Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1,000 பணியிடங்கள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் ஆவினில் விரைவில் ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர் மாவட்டங்களில் புதிதாக ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.மேலும் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து வருகின்ற 27ஆம் தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் முடிவு செய்வார் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் விரைவில் ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவல்….. “தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார் . அப்போது அவர் கூறியதாவது “தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது. சென்னையை அடுத்த செங்கல்பட்டில் அதிக பாதிப்பு உள்ளது. செங்கல்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

“போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்”… புத்தகங்களை இலவசமாக வழங்கும் எம்.பி…!!!!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான போட்டி தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு கருவி புத்தகம் உரியபயிற்சி போன்றவை கிடைப்பதில்லை. அதற்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 40 லட்சம் மதிப்பிலான மதுரையில் உள்ள 85 நூலகங்களுக்கு தமிழ், ஆங்கிலம் என 164 புத்தகங்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு கொண்ட 13 ஆயிரம் புத்தகங்களை வழங்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். அதனை நிறைவேற்றும் விதமாக இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு….. என்ன காரணம் தெரியுமா?….!!!

தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியலின பிடிஓவை அவமதித்த புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து புதிய தமிழகம் மற்றும் பறையர் பேரவையின் ஏர்போர்ட் மூர்த்தி, பட்டியலின பிடிஒவை அவமதித்து சாதி பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை பரிசளித்த […]

Categories
மாநில செய்திகள்

“இது தான் ரொம்ப முக்கியம்”….. அமைச்சர் அன்பில் மகேஷ் குழந்தைகளுக்கு கொடுத்த அட்வைஸ்….!!!!

மாணவச் செல்வங்கள் இந்த வயதில் படிப்பில் அதிக நாட்டம் செலுத்த வேண்டும் என்றும் அதுதான் எதிர்காலம் சிறப்பாக அமைய வழிவகுக்கும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார். முதியவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.  திருச்சி வாழப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். […]

Categories
மாநில செய்திகள்

தருமபுர ஆதீனத்தை சந்தித்த அமைச்சர்…… அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மடாலயத்தில் சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று 27-வது குருமகாசந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் மெய்யநாதனிடம் நிருபர்கள் கேட்டபோது, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் புதிய பஸ் நிலையம் அமைய இடம் வழங்கிய தருமபுர ஆதீனத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றார்.

Categories
மாநில செய்திகள்

தொழில் நிறுவனங்களுக்கு விரைவாக மின்சார இணைப்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையை அடுத்துள்ள எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் ஆர்.எத்திராஜ் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தார்கள். இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒப்பந்ததாரால் வழங்கப்பட்ட பணி நிறைவுக்கான அட்டவணை தவறாது பின்பற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார் அது மட்டுமில்லாமல் மற்ற இதர பணிகளான கரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் யோகா பயிற்சி….. கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!

சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள வேலப்பன் சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றின் வளாகத்தில் பிரமாண்டமான உலக சாதனை நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது உலக யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவர்கள் கடினமான ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் களிமண்ணால் 30 விநாடிகளில் சிலை செய்து உலக சாதனை படைக்கும் பி.கே. முனுசாமி என்பவர் முயற்சியும் அடங்கியது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை உயர்நீதிமன்ற […]

Categories
மாநில செய்திகள்

நீதிபதி கொடுத்த ஐடியா….. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள வேலப்பன் சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் வளாகத்தில் பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவர்கள் சமகோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து […]

Categories
மாநில செய்திகள்

“பல்கலைக்கழகங்களில் 69% இட ஒதுக்கீடு”….. அமைச்சர் பொன்முடி குட் நியூஸ்….!!!

பல்கலைக்கழகங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிலையில், அந்த பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி 10 சதவீத இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு பள்ளி சீருடை மாற்றம்…? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் நாளை ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதிக கட்டணம் வசூலிப்பது போன்ற செயல்களில் தனியார் பள்ளிகள் ஈடுபடக்கூடாது. முகக்கவசம் அணிந்து வருவது குறித்து அறிவிப்பு வந்தால் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். மன ரீதியாக, உளவியல் ரீதியாக அதிகளவில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்படும். பள்ளி சீருடையை மாற்ற எந்த முடிவும் இல்லை. நாளை முதல் அமைச்சர்களுடன் […]

Categories
மாநில செய்திகள்

“சென்னையில் இரண்டாவது ஏர்போர்ட்”….. அமைச்சர் சொன்ன சூப்பர் ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணி எப்போது தொடங்கும் என்பது குறித்த முக்கிய தகவலை விமான போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் கூறியிருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு?…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பணி செய்யும் இடங்கள், […]

Categories
மாநில செய்திகள்

“அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்கள்”….. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலம் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் என்று அமைச்சர் கயல்விழி தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தலைமையில் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் பழங்குடியின மக்களுக்கு கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : உங்க வீட்டு நாய்க்கும்….. இனி கொரோனா தடுப்பூசி….. மத்திய அரசு அதிரடி….!!!!

இனி வீட்டு விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார். நாய், சிங்கம், சிறுத்தை, எலி, முயல் போன்ற விலங்குகளை டெல்டா, ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அனோகோவாக்ஸ் தடுப்பூசி உதவும். இதனால் அனைத்து விலங்குகளுக்கும் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவித்துள்ளது. மேலும் இனி தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் மீண்டும்….. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் 2,381 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் எல் கே ஜி, யுகேஜி வகுப்புகளாக மாற்றப்பட்டு சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! “குறைந்த கட்டணத்தில் இணைய வசதி”….. தமிழக அரசு வேற லெவல் திட்டம்….!!!!

குறைந்த விலையில் இணைய வசதி என்ற திட்டத்தை மக்கள் மத்தியில் அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் 12, 625 ஊராட்சிகளிலும் இணைய வசதி ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் 2018ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இருக்க வேண்டும். அதிமுக அரசின் தவறான செயலால் இந்த திட்டம் நிறைவேறாமல் போனது. மேலும் இரண்டு வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் இரண்டு வழக்குகளையும் முடிவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ரூ.42,500 கோடி கடனில் தவிக்கும் தமிழக போக்குவரத்துக் கழகம்…. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழக அரசின் போக்குவரத்து கழகம் ரூ.42,500 கோடி கடனில் இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் தான் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தினர். அதனால் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.42,500 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போதும் தமிழக அரசு பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

“பஸ் பயணிகளுக்கு குட்நியூஸ்”….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தாண்டு இறுதிக்குள் பஸ்சில் இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை வழங்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம். விரைவில் பணிகள் முடிக்கப்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

மனு கொடுக்க வந்தவரை….. “அடிக்க பாய்ந்தார் தமிழக அமைச்சர்”….. பரபரப்பு சம்பவம்….!!!!

ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மனு கொடுக்க வந்த ஒருவரை அடிக்க கையோங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வருகின்றது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தின் பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடந்தாங்கல் ஏரியின் புனரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துக்கொண்டு ரூ.8 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைப்பு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக அரசுக்கு எதிரான தீர்மானம்”… அரசு ஊழியர்கள் போட்ட பிளான்…. அமைச்சருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…!!!!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 10வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ரமேஷ் தலைமையில் சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதன்பின் மாநில தலைவர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் துறை சார்ந்த அமைச்சர் பங்கேற்க  […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா 4-வது அலை தொடங்கியதா?…. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கல்விக்காக 84.1% ஒதுக்கீடு…. பெண்களுக்கு இது ரொம்ப முக்கியம்…. அமைச்சர் கயல்விழி அட்வைஸ்…!!!!!!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 98 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூட கட்டிடத்தை தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்துள்ளார். அதன்பின் மாவட்ட ஆட்சியர் பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஒரு கோடியே 94 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியுள்ளார். மேலும் கடந்த ஒரு ஆண்டுகால சிறப்பான ஆட்சி நடைபெறுவதற்கு காரணம் முதல்வர் தளபதியின் திட்டங்கள் செயல்பாடுகள் தான் அதேபோல பெண்கள் சமுதாயம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா 4ஆம் அலை?…. அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்….!!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு 100- ஐ தாண்டியதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் 30 என்ற அளவில் பதிவான கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல நேற்று ஒரே நாளில் 139 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை 59, செங்கல்பட்டு 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் நேற்று 52 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் அரசு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து […]

Categories
மாநில செய்திகள்

“99 சதவீதம் இந்த வைரஸ் தான் பரவுது”…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

நாடு முழுதும் சென்று சில தினங்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மராட்டியம், கேரளா, டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டுமாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என்று மாவட்ட கலெக்டர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்பே அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து தற்போது சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சர்வதேசத் தளத்தில் உருவாகும் ரயில் நிலையம்…. அமைச்சர் அதிரடி….!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை சந்திக்க வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பக்தர்கள் வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் திருப்பதி வருவதற்காக ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச தரத்தில் திருப்பதி ரயில் நிலையத்தை ரூ.350 கோடி செலவில் அமைக்க உள்ளது என்று ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த திட்ட நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், முந்திய திட்டங்களை மாற்றி புதிய திட்டத்தை முன் வைக்கப்பட்டு உள்ளது. அதனைதொடர்ந்து தெற்குப் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

“இனி திருப்பதி போல திருச்செந்தூர்”…. அமைச்சர் சேகர்பாபு உறுதி…!!!!!!!

சென்னை காலடிப்பேட்டையில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜர் பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு என்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திருச்செந்தூருக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதனால் 200 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பதி கோவிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோயிலில் கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மேலும் ஒரே நேரத்தில் 5000 பக்தர்கள் வந்தால் கூட பிரத்தியேக வசதி ஏற்படுத்தி அவர்களை வரிசையாக அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இந்தநிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் முதலில் மாதம்தோறும் பொருள்கள் வாங்கும்போது உரிய பதிவேட்டில் பதிவு செய்தபிறகு பொருட்கள் வழங்கப்பட்டது. அதன்பிறகு பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்பட்டது. அதன் மூலமாக ரேஷன் அட்டைதாரர்கள் பொருள்கள் வாங்கும் போது தங்களின் கைரேகையை பதிவு செய்வது அவசியம். அதனால் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்டது. முதலில் இந்த முறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த பயோமெட்ரிக் முறையில் பல சிக்கல் ஏற்பட்டு வருகிறது. சிலரின் கைரேகை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் 500 பேட்டரி பேருந்துகள்”….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…..!!!!

சென்னையில் விரைவில் 500 பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நேற்று கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் திராவிட பயிலரங்கம் நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “நாட்டில் திராவிட சித்தாந்தம் தற்போது எந்தவகையில் தேவை என்பதை எடுத்துரைக்கும் விதமாக இன்றைய தலைமுறையினருக்கு திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்கும் வகையில் இந்தப் பயிலரங்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: “அமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்”….. தீர்மானம் நிறைவேற்றம்…..!!!!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது . திருச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நடைபெற உள்ளது என கூறப்பட்டு வரும் நிலையில், அதில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த தீர்மானத்தால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில்….. “விரைவில் வரப்போகும் புதிய நடைமுறை”….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கடை வாயிலாக பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதில் உள்ளகியூ ஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு அதில் காட்டப்படும் பெயர்களில் உள்ளவர்கள் மட்டுமே கைரேகை பதிவு […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு…. அமைச்சர் சொன்ன செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையில் கடந்த 12ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், தொழிற்சங்கங்கள் முன்வைத்த பல கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டது. கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு 300 ரூபாய் பேட்டா வழங்கப்படும். இந்த பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற 15 விதமான படிகளை உயர்த்துவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இனி…. மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் அரிசி,சர்க்கரை மற்றும் பருப்பு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் அனைத்து பொருள்களையும் எடை குறிப்பிட்டு பாக்கெட்டுகளில் வழங்கினால் முறைகேடுகளை தவிர்க்கலாம் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அரிசி கடத்தலை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் அரிசி,சர்க்கரை மற்றும் பருப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி….. “ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை”….. குடும்ப அட்டைதாரர்கள் ஹேப்பி…..!!!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு., சர்க்கரை போன்றவை பாக்கெட்டில் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி துவக்க விழாவானது இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். சென்னை நந்தனத்தில் உள்ள சிவில் சப்ளைஸ் அலுவலகத்தின் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களில்….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று நேரடி ஆய்வு செய்ய வேண்டும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஆட்சியர்கள் நேரடியாக தணிக்கை செய்யவும் அவர் உத்தரவிட்டார். நேற்று சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 13 பள்ளிகள் திறப்பு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு முடிய உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் உருவாக்கிய புதிய தொற்று… மக்கள் அச்சப்பட தேவையில்லை….. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு…!!

கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் என்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமரி மாவட்டத்தில் மருத்துவத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் கருவிகள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் குறைந்து வந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. 4000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தூத்துக்குடியில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சித்த மருத்துவ பல்கலைகழகம், ஒமைக்ரான் தொற்று, சுகாதாரத் துறை காலிப் பணியிடங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அமைச்சர் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தார்கள். அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், தமிழ்நாடு பட்ஜெட்டில் கூறியவாறு சுகாதார துறையில் உள்ள 4000 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை எம்ஆர்பி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக செவிலியர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

மாப்பிள்ளை சம்பா நெல்லுக்கு புவிசார் குறியீடு…. அமைச்சர் சக்ரபாணி உறுதி…!!!!!!

பாரம்பரியமிக்க மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்திற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உளவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அமைச்சர் பேசிய போது பாரம்பரிய நெல் ரகங்களை அரசின் சிறப்பு அங்காடிகளில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருக்கின்றார். மேலும் தமிழகத்தில் உள்ள 286 சேமிப்பு கிடங்குகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

1.70 லட்சம் மெட்ரிக் டன் நெல்… வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு…. அமைச்சர் சக்கரபாணி அதிரடி….!!!!!!!

திருவாரூர் மாவட்டம் விளமல் ஊராட்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1072 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 98 லட்சத்து 56 ஆயிரத்து 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகிக்க திருவாரூர் மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் போன்றோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஷாக்…. இனி ரேஷன் அட்டை செல்லாது?…. அமைச்சர் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் 2 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தமிழகத்தில் 11,42,000 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 6,976 ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இதற்கு விரைவில் சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பல இடங்களில் உள்ள நேரடிக் கொள்முதல் நிலையங்களில் ஊழியர்கள் கையூட்டு பெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. அதனை தடுப்பதற்கு அனைத்து கொள்முதல் […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”….. தமிழக ரேஷன் கடைகளில் இனி…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் சிரமத்தை போக்க ரேஷன் கடைகளில் அவ்வப்போது பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் விரைவில் அரிசி,சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவற்றை பாக்கெட்டுகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஒரே ஆண்டில் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

தக்காளி விலை திடீர் சரிவு…… அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!!

தக்காளி விலை கிலோ ரூபாய் 120க்கு உயர்ந்ததையடுத்து பொதுமக்களுக்கு பசுமை அங்காடியில் கிலோ ரூபாய் 70-க்கு தக்காளி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக உள்ளூர் சந்தைகளில் தக்காளி விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ததற்போது கிலோ ரூபாய் 120க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் […]

Categories
மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்…. அமைச்சர் சேகர் பாபுவிற்கு செக் வைத்த ஸ்டாலின்… என்ன தெரியுமா….!!!

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் விரைவில் காலியாகிறது. புதிய மாநிலங்களை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகின்ற 24ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தின் அடிப்படையில் திமுகவிற்கு 4 இடங்களும், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிகத்தில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி வீடுகள்… உறுதியளித்த அமைச்சர்… குஷியான அறிவிப்பு….!!

தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் சார்பில் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் ஹிதேஸ் குமார், நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் கோவிந்தராவ், மாவட்ட கலெக்டர்கள் ராகுல்நாத், ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர். ராஜா, பல்லாவரம் கருணாநிதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் அமைச்சர்களை விரட்டுகிறாரா?….. உண்மை நிலவரம் என்ன…. அமைச்சர் பிடிஆர் ஓபன் டாக்….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பை ஏற்றபோது கொரோனா காலத்தில் மக்கள் படும் கஷ்டத்தில் இருந்து காப்பாத்த  ரொக்கப் பணமாக ரூ.4000 வழங்கினார். அதுமட்டுமில்லாமல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, அனைத்து மகளிரும் சாதாரண நகர் அரசு பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்ற பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற பட்டுள்ளதாகவும், மற்றவை விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கிண்டி மருத்துவமனை….. “முதியோருக்கான மருத்துவமனையாக மாற்றம்”….!!!!

கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் கிண்டியில் கொரோனா தொற்றுக்கு என்று புதிதாக மருத்துவமனை அமைக்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வருவதால் அந்த மருத்துவமனை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை…. எவ்வளவு தெரியுமா?…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சம் வரை அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தற்போது 53 லட்சமாக அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் வேறு எந்த ஆட்சியிலும் செய்யாத அளவுக்கு பள்ளிக்கல்வித்துறைக்கு முப்பத்தி எட்டு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் 5 ஆண்டுகளில் பள்ளிகளில் கழிவறை உட்பட 18 ஆயிரம் கட்டடங்கள் கட்டப்படும் எனவும் கூறியுள்ளார். அதிகப்படியான ஆசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மகளிருக்கு ரூபாய் 1000…. நகராட்சி பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை….. விரைவில் அசத்தலான திட்டங்கள் அமல்….!!!!

திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து அதற்கான சாதனை விளக்க கூட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேனி அல்லிநகரம் அருகே மாவட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் . அப்போது பேசிய அவர் இன்னும் ஓராண்டில் மத்திய ஆட்சி மாற்றம் வந்தபின் நகராட்சி பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும். கூட்டுறவுத் துறை, நெடுஞ்சாலைத் துறைகளிலும் 5000 பணியிடங்கள், […]

Categories
மாநில செய்திகள்

’வலிமை’ சிமென்ட்டை தொடர்ந்து….. இப்ப ’RRR’ திட்டம்….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்…!!!!

திமுக அரசு வலிமை சிமெண்டை அறிமுகம் செய்தது தொடர்ந்து தற்போது RRR என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் உணர்வுப் பூங்கா அமைக்கப்பட்டது. இதனை கடந்த 12ஆம் தேதி காணொளி வாயிலாக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் ஆகியோர் அதனை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை […]

Categories

Tech |