பிரபல நாட்டின் பயங்கரவாதியான பின்லேடன் மகன் உமர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக விளங்கும் பென்டகன் மீதும், உலக வர்த்தக மையம் மீதும் கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 ஆயிரம் அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். 2021-ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் தேதி பின்லேடன் கொல்லப்பட்டார். இவரின் மகன் உமர் பின்லேடன் ஆவார். தொழிலதிபரான இவர் தற்போது தனது […]
Tag: #அமெரிக்கா
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக கடந்த 1993-ஆம் வருடம் முதல் 2001-ஆம் வருடம் வரை பதவி வகித்த பில் கிளின்டனுக்கு தற்போது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நான் நன்றாக இருக்கிறேன். மேலும் பூஸ்டர் டோஸ் மற்றும் கொரோனா தடுப்பூசி மற்றும் போட்டிருப்பதால் எனக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். […]
அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென செய்த செய்கையால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் விமானம் நடுவானில் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அதில் பயணித்த 34 வயதான பெண் பயணி ஒருவர் திடீரென விமானத்தின் கதவை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். அதனைப் பார்த்த விமான பணிப்பெண் ஒருவர் அவரை அழைத்துச் சென்று ஓரமாக அமர வைத்தார். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் […]
அமெரிக்க நாட்டில் அமைந்திருக்கும் உலகிலேயே மிகப்பெரிய எரிமலை 38 வருடங்கள் கழித்து வெடித்ததால் 2 லட்சம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேற்கில் பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் இருக்கும் ஹவாய் தீவில் மவுனா லோவா என்னும் எரிமலை அமைந்திருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய எரிமலையான இதில் சுமார் 38 வருடங்கள் கழித்து வெடிப்பு உண்டானது. அதிகளவில் நெருப்பு குழம்பு உண்டானதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, எரிமலையிலிருந்து நெருப்பு குழம்புகளும் வெளியேறிக் […]
சீன நாட்டில் அதிக நேரமாக தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவனுக்கு தண்டனையாக இரவு முழுக்க அவரின் பெற்றோர் தொலைக்காட்சி பார்க்க வைத்தது கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் வசிக்கும் ஒரு தம்பதி தங்களின் 8 வயது மகனிடம் “நாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நேரமாகும். எனவே, வீட்டு பாடங்களை முடித்துவிட்டு 8:30 மணிக்கு தூங்கு” என்று கூறிவிட்டு சென்று இருக்கிறார்கள். மீண்டும் வீடு திரும்பிய பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் வீட்டு […]
அமெரிக்க நாட்டில் 21 மாத குழந்தையாக கடத்தப்பட்டவர் சுமார் 51 வருடங்கள் கழித்து குடும்பத்தினருடன் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 1971 ஆம் வருடத்தில் மெலிசா ஹைஸ்மித் என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தங்களின் 21 மாத குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு பராமரிப்பாளரை நியமித்திருக்கிறார்கள். ஒரு நாள் பராமரிப்பாளரிடம் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு கூறிய அவரின் தாய் வெளியில் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்து பார்த்த […]
முதியவர் ஒருவர் தான் பள்ளி படிக்கும்போது தோல்வியடைந்த பாடத் தேர்வை எழுதுகிறார். இங்கிலாந்து நாட்டில் உள்ள சிசெஸ்டர் நகரில் அமைந்துள்ள ஒரு முதியோர் இல்லத்தில் எர்னி பஃபெட் என்ற 84 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் தான் பள்ளி படிக்கும் போது இயற்பியல் பாடத்தில் தோல்வியடைந்தார். அதன்பின்னர் 3 முறை தேர்வு எழுதிய அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால் அவர் அந்த முயற்சியை கைவிட்டு விட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு தான் தோல்வியடைந்த […]
அமெரிக்காவில் நண்பனின் வலியுறுத்தலால் லாட்டரி டிக்கெட் வாங்கிய நபருக்கு 1.22 கோடி பரிசு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மியாவ் சேர்ந்த டேனி ஜான்சன் என்ற நபர் தனது நண்பருடன் செல்லும்போது அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் லாட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாகவே இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த ஜான்சன் , ஒருமுறை மட்டும் வாங்குகிறேன் என்ற கட்டாயத்தில் தனது நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு லாட்டரி வாங்கியுள்ளார். அந்த ஒத்த லாட்டரியில் அடித்தது அதிர்ஷ்டம் […]
அமெரிக்காவின் கைபாவையாக ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியோ செயல்படுவதாக வடகொரிய அமைச்சர் விமர்சித்துள்ளார். தென்கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் வடகொரிய வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐநா பொதுச் செயலாளர் அனண்டோனியோ கட்டெரஸ் மிகவும் தெளிவான அணுகுமுறையை மேற்கொள்வதாகவும் இதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது அமெரிக்காவின் கைபாவையாக ஐநா செயல்படுவது தெளிவாக நிரூபிக்கிறது எனவும் […]
அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்து ஆர்டெமிஸ் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்ப உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இல்லாமல் நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிட்டு அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலமாக ஓரியன் விண்கலத்தை கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் அனுப்ப திட்டமிட்டபோது தொழில்நுட்ப கோளாறு மற்றும் சூறாவளி போன்ற பல்வேறு காரணங்களால் மூன்று முறை தள்ளி […]
அமெரிக்க நாட்டில் பல்பொருள் அங்காடி ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் பல பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஒரு மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார். அதன்பிறகு, அங்கிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இதில் பல பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் மேற்கொண்ட நபரை கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் […]
அமெரிக்க நாட்டில் கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டதில், நியூயார்க் மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் பல மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதிலும் நியூயார்க்கில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. அம்மாகாணம் மொத்தமும் கடுமையான காற்று வீசுவதோடு பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஏரி நகரத்தில் ஒரே நாளில் சுமார் 150 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதன் காரணமாக குடியிருப்புகள், சாலைகள் வாகனங்கள் என்று அனைத்திலும் பனி […]
அமெரிக்க நாட்டில் சுமார் 300 கிலோ எடையுடைய மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் நடந்திருக்கிறது. அமெரிக்க நாட்டில் தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த 36 வயதுடைய டாமி ஸ்லேடன் என்ற கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்த பெண் அதிக பருமன் கொண்டவர். அவர் ஏறக்குறைய 300 கிலோ எடை உடையவர். இந்நிலையில், அவரை போன்றே பருமனான கலீப் வில்லிங்டன் என்ற நபருடன் அவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. டாமி ஸ்லேடன் தெரிவித்திருப்பதாவது, டாமி ஸ்லேடன் என்று தான் என்னை […]
வேட்டைக்குப் போன முதியவரை கண்டுபிடித்துக் கொடுத்த நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாணத்தில் வழக்கம்போல் 80 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டுப் பகுதியில் வேட்டையாட சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் தான்ஆபத்தில் இருப்பதை தெரிவிக்கும் வகையில் முதியவர் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்ட முதியவரின் மனைவிபோலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காணாமல் போன முதியவரை தேடும் பணியில் களம் இறக்கப்பட்ட கே-9 லோகி என்னும் […]
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பின் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கின் தடை நீக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு 2 வருடங்களுக்கு முன் தடை செய்யப்பட்டது. மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக கருத்துக்கள் பதிவிட்டதாக டிரம்பின் கணக்கை முடக்கினர். சமீபத்தில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நிலையில் டிரம்பின் கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியுமா? என்று கேள்விகள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கிற்கான தடையை நீக்கலாமா? என்று […]
உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய நாடுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையானது, ரஷ்ய நாட்டுடன் போரை நிறுத்த அமைதி பேச்சு வார்த்தை மேற்கொள்ள உக்ரைன் ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. இது பற்றி வெள்ளை மாளிகையினுடைய தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜான் கிர்பி தெரிவித்ததாவது, ரஷ்ய ஜனாதிபதி தங்கள் படைகளை உக்ரைனிலிருந்து […]
வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்திருந்தாலும் கூட அதற்கெல்லாம் மதிப்பு கொடுக்காமல் கிம் ஜாங் அன் அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அமெரிக்காவைத் தாக்கும் விதமாக நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணையை வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் வைத்து பரிசோதனை செய்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த சோதனையில் கண்டம் விட்டு கண்டம் […]
உக்ரைன் ரஷ்யாவின் மீதான படையெடுப்பு போல தைவான் மீதான தாக்குதல் சீனாவிற்கு தவறானதாக அமைந்து விடும் என அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மில்லி கூறியுள்ளார். இது பற்றி ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மில்லி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தைவானின் பெரும் பகுதி மலைப்பாங்கான தீவு. அதனால் தைவான் ஜல சந்தியின் குறுக்கே தைவானை தாக்குவதும் முற்றுகையிடுவதும் மிகவும் கடினமான வேலையாகும். மேலும் “இது மிகவும் கடினமான ராணுவ நோக்கம். சீனர்களுக்கு இதில் அதிகமான […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மாஸ்க் சமீபத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு twitter நிறுவனத்தை வாங்கினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி, பல்வேறு கணக்கீடுகளை யோசிக்க வைத்துள்ளது. உலகில் மொத்த மக்கள் தொகையே 8 பில்லியன் ( அதாவது தற்போதைய கணக்கீட்டின் படி 8,000,251,675 பேர்) உலகின் மக்கள் தொகையை விட அதிக அளவு தொகையை கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் […]
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வர்ஜுனியா மாகாணத்தின் சார்லோட்டஸ்வில்லே எனும் நகரில் வர்ஜுனியா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது . இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணியை சேர்ந்த மாணவர்கள் சிலர் வெளியே நடைபெற்ற போட்டியில் பங்கேற்றுள்ளனர். அதன் பின் மாணவர்கள் ஒரு பேருந்தில் பல்கலைகழகத்திற்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது அதிலிருந்த மாணவர் ஒருவர் தீடிரென துப்பாக்கியால் சரமாரியாக தாக்குதல் […]
அமெரிக்க அரசு, ஏர் இந்தியா நிறுவனம் பயணிகளுக்கு பணத்தை திருப்பித்தருவதோடு அபராதமும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. டாட்டா குழுமத்தால் விலைக்கு வாங்கப்படுவதற்கு முன் பொது துறையாக ஏர் இந்தியா விமான நிறுவனம் செயல்பட்டு வந்தது. கொரோனா பரவிய சமயத்தில் சில விமான போக்குவரத்து அந்நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டது. மேலும் விமான சேவை சிலவற்றில் மாற்றமும் செய்யப்பட்டது. ஏர் இந்தியாவின் கொள்கைப்படி, ரத்தான விமானங்களுக்குரிய கட்டணம் கோரிக்கை படி திரும்ப வழங்கப்படும். ஆனால் அதற்கு அதிக தாமதம் […]
அமெரிக்க நாட்டில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை இந்த வருடத்தில் 19% உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்கள் உலக நாடுகள் கடும் சிக்கலான நிலையை எதிர்கொண்டன. இந்நிலையில் பிற நாடுகளில் பயின்று வரும் பலர், பாதுகாப்பிற்காக தங்களின் தாய் நாட்டிற்கு திரும்பும் நிலை உண்டானது. அதில் இந்தியாவை சேர்ந்த மாணவர்களும் உண்டு. இது தவிர உக்ரைனில் போர் தொடங்கிய போது, அங்கிருந்த இந்தியா, வங்காளதேசம் போன்ற நாடுகளை சேர்ந்த மாணவர்களை இந்திய […]
விர்ஜீனியா பல்கலைக்கழக வளாக துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் என்று நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு சுற்றுலா சென்று விட்டு மாணவ மாணவிகள் அடங்கிய பேருந்து ஒன்று விர்ஜீனியா பல்கலைக்கழகத்திற்கு திரும்பி கொண்டு இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை அன்று இரவு 10.30 மணியளவில் அந்தப் பேருந்தை நோக்கி திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த […]
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் டால்டன் மேயர். 29 வயதான இவர் ஒரு நிமிடத்திற்கு 1140 முறை கைதட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இவர் முன்னால் ஒரு கணிப்பாணை வைத்து ஒரு வினாடிக்கு 19 முறை என்று ஒரு நிமிடத்தில் 1140 முறை கைதட்டி உள்ளார். மேலும் இதற்கும் முன்னதாக படைக்கப்பட்ட சாதனைகளை விட 37 கைதட்டல்கள் அதிகமாக செய்து இவர் முன்னிலையில் இருக்கிறார். இந்த சாதனை குறித்து […]
அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்பின் மகளுக்கு நேற்று திருமணம் நடந்திருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் மனைவியான மார்லா மேப்பில்சின் மகள் டிப்பனி டிரம்ப்பிற்கும் அவரின் காதலரான மைக்கேல் பவுஸோவிற்கும் நேற்று புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் கடற்கரையில் திருமணம் நடந்திருக்கிறது. மகளின் திருமணத்தில் டிரம்ப் தன் மனைவி மெலானியா டிரம்ப் உடன் பங்கேற்றார். டிப்பனி, லண்டனில் தான் தன் காதலரை முதல் தடவையாக சந்தித்திருக்கிறார். அவரின் காதலரான மைக்கேல் பவுஸோ, […]
பாகிஸ்தான் அரசு, ரஷ்ய நாட்டிலிருந்து நாங்கள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க இயலாது என்று தெரிவித்திருக்கிறது. துபாயில் உள்ள பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்களிடம் பேசிய பாகிஸ்தான் நிதி, மந்திரி இஷாக் தார் தெரிவித்ததாவது, கடந்த மாதம் அமெரிக்கா சென்று அந்நாட்டு வெளியுறவு துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ரஷ்ய நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து ஆலோசனை செய்தனர். ரஷ்யா, சர்வதேச சந்தையில் இருக்கும் விலையை காட்டிலும் குறைவான விலைக்கு விற்கிறது. எனவே, இந்தியா குறைந்த […]
வறுமையில் வாடிய இந்தியாவை சேர்ந்த நபர் தற்போது அமெரிக்க விஞ்ஞானியாக உயர்ந்து, அசர வைத்திருக்கிறார். மராட்டிய மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் இருக்கும் சிர்சாதி கிராமத்தில் பிறந்த பாஸ்கர் ஹலாமி என்ற 44 வயது நபர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். அவரின் குடும்பமே வறுமையில் வாடியது. ஆசிரம பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்ற ஹலாமி, அதன் பிறகு உதவித்தொகை மூலம் பத்தாம் வகுப்பு வரை கற்றார். கட்சிரோலியில் இருக்கும் கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்று, நாக்பூர் அறிவியல் […]
அமெரிக்க நாட்டில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியானது பாராளுமன்றத்தில் செனட் சபையை கைப்பற்றி விட்டது. அமெரிக்க நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் செனட் சபைகளுக்கு எட்டாம் தேதி அன்று தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமாக பிரதிநிதி சபையில் 435 இடங்கள், செனட் சபையில் நூறு இடங்களில் 35 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான, முடிவுகள் வெளியானது. இதில் ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் கடுமையான போட்டி இருந்தது. பிரதிநிதிகள் சபையில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசு கட்சியானது சுமார் […]
அமெரிக்கா மற்றும் சீன நாடுகளால் உலக பொருளாதார இரண்டாகி விடக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கிறார். கம்போடியாவிலுள்ள நாம்பென் நகரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நேற்று நடைபெற்ற மாநாட்டில் நான் தெரிவித்தது போல எவ்வளவு விலையை கொடுத்தாவது பொருளாதாரத்தை பிரிக்க விடாமல் தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதிக அளவில் பொருளாதாரத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் சீனா, அமெரிக்கா போன்ற […]
அமெரிக்காவில் வரும் 2024 ஆம் வருடத்தில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிபர் ஜோ பைடன் தகவல் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த 2020 ஆம் வருடத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் 46வது அதிபராக ஆட்சியில் அமர்ந்தார். அந்த சமயத்தில் அங்கு கொரோனா தீவிரமாக பரவிக் கொண்டிருந்தது. ஜோ பைடன் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்டார். இதற்கிடையில் நாட்டில் அடுத்த […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி 20 மாநாட்டில் சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தோனேசியாவில் வரும் 14ஆம் தேதி அன்று ஜி 20 உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் ஜி 20 அமைப்பில் இருக்கும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த மாநாட்டின் நடுவே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச இருப்பதாக […]
அமெரிக்க நாட்டில் விமான நிலையத்தில் துப்பாக்கியை ஒரு நபர் கோழி இறைச்சிக்குள் மறைத்து கொண்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா மாகாணத்தில் விமான நிலையத்திற்குள் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் விமான நிலையத்திலிருந்து ஒரு நபர் விமானத்திற்குள் நுழைந்தார். அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கோழி இறைச்சி இருந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதனுள் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. எனினும், […]
நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் பயணம் சூறாவளி எச்சரிக்கை காரணத்தினால் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் நாசா விண்வெளி அமைப்பானது நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டிலுள்ளது. இருப்பினும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. […]
அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அங்கு வாழும் இந்தியர்கள் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரதிநிதி சபை, செனட் சபை என்ற இரு அவைகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஆறு வருடங்கள் செனட் உறுப்பினர்களின் பதவிக்காலம், இரண்டு வருடங்கள் பிரதிநிதி சபையின் பதவிக்காலம். இடைத்தேர்தல் இரு வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும். இந்நிலையில் House District 30 என்னும் பிரதிநிதி […]
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் பிரைஸ் இந்தியா ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைத்துக் கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் ப்ரைஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் மீது போர் மேற்கொண்டு வரும் ரஷ்யா ஆற்றலிலும் பாதுகாப்பு உதவியிலும் நம்பகத்திறன் உள்ள நாடு கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் நாட்டின் நலனை இந்தியா கருத்தில் கொண்டிருக்கிறது. எனவே தான் ரஷ்ய நாட்டை அதிக சார்ந்திருப்பதை […]
வடகொரிய அரசு, அமெரிக்க நாட்டை தாக்கும் பயிற்சியாகத் தான் ஏவுகணைகள் பரிசோதனைகள் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் தென்கொரிய படைகளும் சேர்ந்து கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியை மேற்கொள்வதை வடகொரியா தொடர்ந்து எதிர்த்து வந்தது. அதற்காக அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளை மேற்கொள்கிறது. கடந்த வாரத்தில் கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணை உட்பட பல ஏவுகணைகளை வடகொரியா அனுப்பியது. தென்கொரியாவை நோக்கி நூற்றுக்கும் அதிகமான போர் விமானங்களை செலுத்தியது. எனவே, கொரிய தீபகற்பம் பதற்றமடைந்துள்ளது. இது பற்றி […]
இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தின் 90% சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பணக்காரராக ஜொலிக்கும் எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கி வாங்கி இருந்தார். இது குறித்த அறிவிப்பு வெளியானது முதல் எலான் மஸ்கின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த விவாதங்கள் உலக அளவில் பேச்சு பொருளானது. அவர் ட்விட்டரை வாங்கிய அடுத்த நிமிடமே அங்கிருக்கும் நிர்வாக அதிகாரங்களையும் ஊழியர்களையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து […]
ரஷ்ய போரை எதிர்த்து போராடும் உக்ரைன் நாட்டிற்கு வழங்கி வரும் எங்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்கா, ஜெர்மன் நாடுகள் உறுதி கூறியிருக்கின்றன. ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் ஸ்கால்ஸ், சீன நாட்டிற்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அப்போது சீன அதிபர் ஜின்பிங் அவரை நேரடியாக பார்த்து பேசியுள்ளார். ரஷ்ய நாட்டின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இரண்டு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் […]
அமெரிக்காவில் 20 வயதான டால்டன் மேயர் எனும் இளைஞர் ஒருவர் ஒரு நொடிக்கு 19 தடவை என்று ஒரு நிமிடத்திற்கு 1,140 முறை கைதட்டி உலக சாதனை படைத்திருக்கின்றார். ஒரு நிமிடத்திற்கு 1,140 முறை கைதட்டி அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் இது பற்றி பேசிய டால்டன் இந்த திறமை தனக்கு இயற்கையாகவே வந்ததாகவும் தான் இந்த சாதனைக்காக பயிற்சி கூட செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள அல்லெக்னி பகுதியில் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை […]
இரு பெரும் மாகாணங்களை சூறாவளி தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளார். அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா மாகாணங்களை நேற்று முன்தினம் பயங்கரமான சூறாவளி தாக்கியுள்ளது. இந்த சூறாவளியில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த சூறாவளி நூற்றுக்கணக்கான வீடுகளை சூறையாடி உள்ளது. இதனை அடுத்து மீட்பு குழுவினர் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 7000 பேர் வசிக்கும் நகரில் சூறாவளியால் […]
அமெரிக்கா நாட்டின் உத்தா பகுதியில் வசிப்பவர் நான்சி ஹாக்கி. இவர் தன்னுடைய மகன் மற்றும் மருமகளோடு வசித்து வருகிறார். தனது மகனிற்கு ஏற்கெனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் ஐந்தாவதாக ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால் மருமகளுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. எனவே தன்னுடைய மகனின் ஆசையை நிறைவேற்ற அந்த தாய் கர்ப்பமடைந்துள்ளார். அதாவது மகனின் குழந்தைக்கு தாயே வாடகை தாயாக மாறியுள்ளார். 56 வயதான நான்சி மகன் மற்றும் மருமகளுக்காக கருவை சுமந்து […]
வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் கிம் ஜாங் உன்னின் இறுதியாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சியை கண்டிக்கும் வகையில், வட கொரியா இந்த வாரம் ஜப்பான் மற்றும் தென் கொரிய கடல் பகுதியில் தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் ஜப்பான் கடல் பகுதியில் ஏவப்பட்டுள்ள ஏவுகணைக்கு பயந்து, ஒரு கட்டத்தில் அந்நாட்டு மக்கள் தங்கள் வீடு மற்றும் மற்றும் நிலத்தடி பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். […]
அமெரிக்காவில் வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அமெரிக்காவில் வருகின்ற செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த தேர்தல் வருகின்ற 2024-ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதாவது. நடைபெறும் தேர்தலின் முடிவுகளை எந்த வேட்பாளராவது ஏற்க மறுத்தால் அது […]
குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு பரிசளிக்கப்படும் என பிரபல நாட்டு போலீசார் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாங்கட்டி என்ற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் கடந்த 2018 -ஆம் ஆண்டு தனது நாயுடன் நடை பயிற்சி சென்ற டோயா கார்டிங்லி என்ற 24 வயதுடைய பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை இன்னிஸ்பெயில் என்ற இடத்தில் ஆண் நர்சாக வேலை செய்யும் ராஜ்விந்தர் சிங் என்பவர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் கொலை நடந்த […]
அமெரிக்காவில் எந்த ஒரு ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் அவரது நான்கு வருட பதவி காலத்தில் மத்தியில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தல் ஆனது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு ஜோபைடன் ஜனாதிபதியாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அவருடைய பதவி காலத்தில் மத்தியில் வரும் எட்டாம் தேதி நாடாளுமன்ற கீழ் சபையில் உள்ள மொத்த இடங்களான 435 இடங்களுக்கும் மேல்சபையான செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் […]
பிரபல நாட்டில் தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தற்போது பணவீக்கம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் நோக்கம் அதிகபட்ச வேலை வாய்ப்பு மற்றும் பண வீக்கத்தை நீண்ட காலத்திற்கு 2 சதவீதத்தில் அடைவதாகும். இந்நிலையில் நுகர்வோர் பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதம் 8.2 சதவீதமாக குறைந்தது. இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் 8.3 சதவீதமாக இருந்தது. இதனால் தற்போது பணவீக்கம் 2 சதவீதத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை விட அதிகமாக உள்ளது. […]
சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க ராணுவம் உடனடியாக ஈரான் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எச்சரித்திருக்கிறது. ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாத காரணத்தால் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயது இளம்பெண் பலியானதை தொடர்ந்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளது. இதில் பெண்கள் ஆயிரக்கணக்கில் தங்களின் தலை மற்றும் முகங்களை மறைக்காமல் சாலைகளில் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால், உலக நாடுகள் ஈரான் மீது கோபமடைந்துள்ளது. இந்நிலையில் ஈரான் அரசு தங்கள் நாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களிலிருந்து உலக […]
வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இதனை கண்டுகொள்ளாமல் கூட்டு போர்ப் பயிற்சியில் தொடர்ந்து வருகிறது அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமான படைகள் மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இரு நாட்டு விமானப்படைகளையும் […]
ட்விட்டர் நிறுவனத்தை தன்வசப்படுத்திக் கொண்ட எலான் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் கணக்குகள் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்குவது பற்றி சூசகமான முறையில் கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டில் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆறாம் தேதி அன்று அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிக்கும் விழா நாடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் இறங்கினர். அதன் பிறகு, காவல்துறையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் […]