தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சுரங்க பாதைகளில் மழை நீர் புகுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை சரிசெய்யும் முயற்சியில் தமிழக அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இனிவரும் காலங்களில் சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நிதி சுமை இருந்தாலும் […]
Tag: அமைச்சர்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் முன்னிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வடகிழக்கு பருவமழை முன்னேற்ற நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மாவட்டத்தில் எளிதாக செய்யக்கூடிய தாழ்வான பகுதி களான 42 இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கன மழை […]
பள்ளிகளில் பாலியல் ரீதியான புகார்கள் வரும்போது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என நிர்வாகம் அதை மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு நாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி பணிமனையினை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் […]
தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வும் ஆன்லைனில் நடைபெற்றது. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கல்லூரிகளுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த முறை செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் பல தரப்பில் வலியுறுத்தி […]
ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.. மேலும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, தமிழகத்தில் ஜனவரி 20ம் தேதிக்கு […]
தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் பாலியல் புகார்கள் வரும் போது நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. கோவையில் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரால் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டது தமிழகம் […]
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள பொன்மலை பகுதி மக்களிடம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை மனுக்களை பெற்றார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்த விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும். அதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து ஆலோசனை செய்து விரைவில் அறிவிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் சிறுபான்மையான பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்த நிலுவையில் உள்ள வழக்குகள் அதற்கு முடிவு எடுக்க முடியவில்லை. […]
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணி மாறுதலுக்கான விதிமுறைகளை முதல்வருடன் ஆலோசித்து கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் முதல்வருடன் ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்படும். சிறுபான்மையின பள்ளிகளில் […]
சேலத்தில் உள்ள மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு மற்றும் நீர் வரத்து குறித்து மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அணையின் நீர்வரத்து மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, மேட்டூர் அணை உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் தேர்தல் நேரத்தில் அவசரமாக தொடங்கப்பட்டு அரைகுறையாக விட்டதால் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் […]
சென்னை சவுகார் பேட்டையில் உள்ள அருணாசலேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் பொது வசூல் மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் ஹரிப்ரியா, சென்னை மண்டல உதவி ஆணையர் பெ.க.கவெனிதா கோவில் செயல் அதிகாரி ராதாமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த அக்டோபர் 8ஆம் தேதி முதல் இணையவழி முறையில் […]
தமிழகத்தில் குறிப்பிட்ட தேதிகளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதே தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி 24 மணி நேரத்தில் 68 பிரசவங்கள் நடந்தது. அதில் 60% சுகப்பிரசவம். 40% சிசேரியன். சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை அமைச்சர் வழங்கினார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,மாநிலம் முழுவதிலும் […]
கடந்த அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தான் தற்போது பெய்து வரும் பெரும் மழையிலிருந்து சென்னை தப்பியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், எங்களை பொறுத்தவரை 2015-ஆம் ஆண்டு பெரு வெள்ளம் ஏற்பட்டது. அப்போது 28 செ.மீ மழை பெய்தது. இப்போது 21 செ. மீதான் மழை பெய்திருக்கிறது. 28 செ.மீ மழை பெய்தத அடிப்படையில் அனுபவங்களைக் கொண்டு அடையாறு, பக்கிங்கம் கனலகேனல், கேப்டன் கேனல், கூவம் இவையெல்லாம் ஆகாயத்தாமரை […]
தமிழகத்தில் கூடுதலாக 3 சைனிக் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் நூலகம் திறப்பு விழாவில் அமைச்சர் கலந்து கொண்டார். அதன்பிறகு உடுமலை அமராவதி நகர் சைனிக் பள்ளியில் மாணவ மாணவியருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய […]
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியை கைது செய்து அவர் மீது பொக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்ய வேண்டும் […]
தமிழகத்தில் இன்று முதல் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத 50 லட்சம் பேருக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போடப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், தமிழகத்தில் 5 ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 7.5 லட்சம் பேர் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். தமிழகத்தில் உறுப்பு தான பதிவுக்கு ஆதார் எண் முக்கியம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஒரு சில மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வை தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். […]
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த கனமழையின் காரணமாக வட சென்னை அனல்மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில் மழைநீர் தேங்கி மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி இருப்பு மற்றும் மின் உற்பத்தி குறித்து அதிகாரிகளிடம் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது. […]
