முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
Tag: அமைச்சரவை கூட்டம்
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு போன்றோர் கலந்து கொண்டனர். சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற இருப்பதை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து முடித்து விசாரணையை அறிக்கையை […]
குடி குடியைக் கெடுக்கும் என்ற பழமொழியெல்லாம் நமக்கு பழக்கமான ஒன்றுதான் என்றாலும், இன்று வரை இந்தக் குடிக்கு அடிமையானவர்கள் ஏராளம். அதில் முதியவர்கள், இளம் தலைமுறையினர் என எந்தப் பாகுபாடும் இல்லை. இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே பழங்களில் இருந்து மது தயாரிக்க அனுமதி வழங்குமாறு கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கேரளாவில் மதுவின் தேவையானது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பழங்களில் இருந்து மது தயாரிக்க அனுமதி வழங்க கோரிக்கை ஒன்று […]
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் தலைமையில் வரும் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 ஆம் வருடத்துக்கான பட்ஜெட் இந்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மார்ச் 5ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கிறது. தமிழக பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய அறிவிப்புகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. […]
பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து கடந்து 19 ஆம் தேதி பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வரும் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை செய்வதற்காக இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று மாலை 5 மணி அளவில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மழையால் ஏற்பட்ட சேதம், நிவாரண நிதி அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது. கனமழை எச்சரிக்கை அமைச்சர்கள் அனைவரும் நிவாரண பணியில் ஈடுபட்டு இருந்ததால் நேற்று […]
தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் நவம்பர் 20 ஆம் தேதி ஒத்திவைப்பு. தமிழக அரசின் அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் எடுக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். எனவே நாளை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் நவம்பர் மாதம் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெற இருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள்( நவம்பர் 20) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாளை நடைபெற இருந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மழை நிவாரணம், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அமைச்சர் பெரியசாமி தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கை உள்ளிட்டவை குறித்து பேச உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், மழை காரணமாக மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரண பணிகளில் […]
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் முன்கூட்டியே அது குறித்து ஆலோசிக்க மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பிரதமர் மோடி அமைச்சரவை இந்த வாரம் விரிவுபடுத்தப்பட்டு 20 முதல் 22 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் எனவும் […]
சென்னை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இரண்டாவது முறையாக நடக்கும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது, பட்ஜெட் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதில் அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் ஜூன்-21ஆம் தேதி தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்த ஸ்டாலின் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி. ஆளுநர் உரை டிரெய்லர் தான். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை […]
இன்று (ஜூன் 23ஆம் தேதி) ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கூட்டமானது காணொளி வாயிலாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை முடியும் தருவாயில் ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு […]
மே2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து மே 7-ஆம் தேதி மு.க ஸ்டாலின் முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு .க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட 133 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக எம்எல்ஏக்கள் […]
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கான கலந்தாய்வு இன்று காணொளி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை வேகமெடுத்து வருவதால் பிரதமர் மோடி தலைமையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்று காலை காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதித்துறை அமைச்சர் […]
டெல்லியில் இன்று பிரதமர் திரு.நரேந்திர மோதி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், கொரோனா தடுப்பூசி நிலை, விவசாயிகள் போராட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதமர் மோடி முக்கிய முடிவு எடுப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் திரு. மோதி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கை பிரதமர் திரு. மோதி தலைமையிலான அரசு கொண்டு வந்தது. இந்த கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களில் ஒன்றான மும்மொழி கொள்கை ஒருங்கிணைந்த தொழிற்கல்வி சமஸ்கிருதத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தல் உள்ளிட்டவற்றிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகமும் கடும் எதிர்ப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் பிரதமர் திரு. மோதி தலைமையில் இன்று காலை […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு பற்றி முடிவெடுக்கப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை பரிமாறினர். இக்கூட்டத்தில் தேசிய வேலைவாய்பபு அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய அரசு பணிகளில் பிரிவு 3 மற்றும் 4 ல் பணியாளர்களை […]
தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவது தமிழக அரசுக்கு புது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சென்னையைப் போன்ற முழு முடக்க உத்தரவு பிறப்பிக்கலாமா ? என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, வேலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் பரவி வரும் கொரோனவை கட்டுப்படுத்த நிச்சயம் முழு […]
தமிழகத்தில் கொரோனாவின் கூடாரம், கொரோனாவின் மையம், தமிழகத்தின் ஹாட் ஸ்பாட் என்று வர்ணிக்கப்பட்ட தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் இருக்கிறது. நாளுக்குநாள் அதன் தாக்கம் குறைந்து வருவது புள்ளிவிபரங்கள் மூலமாக தெரிய வருகிறது. சென்னையில் கொரோனா குறைந்து வருவதற்கு அங்கு அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொதுமுடக்கம் தான் காரணம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பித்து கொரோனவை கட்டுப்படுத்தியது போல வேகமாக பரவி வரும் பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவலை […]
தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது. இதில் நான்கு அமைச்சர்கள் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, கேபி அன்பழகன் ஆகியோர் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அதேபோல மூத்த அமைச்சரான CV சண்முகத்திற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கிய […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கிய சூழலில், முன்மாதிரியான பல முயற்சிகளை மேற்கொண்ட தமிழக அரசு, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகளை நியமித்தது. ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் என தமிழக […]
தமிழக முதல்வர் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது ? அதே போன்று பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல் என பல அம்சங்கள் குறித்து இன்றைய […]
வருகின்ற 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் மையமாக விளங்கிய சூழலில், முன்மாதிரியான பல முயற்சிகளை மேற்கொண்டது தமிழக அரசாங்கம். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஐந்து அமைச்சர்கள் அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகள், தடுப்பு நடவடிக்கைகள் என […]
வருகின்ற 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுமென்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்து வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது ? அதே போன்று பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல்… தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, தேனி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு […]
தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக மருத்துவ நிபுணர் குழுவிடம் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தற்போது அமைச்சரவை கூட்டம் என்பது தொடங்கியுள்ளது. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. மருத்துவ நிபுணர் […]
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சிறப்பு சட்டம் குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 8ம் தேதி நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை […]
இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று காலை 11 மணியளவில் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அதன் பிறகு தமிழக அமைச்சரவைக் கூட்டம் என்பது மதியம் 12 மணி அளவில் நடைபெற இருக்கிறது. மருத்துவ நிபுணர் குழுவினர் ஆலோசனை கூட்டத்தில் எடுக்க கூடிய முடிவுகள், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிப்பாக தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தைப் பொருத்தவரை பார்த்தோமென்றால் நாளுக்கு நாள் […]
முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை பகல் 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த கூட்டமானது நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு அரசு எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிமாநில நிறுவனங்களை ஈர்ப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,687ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் […]
தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டன. மேலும், 6 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு […]
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிக்கை ஒன்றை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: * நோய் கட்டுப்பாடு பகுதிகளில் ஊரடங்கு தளர்வு […]
தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னதாக, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், […]
முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு பெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஊரடங்கை 2 வாரங்களுக்கு நீட்டிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு […]
ஊரடங்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது கொரோனா தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா தொற்று சமூக பரவலுக்கான அடுத்த நிலையை எட்டுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாநில முதல்வர்களும் இதே கருத்தை முன்வைக்க, பிரதமர் மோடி இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு தமிழகத்தில் […]
தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி முடிவடைகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக தமிழகம் கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதனால் ஊரடங்கை நீட்டிப்பதற்கான அவசியம் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முடிவின் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்க்கான […]