தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ம் தேதிக்குப் பதிலாக வரும் ஆகஸ்ட் .25-ம் தேதி தொடங்கி அக்டோபர் 21-ம் தேதி முடிவடையும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்படும். நீட் தேர்வு முடிவுகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பு களுக்கான பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 25 […]
Tag: அமைச்சர்
தமிழகத்தில் இன்று 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 16 லட்சம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இன்று தமிழகத்தில் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை முதல் டோஸ்ட் தடுப்பூசி செலுத்தாதவர்களும், இரண்டாவது டோஸ் செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்தாதவர்களும் இந்த […]
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2 ம் வருடத்தை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியில் பயனாளிகளுக்கு மருத்துவப் பெட்டகத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் வழங்கியுள்ளார். அவருடன் சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாசுபிரமணியன் கூறியதாவது மக்களை தேடி மருத்துவம் கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். அரசு மருத்துவம் அனைவருக்கும் போய் […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரேஷன் கடைகளில் அவ்வப்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சென்னையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தின் முடிவில் அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது தமிழகத்தின் […]
மதிய கல்வித்துறை சமீபத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டு இருக்கிறது. அதில் இடம்பெற்ற தமிழக கல்லூரிகள் கலந்து கொண்ட உயர்கல்வி மேம்பாடு என்னும் கருத்தரங்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி இந்தியாவிலேயே உயர் தரத்திலும் சதவீதத்திலும் தமிழ்நாடு முதலாவதாக இருக்கிறது. உயர் கல்விக்காக முதல்வர் அதிக நிதியினை ஒதுக்கி இருக்கிறார். கல்வி தரத்தை மேலும் உயர்த்த முதல்வர் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை […]
போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள குரோம்பேட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த 6-ம் கட்ட பேச்சு வார்த்தையில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கடந்த ஆட்சியின் போது ஜூனியர், சீனியர் வித்தியாசம் இன்றி தொழிலாளர்கள் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை அரசால் ஏற்றுக்கொண்ட […]
ஆவின் நிறுவனம் சார்பில் பாட்டில் குடிநீர் தயாரித்து விற்கப்படும் என அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆவினுக்கு சொந்தமான 28 பால் பதப்படுத்தும் நிலையங்களிலும் குடிநீர் தயாரிக்க வசதிகள் உள்ளன. ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் பாட்டில் குடிநீர் தயாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய திட்டம் அமல்படுத்த உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சக்கரை முதலான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. ஒருவரின் அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் பல தரப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அட்டையை வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் வீதமும், அளவும் மாறுபடுகிறது. அவ்வபோது ரேஷன் கடைகளில் பலவிதமான மாற்றங்கள் […]
குரங்கம்மை அறிகுறிகளுடன் தமிழ்நாட்டிற்கு வந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட முன்மாதிரி முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. அதில் அவர்கள் யாருக்கும் குரங்கமை இல்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு ஊசியால் கட்டுப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கின்ற நிலையில் குரங்கம்மை நோய் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 70-ற்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் […]
தென்னாப்பிரிக்காவில் இருந்து குரங்கு அம்மை வைரஸ் தற்போது ஐரோப்பியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த தொற்று பாதிக்கப்பட்டால் 6 முதல் 13 நாட்கள் வரை அதன் தாக்கம் இருக்கும். மேலும் பாதிப்பு தீவிரமடைந்தால் 5 முதல் 21 நாட்கள் வரை கூட தாக்கம் இருக்கும். காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, நிண நீர், முனைகளில் வீக்கம், குளிர்ச்சி, சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். மற்ற […]
குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரள தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: “குரங்கு அம்மை பாதிப்பு 80 நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. கனடா, அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு வந்த குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் குரங்கு அம்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரளா எல்லைப் பகுதிகளில் […]
இந்தியாவில் மருத்துவம் படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் வெளிநாடுகளில் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பயலே ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. அதன்படி வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவம் பயின்று வருகிறார்கள். அவ்வாறு வெளிநாடுகளில் மருத்துவ படிப்பு முடித்தவர்கள் இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற foreign medical graduate examination தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர் இந்தியாவில் ஓராண்டு காலம் பயிற்சி மருத்துவராக பணியாற்ற வேண்டும். அதன் பிறகு தான் மாநிலம் […]
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவியின் இறப்பு இன்னும் மக்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறி வந்த பெற்றோர்கள், பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்க கோரிய வழக்கை தான் நியாயம் கிடைக்க வில்லை என எழுதி உள்ளார்கள். இந்த வழக்கு முடிந்து விட்டது. இது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என போடுவது சரியாக இருக்காது. இந்த சூழலில் இன்று தமிழக முதல்வர் தலைமையில் பள்ளி […]
கள்ளக்குறிச்சி கலவரம் ஏற்பட்ட கனியாமூர் பள்ளியின் மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்க உள்ளது. அதிலும் குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாரதி, குறிஞ்சி மற்றும் பாலாஜி ஆகிய மூன்று தனியார் பள்ளிகளில் அடுத்த வாரம் பாடம் நடத்துவதற்கு வகுப்பறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.இவர்களுக்கு சக்தி மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கலவரம் உண்டான தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை எடுப்பது […]
மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “இந்தியாவை பொருத்தவரை டெல்லி, தெலுங்கானா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் முதல் குரங்கம்மை பாதிப்பு என்றவுடன் தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அமெரிக்காவிலிருந்து கிருஷ்ணகிரி வந்த சிறுவனுக்கும் மற்றும் தனியார் மருத்துவமனையில் […]
தனியார் நிறுவனங்களால் பயணிகள் ரயில்களை இயக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய ரயில்வே தனது நெட்வொர்க்கில் பல கட்டங்களாக தனியா ரயில்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தது. அடுத்த நிதியாண்டு முதலில் 12 பெட்டிகளை இயக்கத் தொடங்கும் என்றும் 2027 ஆம் ஆண்டுக்குள் 151 பெட்டிகளை தனியார் ஆப்ரேட்டர்களால் இயக்கப்படும் எனவும் தெரிவித்தது. இந்நிலையில் ரயில்வே துறையிடம் தற்போது தனியார் மயமாக்கல் குறித்த எந்த […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியானது இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது. வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட்தொடர் மாமல்லபுரத்திலுள்ள போர்பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் இந்தியா, நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின் உட்பட 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். இந்த போட்டியில் இந்தியா சார்பாக மொத்தமாக 30 வீரர் மற்றும் வீராங்கனைகள் களம்காண இருக்கின்றனர். அவற்றில் தமிழகத்தைச் சேர்ந்த […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் நடைபெற்றுள்ளது. இந்த திட்டமானது கீழக்கரை தனியார் கல்லூரியில் வைத்து நடைபெற இருந்தது. இந்த திட்டத்தினை தொடங்கி வைப்பதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் ராமநாதபுரம் ஆர் எஸ் மடையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்குள் வருகை கொடுத்தார். அவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா எனவும் பள்ளியில் […]
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி திடீரென ரூ.160 கோடியில் மருத்துவமனைக்கு கட்டடம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், ரூ.160 கோடியை 16 வினாடிகளில் ரொம்ப சாதாரணமாக சொல்லிவிட்டார். இதனை கேட்டு நான் ஷாக் ஆகி விட்டேன். அவர் ‘உயர்ந்த கற்பனை உள்ளவர்’ என்று அவர் கிண்டலாக பேசினார்.
