Categories
அரசியல்

அம்மா உணவகங்களை வைத்து அதிமுக அரசியல் செய்ய வேண்டாம்: மு.க.ஸ்டாலின் சாடல்!

தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் அரசே இலவசமாக உணவு வழங்க வேண்டும் என அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என விமர்சனம் செய்துள்ளார். மேலும், சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது மனிதநேயமற்ற செயல் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ” தொடர் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் இழந்து நிற்கும் ஏழை எளிய மக்களும், […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

1 ரூபாய்க்கு இட்லி கொடுப்பது தமிழக அரசு தான் – முதல்வர் பேட்டி …!!

சென்னை சாமித்தோப்பில் உள்ள அம்மா உணவகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.  சென்னை சாமிதோப்பில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேளை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுப்பது தமிழக அரசு மட்டும் தான். அம்மா உணவகங்கள் மட்டும்தான் ஒரு ரூபாய்க்கு இட்லி தரப்படுகிறது. பல்வேறு மாநிலங்களால் பாராட்டப்பட்ட அம்மா உணவகம் திட்டம் மக்களுக்கு கை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை… எனக்கு திருப்தி அளிக்கிறது – பிரதமர் மோடி பாராட்டு!

தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இருப்பதாக பிரதமர் மோடி முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில […]

Categories
மாநில செய்திகள்

“சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும்” – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

 சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இந்த வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 3 பேரும் அடக்கம். மேலும் இந்த வைரஸுக்கு 4 இந்தியர்கள், ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை […]

Categories

Tech |