தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்தவர்களின் விவரம் குறித்து மேலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் சென்ற 2008 ஆம் வருடம் முதல் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அதன்படி தேனியிலும் தொடங்கப்பட்டது. பின்னர் மக்களின் தேவைக்கேற்ப ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தேனியில் சேவை தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 2 லட்சம் 76 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன்பெற்றுள்ளார்கள். ஆம்புலன்ஸ் தேவையானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பிரசவ தேவை அவசர தேவை […]
Tag: அம்புலன்ஸ்
நேற்று மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு 60 வயது மூதாட்டி ஒருவர் தர்ப்பணம் கொடுப்பதற்காக தனது உறவினர்களுடன் மாமல்லபுரம் சென்றுள்ளார். அப்போது மூதாட்டிக்கு திடீரென கடற்கரையில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதனால் பதறிப்போன உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த நிலையில் ஆம்புலன்ஸ் கடற்கரைக்குச் செல்ல முடியாததால் நுழைவு வாயில் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு 700 மீட்டர் தூரம் உள்ள மணல் பரப்பிலேயே மருத்துவ பணியாளர்கள் மூதாட்டியை தூக்கி வந்து, முதலுதவி சிகிச்சை […]
மதுரை மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த நண்பனின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸின் மீது ஏறி நின்று போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டும், நெடுஞ்சாலையில் நின்ற வாகனங்களை மறித்து பைக்குகளில் வீலிங் செய்தும், இளைஞர்கள் அட்டகாசம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த இளைஞர்கள் இவ்வாறு ஆடிக்கொண்டு செல்லும் ஆம்புலன்சுக்குள் அவர்களது நண்பனின் சடலம் உள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் இவர்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர். மதுரை மாவட்டம் தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அபி கண்ணன். இவர் தனியார் […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]