சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் 12 அணிகள் பங்கேற்கும் ஊடகவியலாளர்களுக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கவிழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சிவி மெய்யநாதன் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் கிரிக்கெட் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். செஸ் ஒலிம்பியாட் மற்றும் சர்வதேச டென்னிஸ் போட்டி உள்ளிட்டவை […]
Tag: அமைச்சர்
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு மே 7ஆம் தேதி பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருந்தாலும் தற்போது வரை அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளும் விமர்சித்து […]
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதிச்சபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக சர்க்கரை நோய் பரிசோதனை திட்டத்தினை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதற்கு முன்பாக வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட கொட்டையூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டு இருக்கும் புது துணைசுகாதார நிலையத்தினை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிரூபர்களுக்கு பேட்டியளித்தபோது ”கேரளாவில் பரவி […]
தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க அரசு தயார் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார் . நிதி துறையுடன் கலந்தாலோசித்து மூன்று வாரங்களில் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். மகளிர் இலவச பயணம் செய்யும் பேருந்துகளின் தொழிலாளர்களுக்கு படி தொகை வழங்கவும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் மின் பகிர்மான தலைமை அலுவலகத்தில் மின் வினியோகம் பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2019ஆம் ஆண்டு 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளிலும் 16 ஆயிரம் மெகாவாட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த 17 நாட்களில் […]
இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 1500 கோவில்களுக்கு ரூபாய் 1000 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இன்று சென்னை பெரம்பூர் சேமாத்தம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் குறைபாடுகள் உள்ளதாக புகார் வந்ததால், அதனை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு […]
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று நடைபெற்றது. அப்போது கேள்வி மற்றும் பதில் நேரத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கலந்தாய்வு சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் நடத்தலாம் என்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஆன்லைன் மூலமாக நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் நிலவும் குளறுபடிகளை களைந்து இனிவரும் ஆண்டுகளில் கலந்தாய்வை நல்ல முறையில் நடத்தி முடிக்க […]
பொறியியல் கல்லூரிமாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிப்பதற்கு “நான் முதல்வன் திட்டம்” தொடங்கப்பட்டு இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து உள்ளார். தமிழக சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசியதாவது ” மாநிலம் முழுதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 71,934 இடங்கள் காலியாக இருக்கின்றன. வருகிற ஆண்டிலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஓரளவுக்குதான் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். ஆகவே திருப்பூர் மாவட்டம் மடத்துகுளத்தில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டிய அவசியம் […]
தமிழக சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது பேசிய பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, கோவில்களில் பணியாற்றுபவர்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள் எனவும் கோவில் நகைகளை உருக்குவதில் எவ்வளவு பணம் கிடைக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு அசைவ உணவுகள் பரிமாறப்படுவது இல்லை என்று கூறினார். அவ்வாறு அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதற்கு தடை விதிப்பதற்கு தமிழ்நாடு அரசு […]
ஆந்திர மாநிலமான விஜயநகரம் ரிங் சாலை அருகே ஓடா காலனியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய தாய் விஜயநகரத்திலுள்ள டீக்கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு இளம்பெண்ணின் தாய் டீக்கடையில் பணிபுரிய சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த போலீஸ்காரரின் மகன் செர்ரி (19) மதுபோதையில் வந்து அப்பெண்ணின் வீட்டில் கதவைத் தட்டினார். அப்போது இளம்பெண் கதவைத் திறந்தார். இதையடுத்து உள்ளே சென்ற செர்ரி, இளம்பெண்ணை சரமாரியாக தாக்கிதோடு, […]
தமிழக மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்பு பட்டியல் மாற்றப்பட்டுள்ளார். மேலும் இதுபற்றி விளக்கம் அளித்த மாணவர்கள் சமஸ்கிருதத்தில் நாங்கள் உறுதிமொழி ஏற்க வில்லை என்றும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியைத்தான் […]
கோடைவெயில் தொடங்கி மக்களை வட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகின்ற 29–ந்தேதி வரை 25 நாட்கள் நீடிக்கிறது. இந்த கால கட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.கோடை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தாகம் அதிகரிக்கும். மேலும் காய்ச்சி வடிகட்டிய குளிர்ந்த நீர், மோர், உப்பு போட்ட எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம், வெள்ளரி, தர்பூசணி மற்றும் பிறவகை பழங்கள் சாப்பிடலாம். இந்நிலையில் கோடை காலம் முடியும் வரை எங்கு […]
தமிழகத்தில் 6 முதல் 12 வயது சிறுவர்களுக்கு எப்போது தடுப்பூசி செலுத்தப்படும் என்பது தொடர்பாக அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார். சென்னை மடுவங்கரையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் 51.94 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையை நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது” சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 22 பள்ளிகளில் ஹைடெக் […]
தமிழகத்தில் மண்பாண்டம்,செங்கல் சூளைகளுக்கு சிரமமில்லாமல் மண் எடுக்க உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு அதிமுக உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம் ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், செங்கல் சூளைகளுக்கும், மண்பாண்ட தொழிலுக்கும் அதிக அளவு மண் தேவை. இதற்காக அதிமுக ஆட்சியில் சட்டப்பிரிவு 44-ல் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் அரசிதழ் வெளியிடப்படவில்லை. இப்போது அதனை நாங்கள் செய்துள்ளோம். மண் […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலளித்து பேசினார். அதைத்தொடர்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் குறித்த தகவல் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்வு செய்யப்பட வேண்டிய பல்வேறு பதவிகள் குறித்து தகுதி பெற்றவர்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் இந்த ஆண்டு உத்தேசமான […]
அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் என பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய அமைச்சர், கடந்த ஆண்டைவிட வணிக வரித்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது. பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும். போலி பட்டியல் தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் கைது செய்யப்படுவார்கள். எனது விலைப்பட்டியல் எனது உரிமை என்ற திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பத்திரப்பதிவு […]
தமிழ்நாடு மின் தேவையை பூர்த்திசெய்யும் அளவிற்கு மின்வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதன் காரணமாக மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும்தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் மின் விநியோகம் சீரான முறையில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இனி தமிழகத்தில் சீரான மின்சார விநியோகம் இருக்கும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் “796 MW மத்திய தொகுப்பு […]
தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “நாளொன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், அதுவும் குறைந்ததே மின்தடைக்கு காரணம். தமிழகத்திற்கு வரவேண்டிய 2000 மெகாவாட் உற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடும் ஒன்று. மின்னகத்திற்கு வரும் புகார்களில் 99% சரி செய்யப்படுகிறது. மின் தேவையை நாமே உற்பத்தி […]
தமிழக கல்லூரிகளில் மாணவ மாணவியர்களின் பாலின அடிப்படையில் ஷிப்ட் முறைப்படி அமல்படுத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளதாவது: ” தமிழகத்தில் மாணவ மாணவியர்களின் பாலின அடிப்படையில் ஷிப்ட் முறைப்படி அமல்படுத்த கோரிக்கை எழுந்து வருகிறது. அதாவது தற்போது உள்ள கல்லூரிகளில் ஆண்கள் காலையிலும், பெண்கள் மாலையிலும் வந்து பயிலும் வகையிலான ஷிப்ட் முறையை கொண்டுவர பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் 10 கல்லூரிகள் தொடங்குவதற்கான அறிவிப்புகள் […]
சென்னை – அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மின் உற்பத்திக்காக 2 மாதங்களின் நிலக்கரி தேவைக்காக மட்டும் டெண்டர் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரமும் நிலக்கரியும் வந்து சேராததே பிரச்னைக்கு காரணம் என்று செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். மின்வெட்டு குறித்த புகார்களை 94987 94987 என்ற 24 மணி நேர சேவை எண்ணில் தெரிவித்தால் உடனடியாகதீர்த்து வைக்கப்படும் என்றும், தற்போது இந்த […]