தமிழகத்தில் மின்சார கட்டணம் சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரத்தை வேண்டாம் என்று நினைப்பவர்கள் கணக்கீட்டாளர்கள் அளிக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். 100 யூனிட் மின்சாரம் இலவசமாகவும்,100 யூனிட்டுக்கு மேல் 200 யூனிட்டுக்குள் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புதைவிட கம்பிகள் அமைக்கும் பணி 1200 கோடியில் நடைபெற்று வருகிறது. பருவ மலைக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க அரசு […]
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்கள் குறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அடுத்த ஐந்து வருடங்களில் தமிழகத்தில் சொந்தமாக 6,220 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11 நாட்கள் மின் உற்பத்திக்கான நிலக்கரி கையிருப்பில் […]
கல்வி அதிகாரம் முழுவதும் மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் சட்டமன்ற தொகுதி திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது “இந்தியை கட்டுப்படுத்துவதை ஆரம்பத்தில் இருந்தே நாம் எதிர்த்தோம். மாநிலத்தில் முழுமையாக கல்வி அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். புதிய கல்வி கொள்கை குறித்த முதல்வர் […]
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு முடிவுகளை மாணவர்களின் நலன் கருதி இந்த மாதத்திற்குள் வெளியிட வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் மாணவர்களும், பெற்றோர்களும் பாதிப்படைந்து இருக்கின்றனர். தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் தமிழகத்தில் கலந்தாய்வுக்கான தேதிகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் புதிய கல்விக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒன்றிய இணைய அமைச்சர் முருகன் […]
தமிழகத்தில் 2011-12 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. 2011 சட்டமன்றத் தேர்தலின் போது அஇஅதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தது.இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு லேப்டப் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் […]
சென்ற 2020 ஆம் வருடம் முதல் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தற்போதுவரை கொரோனா பாதிப்புகள் முழுமையாக குறையவில்லை. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகம் முழுதும் இன்று 1,00,000 மையங்களில் 31-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. தமிழகத்தில் அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா இறப்புகள் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் […]
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதுகுறித்து ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அனைத்து துறை தலைமை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், கோவை மாவட்டத்தில் அதிகமான மழை பெய்தால் கூட மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, நீர்வளத்துறை, […]
கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியிருப்பதாவது “கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்தவும், தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த […]
கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் கிராமத்தில் 18வது சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மருத்துவத்துறையின் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே […]
ஜூலை 15ஆம் தேதி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் முழுவதும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது .ஆனால் இந்த ஆண்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிற்கு கடந்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன . பள்ளிகள் திறந்த […]
சென்னை கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் மு.பெ.சுவாமிநாதன், சேகர் பாபு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பிரபாகர் ராஜா ஆகியோர்கள் பங்கேற்றனர். அதன் பிறகு செய்தியாளர் இடம் பேசிய சுவாமிநாதன், சுதந்திர போராட்ட தியாகி, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி இரட்டைமலை சீனிவாச சிலைக்கு முதல்வர் ஆணைகினங்க […]
கலைஞர் அரங்கம் அமைப்பது தொடர்பாக மாநில கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநிலக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின் பேசும்போது “2000 பேர் அமரக்கூடிய வகையில் நம்முடைய முத்தமிழ் தலைவர் கலைஞர் பெயரால் மாபெரும் அரங்கம் மாநில கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படும். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய தம்பி உதயநிதியையும் […]
காரைக்காலில் சென்ற சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையானது அதிகரித்து வந்தது. இதனையடுத்து மாவட்ட நிா்வாகம் சாா்பாக குடிநீர் எடுக்கும் பகுதி, குடிநீர் தொட்டி வாயிலாக விநியோகிக்கும் பகுதி, குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் போகும் பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் பாதிக்கப்பட்ட சிலரையும் பரிசோதித்த சூழ்நிலையில், அது காலராவுக்கான அறிகுறியாக தெரியவந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து […]
இலங்கையில் சமீபகாலமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. இது குறித்து அமைச்சர் காஞ்சனா விஜய் சேகரா, ஒரு நாளுக்கு தேவையான எரிபொருள் மட்டுமே கையிருப்பு உள்ளது. அதனை தொடர்ந்து எரிபொருள் வாங்க எண்ணெய் நிறுவனங்களுக்கு 587 மில்லியன் டாலர் வழங்க வேண்டிய நிலையில் மதிய வங்கியால் 125 மில்லியன் டாலர் மட்டுமே திரட்ட முடிந்தது. இதனால் அண்டை […]
ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு “கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” கீழ்க்கரை முகமது சதக்பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு கையிட்டை வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர், ராமநாதபுரம் பின்தங்கிய மாவட்டம் அல்ல, முன்னேறி வரும் மாவட்டம். எனவே மாணவ, மாணவிகள் நன்கு கல்வி கற்க வேண்டும். தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஆர்வமுள்ள […]
உலக நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இதனால் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் “பின்னோக்கி ஓடும்” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய […]