தமிழகம் முழுவதும் நாவம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் 5000 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக 5000 மருத்துவ முகாம்கள் நாளை நடைபெற உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 750 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்றும், ஞாயிறுக்கிழமை 8-வது மிக தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மேலும் 50 மாணவர்களை சேர்க்க […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் உள்ளிட்ட முழு ஆண்டு தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து கடந்த மாதம் முதல் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.இருந்தாலும் பாடங்கள் முழுமையாக நடத்தப்படாமல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும் விதமாக பாடல், ஆடல் மற்றும் ஓவியம் போன்றவற்றை கற்று கொடுத்து மாணவர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது. […]
கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் அதன் மீது விதிக்கும் வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்திற்கு ஆதரவாக கோவளம் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் சட்டசபைக்கு சைக்கிளை செல்ல முடிவெடுத்தார். இதையடுத்து காலையில் நண்பருடன் சைக்கிளை வாங்கி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருந்து சைக்கிளில் சட்டசபைக்கு வந்த அவரை காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு அவர் சைக்கிளில் […]
தமிழகத்தில் கனமழை காரணமாக உயிர் இழந்தவர்களுக்கு 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் மழையால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் 10 நாட்களுக்குள் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த பணம் போய் சேரும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மழை பெய்வது நின்றுவிட்டால் இன்று […]
மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பேரிடர் மேலாண்மை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்ததாவது ‘மழை நின்று உள்ளதால் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் தமிழக அரசின் குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டு மக்களுக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 1858 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலமாக 975 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலமாகவும் 74 ஆயிரத்து 853 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் குறிப்பாக காய்ச்சல்,வயிற்றுப்போக்கு மற்றும் சேற்றுப்புண் உள்ளிட்ட பல்வேறு வகையான மருத்துவ சிகிச்சைகளின் […]
தமிழகத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதினால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஆறுகள் நிரம்பியதால், அதனை திறக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவாரூர், மதுரை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 94 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஏரிகளை பகல் […]
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டும் என்று மக்கள் யாரும் கேட்கவில்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழக முதல்வர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்திய ஆலோசனை வழங்கியுள்ளார்.அதன்படி தற்போது மின் தட்டுப்பாடு விவரங்கள் குறித்து மின்வாரிய பயன்கள் குறித்தும் தொடர்ந்து கேட்டறிந்தார். ரெட் அலர்ட் முடிக்கப்பட்டுள்ள நிலையில் மழைப்பொழிவு அதிகம் இருந்தாலும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மின் தடை ஏற்படாது. […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வந்த கடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதை இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.காலை 8 மணி அளவில் அது மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டிருந்தது.அது அடுத்த ஆறு மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் நீதிமன்றத்தில் குற்ற ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் தமிழக புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனவுகள் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருகின்ற 10ஆம் தேதி மற்றும் 11 ஆம் தேதி ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியில் வர முடியாமல் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் இந்நிலையில் சென்னையில் பொதுமக்களுக்கு ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடமாடும் பால் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகதாது அணை பணிகளை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியனர் பாதையாத்திரை நடத்துவதாக அறிவித்து உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் பேசிய கிராம வளர்ச்சி மந்திரி ஈஸ்வரப்பா, மேகதாது அணை திட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் பாதயாத்திரை நடத்த உள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அரசு கூறவில்லை. எனவே அரசியல் நோக்கத்திற்காக இந்த பாத யாத்திரையை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளனது. அதனால் அவர்கள் பாதையாத்திரை நடத்தட்டும் […]
சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சைதாப்பேட்டை தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியம் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பிறகு கோட்டூர் சிப்ஸி காலனியில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், குடிநீர்-கழிவு நீரகற்றும் துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மின்சார […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதாகவும், தடையின்றி மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மின்சார துறை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மின்சாரத் துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார். நிவாரண பணிக்கு தயார் நிலையில் 1 லட்சம் மின் கம்பங்கள் தயார் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அரசு கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கனமழையால் 47 கால்நடைகள் உயிரிழந்ததாகவும், 260 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். […]
மெரினா கடற்கரையில் இன்னும் ஓரிரு நாட்களில் கருணாநிதி நினைவிட பணிகள் தொடங்கப்படும். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சென்னை மெரினா கடற்கரையில் 2.25 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய்க்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இவற்றிற்கான திட்ட மதிப்பீடுகள் தயாராக இருக்கிறது என்று அமைச்சர் எவ. வேலு கூறியுள்ளார். மேலும் இதுபற்றிய விரிவான திட்ட அறிக்கைக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்துள்ளதாகவும், […]
தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் மிதமாக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று 8வது மெகா தடுப்பூசி முகாம் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென அடுத்த வாரத்திற்கு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக வீடு தேடிச் சென்ற தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை சாந்தோம் பகுதியில் இன்று காலை முதல் நடந்து வரும் தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]
தமிழகத்தில் மழைகாலத்தில் ஏற்படும் முல்லைப் பெரியாறு அணையின் பிரச்சினை மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேரளா நடிகர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சமூகவலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 142 அடி தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க அதிமுக போராட்டம் நடத்தப்படும் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லை பெரியாறு அணையை நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் […]
தமிழக அரசு ஒரு ஹிந்து விரோத அரசு எனவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அனைத்து கோவில்கள் முன்பும் மண்டியிட்டு தோப்புக்கரணம் போட வேண்டும் எனவும் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சித்து பேசியுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்ததை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய ஹெச். ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறும் ஓநாய் கூட்டத்தை ஊராட்சி […]
கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் அக்டோபர் 29ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி மொத்த 13 மகுதுகளில் இருந்து 8 மகுதுகள் திறக்கபட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழக அரசு அனுமதி இல்லாமல் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது. […]
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இதுவரை 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் பல இடங்களில் அதிக மையங்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற 7 மெகா தடுப்பூசி முகாமில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டமான இல்லம் தேடி கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் செம்பரம்பாக்கம் பகுதியில் நடமாடும் தடுப்பூசி […]
தமிழகத்தில் நேற்று முதல் 1-8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்பு தெரிவித்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2020 ஆம் ஆண்டு மார்ச் 24 முதல் பள்ளிகள் 600 நாட்கள் மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி மறுக்கப்பட்டு அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டனர். அதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை மடுவின்கரையில் உள்ள […]
தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் அரசு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி முடியும் வரை சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள சிறிய தின்பண்ட கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் […]
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தலசயனப் பெருமாள் கோவிலில் மதிய அன்னதானம் அரசால் வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ளச் சென்ற நரிக்குறவ பெண்ணான அஸ்வினியை கோவில் ஊழியர்கள் தரைகுறைவாக பேசி சாப்பிட விடாமல் திருப்பி அனுப்பியதால் அந்தப்பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதன் விளைவாக நேற்று அனைவருக்கும் சமபந்தி விருந்து அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாமல்லபுரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க […]
மக்கள் ஒத்துழைத்தாள் 100% தடுப்பூசி செலுத்திய மாநிலத்தில் தமிழகம் இடம்பெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அடையார் கஸ்தூரிபா நகரில் நடைபெற்ற வரக்கூடிய 7-வது தடுப்பூசி முகாமில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக முழுவதும் 5 கோடியே 73 லட்சத்து 901 பேருக்கு நேற்று இரவு வரை தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மட்டும்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடப்பட்டு […]
அறங்காவலர்களை நியமித்த பிறகு நகைகளை உருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை சூளை பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நகைகளை பிரிப்பதற்கு தடை ஆணை பிறப்பிக்கப்படவில்லை. அதேபோன்று நகைகளை உருக்குவதற்கும் எந்தத் தடை ஆணையும் இல்லை. அறங்காவலர் நியமனத்திற்கு பின்னர் நகைகளை உருக்க வேண்டும் என்று தான் […]
புதிய AY 4.2 வகை கோவிட் தொற்று தமிழகத்தில் இதுவரை இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஏஓய் 4.2 என்ற அந்த உருமாற்ற வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் அது சிலரை தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே AY வகை உருமாற்ற வைரஸ் வேகமாக பரவக்கூடிய தன்மை பெற்றுள்ளதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது குறைவு என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விஞ்ஞானி […]
தமிழகத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1450 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கட்டப்பட்டு வருகின்ற விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள், ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல் மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர்கள் என 850 மாணவர்களை சேர்ப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. […]