புதுச்சேரியைத் தமிழகத்துடன் இணைக்க பாஜக முயல்வதாக குற்றம் சாட்டிய முதல்வர் நாராயணசாமி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யுமாறு துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பாஜகவினர் மனு தந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி பேசும்போது, “புதுவையைத் தமிழகத்தோடு இணைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதனை […]
Tag: அரசியல்
தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும் என நடிகை குஷ்பூ தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பூ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொல்வதில் தவறு இல்லை. நான் வேறு கட்சியில் இருந்தாலும் அவர் எனக்கு முதலமைச்சர் தானே. நான் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன். அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து கூறியுள்ளேன். வருகின்ற 2021ஆம் ஆண்டு தேர்தல் ஒரு மாறுபட்ட […]
மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்கான தகுதிப்பட்டியல் குறித்த அறிவிப்பாணை வெளியானபோது, செம்மொழியான தமிழ்மொழி சேர்க்கப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து செம்மொழி வரிசையில் உள்ள தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தமிழ் மொழியையும் சேர்த்து மத்திய அரசு புதிய அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அந்த புதிய அறிவிப்பாணையில் மத்திய தொல்லியல் துறை பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் செம்மொழிகளான சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு,மலையாளம், ஒடியா, பாலி, பராகிரித், அரபிக், பாரசீகம் ஆகிய மொழிகளும் […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்றது, இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. ஏற்கனவே கொரோனா பேரிடர் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் அரசியல் காட்சிகள் ஊரடங்கு காலத்திலும் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுக உறுப்பினர் சேர்க்கை இணையத்தில் நடத்தியது. எல்லோரும் நம்முடன் என்ற வாசகத்துடன் திமுக முன்னெடுத்துள்ள இணைய வழி உறுப்பினர் பதிவு தற்போது 10 லட்சத்தை […]
10,00,000 புதிய உறுப்பினர்களை திமுக இணைத்து உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்றது, இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன. ஏற்கனவே கொரோனா பேரிடர் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் அரசியல் காட்சிகள் ஊரடங்கு காலத்திலும் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திமுக உறுப்பினர் சேர்க்கை இணையத்தில் நடத்தியது. எல்லோரும் நம்முடன் என்ற வாசகத்துடன் திமுக […]
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணையும் அவரது தந்தையையும் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து வரும் பிரபு கடந்த சில நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் அப்பா பிரபு தன் பெண்ணை கடத்தி திருமணம் செய்துகொண்டதாக ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் என் மகளை கடத்திச் சென்று […]
பெண்களுக்கு மரியாதை அளிக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என நடிகை விந்தியா பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார். 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். இந்த வழிகாட்டுதல் குழுவானது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரையின் பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. இந்நிலையில் வழிகாட்டுதல் குழுவில் இஸ்லாமியர்கள்,குழுவின் மூத்த தலைவர்கள்,முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்புகள் தரப்படவில்லை என்ற மன வருத்தம் அதிமுகவினரிடையே நிலவுகின்றது. இதுகுறித்து […]
சசிகலாவுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அதிமுக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் யாராக இருக்கும் என்பது பலரிடமும் எழுந்த கேள்வி. இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால் இன்று யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ஓபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் தான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் சிறையில் […]
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தேர்வில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது கண்டித்து திமுக இளைஞரணி – மாணவரணி போராட்டம் நடத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாணவரணி செயலாளர் எழிலரசன் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் அடிமை அதிமுக அரசே..! ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு வைத்து கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மாணவர்களின் வேலைவாய்ப்பை தடுப்பதா ? தமிழிலும் ஆங்கிலத்திலும் தேர்வு நடந்துக..! அல்லது கழகத் தலைவர் அவர்களின் […]
திமுகவின் அஸ்தமனம் தொடங்கி விட்டது என்று பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கையில் திமுகவை சேர்ந்த மேபல் சக்திநாதன் அக்கட்சியில் இருந்து விலகி 10,071பேருடன் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன், எச்.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய எச்.ராஜா, ஒரு மாதத்திற்கு முன்பு 200பேர் 25, 25 பேருடன் 200 பேர் பாஜகவில் இணைந்த பட்டியலுடன் திமுக மேபல் சக்திநாதன் இணைந்தார். அதை சில ஊடகத்தில் […]
வருகிற மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். இன்று காலை 10 மணி அளவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் என் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரை அதிமுக விற்கு நன்றி சொல்லிக் கொண்டிருப்பேன் எனவும் 2021 ஆம் ஆண்டிலும் அதிமுக ஆட்சியை தொடரும் எனவும் […]
சிவகங்கையில் திமுகவை சேர்ந்த 10071 பேர் மாநில தலைவர் டாக்டர் L.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வர இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்துக் கொண்டு இருக்கின்றன. தமிழகத்தை பொருத்தவரை திமுக – அதிமுக என இரண்டு கட்சிகளுக்கும் போட்டி இருந்தாலும், பாரதிய ஜனதா கட்சி கடந்த சில நாட்களாக தனக்கான இடத்தை வலுப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. அதன் நடவடிக்கைகளும் அதை சார்ந்தே இருக்கின்றன. தனித்து […]
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ரூபாய் 2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ,சிறுதாவூர் பங்களா போன்றவற்றை வருமான வரித்துறை முடங்கியுள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர்.இச்சோதனையின் மூலம் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூபாய் 2000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ் கைது […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவினை செய்தியாளர்களிடையே சற்றுமுன் அறிவித்தார். இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படுவர் என்று அதிமுக தலைமை சார்பில் முன்னதாகவே கூறப்பட்டிருந்த நிலையில் பதிக்கையாளர்கள் சந்திப்பு இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் கூட்டாக தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தனர்.வழிகாட்டுதல் குழுவில் யார் யார் இடம்பெறுவர் என முன்னதாவே சிலரின் பெயர்கள் சலசலக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில்… தேர்தல் களத்தில் இறங்வேன் என்று நடிகர் ரஜினி கூறி 3 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை அரசியல் கட்சி தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை. இதற்க்கு முன்பு சென்னையில் ரசிகர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், எனக்கு முதல்வராக விருப்பமில்லை என்றும், தான் அரசியல் கட்சி தொடங்கினால் அதில் எந்த மாதிரியான நடவடிக்கைகள் இருக்கும் என்றெல்லாம் பேசினார். மேலும் மக்களிடையே ஒரு எழுச்சி வர வேண்டும், அந்த எழுச்சி […]
இன்று காலை 10 மணிக்கு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கட்சி அலுவலகம் தொண்டர்களின் வருகையால் கலை கட்டியுள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இன்று காலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவு அமைச்சர்களுடன் இன்று அதிகாலை 3:00 மணி வரை ஆலோசனை நடத்தினர். இன்று காலை 10 மணிக்கு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்பும் கூட […]
அதிமுக வழிகாட்டுதலில் இபிஎஸ் தரப்பில் 6 பேரும், ஓபிஎஸ் தரப்பில் 5 பேரும் இடம் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் கடந்த ஒரு மாதமாக இருந்து வந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் நீடித்துக்கொண்டே நீடித்து வந்த அரசியல் பரபரப்பு நேற்றோடு சமரசத்துக்கு வந்தது. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் அதிகாரம் மிக்க பொறுப்பு வழங்கப்படும் என்றும், […]
அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக அதிமுக தலைமையிடம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடக்கவிருக்கும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கிடையே காரசார விவாதம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.இதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் நேற்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலமுடன் இருப்பதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாமெனவும் தேமுதிக தலைமையிடம் அறிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனோ தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அவரது மனைவி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் கொரோனோ தொற்றிற்க்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கடந்த 2-ஆம் தேதி இருவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது மீண்டும் சென்னையில் உள்ள மியாட் […]
11 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவில் யாரை நியமிப்பது தொடர்பாக ஓ.பி.எஸ் அதிரடியான முடிவினை எடுத்துள்ளார். அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது தொடர்பாக எழுந்து வந்த குழப்பத்தை அடுத்து நேற்று காலை தொடங்கிய ஆலோசனை மாலை வரை நீடித்தது. இரவு 10.30 மணிக்கும் ஆலோசனை நடந்தது. 12 மணி நேரமாக இந்த பேச்சுவார்த்தை என்பது மாறி மாறி முதலமைச்சர் வீட்டிலும், துணை முதலமைச்சர் வீட்டிலும் அரங்கேறியது.அமைச்சர் ஜெயகுமார், தங்கமணி, ஜே.டி.சி பிரபாகரன், வைத்தியலிங்கம், நத்தம் […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே தொடர்வார் என தெரிகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் ஆறு மாதங்களில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஆளும் அதிமுகவிற்கு பரபரப்புடன் அரசியல் களம் நகர்ந்து வருவது தொண்டர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற ரேஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து கொண்டு இருக்கின்றது. இதில் […]
