தமிழக மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதில் சிக்கல் இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்று மட்டுமே வழங்கப்பட்டது. அதனால் ஜேஇஇ விண்ணப்பிப்பதில் தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் உள்ளீடு செய்வதில் இருந்து விளக்கு கோரி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்கள் JEE தேர்வு எழுத உரிய தீர்வு காணப்படும் என […]
Tag: அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழக மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு மார்க் குறிப்பிடுவதில் இருந்து விலக்கு தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக மாணவர்கள் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள சிக்கலுக்கு […]
பிஇடி பீரியடில் மற்ற பாடங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி ஒருவர் கோரிக்கை விடுத்தார். இதுபற்றி பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார். அத்துறையோடு இணைந்து மேலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம். விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தப்படும். பள்ளிகளில் பிஇடி பீரியட் என்பது மாணவர்களின் புத்துணர்வுக்காக ஒதுக்கப்படும் நேரம். அந்த நேரத்தை […]
சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று மாணவர்களோடு உரையாடினர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகளை பெற்ற பெற்றோர்கள் கடவுளுக்கு சமம். தயவு செய்து யாரும் நம் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று கூறினார். இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் என்னிடம், மாணவர்களை […]
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று நாளையும் பொருநகை திருவிழா நடைபெறுகிறது. இதனை முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் உள்ளிட்டோர் நேரில் கலந்து கொண்டனர். இதன்பின் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின்அடையாளம் இல்லை, அது பெருமையின் அடையாளம் என்பதை நிலைநாட்டுகின்ற அரசாக செயல்பட்டு வருகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பின் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார். இவர் சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, குழந்தைகளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் கல்விக்கு உதவ வேண்டியது நம்முடைய கடமை. எந்தக் குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம். அதன் பிறகு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் அனைத்து குழந்தைகளுக்கும் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். கடந்த டிசம்பர் மாதமே அவர்களை அழைத்துச் செல்ல வேண்டியது. ஆனால் ஒமைக்ரான் காரணமாக அழைத்துச் செல்ல முடியவில்லை. தற்போது அவர்களை நாங்கள் அழைத்துச் செல்கிறோம். சர்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி துபாய், அபுதாபியில் முக்கிய இடங்களை அவர்களுக்கு சுற்றிக்காட்ட இருக்கிறோம். நான்கு நாட்களும் அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருப்பேன். மாணவர்களை […]
தமிழகத்தில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரம் தோறும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்வதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி வெற்றி பெற்ற மாணவர்களை கடந்த வருடம் டிசம்பர் மாதம் துபாய் அழைத்த செல்வதற்கு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டது. ஆனால் ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் பாதிப்பு […]
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் சேஷாயி தொழில்நுட்ப பயிலரங்கத்தில் அம்மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சி.வி கனேசன் போன்றோர் பங்கேற்று துவங்கிவைத்தனர். இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த சிறப்பு முகாமினை துறைசார்ந்த அமைச்சராக சி.வி.கணேசன் […]
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி பகுதியில் அஸ்லாம் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 9-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கல்வி மட்டும் தான் சமுதாயத்தில் ஏற்றத்தை தரக்கூடியது. பட்டம் பெற்ற மாணவர்கள் சமுதாயத்தில் அனைவரிடமும் நெருங்கி பழகி தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் நீங்கள் சாதிப்பதற்கான முதல் படியாக அமையும். இன்றைய காலகட்டத்தில் இருக்கும் […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதே சமயம் தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி வழங்கப்பட வேண்டும் என அரசு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதேசமயம் ஏழை எளிய மாணவர்கள் அனைவருக்கும் இந்த நலத்திட்டங்கள் சரியாக சென்றடைகின்றதா என்பதை அரசு அவ்வப்போது கண்காணித்து வருகின்றது. பள்ளிகளில் ஜாதி மத பாகுபாடு இருக்கக் கூடாது என்பதால் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளி வளாகங்களில் அரசியல் கூட்டம் நடைபெறுவதாக […]
சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் விளக்கம் குறித்து கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் போதை பொருள் பழக்கத்திலிருந்து விடுபட சிற்பி திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.போதைப் பொருள் இல்லா வளாகங்களாக பள்ளிக்கூடங்கள் மாற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு […]
தமிழக முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஜாதி மற்றும் மத வேறுபாடு இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி மாணவர்கள் ஜாதி அடிப்படையில் கையில் கயிறு கட்டுவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என பள்ளி கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதரிடையே தற்போது ஆர் எஸ் எஸ் அணி வகுப்பிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் […]
தமிழகத்தில் பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,பாஞ்சால குளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் ஜாதியை பாகுபாடு கண்டறியப்பட்டால் உடனே தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.பள்ளிகளில் ஜாதியை பாகுபாடு நடைபெறுகிறதா என்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் முறையாக […]
தென்காசி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாங்குளம் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் சாதி பாகுபாடு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பாஞ்சாகுளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் சாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். சாதிய பாகுபாடுகளை தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் கண்காணிக்க […]
நீட் தேர்வு தேர்ச்சியில் தன்னிறைவு அடையும் வரை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சாரண மற்றும் சாரணியர் இயக்கத்தின் தலைவராக பதவியேற்ற பின் பேட்டியளித்த அமைச்சர்,நீட் தேர்வுக்கு போதிய பயிற்சி அரசு சார்பில் அளிக்கப்படவில்லை என கூறுவதை ஏற்க முடியாது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சட்ட போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தாலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி முறையாக அளிக்கப்பட்டு வருகிறது அதேபோல் […]
இளைஞர்கள் தான் நாட்டின் மிகப்பெரிய சக்தி என்று அமைச்சர் கூறியுள்ளார். சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் மாணவர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் கல்லூரி மாணவர்களிடம் பேசியதாவது, லயோலா கல்லூரி என்னுடைய நண்பர் உதயநிதி ஸ்டாலின் படித்த கல்லூரி. உதயநிதி என்னுடைய நண்பர். அவருடைய நண்பனாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். இந்தக் கல்லூரி எனக்கு பரிச்சயமான கல்லூரி. படிப்பு முக்கியம் […]
நடைமுறை சிக்கல்களால் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களில் இருந்து பின்வாங்குவதில் தவறில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் விவகாரம், கல்வி தொலைக்காட்சி சிஇஓ நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் பள்ளி கல்வித்துறை பின்வாங்கியதாக வைக்கப்பட்ட புகார்களுக்கு பதில் அளித்த அமைச்சர், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டங்களில் இருந்து பின்வாங்குவது தவறில்லை என்று தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் […]
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக திருச்சி, புதுக்கோட்டை, கரூர்,அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து முடித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவ-மாணவிகளுக்காக புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். திருச்சியில் உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பள்ளிகளிலும் நூலகங்கள் திறக்கப்படும். அதன் பிறகு பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் வாரம் ஒரு முறை நூலகத்தில் படிப்பதற்கு கால அவகாசம் ஒதுக்கப்பட்டு, மாணவர்களுக்கு தனி தனியே ஒரு புத்தகம் வழங்கப்படும். இந்த புத்தகங்களை மாணவர்கள் […]
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும், அதில் குழப்பம் தேவை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மாணவர்கள் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.. பதினோராம் வகுப்பு பொது தேர்வு ரத்தாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சென்னையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஞாயிற்றுக்கிழமை மழை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வரும் தண்ணீரை பொறுத்து கொள்ளிடம் கரையோரம் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் […]
தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்நிலையில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். […]
தனியார் பள்ளி மாணவர்களே அதிகம் தவறான (தற்கொலை) முடிவுகளை எடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாகும் வகையில் ஊக்குவிக்கும் பேச்சாளர்களை பேச வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். உடற்கல்வி நேரத்தில் தவறாமல் மாணவர்களை விளையாட வைக்க வேண்டும். தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். மாணவர்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த […]
