மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது என்று தெரிவித்துள்ளார். அதாவது மேகதாது அணை கட்ட பட்ஜெட்டில் ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கியது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது. ஆகவே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமல் மேகதாதுவில் ஒரு பெரிய […]
Tag: அமைச்சர்
மேயர்களை அழைக்கும்போது “வணக்கத்திற்குரிய மேயர்” என்று அழைக்க வேண்டும். இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, கடந்த அதிமுக ஆட்சியில் வணக்கத்திற்குரிய என்ற வார்த்தையை நீக்கி, சென்னை மேயரை மாண்புமிகு என்று அழைக்க வேண்டும் என மாற்றினர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தனக்கு மேல் யாரும் இருக்ககூடாது என்று நினைத்து, மாண்புமிகு என்று அரசாணை வெளியிட்டார். இதில் மேயருக்கு பல்வேறு சிறப்பு அதிகாரங்கள் இருக்கிறது. மேலும் தபேதார் என்ற பட்டம் பல உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. […]
உக்ரைன் ரஷ்ய போர் தொடர்ந்து 8வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு மருத்துவம் படித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீனின் மரணத்திற்கு நீட் தேர்வு தான் காரணம் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “உக்ரைன் ரஷ்யா போரில் மரணம் அடைந்த மாணவன் நவீன் […]
தமிழகத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் திறப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மே மாதம் 6 தேதி முதல் மே மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான […]
சென்னையில் ட்ரோன் மூலம் கொசு ஒழிப்பு திட்டத்தை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் கொசு பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த கொசுக்களால் காலரா, டெங்கு மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. தமிழக முதலமைச்சரான ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சென்னையில் உள்ள நீர்நிலைகள் மீட்பு, ஆக்கிரமிப்புகள் […]
தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கான கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறு குறு நடுத்தர வர்க்க தொழில் நிறுவன துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, மக்கள் நம் மீது அதாவது திமுகவின் மீது நம்பிக்கை வைத்து நம்மை தேர்வு செய்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை நாம் காப்பாற்றவேண்டும். பொதுமக்கள் ஏதேனும் புகார் அளித்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து […]
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் வேலூர் டூ திருப்பதிக்கு இலவச வாகன சேவையை தொடங்கி வைத்துள்ளார். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினராக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொதுமக்களுக்கு திருப்பதி கோவிலுக்கு செல்ல இலவச பேருந்து சேவையை நேற்று முன்தினம் தொடங்கி வைத்துள்ளார். இந்த பேருந்து சேவையை பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலிருந்து எம்.எல்.ஏ நந்தகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால், திருப்பதி திருமலை […]
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன் உதவி கேட்டும் உலக நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனுக்கு கல்வி மற்றும் வேலைக்காக சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து […]
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூபாய் 60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ரூபாய் 20 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள மருத்துவக் குழும பரிசோதனை அறை ஆகியவற்றை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை(நேற்று) தொடக்கி வைத்து பாா்வையிட்டாா். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது, வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு (எப்எம்ஜி) தோ்ச்சி பெற்றவா்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் இதுவரையிலும் உள்ளுறை பயிற்சிக்கு ரூபாய் 3.54 லட்சம் கட்டணம் செலுத்தி […]
ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் அல்வா கிண்டி பரிமாறியது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூர் ஜெயலலிதா கோவிலில், ஜெயலலிதாவின் 74 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க வினர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது பிறந்தநாள் விழாவிற்காக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு […]
இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரான ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை மறியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மந்திரியும், தேசியம்வாத காங்கிரஸ் கட்சியினுடைய மூத்த தலைவர்களில் ஒருவருமான நவாக் மாலிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அதாவது இன்று (பிப்..23) காலை நவாக் மாலிக் வீட்டிற்கு சென்று, அவரை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து தாவூத் இப்ராஹிம் பணம் மோசடி வழக்குடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ள அவரை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
தேசிய கல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்படும் என அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். தேசிய கல்வி கொள்கை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள அரசுக்கு குறைந்த கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை ‘அனைவருக்கும் கல்வி’ என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் உள்ளதால் தமிழக அரசு அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பட்டப்படிப்பு படிக்க முதல்நிலை தகுதிகளை மாணவர்கள் நிறைவு செய்திருக்க வேண்டும் என வரைவுக்குழுவில் […]
மேற்கு வங்கத்தின் மூத்த அமைச்சரான சாதன் பாண்டே உயிரிழந்துள்ளார். மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்கத்தின் மூத்த அமைச்சருமான சாதன் பாண்டே, மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமாகி உள்ளார். அவருக்கு வயது 71. இவர் 2011 ஆம் ஆண்டு வரை வடக்கு கொல்கத்தாவில் உள்ள பர்டோலா தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். பின்னர் மனிக்தலா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் உடல் நிலை, கடந்த சில நாட்களாக மோசமடைந்து […]
தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்றபடி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி வாக்களித்தார்..