வழிகாட்டுதல் குழுவுக்கான அதிகாரம் வழங்குவதில் இழுபறி நீடித்து என்ற தகவல் வெளியாகி உள்ளது. நேற்று காலை முதலே தனித்தனியே முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் அமைச்சர்கள், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இருந்த நிலையில் அது இரவு 10.30க்கு மேல் வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் இழுபறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக ஒரு முடிவு என்பது எடுக்கப்பட்டாலும், அந்த குழுவிற்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் பல்வேறு பிரச்சினை இருப்பதாகவும், […]
வழிகாட்டுதல் குழுவுக்கான அதிகாரம் வழங்குவதில் இழுபறி நீடித்து என்ற தகவல் வெளியாகி உள்ளது. நேற்று காலை முதலே தனித்தனியே முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் அமைச்சர்கள், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இருந்த நிலையில் அது இரவு 10.30க்கு மேல் வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் இழுபறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக ஒரு முடிவு என்பது எடுக்கப்பட்டாலும், அந்த குழுவிற்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் பல்வேறு பிரச்சினை இருப்பதாகவும், […]
அதிமுகவில் நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலைமைச்சர் ஓ .பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய வண்ணம் உள்ளனர். முதலில் அமைச்சர்கள் காமராஜ், சி.வி சண்முகம், கே.பி அன்பழகன் ஆகியோர் முதல்வர் இல்லத்துக்குச் சென்று ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து இன்று மாலை அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் முதல்வரின் இல்லத்திற்குச் சென்று ஆலோசனை மேற்கொண்டனர். […]
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று நாளை அறிவிக்க இருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் ட்விட் போட்டு கடுப்பேத்தியுள்ளார். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு தற்போது ஓய்ந்துள்ளது. அதுவும் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே சமாதானம் ஒருவழியாக நடந்துவிட்டதாக பேச்சு அடிபட்டு வருவது தான் இந்த ஓய்வுக்கு காரணம். நாளை அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த […]
அதிமுக அவைத் தலைவர் பதவியை தன்னிடமிருந்து யாராலும் பறிக்க முடியாது என்று மதுசூதனன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அதில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகின்றது. அதிமுக அவைத் தலைவர் பதவி யாருக்கு அளிப்பது என்று வாக்குவாதமும் நடந்ததாக தெரிகின்றது. இந்நிலையில் அதிமுக அவைத் […]
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்று நாளை அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் நாளை திட்டமிட்டபடி முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற அறிவிப்பை வெளியிடப்படும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் நாளை அறிவிக்காவிட்டால் பொதுமக்கள் மத்தியில் கட்சி மீதான நம்பகத்தன்மை கெட்டுவிடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதனால் தான் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் மூலம் தன்னுடைய கருத்தை தெளிவாக தெரிவித்திருந்தார் . அதில், தமிழக […]
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய சூழலில் அதிமுகவில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மையப் புள்ளி என்பது அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற கேள்விதான் எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலை தமிழகம் விரைவில் சந்திக்க உள்ள நிலையில் அதிமுக உடைய முகமாக யார் முன் நிறுத்தப் போகிறார்கள் ? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் […]
உத்திரப் பிரதேசம் ரத்தர் பிரதேசமாக மாறி வருகிறது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கனிமொழி தலைமையில் உத்திரப் பிரதேசத்தில் பாலியல் வன் கொடுமைக்கு நீதி கேட்டு ஆளுநர் மாளிகையை நோக்கி திமுக மகளிர் அணி பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணியை மு.க ஸ்டாலின் துவங்கி வைத்தார். அப்பொழுது அவர் பேசும்போது “ஹைதராஸ் போன்ற பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்திரப்பிரதேசம் முதலிடம் ,தமிழகம் இரண்டாம் இடம். […]
சற்று முன்பு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்ற அறிவிப்பு வருகிற 7-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.முதல்வர் வேட்பாளருக்கு அதிமுகவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சற்று முன் முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் அமைச்சர்கள் […]
துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னை செல்லவிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து தேனிக்கு திரும்பிய பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வந்தார். இன்று காலையில் தேனி நாகலாபுரத்தில் நடைபெற்ற அம்மா நகரும் நியாய விலை கடை திட்டத்தினை பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தார்.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னைக்கு புறப்படுவதாக தெரிவித்தார். எனவே ஓபிஎஸ் ஏன் இன்னும் சென்னை திரும்பவில்லை?என்று அனைவர் மனதிலும் எழுந்து வந்த கேள்விக்கு இன்று முற்றுப்புள்ளி […]
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என கோஷமிட்ட அதிமுக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனிக்கு திரும்பினார்.அதன் பின்னர் பல அமைச்சர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.இதனை அடுத்து சென்னை திரும்பாமல் தேனியிலேயே முகாமிட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் தேனியில் நாகலாபுரத்தில் நடைபெறவிருக்கும் “நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை” தொடக்கி வைப்பதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டார். அப்பொழுது […]
கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் விடுதலை செய்தது தொடர்பான 2 ஜி மேல்முறையீடு வழக்கை விரைவாக விசாரிக்க கோரி சி.பி.ஐ அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்பதாக அறிவித்தது. அதன்படி, இன்று (அக்டோபர் 5-ஆம் தேதி) முதல் தினமும் 2 ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடக்கவுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அனைவரையும் […]
பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு போதித்த கீதை வாசகத்தினை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம் . செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைந்தத்தில் இருந்தே அதிமுகவில் பல குழப்பங்கள் ஏற்பட்டன.பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் அந்த குழப்பங்கள் முடிவிற்கு வரப்பட்டு முதலமைச்சராக திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் துணை முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் அவர்களும் பதவி ஏற்றனர்.தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில் தற்போது அதிமுகவில் அடுத்த முதலவர் வேட்பாளர் யாரென்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதனை அடுத்து துணை […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநரை சந்திக்க இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் எடுத்து வரக் கூடிய கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், அது எந்த கட்டத்தில் இருக்கிறது. மக்களைக் காப்பதற்கு தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும் அறிக்கை கொடுத்து விளக்கம் அளித்து வருகின்றார். அதேபோல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று […]
உத்தர பிரதேசத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பாக இன்று பேரணி நடைபெறுகின்றது. நாட்டையே உலுக்கிய உத்தரப்பிரதேசத்தில் பட்டியல் இன பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு நாட்டின் பல முனைகளிலும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதே போல திமுக சார்பாக இன்றைய தினம் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேசத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட பெண்ணுக்கு […]
முதலமைச்சரை மூன்று அமைச்சர்கள் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அடுத்த வருடம் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சில மாதங்களே அதற்க்கு இருக்கும் நிலையில், அதிமுக கட்சியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குளறுபடி தொடங்கியுள்ளது. இதனால் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைத்து அந்த குழு தான் கட்சியும் ஆட்சியும் வழி நடத்துவதோடு வேட்பாளரையும் […]
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்கள் டிராக்டர் பேரணியை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார் மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. எதிர்க்கட்சியினரும் வேளாண் சட்டத்திற்கு கடுமையாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். புதிதாய் கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இன்றிலிருந்து மூன்று நாட்கள் டிராக்டர் பேரணி நடத்துகிறார். பஞ்சாப் […]
நடிகர் ரஜினிகாந்த் அவச்சொற்களை தாங்காமாட்டார் என்பதால் அரசியலுக்கு வர வேண்டாம் என்று சீமான் அறிவுறுத்தியுள்ளார். சீமான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது என்று நடிகர் ரஜினி அவர்கள் வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என்று தெரிவித்தாரோ அன்று அவரிடமிருந்த முரண்பாடு நீங்கி விட்டது. நான் ரஜினிக்கு வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான் அரசியலில் அவர் இறங்க வேண்டாம். புகழ்ச்சியை மட்டுமே பார்த்து வந்த அவர் நாங்கள் பார்ப்பது போன்ற அவச்சொற்களை தாங்கிக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் கிளீன் இந்தியா […]
தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து பேசினார். சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை அதிமுகவில் வெடித்திருக்கின்றது . சில நாட்களுக்கு முன் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணிகளுக்கு இடையே காரசார விவாதம் நடந்தது என்றும் கூறப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக சொந்த ஊரில் இருந்து சென்னை வந்த ஓபிஎஸ் தற்போது மீண்டும் தேனி திரும்பியுள்ளார்.சென்னையில் […]
தமிழகத்தில் கோவிட்-19 பரவலை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மக்கள்நலவாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கிய கொரானோ தொற்று நாளடைவில் விஸ்வரூபத்தை காட்டத்தொடங்கியது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானோ தொற்றின் காரணமாக தமிழக அரசின் சார்பில் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் அடுத்த கட்டமான ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வினை சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது தமிழக அரசு.எனினும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க விதிக்கப்பட்டு வரும் தடையானது தொடர்ந்து […]
காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுமென அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக சம்பா சாகுபடியை தொடங்கினர். தற்போது அறுவடை காலம் தொடங்கியுள்ளதால் நெல் கொள்முதலுக்கான நல்ல தீர்வுக்கு அரசின் கருணைப் பார்வையை எதிர்பார்த்திருந்தனர் விவசாயிகள். எனவே நெல் கொள்முதல் செய்வதில் உள்ள பிரச்சனைகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என […]
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நாலு மாதம் தான் அதிமுகவின் ஆட்சி இருக்கும் என்று கூறியுள்ளார் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் காட்பாடி அடுத்துள்ள வன்றந்தங்கள் கிராமத்தில் திமுக பொதுச் செயலாளர் மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரான துரைமுருகன் மக்களிடம் மனுக்களைப் பெற்றார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் துரைமுருகன் பேசியபோது அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக கிராம சபை கூட்டத்தை காந்தி ஜெயந்தி அன்று இந்த அரசுதான் ரத்து செய்துள்ளது. திமுகவின் தலைவர் இன்று நடைபெற இருக்கும் கிராம சபை […]
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் ? என்ற சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. அமைச்சர்கள் மாறி மாறி கருத்து தெரிவித்தன் விளைவாக இந்த பரபரப்பு தற்போது வரை இருந்து வருகின்றது. இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்று […]
தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.அரசியல் கட்சிகளின் சார்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக திமுக தற்போது முக்கிய முடிவினை அறிவித்துள்ளது. இதுவரை தேனி மாவட்டத்தில் திமுக சார்பில் ஒரே ஒரு பொறுப்பாளர் மட்டுமே நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது திமுக […]
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றது. நடிகர் சிவாஜி கணேசனின் 93 வது பிறந்தநாள் விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகின்றது.இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று சிவாஜி கணேசனின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.மேலும் சிவாஜி கணேசனின் குடும்ப உறுப்பினர்கள், மூத்த மகன் மற்றும் அவரது பேரன் விக்ரம் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். […]
ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எந்த குழப்பமும் இல்லை தெரிவித்திருக்கிறார். ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகிய இருவருக்கும் நான் ஆதரவு என வைத்தியலிங்கம் கூறுகிறார்.முதல்வரின் ஆலோசனையில் பங்கேற்ற துணை முதல்வர் ஓபிஎஸ் தனது கருத்தை நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனையில் கூறியுள்ளார்.
தனக்கு கொரோனா வந்தால் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பேன் என்று பாஜகவின் தேசிய செயலாளர் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது சமீபத்தில் பாஜக தேசிய தலைவர்களுக்கான பட்டியலை வெளியிட்டது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய அனுபம் பாஜகவில் இணைந்த போது அவருக்கு தேசிய செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் நான் ஓடிப்போய் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பதாக அனுபம் கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தின் சவுத் 24 பர்கானாஸ் […]
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக முடிவு செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு இருந்து வந்தது.காலை முதல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஆளும் அதிமுகவின் அரசியல் நகர்வு இருந்தது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது குறித்து அதிமுகவில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. […]
தமிழகத்தில் முதல்வராக ஓபிஎஸ் – இபிஎஸ் தேர்வானத்தில் சசிகலா பங்கு குறித்து அதிமுக செயற்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அதிமுகவின் செயற்குழு கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 5 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் விவாதம் நீண்ட நேரமாக நடைபெற்றது. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் […]