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ‘பேட்ரி டெஸ்ட்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் 6,7, 8ம் வகுப்பு மாணாக்கர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி, அவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக விபரீத முடிவு எடுப்பதை தடுக்க முடியும் என கூறியுள்ளார். தமிழக பள்ளிகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி தன்னம்பிக்கையை வளர்க்க இந்த திட்டம் கொண்டுவரப்படுவதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் விளையாட்டில் அதிகம் ஈடுபடும்போது உடல் ரீதியாக மற்றும் மனரீதியாக சுறுசுறுப்பு அடைவதன் மூலம் படிப்பிலும் அதிக கவனம் செலுத்த முடியும் என்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். உலகத் திறனாய்வு உடர்திறன் தெரிவு போட்டிகள் தொடக்க விழாவில் அமைச்சர் இன்று கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய அமைச்சர், 6,7,8 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டு போன்ற துறைகளிலும் தங்கள் திறமைகளை வெளிக் கொணர வேண்டும். அதற்காகவே […]
தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு கோடி 3 லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு குறைகளையும் தீர்க்க வேண்டியது அரசின் கடமை. ஏராளமான விமர்சனங்கள் வருகின்றன. அதை உள்வாங்கி செயல்பட வேண்டும். நேரடியாக களத்திற்கு சென்று பிரச்சனைகளை ஆய்வு செய்ய வேண்டும். மாணவர்கலில் ஒருவரை மற்றவரோடு ஒப்பிட்டு பேசக்கூடாது. அதனால் மாணவர்கள் தவறான முடிவெடுக்கின்றனர். அவர்களுடைய திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவதை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் முதல் கடமையாக […]
தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் வெற்றியை நிலைநிறுத்த மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களை, ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகள் போல் அக்கறை கொண்டு அவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும். மேலும், பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட வேண்டாம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்திறமை உண்டு. அதனை பெற்றோர் உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதற்கிடையில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு பொதுமக்களும் மாணவியின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி கலவரத்தின்போது சம்மந்தப்பட்ட பள்ளிக்குள் சென்ற போராட்டக்காரர்கள் நாற்காலிகள், மேஜைகள் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளியை சுற்றிய பகுதிகளில் பெரும் கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன் பிறகு பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களின் நலனை கருதி பாடத்திட்டங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டு குறைந்த பாடத்திட்டத்தில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பாடங்களை குறைக்கும் திட்டம் இல்லை […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி திறனுள்ள ஆசிரியர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும் வகுப்புகளில் பாடம் நடத்தி திறனை அறிந்து நியமனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கலாம் எனவும்,தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தி இல்லை என்றால் உடனே பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் […]
பள்ளிக்கல்விதுறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறியிருப்பதாவது “தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எந்த வித சர்ச்சையும் கிடையாது. முதல்வரின் அறிவுரைப்படியே தற்காலிக ஆசிரியர் நியமனம் நடந்து […]
தமிழகத்தில் 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை வேகமாக செயல்படுத்த கல்வி அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மழலையரின் கல்வித் திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டது.வருகின்ற 2025 ஆம் ஆண்டில் கல்வியில் தமிழகம் இந்திய அளவில் முக்கிய இடத்தை வகிக்கும். அரசு உதவி […]
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு முடிவை வெளியிட்டார். 1, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடம் பிடித்துள்ளது. 95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் […]
பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் போன்றோரின் முன்னேற்றத்திற்கான பல திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் உருவாக்கி கொண்டிருக்கிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்து இருக்கிறார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள துவரங்குறிச்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று சிறப்புறையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது “திராவிட முன்னேற்றக்கழகத்தை பொறுத்தவரை நான் இந்த இயக்கத்தில் தொண்டன் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிக்கு திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு பொதுத் தேர்வுகளும் முடிந்தது. இதனையடுத்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் பள்ளிக்கு செல்போன்கள் கொண்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தால் திருப்பி தரப்படமாட்டாது. வரும் கல்வியாண்டில் 9 […]
வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டு வரும் செல்போன்களை பறிமுதல் செய்தால் திருப்பி தரப்படமாட்டாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 முதல் 12 ஆம் மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் மாணவர்கள் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். உங்களை பாதுகாப்பதற்கு தமிழக அரசு உள்ளது. இதனை மையமாகக் கொண்டுதான் ” நான் முதல்வன்” […]
தமிழகத்தில் பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்தால் டிசி சான்றிதழில் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திலுள்ள மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாக அல்லது மனரீதியாக தொந்தரவு தந்தால் TC, Conduct certificate ஆகியவற்றில் எந்த காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால் ஆசிரியர்களிடம் மாணவர்கள் எதற்காகவும் ஒழுங்கீனமாக […]
தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை பொது தேர்வு தொடங்குகிறது. அதுமட்டுமல்லாமல் பொதுத்தேர்வில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெற்றோர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதாவது மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மதிப்பிட வேண்டாம் என்றும் நம் குழந்தைகளின் திறமை […]
தமிழக மாணவர்களின் நலனுக்காக பள்ளிக் கல்வித் துறை வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள உள்ள பல்வேறு முன்னெடுப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பட்டியலிட்டுள்ளார். அவ்வாறு மாணவர்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிக்க பாடத்திட்டம் மட்டுமல்லாது, விளையாட்டு, நுண்கலை, இலக்கியம் என ஒவ்வொரு மாணவரின் ஆர்வத்திற்கும் முக்கியத்துவம் அளித்து, அவர்தம் முழுத்திறனும் சிறப்பான முறையில் வெளிப்பட ஏதுவாக கலைத் திருவிழாக்கள் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும். மேலும் இசை, நாடகம், கவிதை, கதை சொல்லல், பொம்மலாட்டம், நாட்டுப்புறக் […]
ஆசிரியா் தகுதித்தோ்வுக்கு (டெட்) விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்று பரிசீலனை செய்யப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தாா். சென்னை, ஆழ்வாா்பேட்டையிலுள்ள ரஷ்ய கலாசார மையத்தில் கடந்த 2021ஆம் வருடத்துக்கான “அன்பாசிரியா் விருது” வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பான கல்விப் பணியோடு சமூக அக்கறையுடன்கூடிய மாணவா்களை உருவாக்கி வரும் 46 ஆசிரியா்களுக்கு, அன்பாசிரியா் விருதை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசியதாவது […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் மூலமாக மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தினமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கு தாமதமாக திறக்கப்பட்டன. இதனிடையே ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளது. இருந்தாலும் பொது தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அதே சமயம் கால அவகாசம் குறைவாக இருப்பதால் நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்வு குறித்து மாணவர்கள் பயப்படவேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி […]
மதுரை கலெக்டர் அனிஷ் சேகர், அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகள் குறித்து இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நுலகத்தின் கட்டுமான பணிகள் சென்னை அண்ணா நூலகத்திற்கு இணையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூபாய் 114 கோடி கலைஞர் நினைவு நூலகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த […]
தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு திருப்புதல் தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி மேயர், கவுன்சிலர்கள் மற்றும் துணை மேயர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவார்கள். மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் கொரோனா காரணமாக குறைக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் மட்டும் ஆன்லைன் மூலம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜனவரி 31-ஆம் தேதியுடன் விடுமுறை முடிவுக்கு வர உள்ளதால் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் […]
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா ( வயது 17 ) என்ற மாணவி தஞ்சையில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த லாவண்யா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அந்த மாணவி விஷம் குடித்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மாணவி தன்னை வார்டன் சகாய மேரி விடுதி கணக்குகளை பார்க்கச் சொல்லி […]
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்களில் மத விவகாரம் நுழையக் கூடாது. குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். நடப்பு கல்வி ஆண்டில் 10 முதல் 12 ஆம் வகுப்பு […]