தமிழகத்தில் இந்த வருடம் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்வது பற்றி அரசு தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, ” நடப்பாண்டில் 10, 11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது பற்றி அரசு தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. அரசின் அனைத்து செயல்களையும் குறை சொல்வதை மட்டுமே எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் வாடிக்கையாக […]
Tag: அமைச்சர்
வெங்காய விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார். திருச்சி மாநகரில் உள்ள 14 பசுமை பண்ணை அங்காடிகளில் 11 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனைக்கு வந்தது. கேகே நகரில் உள்ள பண்ணை பசுமை அங்காடியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெளி சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து […]
நெல் கொள்முதல் நிலையங்களில் அதிக பணம் வசூல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எம்.பி.வைத்திலிங்கம் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு பற்றி தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். மாநிலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அனைத்தையும் உணவுத்துறை அமைச்சர் ஆய்வு செய்து, ஆயிரம் முட்டைகளுக்கு மேல் எடுக்கப்படும் மையங்களில் கூடுதலாக ஒரு […]
தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து வந்த மாணவன் தான் தற்போது முதலிடம் பிடித்துள்ளார். 12 ஆண்டிற்கு பின்னர் மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் இருந்து, நீட் […]
மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு குளறுபடியும் கிடையாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மசோதா சட்ட மன்றத்தில் அனைத்து அமைச்சர்களின் ஒப்புதலையும் பெற்று தமிழக ஆளுநரின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை, மருத்துவ […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி இப்போது முடிவு எடுக்க முடியாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் காட்பாடியில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி தற்போது எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது.ஏனென்றால் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 26 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன. […]
அதிமுக செய்த பிறகுதான் திமுக அனைத்தையும் செய்துவருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழு ஆலோசனை கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அதிமுக செய்த பிறகுதான் திமுக இவற்றையெல்லாம் செய்துவருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பரக் குழு […]
எங்கள் கூட்டணியில் உள்ள பாஜகவில் குஷ்பு இணைந்துள்ளது எங்களுக்கு பலம்தான் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. மழை நீரை சேமிப்பதற்கு நீர்நிலைகள் அனைத்தும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பருவ மழையை எதிர் கொள்வதற்கு மண்டல அளவில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கை கட்சியின் பொக்கிஷம். அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஈர்க்கும். எங்களின் […]
கர்நாடகா,மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தமிழ்வழிப் பள்ளிகளை திறப்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே இருக்கின்ற பெரிய கொடிவேரி பேரூராட்சியில் சந்தை திறனை மேம்படுத்துவதற்கு பூமி பூஜை இன்று நடந்தது.அதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மூலம் அனைத்து தனியார் பள்ளிகளிலும் […]
ஸ்டாலின் ஒரு அறிக்கை நாயகன் என்பதால், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு வெள்ளை அறிக்கை, கருப்பு அறிக்கை கேட்கிறார் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் பற்றியும், வேலை வாய்ப்புகள் பற்றியும் வெள்ளை மாளிகை வெளியிட வேண்டும் எனவும், கொரோனா காலகட்டத்தில் கொள்முதல் பற்றி தனி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “முதல்வர் ஒரு செயல் நாயகன். அதனால் செயல்படுகிறார். […]
எங்களைப் பொறுத்தவரை இந்த கூட்டணியில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக தான் தேர்தலை சந்திக்கும் என்று அமைச்சர் . கூறியுள்ளார். சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் அரசு சார்பாக கட்டப்பட்டு வருகின்ற கட்டிடங்களை அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த கூட்டணி கட்டாயம் அதிமுக தலைமையில் தான் அமையும். கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து […]
மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சரும் லோக் ஜன சக்தி கட்சி நிறுவன வருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார். 74 வயதான இவரின் மரணச் செய்தி தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இவரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அதிக அளவு அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுப் பணியில் இருப்பவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் வெளியான […]
பஞ்சாபில் நடந்த போராட்டத்தில் ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலம் போராட்டம் வெடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பங்கேற்றார். அந்தப் போராட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர் பால்பீர் சிங் சித்து ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். […]
அதிமுகவில் நடைபெற்றுவரும் அதிகார பூசலில் யாருக்கும் செவிசாய்க்காமல் நடுநிலையாக இருந்து வருகின்றார் அமைச்சர் விஜயபாஸ்கர். முதலமைச்சர் வேட்பாளர் சர்ச்சை […]
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது சிறிய சம்பவம் என்று சத்தீஸ்கர் அமைச்சர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது சிறிய சம்பவம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சத்தீஸ்கர் அமைச்சருமான சிவகுமார் கூறியுள்ளார். அவரது இந்த கருத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். இதற்கு அமைச்சர் சிவகுமார் தான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் மிகவும் […]