சில வருடங்களுக்கு முன்பு வரை தலைவாழையில் சாப்பாடு, கடைசியில் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இருந்தது. உணவே மருந்து என்ற பேச்சுக்கு இணங்க செரிமானத்திற்காக இப்பழக்கம் ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அப்பழக்கம் முற்றிலும் அடியோடு மாறி இருக்கிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய பெரியகுளம் எம்எல்ஏ சரவணன், வெற்றிலையை மருத்துவத்துறை பயன்படுத்தும் வகையில், வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். காட்டுமன்னார் கோவிலில் வெற்றிலை […]
ஆதரவற்றவா்களாக கருதி 18 வயதிற்கு மேற்பட்ட திருநங்கையா்களுக்கும் மாத உதவித்தொகை வழங்க அரசு பரிசீலிக்கும் என சமூகநலத்துறை அமைச்சா் பி.கீதா ஜீவன் அறிவித்தாா். தமிழக சட்டப்பேரவையில் நேற்று சமூகநலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது ” 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையா்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நான் அறிந்தவவரை தான் ஒரு திருநங்கை/திருநம்பி என்ற தன் மன உணா்வை வீட்டில் வெளிப்படுத்திய […]
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும் ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனை யடுத்து மத்திய அரசு பிறப்பித்த அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்தில் தற்போது பொதுயிடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வரவேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனினும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் நீக்கப்படவில்லை. ஆகவே பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து முக்கவசம் அணிதல் […]
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்ததாவது: “மின்சார வாகனங்களில் தீ விபத்து குறித்து உண்மை நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு இந்த குழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மின்சார வாகன தயாரிப்பின் போது நிறுவனங்கள் கவனக் குறைவாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அபராதம் விதிக்கப்படும். குறைபாடுள்ள மின்சார வாகனங்களை திரும்பப்பெறும் நடவடிக்கையை நிறுவனங்கள் தொடரலாம் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சர் பெரிய கருப்பனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு மருதுசகோதரர்கள் நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுசகோதரர்கள் சிலைக்கு மரியாதை செலுத்த சென்றனர். அப்போது பெரியகருப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செய்தித்துறை வாகனத்தை சேதப்படுத்தியதாக அரசு கேமராமேன் திருப்பத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பெரியகருப்பன் போன்றோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. […]
தமிழ்நாட்டில் முதற் கட்டமாக 130 பேரூராட்சிகளில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தெரிவித்தார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதத்தில் திமுக பிச்சாண்டிகூறியதாவது, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்துார் தொகுதி வேட்டவலம் பேரூராட்சியில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு அமைச்சர் நேரு “வேட்டவலம் பேரூராட்சி பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். மேலும் குடிநீர் பஞ்சமுள்ள […]
எந்தெந்த மாவட்டங்களில் செவிலியர் பயிற்சி பள்ளிகள் இல்லையோ அங்கு இல்லாம் அமைப்பதற்கு மெல்லமெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதத்தில் அ.தி.மு.க செந்தில் நாதன் கூறியதாவது சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் பி.எஸ்சி., செவிலியர் படிப்பை தொடங்க வேண்டும். இதையடுத்து சிவகங்கை மருத்துவக் கல்லுாரிக்கு கூடுதலாக ‘சி.டி.ஸ்கேன்’ கருவி வேண்டும். முதல்முறை டயாலிசிஸ் செய்ய மதுரை அரசு மருத்துவமனை செல்ல வேண்டிஇருக்கிறது. இதனால் அந்த சிகிச்சையை சிவகங்கை […]
கேள்வி நேரத்துடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நடைபெற்றுவரும் சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஊரக தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், நில உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு தாமாகவே வீடு […]
தமிழகத்தில் இன்று சட்டப்பேரவையில் கோடை காலத்தில் தேவைப்படும் மின்சாரம் குறித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது: “கோடை காலத்தில் தேவைப்படும் மின் தேவையை கருத்தில் கொண்டு அனல் மின் நிலையங்களில் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் அந்த நிலக்கரி வந்துவிடும். தமிழகத்தில் […]