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியில் உள்ள பனிமலர் மருத்துவ கல்லூரியில் சுகாதார கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “பொது மக்களிடம் ஓட்டு கேட்டு செல்லும் அனைத்து […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சக்கரபாணி தேர்தல் பரப்புரை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது, “திருவாரூர் மாவட்டத்தில் 84 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் குடிசை பகுதிகளில் வாழ்வது தெரியவந்துள்ளது. இவ்வாறு திருவாரூர் மாவட்டத்தில் புறம்போக்கு மற்றும் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் வசிக்கும் குடிசை வாழ் மக்களுக்காக அரசு சிறப்பு நிதி ஒதுக்கி இடம் தேர்வு செய்ய தேவையான நடவடிக்கைகள் […]
நெடுஞ்சாலை துறை அமைச்சரான நிதின் கட்கரி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நாடு முழுவதும் ஜனவரி 31, 2022 வரை 4.559 கோடிக்கும் மேற்பட்ட பாஸ்டாக்குகள் விநியோகிக்கப்பட்டு இதுவரை ரூபாய்58,188 கோடியே 53 லட்சம் சுங்க கட்டணம் வசூல் ஆகியுள்ளது என கூறியிருக்கிறார். மேலும் ஜனவரி 5, 2020 பிப்ரவரி 2022 வரை தவறாக வசூலிக்கப்பட்ட சுங்க கட்டணம் ரூபாய் 12.5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
நெல் கொள்முதல் தொடர்பாக எந்த புகார் இருந்தாலும் 18005993540 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வழியாக தெரிவிக்கலாம் என தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நெல் கொள்முதலில் விவசாயிகளிடமிருந்து சிப்பத்திற்கு 30 ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதோடு அது பத்திரிகையிலும் செய்தியாக வெளியானது. இதனை படித்த முதல்வர் ஸ்டாலின் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியின் தொடர்பு கொண்டு தவற்றைத் திருத்திக் திருத்தி கொள்ளுமாறு கூறினார். அதோடு விவசாயிகளிடமிருந்து ஒரு பைசா […]
தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 4-வது குருதிசார் ஆய்வு முடிவுகளின்படி 87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 90% நோய் எதிர்ப்பு சக்தியும் இருப்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனாவால் […]
பிரான்ஸில் உலகின் 2 ஆவது பெரிய மீன்பிடி படகிலிருந்து சுமார் 1,00,000 ப்ளூ வைட்டிங் என்னும் மீன்கள் கடலில் கொட்டப்படுவது தொடர்புடைய வீடியோ வெளியாகி அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் 2 ஆவது மிகப்பெரிய மீன்பிடி படகாக the margiris உள்ளது. இந்நிலையில் இந்த படகிலிருந்து இறந்த சுமார் 1,00,000 ப்ளூ வைட்டிங் என்னும் மீன்கள் கடல் பகுதியில் கொட்டப்பட்டுள்ளது. இது தொடர்புடைய வீடியோவும், புகைப்படமும் வெளியாகி அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே பெரிய படகுகளில் […]
திமுகவின் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் நேற்று முடக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுகவை சேர்ந்த அமைச்சர்களின் அலுவலகங்கள் ,வீடுகள், அவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், பொறுப்பாக சோதனை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்களான அவர்கள், தங்களது ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி அதிக சொத்துக்களை குவித்ததாக தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் […]
மீன்வளத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனின் ரூபாய் 6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது தமிழக மீன்வளத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த 2002-ம் ஆண்டு தொடரப்பட்ட பணமோசடி வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி அன்று பிரபல பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதனையடுத்து தெற்கு மும்பையிலுள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் லதா மங்கேஷ்கருக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா மற்றும் நிமோனியா தொற்றில் இருந்து குணமடைந்தார் என்று அமைச்சர் […]
கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பலனாக தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இதையடுத்து கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தற்போது பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நியோ கோவ் (NeoCov) என்ற புதிய வகை கொரோனா வைரஸை சீனாவின் வூஹான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று முதல் ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, கல்லூரிகளில் […]
தமிழகத்தில் காஞ்சிபுரம் அருகே ரூபாய் 700 கோடி மதிப்பில் 500 ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் ஸ்போர்ட்ஸ் சிட்டி-விளையாட்டு நகரம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது .இந்த திட்டத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஆராய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அறிவிப்பை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் வளர்ச்சி மற்றும் பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களின் […]
பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்பட்ட சம்பவத்தால் உணவு துறை அமைச்சரின் பதவி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த பரிசு தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் அதிமுக அரசின் மீதும் முதல்வர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து பொங்கல் பரிசு […]
சென்னை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இயக்குநர்கள், தலைமை பொறியாளர்களுடன் இன்று ஆய்வுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம் மற்றும் உயர் அலுவலர்கள் போன்றோர் பங்கேற்றனர். இதையடுத்து மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “தமிழகத்தில் 1 […]
மாரத்தானில் 1000 கிலோ மீட்டர் தூரம் ஓடி அமைச்சர் மா.சுப்பிரமணியன் சாதனை படைத்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியம் அவர்கள் தன்னுடைய கடுமையான அரசியல் பணிகளுக்கு மத்தியிலும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவரும் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதேபோல் கடந்த அக்டோபர் மாதம் தேசிய பிறர் மீது அக்கறை காட்டும் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அனைவரும் பிறர் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்ற கருத்தை மையமாகக் […]
தமிழகத்தில் திமுகவின் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000ரூ வழங்கப்படும் என்பது தான். பொருளாதார நெருக்கடி காரணமாக முக்கிய சில வாக்குறுதிகள் உடனே நிறைவேற்றப்படவில்லை. அதில் இந்த வாக்குறுதியும் ஒன்றாகும். எனினும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக திமுக அரசு இந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிடும். இவ்வாறு அமலுக்கு வந்தால் திமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இந்த வாக்குறுதியானது நிறைவேற்றப்படாமலே இருக்கிறது. இந்த நிலையில் பால் வளத்துறை அமைச்சரான […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், கொரோனா பாதிப்பு குறைந்தால் இனி […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 31 ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார். இது […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அப்போது மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி […]
தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் […]
வடபழனி கோவிலில் நாளை குடமுழுக்கு நடைபெற உள்ளது. நம் நாட்டில் உள்ள புனித நதிகளிலிருந்து கொண்டு வரும் நீர் இந்த குடமுழுக்குற்கு பயன்படுத்தவிருக்கிறது. பழனி கோவிலில் நாளை அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள், நன்கொடையாளர்கள் மட்டும் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பொது முடக்கம் முடிந்த பின்னர் பொதுமக்கள் வழக்கம் போல் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். குடமுழுக்கு முடிந்த பின்னர் முழு மண்டல பூஜை 48 நாட்கள் நடைபெறவிருக்கிறது. அதனால் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, பொதுமக்கள் வீட்டிலிருந்தே இதனைப் பார்த்துக் கொள்ள […]
தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாட செல்வது வழக்கம். அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தமுறையும் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோன்று கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களிலிருந்தும் பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை அரசு இயக்கியது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் […]
கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்றால் மருத்துவர்கள் இடைவிடாது, ஓய்வில்லாமல் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்த தொற்று பாதிப்பால் பணிகளின் போது, ஏராளமான மருத்துவர்கள் உயிரிழந்தனர். இருந்தபோதிலும் அரசு மருத்துவர்கள் பயப்படாமல் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை அளித்து வந்தனர். மருத்துவர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அதில் பேசிய அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், கொரோனா காலகட்டத்தில் அரசு மருத்துவர்கள் தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல், மற்ற மாநிலங்களை விட […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கி உள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வணிகவரித்துறை அமைச்சரான மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையில் கொரோனா தொற்றால் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி கலந்து […]
பொங்கல் பரிசு தொகுப்பு விவகாரத்தில் ஊழல் நடந்ததாக கூறிய எடப்பாடி பழனிச்சாமிக்கு உணவுத்துறை அமைச்சர் பதிலடி கொடுத்து பேசியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக கூறினார். 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புகள் கொடுக்கப்படுவதாக கூறிவிட்டு வெறும் 18 பொருட்களே அந்த தொகுப்பில் இடம் பெற்றிருந்தன. மேலும் பரிசு தொகுப்பில் இடம்பெற்ற கரும்புக்கான கொள்முதல் விலையை 33 […]
தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இணை நோய்கள் கொண்ட 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. மேலும் […]
நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு பிரதான தேர்வு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. […]
கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி மற்றும் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் மூர்த்தி கூறியதாவது, “வைரஸ் […]
டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுராக், தேச நலனுக்கு எதிராக செய்திகளை பரப்பிவிடும் இணையதளங்கள், யூடியூப் பக்கங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வரும் ஜனவரி 31-ஆம் தேதி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1-ஆம் தேதி 2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை […]
கோவை மாநகராட்சி கலையரங்கில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் பணி நியமனம் ஆணை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், முதல்வர் உத்தரவின்படி இன்று கோவை மாவட்டத்தில் 2,800 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 21,60,000 ரூபாய் மதிப்பீட்டில் […]
நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவப் படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு பிரதான தேர்வு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு NEET-UG தேர்வும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு NEET-PG தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. […]
ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் செய்ய தெரியாத விவசாயிகளுக்கு உதவும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். அதாவது இனிவரும் காலங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் தனி ஊழியர்களை நியமித்து அவர்களின் உதவியுடன் ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் நலன் கருதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்தவும் பல செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அரசுப் பள்ளிகளின் நிலை பற்றிய ஆய்வுக் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 15 -ஆம் தேதி அன்று தொடங்கி மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில் மண்டல ஆய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அந்த […]