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சூழல் தற்போதைக்கு கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில், “கொரோனா தடுப்பு பணியில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் மிக நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான சூழ்நிலை தற்போதைக்கு கிடையாது. கொரோனாவின் பாதிப்பு குறைந்த பிறகுதான் பள்ளிகள் திறப்பது பற்றி பரிசீலனை செய்யப்படும்.மேலும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற கூடிய பள்ளிகளில் பயின்ற […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுபற்றி கூறுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் ஆட்சி நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.கொரோனா தடுப்பு பணி மிக சிறப்பாக தமிழகத்தில் இருக்கின்றது. பிரதமரே பாராட்டக்கூடிய வகையில் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி அமைந்துள்ளது.அறைக்குள் பேசுவதை வெளியில் பேசுவது ஒரு நாகரிகமற்ற செயல் என்பதுதான் எனது […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர்கள் டெல்லி செல்வதற்கும் அதிமுக செயற்குழு கூட்டத்திற்கும் தொடர்பு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர்கள் டெல்லி செல்வதற்கு அதிமுக செயற்குழு கூட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உடன் ஆலோசித்த பின் முடிவு எடுக்கப்படும் […]
அமைச்சர் விஜயபாஸ்கர் தளர்வுகள் அதிக அளவில் இருப்பதால் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். தளர்வுகள் அதிகளவில் இருக்கும் நேரத்தில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், எனவும் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுவாக இந்த தமிழ்நாடு முழுக்க இந்தக் கொரோனா காலகட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட தலைமை மருத்துவமனையில் மற்ற எந்த சேவைகளும் பாதிக்காமல் மிக சிறப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் எல்லாருமே […]
ஏர் விமான நிறுவனம் தற்போது கடன் சுமையால் தத்தளித்து வருவதாக அத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடன் சுமையால் தத்தளித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்க வேண்டும் அல்லது மூட வேண்டும் என்ற இரண்டு வழிகள் மட்டுமே அரசிடம் இருப்பதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் விமான சீர்திருத்த மசாதாவை தாக்கல் செய்துவிட்டு அதுகுறித்து பேசினார். அப்போது அவர், சுமார் 60 ஆயிரம் கோடி கடன் உள்ள ஏர் இந்தியாவை […]
கொரோனா பரவலை எதிர்த்து இந்தியா சாதித்து காட்டியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை இந்தியா வெற்றிகரமாக கட்டுப்படுத்தி சாதனைை படைத்துள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மக்களவையில் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவலுக்குப் பிறகு முதன்முறையாக மக்களவையில் அது பற்றிய உரையை நிகழ்த்திய ஹர்ஷ வர்தன், 10 லட்சம் பேரில் 3,328 பேருக்கு தொற்று என உலகிலேயே மிகவும் குறைந்த அளவு விகிதங்களில் ஒன்றை இந்தியா கொடுத்து சாதித்து காட்டியுள்ளதாக கூறினார். […]
தமிழக்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிக்க பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பே கரணம் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரியவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு நீட் நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வால் அச்சத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருள் ஆகியது, அது மட்டுமல்லாமல் அனைவரின் நெஞ்சை உலுக்கும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர் தற்கொலை […]
கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கும் நடைமுறையை சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கும் நடைமுறையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்காக இரண்டு பேட்டரி கார்களையும் வழங்கியிருக்கிறார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது, ” சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் கட்டுக்குள் தான் இருக்கின்றது. கொரோனாவை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு […]
தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் கருத்தால் அதிமுக பலவீனமடைந்ததாக கூற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” அதிமுகவுடன் தற்போது கூட்டணியில் இருந்து வருகிறோம், ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இனி ‘கிங்’காகத்தான் இருக்க வேண்டும். தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் தொண்டர்களின் விருப்பம்” என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் […]
தமிழகத்தின் திரையரங்கங்கள் திறப்பதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் மத்திய அரசு ஊர் அடங்கிய பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்துள்ளது. அந்த தளர்வுகளால் மக்கள் அனைவரும் பயன் அடைந்துள்ளனர். கடந்த 10ஆம் தேதி உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வருகின்ற ஒன்றாம் […]
தமிழ் திரையுலகில் ஒற்றுமை இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார் . தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜு நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். திரையுலகில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது ” திரையுலகினர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. நடிகர் சங்கத் தேர்தல் நடந்த போது ஒரு பிரிவினர் நீதிமன்றம் சென்றனர். அதுபோலவே தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடந்த போது ஒரு பிரிவினர் நீதிமன்றம் சென்றனர். தயாரிப்பாளர்கள் சங்கமாக இருந்தாலும், நடிகர்கள் […]
எஸ்.வி. சேகர் மானம், ரோஷம் உள்ளவராக இருந்தால் அவர் எம்எல்ஏவாக இருந்தபோது வாங்கிய சம்பளத்தைத் திருப்பியளிக்க தயாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார். கடலோரங்களில் மீன் வளத்தைப் பெருக்க செயற்கையாக அமைக்கப்பட்ட பவளப்பாறைகளை கடலில் நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று தொடங்கிவைத்தார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஆழ்கடலில் மீன் வரத்து அதிகம் உள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பவளப்பாறைகள் நிறுவும் திட்டத்தைத் தொடங்க உள்ளோம். மீனவர்களுடன் […]
கர்நாடகா அமைச்சருக்கு கொரோனா கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் வீட்டில் பணிபுரிந்த 5 ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில வேளாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் பிசி பாட்டீல். கொரோனா பரிசோதனைக்குப் பின் அமைச்சருக்கு அறிகுறிகள் இருந்தன. அதனால் பெங்களூருவில் உள்ள தன் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திகொண்டார். அதன்பின் அவரின் மருத்துவ அறிக்கை வெளியானதில் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. மேலும் அவரின் வீட்டில் பணிபுரிந்த ஊழியர்கள் ஐந்து பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை […]
தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 1515 கர்ப்பிணிகள் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியினை அதிகரிப்பதற்காக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்போது கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 200 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் கொரோனா […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த 8ம் தேதி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ கொரோனா பாசிட்டிவ் ஆகி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் தொடர்ந்து அவரின் உடல்நிலை நல்ல நிலையிலேயே இருந்து வந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூக்கு லேசாக அறிகுறியுடன் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவையே இருந்தது. அமைச்சருக்கு வேறு எந்த பிரச்சினையும் கிடையாது என்பதை மியாட் மருத்துவமனை நிர்வாகம் […]
தமிழகத்தில் இன்று காலை தீடிரென 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. தமிழகத்தில் இன்று காலை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. யாருமே எதிர்பார்க்காமல் இந்த அறிவிப்பு இன்று காலை வெளியாகியது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் இருந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து தேர்வு முடிவு வெளியாகியது. இந்த நிலையில்தான் தேர்வு […]
மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தி வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை ஜலசக்தி மிஷன் என்று அடிப்படை விவரம் கூட தெரியாமல் அறிக்கை விடுத்துள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கைகள், அரசியல் உள்நோக்கத்தில் தினம் ஒரு அறிக்கை என்றால் அது மு க ஸ்டாலின் தான் என்று உலகமே நகைக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா காலத்திலும் ஸ்டாலின் அறிக்கை […]
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகனும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனை சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் ஆரம்பத்தில் அவருக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லை என்றும், அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் அவர் உடல்நிலை நார்மலாக இருந்ததாகவும், அவர் தொடர்ச்சியாக கண்காணிப்பில் இருக்கணு என்று சொல்லப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் அமைச்சருக்கு குறைந்த அளவு இருமல் இருந்ததாகவும் இதனால் அவருக்கு மேற்கொண்ட சோதனையில் கொரோனா தொற்று […]
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டிருந்த ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதே போல கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட போக்குவரத்து சிக்கல் உள்பட பல காரணங்களால் 12ஆம் வகுப்பு இறுதி பொதுத்தேர்வை எழுதாத 36 ஆயிரத்து 842 மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் […]
விபத்தில் காயமடைந்த நபரை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பல்வேறு துறைகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன. இதனை தொடர்ந்து தற்போது சில துறைகள் சமூக இடைவெளியை பின்பற்றி இயங்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த வர்த்தக சங்கம் மற்றும் ஆடை ஏற்றுமதி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொள்ள சென்றுள்ளார். அப்போது ஆட்டையாம்பட்டி பகுதி நோக்கி […]
குடியரசுத் தலைவர் மாளிகையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என ராஷ்டிரபதி பவன் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பணியாளருக்கு தொற்று என தகவல் வெளியான நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகைப் பணியாளரின் குடும்பத்தில் தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பு இருந்தது, தற்போது அவர் தனிமைப்படுத்துதலில் உள்ளார் என தெரிவித்துள்ளது. இன்று காலை டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவர் மாளிகை) ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியானது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 125 குடும்பங்களை சுய தனிமைபடுத்தக்கோரி […]
டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவர் மாளிகை) ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 125 குடும்பங்களை சுய தனிமைபடுத்தக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் துப்புரவு பெண் பணியாளர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள மற்றவர்களை பரிசோதித்தபோது, அவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். […]
கொரோனாவை தடுப்பதில் அரசுக்கு நிதி என்பது ஒரு தடையே இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று 1,024 பேருக்கு உறுதி செய்யப்பட்டதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 96 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தை பொறுத்த வரை 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்து 5 […]
கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 4 பேர் குணமடைந்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் தற்போது […]
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் 100 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நாட்டையே ஆட்டி படைக்கின்றது. நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சுகாதாரத்துறை அமைசர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலமே 18 பேர்க்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. தற்போது […]