10 க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் இடத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு சென்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி அமைச்சர் மா. சுப்ரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாதிப்பு […]
தமிழக அமைச்சர் கூறியுள்ள தகவல் மாணவ மாணவியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற தலைப்பில் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான உயர்வு கல்விக்கான வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நெல்லையில் சாரதா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது: “தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தலைமைச் […]
சென்னை நந்தனத்தில் உள்ள பத்திரப்பதிவுத்துறை மற்றும் வணிகவரித் துறையை அலுவலகத்தில் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பத்திர பதிவுத்துறையில் ரூ.2100 கோடி வருவாய் அதிகரித்துள்ளது. இந்த வருவாயை மேலும் பெருக சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் சனிக்கிழமைகளில் நடைபெற்ற பத்திரப்பதிவு மூலம் ரூ.170 கோடி வருவாய் வந்துள்ளது. அதேநேரத்தில் வணிகவரித் துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.7,000 […]
தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் ஜப்பான் மொழியை பயிற்றுவிக்கவும் அதற்கான ஆசிரியர்களை நியமிக்கவும் ஜப்பான் அரசு முன் வந்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்ததாவது :”சென்னை தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, வேலூரில் தந்தை பெரியார் பாலிடெக்னிக் ஆகியவற்றின் இந்த ஆண்டு முதல் தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறக்கூடிய சான்விச் படிப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த படிப்புகளில் மொத்தம் ஏழு பருவங்கள் இருக்கும். இவற்றில் சேரும் மாணவர்கள் மூன்றரை ஆண்டு […]
தமிழகத்தில் 10 வருடங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது. முதலமைச்சராக முதன்முறையாக கடந்த 2021 ஆம் வருடம் மே 7ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளார். திமுக ஆட்சி அமைத்ததுமே அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் அளிக்கப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாக்களிலும், திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து […]
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை காரப்பாக்கத்திலுள்ள தனியார் தொழில் நுட்பக் கல்லூரியில் சர்வதேச FIDE சதுரங்க போட்டியை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அதாவது 5 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 350-க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இந்த நிகழ்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், அனைத்து இந்திய […]
தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு அரசு துணை சுகாதார நிலையம் நல வாழ்வு மையத்தில் உள்ள சிகிச்சை கூடங்கள் மற்றும் ஆய்வகங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் போன்றோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி […]
தமிழகத்தில் திமுகவின் ஓராண்டு சாதனைகளை கலாய்க்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மின்வெட்டு பிரச்சினை குறித்து டுவிட்டரில் கலாய்த்தார். அதற்கு செந்தில் பாலாஜி கடுமையாக பதில் அளித்திருந்தார். இந்நிலையில் மணிபால் குளோபல் கல்வி நிறுவனத்தின் தலைவர் மோகன் தாஸ் பாய் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், சர்ச் மசூதிகளில் மின் கட்டணம் மிகக் குறைவாக யூனிட்டிற்கு ரூ.2.85 வசூலிக்கப்படுகிறது என்றும் கோவில்களில் யூனிட்டிற்கு ரூ.8 வசூலிக்கப்படுகிறது என்றும் அதில் பதிவிட்டிருந்தார். அதனைத் […]
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கணினி வழி வாடகை வசூல் மூலம் 200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பெயரில் கடந்த 8.10.2021 அன்று கணினி வழியாக கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கப்பட்டது .அன்றைய தினம் முதல் இன்று வரை ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆசையா சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் […]
பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி சிபிஎஸ்சி முடிவுகள் வெளியான பின் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அமைச்சர் பொன்முடி அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்வதில் […]
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அவருடைய திட்டங்கள் அனைத்தும் மக்கள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்கும் வகையில் உள்ளது. இந்த வரிசையில் இந்தியாவிலேயே முதல் முறையாக வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மருத்துவம் பார்க்கும் “மக்கள் தேடி மருத்துவம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் நோயால் அவதிப்பட்ட மக்களுக்கு வீடு தேடி சென்று மருந்து பெட்டகம் வழங்கப்படும். அதாவது சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் […]
இலவச பாடப் புத்தகங்களை விற்பனை செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், நாகமலை, புதுக்கோட்டையில் பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி அதிகாரிகளுக்கான நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் அன்பில் மகேஷ். இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது: “10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மதிப்பெண்களை கண்டு […]
தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாவதற்கு வாய்ப்புள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். நேற்று சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் “இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும்48” என்ற திட்டத்தின் […]
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக நடைபெற்று வரும் போரானது மூன்றரை மாதங்கள் கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே இருக்கிறது. ரஷ்ய படை வீரர்கள் இழப்புகளை சந்தித்த போதிலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே வருகிறது. இந்த போரில் இரு நாட்டின் வீரர்கள் மற்றும் பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். லட்சக்கணக்கானோர் சொந்த ஊரை காலி செய்துவிட்டு வேறு நாட்டிற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் இந்த போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில் […]