தமிழகத்தில் மேலும் 3 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்று நடைபெற்றன. அந்த விவாதத்திற்குப் பிறகு அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள், தமிழகத்தில் நடப்பாண்டில் மேலும் 30 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்துச் சான்றிதழ்களையும் செல்போன் மூலமாக பெறும் வகையில் இரண்டு ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய்த் துறையில் […]
அணை பிரச்சனைகள் இனி இருக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர் கட்சியின் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வது போன்ற பணிகளை செய்வதாகவும், அங்குள்ள பேபி அணை பழுதுபார்க்க இங்கிருந்து செல்லும் போது கேரளா அரசு தடை […]
கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரசு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதற்கு 40 சதவிகிதம் கமிஷன் கேட்டதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது குற்றம்சாட்டியிருந்த அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல், தங்கும் விடுதியில் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் இறப்பதற்கு முன் தனது நண்பர்களுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜில், தன் இறப்புக்கு அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் அவ்வப்போது செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 245 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 83 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளங்கள், கடல் அரிப்பு தடுப்பு மற்றும் தூண்டில் […]
எட்டு வழி சாலை விகாரத்தில் திமுக அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா.வேலு தெரிவித்துள்ளார். சென்னை – சேலம் எட்டு வழி சாலை விவகாரத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எந்த கருத்தை தெரிவித்ததோ அதில் நிலையாக இருக்கிறோம் என்றும், சம்பந்தப்பட்ட மக்களிடம் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் திட்டத்தின் மீது நடவடிக்கை என்ற முந்தைய நிலைப்பாட்டு தற்போது தொடர்ந்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் சாலையோரம் சுற்றி திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியிருக்கின்றனர். திருச்சியில் சாலையோரங்களில் சுற்றுச்சூழல் கால்நடைகளால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் உரிமையாளர்கள் கால்நடைகளை சாலைகளில் அழித்து விடக்கூடாது என மாநகராட்சி மூலம் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பன்றிகளை பிடித்து வெளிமாவட்ட காடுகளில் விடுவதற்கான நடைமுறைகளை திருச்சி மாநகராட்சி தொடங்கியிருக்கிறது. அதன்படி முதல் முதலாக திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட […]
வளா்ந்த நகரங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் வசதிகள் ஏற்படுத்தப்படும் என நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, இது தொடர்பான வினாவை ராயபுரம் தொகுதி உறுப்பினா் ஐ ட்ரீம் இரா.மூா்த்தி எழுப்பினாா். இதையடுத்து திமுக உறுப்பினா் எழிலரசன் (காஞ்சிபுரம்), பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி போன்றோர் துணை வினாக்களை எழுப்பினா். அதற்கு அமைச்சா் கே.என்.நேரு பதில் அளித்தபோது “சென்னை ராயபுரம் எம்.சி.சாலைப்பகுதியில் அகலமான நடைபாதை ஏற்படுத்தப்பட இருக்கிறது. அங்கு உள்ள அண்ணா பூங்கா […]
தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக அரசு கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவித்தொகை வழங்கியது. அதனைப் போல தேர்தலின்போது கூறியதைப்போல மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஆறு மாதங்களில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் மாத உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று […]
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து 53 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 47 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 53 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாகவும், இல்லம் தேடி கல்வி திட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. அதனால் இனி வரும் வாரங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாவர்களுக்குவீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா குறைவு […]
வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் தென்மாவட்டங்கள் வளர்ச்சியற்று காணப்படுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சிவகாசி, விருதுநகர் மாவட்ட பாமக அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர் தமிழ்நாட்டில் எங்கே பிரச்சினை என்றாலும் அங்கே முதலில் குரல் கொடுப்பது நாங்கள்தான். மேலும் தென்மாவட்டங்கள் என்று சொன்னாலே அது ஒரு மிகப் பெரிய குறை வளர்ச்சி அடையாத பகுதி. தொழில் வளங்கள் இல்லாத மாவட்டங்கள். வேலை வாய்ப்பு இல்லாத மாவட்டங்கள். வேலைவாய்ப்பு இல்லாத […]
மத்திய மந்திரி அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். இந்தியைதான் ஆங்கிலத்திற்கு மாறாக உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மனோ தங்கராஜ் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, “அரசியல் […]
புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சிறுவர்களிடம் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா. இவர் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கிறார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. […]
மாவட்டங்களை இணைக்கும் அனைத்து சாலைகளும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் என்று அமைச்சர் எ.வா.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் எ.வா.வேலு மணப்பாறையில் திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையை ஒட்டிய 7.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்க 49 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் ரயில்வே மலையின் மீது மேம்பாலத்தில் சுரங்கப்பாதை அமைப்பதற்க்கு நிலங்கள் கையகப்படுத்துதலில் ஏற்பட்ட சிக்கல்களால் தாமதம் ஆவதோடு […]
தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் விரைவில் சாட்டிலைட் போன் வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கால்நடைகளுக்கான தீவன தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்நடைப் பண்ணைகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்ற புகார் இருந்தால் உடனடியாக அதை கூறினால் சரி செய்யப்படும். கடலில் கூண்டு கட்டி அதில் மீன் வளர்த்து அதை ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீனவர்கள் யாரும் வேண்டுமென்றே இலங்கை வேலைக்கு செல்வதில்லை. கடலில் எல்லை தெரியாத காரணத்தினால் […]
புதிய ரேஷன் கார்டுகள் நேரடியாக வீடுகளுக்கு தபாலில் அனுப்பப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். சட்டசபையில் அவரது அறிவிப்புகள் சிறப்பாக இயங்கும் ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு மாநில அளவில் முதல் பரிசாக 15 ஆயிரம் ரூபாய், 2ம் பரிசாக 10 ஆயிரம், 3ம் பரிசாக 5,000 ரூபாயும் வழங்கப்படும். இதையடுத்து எடையாளர்களுக்கு 10 ஆயிரம், 6,000 மற்றும் 4,000 ரூபாய் வழங்கப்படும். அத்துடன் மாவட்ட அளவில் விற்பனையாளர்களுக்கு முதல் பரிசாக 4,000 ரூபாயும், 2ம் பரிசாக 3,000 […]
ரேஷன் கடைகளில் இனி பொதுமக்களுக்கு பாக்கெட் மூலம் அரிசி வழங்கப்படுவதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர் சக்ரபானி அளித்த பதிலில் கூறியதாவது, அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகள் இடத்திற்கு அனுப்பப்படும். மேலும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக […]
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து கே என் நேரு வெளியிட்ட அறிவிப்புகள்,சென்னை மாநகராட்சியில் கூவம் ஆற்றின் குறுக்கே யூனியன் சாலையும், பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் சின்ன நோலம்பூர் மற்றும் ஓம் சக்தி நகர் போன்ற இடங்களில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் ரூபாய் 120 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது. கொருக்குப்பேட்டையில் உள்ள மணலி சாலையில் 2b ரயில்வே நந்திக்கடலில் ரூபாய் 150 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். […]
தமிழக அரசின் பால்வளத் துறை மார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பால்வளத் துறை அமைச்சரின் உத்தரவுபடி பாலை உற்பத்தி செய்யும் விவசாயிகளான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆண்டு முழுவதும் அரசு நிர்ணயித்த தரத்துடன் பாலை கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து விவசாயிகளிடம் இருந்தும் வருடத்தின் 365 நாட்களும் பாலை கொள்முதல் செய்ய சங்க நிர்வாகிகள், பொது மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் தயக்கம் காட்டக்கூடாது […]
கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடியில் வருகின்ற 10ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இதுவரை 68 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் […]
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டம் ஆறு மாதத்தில் நிறைவு பெற உள்ளது. அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கடந்த ஆண்டை விட 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வரும் கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த 11 மாத […]