தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சனை, கடன் தொல்லை, காதல்விவகாரம் என தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருவது வேதனையாக இருக்கிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சென்னை அம்பத்தூர் அருகே பாடி குமரன் நகரில் 9ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
Tag: அம்பத்தூர்
சமூக வலைத்தளங்களில் தன்னை விமர்சித்தவர்களை சீமான் தனது காலணியை உயர்த்திக்காட்டி பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்துல் ரவுப் என்கிற தமிழ் தேசிய தொண்டருக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 26-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி சென்னை அம்பத்தூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, மாரிதாஸ் கைது செய்யப்பட்டது குறித்து நான் கூறிய கருத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருவதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் மேடையிலேயே […]
சென்னை அம்பத்தூரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியன்று காலை பள்ளிக்குச் சென்று வீடு திரும்பவில்லை. எனவே அவரின் பெற்றொர் பல இடங்களிலும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மேற்படி பாண்டியன்(24) 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் அம்பத்தூரில் தொழிற்பேட்டையில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி 300 தொழில் நிறுவனங்கள் மற்றும் 30 சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் அனைத்து உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சிட்கோ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். […]
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நவம்பர் 9ஆம் தேதி கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மீட்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் கோயம்பேடு சந்தையில் கூலி வேலை பார்த்து வருகிறார். மனைவி சக்தி. இந்த தம்பதியருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தையும், மூன்றரை வயதில் சந்தனா என்ற பெண் குழந்தையும் உள்ளது. கோயம்பேடு கடை பகுதியில் குடும்பத்துடன் நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவில் படுத்து தூங்கி இருந்தன. ஆனால் அதிகாலை எழுந்து […]
இரவு நேரத்தில் காதலி வீட்டுக்குச்சென்ற இளைஞர் தெரியாமல் கிணற்றில் விழுந்து, படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை அடுத்த அம்பத்தூர் வெங்கடாபுரம் கன்னிப்பசெட்டி தெருவில் வசித்து வரும் ஜிலான் என்பவர் தொழிற்கல்வி முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள செல்போன் கடையில், வேலை பார்த்து வந்தார். அப்போது ஒரகடம் சாலையில் வசித்து வரும் பெண் ஒருவர் செல்போன் கடைக்கு வர, ஜிலானுக்கும், அந்த பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.. இருவரும் ரொம்ப தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு […]
சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தந்த மாநில அரசுகள் சிவப்பு மண்டலங்களை சில நிபந்தனைகள் விதித்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மதுக்கடைகள், சலூன்கள் திறக்கலாம் என்பது உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை முதல் சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 […]
அம்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த கும்பலை, அப்பகுதி இளைஞர்கள் துரத்தியதில் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடினர். சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகர் பகுதியில் வசித்து வருகிறார் சத்தியராஜ். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகின்றார். இந்த சூழலில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இவர் குடும்பத்துடன் கடந்த 24ஆம் தேதி சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 2 […]
குளித்து விட்டு டவலை காயப்போட சென்ற தர்ஷன் என்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரில் வசிக்கும் தம்பதியரான லிங்கதுரை -உமாராணி. இவர்களது 15 வயது மகன் தர்ஷன் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளிவிட்டு வீடு திரும்பியதும் குளியறையில் குளிக்க சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் தர்ஷன் வெளியே வராததால் கதவை தட்டி உள்ளார்கள். அப்போது திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது […]