தமிழக அமைச்சரவையில் 10ஆவது அமைச்சராக உதயநிதி இடம்பெற்று இருக்கிறார். இன்று காலையில் அமைச்சராக பொறுப்பேற்ற கொண்ட உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.உதயநிதிக்கு அமைச்சரவையில் பத்தாவது இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக அரசின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக உதயநிதியின் பெயர் பத்தாவது இடத்தில் உள்ளது. 35 அமைச்சர்கள் உள்ள நிலையில் உதயநிதி 10-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tag: அமைச்சரவை
ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின், முதல்முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இளைஞர் நலன் & விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி இன்று பொறுப்பேற்கிறார். மேலும், ஐ.பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும், பெரிய கருப்பன் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், மதிவேந்தன் வனத்துறை அமைச்சராகவும் இலாகா மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் இன்று(14.12.22) காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் உதயநிதிக்கு எப்போது அமைச்சரவையில் இடம் கொடுத்தாலும் விமர்சிக்கதான் செய்வார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் […]
திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். இவருக்கு டிசம்பர் 14-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது. அதன் பிறகு அமைச்சராகும் உதயநிதிக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது 2 துறைகள் அவரிடம் கொடுக்கப் படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது சுற்றுச்சூழல் […]
இங்கிலாந்தில் பிரதமருக்கு நெருக்கடி உண்டாகும் விதமாக, அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் தொடர்ந்து பதவி விலகியிருக்கிறார்கள். இங்கிலாந்தில் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்வெல்லா பிரேவர்மென் என்ற பெண், உள்துறை மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே நேற்று இரவு அவர் தான் தவறு செய்ததாகவும் அரசாங்கத்தின் விதிமுறைகளை மீறியதாகவும் தெரிவித்து பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த 14ஆம் தேதி அன்று நிதி மந்திரியான குவாசி வார்தெங்கை நீக்கிவிட்டு ஜெரேமி ஹன்ட்-ஐ அமைச்சரவையில் […]
சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா வாக்குறுதி அளித்திருக்கின்றார். இந்த நிலையில் பாஜக ஆட்சியில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா சோலான் மாவட்டத்தில் உள்ள மாதா சோலினி கோவிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்துள்ளார். அதனை தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேச பேரவை தேர்தலுக்கான […]
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் பலர் பணத்தையும் உயிரையும் இழந்து வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கோத்துள்ளது. முன்னதாக இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை கொடுக்க தமிழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு […]
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் குறித்தும், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கு படுத்துவது தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் […]
பிரிட்டனின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தேர்தலில் வெளியுறவுத்துறை அமைச்சர் லீஸ் டிரஸ் வெற்றி பெற்றால் அவரது அமைச்சரவையில் பணியாற்ற போவதில்லை என இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் கூறியுள்ளார். இது பற்றி bbc வானொலி 2 க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, கடந்த சில வருடங்களாக பிரிட்டன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனுபவத்தின் மூலமாக மிகப் பெரிய விவகாரங்களில் முரண்பாடு இருந்தால் கூட அதனை […]
இலங்கையில் நிதி நெருக்கடியை கையாள அதிபர் அணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சியை சேர்ந்த அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசங்கதிற்கு எதிரான அவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நிதி நெருக்கடியை கையாள அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் இடம்பெறும் விதமாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கு தீர்மானித்திருக்கிறார். புதிதாக பொறுப்பேற்ற […]
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் பரிந்துரைகளை முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தது நிதியரசர் சந்துரு குழு. ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தில் இடம்பெற வேண்டியவற்றை பரிந்துரைகளாக முதல்வரிடம் அளித்தது. இதனை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவது பற்றி மாலை அமைச்சரவை ஆலோசிக்க இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவின் உடைய பரிந்துரையில் என்ன என்ன இருக்கின்றது என்றால்…? ஆன்லைன் ரம்மி விளையாட்டு ஏற்படுத்த்க்கூடிய நிதி இழப்பு மற்றும் தற்கொலை பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையை ஏற்பதாகவும், இவ்விளையாட்டில் […]
இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே இந்த வாரத்தில் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறியிருக்கிறார். இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால், மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தத் தொடங்கினர். எனவே, அதிபர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவசரநிலை அறிவித்தார். எனினும், மக்கள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, பதவி விலக மாட்டேன் என்று கூறிக் கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டார். அதனைத்தொடர்ந்து இலங்கையில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. எனவே […]
ஆந்திர மாநிலத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவின்படி ராஜினாமா செய்து இருக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார். அதன்படி ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்படி ராஜினாமா செய்திருக்கின்றனர். புதிய அமைச்சரவை ஏப்ரல் 11ஆம் தேதி பதவியேற்க இருக்கிறது. அதில் ஜெகன் மோகன் தலைமையில் 2019ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. 150 தொகுதிகளை அந்த கட்சி கைப்பற்றியது. அப்போது […]
