அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாக அறக்கட்டளை மீது எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து உள்ளன. ராமர் கோவிலுக்காக பேக் பைசி கிராமத்தில் 1.208 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ரூ.18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியிருப்பதாகவும், இதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாடியை சேர்ந்த மாநில முன்னாள் மந்திரி பவன்சிங் ஆகியோர் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தனர். இது […]
Tag: அய்யோத்தி ராமர் கோவில்
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகளின் போது எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கட்டுமான பணிகளின்போது எடுக்கப்பட்டதாக கூறி இரண்டு முதற்கட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன. அந்தப் புகைப்படங்கள் உண்மையிலேயே ராமர் கோவில் கட்டுமான பணிகளின் போது தான் எடுக்கப்பட்டதா என்று கூறி பலரும் தங்கள் வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதன்பிறகு அந்த […]
ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்ற நிலையில் ராமர் என்றாலே அன்பு என்று ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று 40 கிலோ வெள்ளி செங்கலை நாட்டியுள்ளார். ராமர் கோயில் கட்டப்படுகின்ற நிலையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ராமர் பற்றி பதிவிட்டுள்ளார். அதில், ” ராமர் சிறந்த மனித குணங்களின் வெளிப்பாடு. அவர் நம் மனதின் […]
அயோத்தியில் பிரதமர் மோடி பொதுமக்களிடம் தனது உற்சாக உரையை நிகழ்த்தியுள்ளார் . இந்தியாவில் இருக்கக்கூடிய பல இந்து மக்களுக்கும், பல இந்து அமைப்புகளுக்கும் மிகப்பெரிய கனவாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பல வருடங்களாக இருந்து வருகிறது. பல வருட கனவு தற்போது நிறைவேறியுள்ளது என தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக நடத்தப்பட்ட அடிக்கல் நாட்டு விழாவில், இன்று கலந்து கொண்ட பிரதமர் […]
அமெரிக்க வாழ் இந்தியர்கள் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடி வருகின்றனர். அயோத்தியில் பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின்னர் ராமர் கோயில் கட்டுவதற்கான அனுமதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து ‘ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டுவது பற்றி முடிவு செய்து, இந்த அறக்கட்டளை மூலமாக கட்டுமான […]
ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடக்க உள்ள நிலையில் 175 பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழா நாளை நடக்க இருக்கிறது. அந்த விழாவில் கலந்து சிறப்பிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கோவில் கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்க உள்ளார். மேலும் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பங்கேற்க மாட்டேன் என உமாபாரதி கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தியில் கட்டப்படுகின்ற பிரம்மாண்டமான ராமர் கோவிலுக்கு வருகின்ற 5 ஆம் தேதி பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கவுள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இவர்களைத் தவிர ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முன்னாள் முதல்-மந்திரி […]
கொரோனா பரவலுக்கு மத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை தேவையா? என ராஜ்தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை வருகின்ற ஐந்தாம் தேதி நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை தேவை இல்லை என்று மராட்டிய நிவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “மக்கள் அனைவரும் தற்போது வேறுபட்ட மனநிலையில் […]