திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2018 ஆம் ஆண்டு நடந்த ஈரோட்டு மாநாட்டில் நம்முடைய இனமான பேராசிரியர் அவர்கள் உரையாற்றும் போது சொன்னார்கள்… திராவிட இயக்கத்தை வழிநடத்தக்கூடிய ஆற்றல் யாருக்கு உள்ளது என்று சொன்னால் ? நம்முடைய தளபதி அவருடைய பெயரை சொல்லி இவருக்கு தான் அந்த ஆற்றல் உண்டு, அது மட்டுமல்ல அதற்கான போர்க்களத்தை முன்னெடுக்கக்கூடிய இந்த […]
Tag: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பாக புது பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்கவிழா திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது, “புது கல்விக்கொள்கை பற்றிய ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்து உள்ளது. தற்போது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறைசார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதத்தில் […]
திண்டுக்கல்லில் பொதுநுாலகத் துறை சார்பாக “நூலக நண்பர்கள் திட்டம்” தொடக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் விசாகன் தலைமையில் நடந்தது. இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோர் பங்கேற்று திட்டத்தை துவங்கி வைத்தனர். இதையடுத்து விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது “நுாலக நண்பர்கள் திட்டம் தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் முதல் முறையாக துவங்கப்படுகிறது என்று கூறினார். அதன்பின் செய்தியாளர்கள் […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய முதல்வர் தன்னுடைய உழைப்பால், கிட்டதட்ட 55-56 காண்டு கால உழைப்பு, தலைவர் என்று அவரை சும்மா எல்லாம் உட்கார வைக்கலை, 50 வருடம் ஆகிவிட்டது. அவரை பார்த்து முத்தமிழறிஞர் கலைஞர்… எனக்கு ஸ்டாலினிடம் பிடித்தது உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று அந்த மூன்று வார்த்தையை வாங்குவதற்கு 50 வருடம் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு வந்துள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் நடப்பு ஆண்டில் கட்டாய மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தேர்வு ரத்து என […]
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடமாக ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பின் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதியில் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த நடப்பு கல்வி ஆண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் பொது தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவ தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் பள்ளி […]
சமீபத்தில் திருநெல்வேலி தனியார் பள்ளியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை கணக்கெடுத்து, அதை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு அதிகாரியையும் பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது. இந்நிலையில் பழுதான பள்ளிக் கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை ஆலோசனை […]
திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாற்றினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து திருப்புட்குழி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து அமைச்சர் அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் கணினி வகுப்பறைகள் மற்றும் காணொளி காட்சி மூலம் நடைபெறும் வகுப்பறைகளை ஆய்வு செய்தார். அப்போது […]