பாகிஸ்தானில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பினருடன் அரசு மேற்கொண்டு வந்த அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் கூறியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தினால் அதிருப்தியில் இருந்த அந்த அமைப்பின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா என்னும் இடத்தில் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் அவர்களது முக்கிய தலைவர்களான ஓமர் காலித் மற்றும் கொரசனி அப்தாப் பார்கி போன்றோர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தானில் […]
Tag: அமைதி பேச்சுவார்த்தை
உக்ரைன் மீது ரஷ்யபடைகள் சென்ற பிப்ரவரி மாதம் தாக்குதலை துவங்கியது. தற்போதுவரை தொடர்ந்து வரும் இத்தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரால் உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி இருக்கின்றனர். இருதரப்பிலும் மிகப் பெரிய அளவில் உயிர்சேதமும் ஏற்பட்டு உள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். போர் தொடங்கிய பிறகு முதன் முறையாக அவர் உக்ரைன் சென்றுள்ளார். […]
பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், பதவியேற்றவுடன் முதல் தடவையாக மக்களிடம் உரையாற்றி இருக்கிறார். அப்போது அவர், ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் இந்திய நாட்டை கடும் விமர்சனம் செய்தார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கூடிய அரசியல் சாசன பிரிவு 370-ஐ சட்டவிரோதமாக இந்தியா ரத்து செய்திருக்கிறது என்றார். மேலும், ஆசியாவில் அமைதி நிலை ஏற்பட வேண்டுமெனில் […]
ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வரலாற்று சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையே கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போரில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அரசுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலிபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை மேற்கொண்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் […]