டில் நிகழும் மனித உரிமை மீறல்கள், சிறை தண்டனை, எதிர்க்கட்சி தலைவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு உதவ வேண்டும்…. அமெரிக்க அதிபர் பைடனிடம் வேண்டுகோள்…..!!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
உலக செய்திகள்

“அதிபர் ட்ரம்ப் கிட்ட பேசணும்” 13 மணி நேரம் டவரில் தொங்கிப் போராட்டம்…. இளைஞரின் செயலால் பரபரப்பு….!!

இளைஞர் ஒருவர் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேச வேண்டும் என்று 13 மணி நேரம் டவரில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பின ஆதரவு இயக்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் இருக்கும் ட்ரம்ப் டவரில் டவரில் தொங்கிக்கொண்டிருந்த படி காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தான் உடனடியாக அதிபர் ட்ரம்பிடம் பேச வேண்டும். அதோடு ஊடகங்களை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தேவை ஏற்பட்டால் தனது […]

Categories
Uncategorized

உங்கள் பிரார்த்தனைகளுக்கு… என் மனமார்ந்த நன்றி… வெள்ளை மாளிகையில் கையசைத்த டிரம்ப்…!!!

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.வெள்ளை மாளிகையில் தனிமையில் இருந்த ட்ரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்த காரணத்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

டிரம்ப் ஆட்சியை அகற்ற சபதம் ஏற்போம்…!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான ஆட்சியை தூக்கி எறிவோம் என துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ருத் பேடர் கிங்ரர்ட் மரணம் அடைந்ததை அடுத்து புதிய நீதிபதியாக ஆலிகோனி ஃபேடட் என்பவரை அதிபர் டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இதற்கு எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை அடுத்து நீதிபதி நியமனம் தொடர்பாக முடிவெடுக்க செனட் […]

Categories
உலக செய்திகள்

இந்திய வம்சாவளியினர்… அனைத்து ஓட்டுகளும் எனக்கு தான்… ட்ரம்ப் புகழாரம்…!!!

இந்திய வம்சாவளியினர் அனைவரும் தனக்கே தங்கள் வாக்குகளை வழங்குவார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. அந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாக தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பிடன் போட்டியிடுகின்றார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இரு தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ஈரான் மல்யுத்த வீரர்… மரண தண்டனை வேண்டாம்… அமெரிக்க அதிபர் கோரிக்கை…!!!

மல்யுத்த வீரரின் மரண தண்டனையை நிறுத்துங்கள் என ஈரானுக்கு அமெரிக்கா அதிபர் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஈரானில் கடந்த 2018 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை சரியாக அரசு எதிர் கொள்ளாததால், அதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அந்தப் போராட்டத்தில் அந்நாட்டின் புகழ் பெற்ற மல்யுத்த வீரர் நவிட் அப்கராய்(27) பங்கேற்றார். அது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்த நிலையில், அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து சில […]

Categories
உலக செய்திகள்

தலாய்லாமாவை சந்திக்காத டிரம்ப்… மிகப்பெரிய அவமானம்… ஜோ பிடன் அதிரடிப் பேச்சு…!!!

தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் விவகாரத்தில் சீனாவிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வேன் என ஜோ பிடன் உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். இந்த ஜனாதிபதி தேர்தலில் சீனாவின் தலையீடு இருப்பதாகவும் அதனால் ஜோ பிடன் வெற்றி பெறுவதற்கான அனைத்து வேலைகளையும் சீனா செய்து வருவதாகவும் […]

Categories
உலக செய்திகள்

‘என்னை கொல்ல போறாங்க’…அமெரிக்கா அதிபரின் திட்டம்…வெனிசுலா அதிபர் குற்றசாட்டு…!!!

அமெரிக்க அதிபர் தன்னை கொல்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என வெனிசுலா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளமிக்க நாடாக திகழ்கிறது. தற்போது பங்கு பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்கள் நிலவிக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியில் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் பெற்றுள்ளன. தனது நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்கு அமெரிக்காவே முழு காரணம் என்றும், வெனிசுலாவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சி செய்வதாகவும் அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபரின் இளைய சகோதரர் மறைவு… அதிபர் ஆழ்ந்த இரங்கல்…!!!

அமெரிக்க அதிபரின் இளைய சகோதரர் ராபர்ட் டிரம்ப் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் இளைய சகோதரர் ராபர்ட் டிரம்ப்(71) காலமானார். உடல்நலக்குறைவால் நியூயார்க் சிட்டியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சகோதரர் மரணம் பற்றி அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” எனது அருமையான சகோதரர் ராபர்ட் சனிக்கிழமை இரவு காலமானார் என்பதை நான் மிகுந்த மன வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கின்றேன். அவர் என் சகோதரர் […]

Categories
உலக செய்திகள்

உலக அளவிலான கொரோனா பரிசோதனை… 2வது இடத்தைப் பிடித்த இந்தியா… அமெரிக்க அதிபர்…!!!

அமெரிக்காவிற்கு அடுத்ததாக பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இது குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில், “அமெரிக்காவில் தற்போது வரை 50,75,678 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் தற்போது வரை 6.5 கோடி […]

Categories
உலக செய்திகள்

சீனா செய்த செயலால் அணுகுமுறை மாறிவிட்டது… அதிபர் டிரம்ப் பேச்சு…!!!

கொரோனாவிற்கு பின்னர் சீனாவின் மீதுள்ள அமெரிக்காவின் அணுகுமுறை முழுவதுமாக மாறிவிட்டது என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். உலகில் உள்ள நாடுகளில் பெரிய பொருளாதார நாடுகளாக அமெரிக்காவும் சீனாவும் இருந்து வருகின்றன. சில நாட்களாகவே இருநாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தக உறவில் தொடங்கி  தென்சீனக்கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீன அரசின் அடக்குமுறை, ஹாங்காங்கின் ஜனநாயகத்தை பறிக்கக்கூடிய செயல்பாடுகள் வரை பல்வேறு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த […]

Categories

Tech |