சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க நியமித்த குழுவில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜனும் சேர்க்கப்பட்டுள்ளார். தண்டையார் பேட்டை மண்டலத்தில் ஒருங்கிணைப்பு பணிக்காக அமைச்சர் பாண்டியராஜனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், காமராஜ், வேலுமணி என 5 அமைச்சர்கள் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சற்று முன்னதாக சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு ஒருங்கிணைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருடன் […]
Tag: அமைச்சர் பாண்டியராஜன்
கீழடியில் விலங்கின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது தமிழர் வரலாற்றில் முக்கிய பங்கு என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். தொல்லியல் துறை 2015ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3ம் கட்ட அகழாய்வை நடத்தியது. அதனை தொடர்ந்து 4ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியத்துறை மேற்கொண்டது. இதில் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ள நிலையில் தற்போது 6ம் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்.24ம் தேதி முதல் அகழாய்வு பணிகள் நிறுத்தி […]
கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளை 2 வாரங்களில் வெளியிட மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம் என தெரிவித்துள்ளார். கீழடியில் கண்டுபிக்கப்பட்ட செங்கல் கட்டுமானம் அலுமினிய கட்டுமானம் போன்று இலகுவானது. கீழடி அகழ்வாய்வில் எவ்வித மத அடையாளமும் கண்டறியப்படவில்லை என்று தகவல் அளித்துள்ளார். மேலும் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 2021 ஜனவரி மாதம் திறக்கப்படும் என்றும் கீழடிக்கு வரும் […]