இலங்கையில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் பால் மற்றும் பெட்ரோல் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள மக்களுக்கு சாப்பாட்டிற்கு கூட வழியின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் அமைச்சரவை கலைத்துவிட்டு காபந்து அரசாங்கத்தை அமல்படுத்த வேண்டும் என 11 கூட்டணிக் கட்சிகள் அதிபர் ராஜ்பக்சே வலியுறுத்தி இருக்கிறார்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, இடதுசாரி ஜனநாயக […]
தமிழக அமைச்சரவை கூட்டம் அதிகன மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்த விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிவாரணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிக கன மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளரிடம் கூறினார். அதில் “எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் எம்.பிக்.களின் தொகுதி மேம்பாட்டு செலவிற்காக மீண்டும் நிதி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது . அதன்படி இந்த ஆண்டில் மீதமுள்ள மாதங்கள் செலவுகளுக்கு ஒரே தவணையாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் அடுத்த நிதியாண்டு முதல் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நடைபெற உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றை நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்துதல், பொதுமக்களுக்கு நிவாரண நிதி என அனைத்திலும் திமுக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல முக்கியத் துறைகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது என அரசிற்கு வரவேற்பு […]
பிரிட்டனில் சுகாதார செயலாளரான சஜித் ஜாவித்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அமைச்சரவையில் இருக்கும் முக்கால்வாசி பேர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். பிரிட்டனில் சஜித் ஜாவித்(51) புதிய சுகாதார செயலாளராக சில நாட்களுக்கு முன்பு தான் பதவியேற்றார். இந்நிலையில் அவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி கொண்டதனால் சிறிய அறிகுறிகள் தான் தனக்கு ஏற்பட்டிருப்பதாக கூறினார். எனவே அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த தகவல் கண்டறியப்பட்டது. அதன்பின்பு அவர்களிடம் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதாவது […]
பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவதாக பதவியேற்ற கொண்டதிலிருந்து அமைச்சரவையில் மாற்றமோ அல்லது விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டது. கடந்த சில நாட்களாகவே பாஜக தேசிய ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். இதையடுத்து புதிதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த […]
மக்கள் சிரமமின்றி மின் கட்டணத்தை செலுத்த ரீசார்ஜ் முறையை கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய ரீசார்ஜ் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது இந்தியாவில் தற்போது டெல்டா ப்ளஸ் தொற்று புதிதாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் மூன்று லட்சம் மதிப்பீட்டில் […]
புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெண் அமைச்சர் ஒருவர் சட்டப் பேரவையில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்பு என் ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான அமைச்சரவை பதவிகளுக்கான பங்கீடு முடிவடைந்தது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையில் பொறுப்பேற்க உள்ள புதிய அமைச்சர்களின் […]
தமிழகத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் தமிழகத்தின் அமைச்சரவை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவை பட்டியலில் மு க ஸ்டாலின் – இந்திய ஆட்சிப் பணி, காவல் ,சிறப்பு திட்ட செயலாக்கம் பொன்முடி: உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல் ஏ.வ.வேலு: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துரைமுருகன்: நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை கே.என்.நேரு: நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் […]
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை கால போனஸை உடனடியாக ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து […]
சற்று முன் நடந்து முடிந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான ஒப்புதலை தமிழக அமைச்சரவை வழங்கி இருக்கிறது. இது மிக முக்கியமான விஷயமாக பார்க்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை சந்திக்கும்போது அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு […]
நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நீட் தேர்வு மூலமாக நடைபெறும் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் […]
கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓராண்டு ஊதியத்தில் இருந்து 30% பிடித்தம் செய்யப்படும் என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஓராண்டுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 16வது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதனடிப்படையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் […]
காவேரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு அமைச்சரவை கொள்கை முடிவு எடுத்துள்ளது. அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தெரிவித்தார். இது டெல்டா பகுதி விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் எதிர்கட்சியான திமுக , விசிக , மதிமுக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் வரவேற்பு தெரிவித்ததோடு அரசு கொள்கை முடிவு எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தினர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் […]
காவேரி வேளாண் மண்டலமாக கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தெரிவித்தார். இது டெல்டா பகுதி விவசாயிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் எதிர்கட்சியான திமுக , விசிக , மதிமுக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட காட்சிகள் வரவேற்பு தெரிவித்ததோடு அரசு கொள்கை முடிவு எடுக்கவேண்டுமென்று வலியுறுத்தினர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி […]